For Read Your Language click Translate

31 July 2014

ஜோதிட மூல நூல்கள் :

ஜோதிட மூல நூல்கள்-நூலின் பெயரும்- ஆசிரியரும் பின்வருமாறு :

பிருஹத் பராசர ஹோரா - பராசர மகரிஷி
பிருஹத் ஜாதகம் - வராஹமிஹிரர்
உத்தர காலமிர்தம் - மகாகவி காளிதாசர்...
சாராவளி - கல்யாண வர்மர்
பலதீபிகை - மந்திரேஸ்வரர்
ஸ்ரீபதி பத்ததி - ஸ்ரீபதி
ஜாதகலங்க்காரம் - கீரணூர் நடராஜர்
குமாரசுவாமியம் - குமாரசுவாமி தேசிகர்
கெளசிக சிந்தாமணி - கெளசிக மகரிஷி
ஜாதக கர்க ஹோரை - கர்க மகரிஷி
ஜாதக பாரிஜாதம் - வேதாந்த தேசிகர் சர்வார்த்த சிந்தாமணி - வெங்கடேச தெய்வக்ஞர்
சுகர் பெருநாடி - டி.எஸ்.நாராயணஸ்வாமி
சுந்தர சேகரம் - அய்யாசாமி பிள்ளை
சூடாமணி உள்ளமுடையன் - திருக்கோட்டி நம்பி
ஜோதிட ஆசான் - மா. தெய்வசிகாமணி
ஜோதிட கடலகராதி - நா. அரங்கசாமி பிள்ளை
ஜோதிட பேரகராதி - எஸ்.கூடலிங்கம் பிள்ளை
வீமேசுவர உள்ளமுடையான் - இராமலிங்க குருக்கள்
பெரிய வருசாதி நூல் - மார்க்கலிங்க ஜோதிடர்
ஹோரா சாரம் - ஸ்ரீ பிருதுயஸ்
மங்களேசுவரியம் - .வைத்தியலிங்க ஆசாரியார்
ஜீனேந்திர மாலை - உபேந்திராச்சரியார்
காலச்சக்கரம் - தில்லை நாயகப் புலவர்

20 July 2014

வான சாஸ்திரக் குறிப்புகள்

அன்பர்களே,

 கோள்களின் நிலைகளுக்கும் மனித வாழ்வின் நிகழ்ச்சிகள், தன்மை போன்றவற்றுக்கும் இடையே இருக்கும் தொடர்பு ஏதோ மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் இடையே போட்ட முடிச்சுபோல் தோன்றியது. இந்த மோனாமூனாமூனா தொடர்பை இன்னும் விவரிக்கத்தான் வேண்டும் என்ற உந்துதல். (மோனா -மொட்டைத்தலை; மூனா- முழங்கால்; மூனா - முடிச்சு).
ஆகவே தொடர்ந்து எழுதினேன்.

< ஆகவே, இறப்பிலும் பிறப்பிலும் மனிதனைப் பாதிக்கும் நட்சத்திரங்களை ஆராயும்
வேலை மிக மிகப் பழங்காலத்திலேயே நம்மிடையே வளர்ச்சியடைந்து விட்டது. நம்
பழங்கால நூல்களில் காணப்படும் வான சாஸ்திரக் குறிப்புகள் கிறிஸ்துவுக்குமுன்
ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கால கட்டத்தைக் குறிக்கின்றன.
இவ்வாறு ஆராய்ந்தவர்கள் ரிஷிகள், வானசாஸ்திரிகள், கணியர்கள் போன்றவர்கள். வான
சாஸ்திரத்தின் அடிப்படையில் எழுந்ததே நம் ஜோதிடசாஸ்திரம்>.
"சரியாப் போச்சு. இப்படி எழுத எழுத இன்னும் மேலும் மேலும் சப்ஜெக்டுக்குள்ள
ஆழமாப் போகவேண்டியதா இருக்கே? ஏன்னாக்க மேல உள்ளதப் படிக்கிறவங்க, "அப்டீன்னா
இதெல்லாம் எப்ப ஏற்பட்டுச்சு? ஏன் இதுக்கெல்லாம் இவ்ளோ முக்கியத்துவம்
கொடுக்கணும்?"
என்றெல்லாம் கேட்கக்கூடிய நிலையை நானே ஏற்படுத்திவிட்டேன் அல்லவா?"

"அடியப் பிடிடா, பாரதப் பட்டா?" என்பார்கள். நான் அதை சற்று மாற்றிக்கொண்டு
எனக்கு நானே சொல்லிக்கொண்டேன், "அடியிலேர்ந்து பிடிடா, பாரதிப் பட்டா!".
சரி ஆரம்பிச்சுர வேண்டியதுதான் என்று இன்னும் எழுதலானேன்.....

< வேதங்கள் நான்கு. அந்த வேதங்களின் அங்கங்கள் ஆறு என்பார்கள். அதில் ஒன்று
ஜோதிடம். மற்ற ஐந்தும் என்ன என்பதை மலேசியாவிலுள்ள பேர் போட்ட
குருக்கள்மார்களிடம்
கேட்டுப்பாருங்கள். எந்தப் புத்தகத்தையும் ரெ·பர் பண்ணாமல் மொபைலில் யாரிடமும்
கேட்காமல் சொல்லிவிட்டார்கள் என்றால் என்னுடைய காதுக்குக் கீழ்வரை நீண்டு
விளங்கும் பளபளப்பான வெண்ணிறக் கிருதாவை அரை ஸெண்ட்டிமீட்டர்
குறைத்துக்கொள்கிறேன்.
வானிலுள்ள நட்சத்திரங்களும் கிரகங்களும் அவற்றினுடைய கிரணங்களாலும்
ஆகர்ஷணத்தாலும் மற்றும் தற்சமயம் நம்மால் புரிந்து கொள்ள இயலாத வேறு பல
வழிகளாலும் உலகத்தைப் பாதிப்பதை அக்கால ரிஷிகளும் வானசாஸ்திரிகளும் கண்டு
அறிந்திருந்தனர்.
வானத்திலே கண்ணுக்குத் தெரியாத பல பொருள்களைக் கூட அவர்கள் எப்படியோ
கண்டுள்ளனர். தொலைநோக்கி, ரேடியோ சாதனங்கள் முதலியவற்றைக் கொண்டு தற்சமயம்
நவீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துக் கொண்டிருப்பதை அவர்கள் ஏற்கனவே கண்டறிந்து
இருந்தனர். எப்படி எதைக் கொண்டு அதையெல்லாம் செய்தார்கள் என்பதும் புதிராகவே
இருக்கிறது>

அப்படி என்னத்தைத்தான் கண்டுபிடித்தார்களாம்? அதையும் விளக்கத்தானே வேண்டும்?
< ஒரு செகண்டில் இருநூற்றைம்பதில் ஒரு பகுதியை அவர்களால் கணிக்க
முடிந்திருக்கிறது. அப்படியானால் எவ்வளவு துல்லிதமான நேரம்காட்டியை அவர்கள்
பயன்படுத்தியிருக்க வேண்டும். அதே சமயம் பல கோடி ஆண்டுகளைக் கொண்ட மஹாயுகம்
கல்பம் போன்ற காலக் கணக்கையும் அவர்கள் கணக்கிட்டிருக்கிறார்கள்.
ஓர் அங்குலத்தில் இருநூற்று இருபத்து மூன்று கோடியில் ஒரு பகுதியை அவர்கள்
'கோண்' என்னும் பெயர் கொண்டு அழைத்தார்கள்.
இவ்வளவு சிறிய அளவைக் கொண்டு எதை அளந்தார்கள்? எப்படி அளந்தார்கள்?
'கோண்' என்பது அணுவையும் விடச் சிறியது. "அணுவினைச் சத கூறிட்ட கோண்" என்று
கம்பன் கூறியிருக்கிறான்.

அதே சமயம் ஒன்றைப் போட்டு அதன் பின்னால் இருபத்தோரு பூஜ்யங்களை எழுதினால் வரும்
தொகையான 'பிரம்மகற்பம்' என்னும் பெரிய தொகையையும் கொண்டு அவர்கள்
எண்ணியிருக்கிறார்கள்.
பிரம்மகற்பம் என்பதை இப்போது கோடிக் கோடிக் கோடி என்றும் சொல்வார்கள்.
ஒன்றிலிருந்து ஆரம்பித்து, ஒன்றுக்குப் பின்னால் ஒரு சைபரைச் சேர்த்துப் பத்து,
இரண்டு சைபரைச் சேர்த்து நூறு, மூன்று சைபரைச் சேர்த்து ஆயிரம் என்று
அடுக்கிக்கொண்டே
போகிறோம் அல்லவா. அதே வரிசையில் ஒவ்வொரு சைபரைச் சேர்க்கும்போதும் தோன்றும்
எண்களுக்கும் பெயர்கள் கொடுத்திருந்தார்கள். இப்போது கோடியோடு அந்த வரிசை
நிற்கிறது. அதற்கும் மேலுள்ளவற்றை பத்துக்கோடி, நூறு கோடி, ஆயிரம் கோடி,
பத்தாயிரம் கோடி என்று அடுக்கிக்கொண்டே போகிறோம். இவற்றிற்கெல்லாம் Proper
names என்னும் பெயர்கள் இருந்தன. கோடிக்கு அப்புறம் அற்புதம், நிகற்புதம்,
கும்பம், கணம், கற்பம், நிகற்பம் என்று அதுபாட்டுக்குப்
போய்க்கொண்டேயிருக்கும். முடிவில்லாததை, எண்ணிகையில் அடங்காததை அனந்தம்
என்றார்கள். Infinite, Countless என்று சொல்கிறோமல்லவா?>

உதாரணத்துக்கு, தற்சமயம் Rs 30985 கோடி என்பதை முப்பதினாயிரத்துத்
தொள்ளாயிரத்து எண்பத்தைந்து கோடி ரூபாய் என்று சொல்கிறோம். எண் ஆவரணத்தில்
கண்டுள்ள பெயர்களை வைத்துச் சொல்வதானால் அதை மூன்று கணத்து ஒன்பது நிகற்புதத்து
எட்டு அற்புதத்து ஐந்து கோடி ரூபாய் ஆகும்.
எழுதியதைத் தொடர்கிறேன்.

< வானசாஸ்திரத்திலும் கூட உலகம், அண்டம், பேரண்டம், சராசரம், பிரம்மாண்டம்,
பிரபஞ்சம் என்று அந்தக் காலத்தில் பாபிலோனியர்கள் கிரேக்கர்கள் முதலியோர்கூட
பயன்படுத்தியிராத சொற்களை அவர்கள் வழங்கி வந்தார்கள்.
எதை வைத்து எதை எப்படி அளந்தார்கள்?
அளந்தபின் என்ன செய்தார்கள்?
எங்கு இருந்து கொண்டு இதையெல்லாம் செய்தார்கள்?
இதையெல்லாம் செய்ய அவர்களுக்கு அவகாசமும் வசதியும் தேவையும்
இருந்திருக்கிறது. ஆனால்
நாம் இப்போது எங்கு இருக்கிறோம்?>

இப்படி எழுதியபின்னர் கொஞ்சம் நிதானித்துப் பார்த்தால்.......

அன்புடன்

ஜெயபாரதி

கௌளி சாஸ்திரம் பற்றிய அரிய பழம்நூல்

A VERY RARE BOOK ON KAULI SASTRA

book kauli sastra

என்னிடம் சில பழைய நூல்கள் இருக்கின்றன. அவற்றில் சில நூல்கள் மிகவும் அறதப் பழசு. தொட்டால்கூட அப்படியே பொலபொலவென்று நொறுங்கக்கூடிய நிலையில் இருக்கின்றன.
சில நூல்கள் மிகவும் அரிய நூல்கள்.
கௌளி சாஸ்திர நூல் ஒன்று இருக்கிறது. சகாதேவர் அருளிச் செய்த கெவுளி சாஸ்திரம்.

ஏன் சகாதேவர்?
பஞ்சபாண்டவர்களில் ஜோதிடத்தில் மிகச் சிறந்த விற்பன்னராக விளங்கியவர் சகாதேவர். அவருடன் கூடப்பிறந்த நகுலன் அசுவ சாஸ்திரத்தில் விற்பன்னர்.
பாரத யுத்தைத் தொடங்குவதற்கு எதிராளியாகிய துரியோதனனுக்கே ஏற்ற நாளும் ஜெயிக்கக்கூடிய லக்கினமும் குறித்துக் கொடுத்தவர் சகாதேவர்.

ஜோதிட சாஸ்திரத்துக்குள் மட்டுமே அறுபத்துநான்கு உட்பிரிவுகள் இருக்கின்றன என்று சொல்வார்கள். ஆரூடம், சரம், சோவி, கௌளி, தும்மல், சகுனம், பட்சி, பல்லி விழுதல், அருள்வாக்கு, உடுக்கு, பம்பை, குடுகுடுப்பை, அஞ்சனம், சொப்பனம், பறவைகளில் கூவல், சாமுத்ரிகா லட்சணம்......
இப்படி இருக்கின்றன. ஏதோ ஞாபகத்துக்கு வந்தவற்றைச் சொன்னேன்.
ஜோதிடத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் சகாதேவர் பாண்டித்தியம் பெற்றவராக இருந்திருப்பார் போலும். அவருடைய பெயரால் பல சோதிட நூல்கள் விளங்குவதைப் பார்த்திருக்கிறேன்.
இந்த கெவுளி சாஸ்திர நூல் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக முற்பட்டு அச்சில் வெளியாகிய நூல்.
ரொம்பவும் நுணுக்கமான பல விஷயங்கள் அடங்கியுள்ளன. எல்லாமே பாடல்களாக இருக்கின்றன.
கெவுளிகளிலேயே ஒவ்வொரு கிழமைக்கு உரிய ஜாதிகள் இருக்கின்றன.

திங்களுக்குச் சொல்லும் ஜாதி -

சங்கரன் அருளினாலே சாற்றுவேன் கெவுளி ஜாதி
பொங்கவே ராஜனாகும் பொருந்தியே ராஜவர்ணம்
தங்கிய முதுகிற் பத்து தழும்புபோல் கீறலுண்டு
இங்கித ஸ்த்ரீயும் தானும் இருப்பரே புசிப்புகொண்டு

செவ்வாய்க்கு -

நண்ணிய ராஜவாசம் நிறத்தினிற் சாம்பல்வர்ணம்
எண்ணிய எட்டுக்கீறல் முதுகினில் இருக்கும் பாரே
வண்மையாய் ஸ்த்ரீயும் தானும் வலமதாய்ப் போஜனங்களுண்டு
புண்ணியர்போலே தட்சணம் பொருந்தியே இருக்கும் பாரே

இப்படியே அத்தனை ஜாதிகளையும் வர்ணிக்கும் பாடல்கள்.
ஒவ்வொரு கிழமைக்கும் எந்தெந்த திக்கிலிருந்து சொன்னால் என்னென்ன பலன் என்று பாடல்கள் சொல்கின்றன.
இந்த மாதிரியிலேயே நாற்பத்திரண்டு பாடல்கள் உண்டு.
பதினாறு திக்கிற்கும் பல்லி சொல்லல் என்னும் இன்னொரு பகுதியும் உண்டு.
அத்துடன் பல்லி விழும் பலனும் சொல்லப்பட்டிருக்கிறது.
ஆந்தைக்கு என்று ஒரு பகுதியையும் கொடுத்திருக்கிறார்கள்.
ஆந்தை அலறலால் எல்லாமே கெடுதல்தான் என்று நம்புவார்கள். ஆனால் அதனால் நன்மையுமுண்டு.....

சிந்தையது களித்திடுவாய் ரெண்டே சீறல்
சீக்கிரமே நினைத்த பொருள் வந்துகூடும்
விந்தையுடன் சீறல்தான் மூன்றேயாகில்
வஞ்சியரை எப்படியும் புணர்வாயப்பா....

நல்லதும் நிறைய இருக்கிறது.
ஆந்தையென்றால் ஒருவகைப் பயமும் திகிலும் இருக்கும். ஆனால் ஆந்தை அலறலாலும் நன்மையுண்டு.
அருமையான அரிய நூல்.

அன்பர்களே,

 'கெவுளி சாஸ்திரம்' என்னும் சாஸ்திரத்தைப் பற்றிய
அந்த சாஸ்திரத்தின் சூத்திரங்களைப் பாடல்களாகக் கொடுத்திருக்கிறார்கள்.
சில விஷயங்கள் புதுமையாக நமக்குத் தெரிகின்றன.

முதலில் விநாயகர் துதியைப் பார்ப்போம் -

படியதனில் நாற்சதுரம் பாசித்தெண்டிக்காம்
வடிவு பதினாறு கோணம் மண்விண் - முடிவா
ஆகபதினெட்டுக் கறையுங் கெவுளிக்குப் பின்
பாகவரும் ஐங்கரனைப் பாடு.

பாடலில் ஓர் அரிய செய்தி அடங்கியுள்ளது.
பாடலைப் பிரித்துப் பார்ப்போம் -

படியதனில் நால் சதுரம் பாசித்து என் திக்காம் வடிவு பதுனாறு கோணம் மண்விண் முடிவாய்
ஆக பதினெட்டுக் கறையும் கெவுளிக்குப் பின்பாக வரும் ஐங்கரனைப் பாடு.

நால் சதுரம் - இதில் கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு இருக்கும். இவற்றை
Cardinal Directions என்பார்கள்.

எட்டுத் திக்கு என்பது வழக்கு. அஷ்ட திக்குப் பாலர்கள் என்ற எட்டுத்
திசைக்கும் உரிய காவலர்களாக எட்டு தேவர்களைச் சொல்வதுண்டு. கிழக்கு, தென்கிழக்கு, தெற்கு,
தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு ஆகியவற்றைச் சொல்வார்கள்.
தென்கிழக்கு, தென்மேற்கு, வடமேற்கு, வடகிழக்கு ஆகியவற்றை அக்கினி மூலை, நிருதி
மூலை, வாயு மூலை, ஈசான்ய மூலை என்பார்கள். இவற்றில் ஈசான்ய மூலை என்பதை
கிராமிய வழக்கில் 'சனி மூலை' என்று தவறாகச் சொல்வதும் உண்டு.
சிங்கம்புணரி வட்டத்தில் தென்மேற்கை 'மருதெ மூலெ' என்பார்கள். மதுரை மூலை.
சிங்கம்புணரிக்கு அந்தத் திக்கில்தான் மதுரை இருக்கிறது.

தச மஹா பூதம் என்பவை எட்டுத் திக்கிலும் மேலும் கீழுமாகப் பத்து இருக்கும்.
முக்கிய யாகங்களைச் செய்யும்போது இந்த பூதங்களை சாந்தப் படுத்துவார்கள்.
இவற்றைக் கட்டுவதும் உண்டு.

ஆனால் கெவுளி சாஸ்திரத்தில் இன்னும் ஒரு நுணுக்கம் உண்டு.
எட்டுத் திக்கு என்பன இங்கிலீஷ் வழக்கில் North, North East, East, South East,
South South West, West, North West என்பன ஆகும்.

நம்முடைய திக்குகளைச் சொல்லும்போது நாம் கிழக்கிலிருந்து ஆரம்பிப்போம்.
மேற்கத்தியர்கள் வடக்கை வைத்துச் சொல்வார்கள். இந்த எட்டுத் திக்குகளைத் தவிற இன்னும் எட்டுத் திக்குகளையும் கணக்கிடுவார்கள்.

Mariners Chart, Navigational Charts-இல் இவற்றைப் பார்க்கலாம்.
உதாரணம் - வட மேற்குக்கும் வடக்குக்கும் நடுவில் ஒரு திக்கு இருக்கும்.
North by North West என்பார்கள். இதைச் சுருக்கி இப்படி NNW எழுதுவார்கள்.
இது உங்களில் சிலருக்கு ஞாபகம் இருக்கலாம்.

இதே பெயரில் ஓர் அருமையான நாவலும் இருக்கிறது. அது சினிமாவாகவும் வெளிவந்தது.
இந்த மாதிரியான நாவல்களெல்லாம் தமிழில் கிடையாது. முயற்சிகூட யாரும்
செய்ததில்லை. சொன்னால் நம்ம மாடர்ன் இலக்கியவாதிகளுக்குக் கோபம் வரும்.

நம்முடைய கெவுளி சாஸ்திரத்தில் இந்த எட்டும் எட்டும் பதினாறு திக்குகளைக்
கணித்திருக்கிறார்கள். அதான் 'வடிவு பதினாறு கோணம்'.

'கோணம்'
Cardinal திசைகளுக்கு இடையில் இருப்பனவற்றை மூலை என்று நம்ம ஆட்கள்
குறிப்பிடுகிறார்கள். ஒரு மூலைக்கும் ஒரு கார்டினல் திசைக்கும் நடுவில்
இருப்பதை 'கோணம்' என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.

கறை
பதினாறு கோணங்களுடன் விண் மண் என்னும் மேல், கீழ் ஆகியவற்றையும் சேர்த்து
மொத்தம் பதினெட்டு Directions-ஆக, கணித்திருக்கிறார்கள். இவற்றிற்குக் 'கறை' என்று பெயரிட்டிருக்கிறார்கள்.

பாருங்கள் ஒரு சிறிய பாடலில் இவ்வளவு பொருள்பதிந்த குறைவான எண்ணிக்கை
கொண்ட பாடல்கள்.

எந்தெந்த கிழமைகளில் எந்தெந்த நேரங்களில் எந்தெந்த கறைகளில் கெவுளி
சொல்கிறது என்பதை சாஸ்திரம் ரொம்பவும் Cryptic-ஆக சொல்லியிருக்கிறது.
அவற்றிற்கு உரிய பலனையும் சொல்லியிருக்கிறது. ஆராய்ந்து கண்டுபிடித்துவிட்டால் எல்லாம் சுலபமே.

பல்லி சொன்னால் பலிக்குமா?

பல்லி கிழக்கே சொல்லுமாகில் அதன் பலம் ராகு கிரகத்தின் சாரம்சத்தை பெற்றிருக்கும். இதன் காரணமாக எதிர்பாராத ஒரு பயத்தை, அசுபச் செய்தியை இது முன்கூட்டி தெரிவிப்பதாக அர்த்தம். 

இதே கிழக்கு திசையில் அடுத்த வீட்டில் அல்லது அடுத்த மனையில் இருந்து சொன்னால் உடனடியாக ஏதோ ஒரு கெடுதல் நடப்பதாக அர்த்தம். 

தென்கிழக்கு திசையாக அக்கினி மூலையில் இருந்து கொண்டு பேசினால் உடனடியாக கலகம் வரும். 

தென்திசையில் இருந்து கொண்டு சொன்னால் செவ்வாய் கிரகத்தின் சாரம் சத்தை பெறுவதால் இதன் பலன் எதிர்பாராத சுக சவுகரியங்களையும் எதிர்பாராத அதிர்ஷடத்தையும் தெரிவிக்கும். 

இந்த தெற்கு திசை அடுத்த வீட்டு அல்லது அடுத்த மனையிலிருந்தோ சொல்வதாக இருந்தால் எதிர்பாராத தோல்வி, துக்க செய்தி, எதிர்பாராத விரயம் முதலியவைகளை குறிப்பிடும். 

தென்மேற்கு மூலையாகிய நிருதி திசையில் இருந்து சொன்னால் அதற்கு புதன் கிரகத்தின் சாராம்சம் பொருந்தி யிருக்கும். இதன் காரணமாக இதன் ஜெனபந்துக்கள் வருகையும், இனஜென்ம பந்துக்கள், நண்பர்களால் நன்மைகளும் ஏற்படும். 

இதே நெருதி திசை அடுத்த வீடு அல்லது அடுத்த மனையாக இருக்கு மானால் எதிர்பாராத விருந்து வரும் அல்லது சுபச்செய்திகள் வந்துசேரும். 

மேற்கு திசையில் இருந்து சொல்லுமானால் சனி கிரகத்தின் சாராம்சம் பொருந்தியிருக்கும். சஞ்சலமான சோதனைகளும், சங்கடங்களும் ஏற்படும் என்பதற்கு எச்சரிக்கையாகும். 

இதே மேற்கு திசை அல்லது வீடு அல்லது அடுத்த மனையாக இருக்கு மானால் உடனடியாக கெடுதல்களும் வந்து சேருவதை எச்சரிப்பதாகும். 

வடதிசையாக வாயு மூலையில் இருந்து பேசுமானால் சுபச்செய்தி வரும்.

முத்து. இரத்தினம்

இந்துசமயம் பல்வேறு விதமான ஆன்மிக நம்பிக்கைகளைக் கொண்டது. இது பல சாஸ்திரங்களையும், சம்பிரதாயங்களையும், சடங்குகளையும் உள்ளடக்கியது. ஒவ்வொருவரின் உயிருடனும், உணர்வுகளுடனும் கலந்து காலம் காலமாக இருந்து வருகிற ஆன்மிகம் சார்ந்த நம்பிக்கைகள் ஏராளம்.

இவற்றில் அருள்வாக்கு மற்றும் ஆன்மிகம் சார்ந்த நம்பிக்கைகளில் முதலிடம் வகிப்பது பல்லி சொல் கேட்டல் என்பதாகும். இது இறைவனே நேரில் பல்லி உருவில் வந்து அருள்வாக்கு அளிப்பதாக நம்புகிறார்கள்.
பல்லி என்ற சொல்லுக்குப் பல பொருள் உண்டு. இடம், இடையர் வாழும் ஊர், உடும்பு, கெவுளி, சிற்றூர், பலுகுக்கட்டை, பெரிய பல்லுடையவள், சிறு பிராணி வகை, பூடு வகை, கிராமத்தின் அரைக்கூறு, கற்சிலைப் புள், வெற்றிலைக் கணுவில் அரும்பும் குருத்து, அண்டகம், கோகிலம், புள்ளி, முசலி – என்று பல பொருள்கள் உண்டு என்று தமிழ்ப் பேரகராதி குறிப்பிடுகிறது.
ஓரறிவு உயிர் முதற்கொண்டு ஆறறிவு உயிர் வரையுள்ள அனைத்து உயிர்களையும் படைத்துக் காத்து ரட்சிப்பவன் இறைவன். ஒவ்வொரு உயிரின் மூலமாக அருள்புரிந்து மனித வாழ்க்கையைச் செம்மைப்படுத்துகிறான். இதன் பொருட்டே உபநிடதங்களும், சாஸ்திரங்களும், ஆகமங்களும் தோன்றின. பட்சி சாஸ்திரம், பஞ்ச பட்சி சாஸ்திரம், பல்லி சாஸ்திரம் அல்லது கௌளி சாஸ்திரம் என்பதெல்லாம் அவ்வாறு தோன்றியதாகக் கருதலாம்.
பல்லிகள், வீடுகளையும், ஆலயங்களையும் இருப்பிடமாகக் கொண்டு இனிதே வாழ்கின்றன. பெரும்பாலும் பல்லிகள் ஒலியெழுப்புவதில்லை. மனித நம்பிக்கைகளுக்கு ஏற்றவாறு, நிமித்தங்கள் அல்லது சகுனங்கள் மொழிகின்றன. புராணங்களில் பல்லிகள் பற்றிய செய்திகள் சொல்லப்பட்டுள்ளன.
ஸ்ருங்கிபேரர் என்ற முனிவருக்கு ஹேமன், சுக்லன் என்ற இரண்டு பிள்ளைகள் இருந்தனர். உரிய வயதில் கல்வி கற்க, இருவரும் கௌதம ரிஷியின் குருகுலத்திற்கு அனுப்பப்பட்டனர். இருவரும் முறையாகப் பாடம் பயின்று வந்தனர். குருவுக்குச் சேவை செய்வதே பெரும் பாக்கியம் என்பதை உணர்ந்து குரு வார்த்தைக்கு மறு வார்த்தையின்றித் தங்கள் கடமையைச் செவ்வனே செய்து வந்தனர். கௌதம ரிஷி செய்யும் பூசைக்குத் தேவையான பூக்கள், பழங்கள், தீர்த்தம் முதலியன கொண்டு வருவார்கள்.
ஒரு நாள் இருவரும் தீர்த்தப் பாத்திரத்தை மூடி வைக்காமல் திறந்தபடியே வைத்துவிட்டார்கள். பல்லியொன்று அந்தத் தீர்த்தப் பாத்திரத்திற்குள் விழுந்து உயிரோடு தத்தளித்துக் கொண்டிருந்தது.
ஹேமனும், சுக்லனும் பூஜா திரவியங்களைக் குருவிடம் அப்படியே கொடுத்தனர். கௌதம ரிஷியும் பாத்திரத்தைத் தொட்டவுடன் அதிலிருந்த பல்லி தாவிக் குதித்து ஓடியது. அதைக் கண்டு கோபம் கொண்ட ரிஷி, பணியில் கவனமில்லாமல் இருந்த அவர்கள் இருவரையும் பல்லிகளாகும்படி சபித்துவிட்டார்.
இருவரும் தாங்கள் செய்த தவறுக்கு மன்னிப்பு வேண்டினர். மேலும் சாபம் நீங்கப் பிராயச்சித்தம் கோரியும் நின்றனர். இந்திரன் யானையாகி வரதனைத் தரிசிக்க அத்திகிரிக்கு வருவான். அப்போது உங்கள் சாபம் நீங்கும் என்று விமோசனத்துக்கு வழி கூறினார் ரிஷி.
ஹேமனும், சுக்லனும் பல்லியுருவைப் பெற்றுக் காஞ்சிபுரத்திலுள்ள அத்திகிரி க்ஷேத்திரத்தில் பல்லி உருவில் வசித்தனர். முனிவர் சொன்னபடி நடக்கவே பல்லி உருவம் நீங்கப் பெற்று வரதராஜப் பெருமானைச் சேவித்து நற்கதி பெற்றனர்.
இந்நிகழ்ச்சியைக் குறித்து காஞ்சி வரதராஜர் கோயில் பிரகாரத்தின் வடகிழக்கு முலையில் கச்சிவாய்த்தான் மண்டபம் என்ற ஒரு நாற்கால் மண்டபத்தை அடுத்து வைய மாளிகைப் பல்லி என்று பேர் பெற்று, இரண்டு பல்லிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேல்தளத்தில் ஒன்று தங்கத்திலும் ஒன்று வெள்ளியிலும் அமைக்கப்பட்டுள்ளது. கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இப்பல்லிகளைத் தொட்டுக் கண்களில் ஒத்திக் கொள்கிறார்கள். ஏணி வழியாக ஏறிக் கைகளாலும் வஸ்திரத்தாலும் அந்தப் பல்லியைத் தொட்டு வரதனை வணங்கினால் நோயிலிருந்து விடுபடுவார்கள் என்பது ஐதீகம். இந்நிகழ்ச்சி காலங்காலமாகப் பக்தர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
அதேபோன்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் திருத்தலத்தில் அமைந்துள்ள அருள்மிகு பாமா ருக்மணி சமேத ஸ்ரீவேணுகோபால சுவாமி ஆலயம் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையுடையது. இங்குள்ள ஆண்டாள் சந்நிதியின் பின்புறம் மேற்கு நோக்கிய சுவரில் மூன்றடி நீளமுள்ள பெரிய பல்லி ஒன்றின் புடைப்புச் சிற்பம் உள்ளது. இதை மோட்சப் பல்லி என்று அழைக்கிறார்கள். பக்தர்கள் இதைத் தொட்டுத் தடவியும், திருவிளக்கேற்றியும் வழிபடுகிறார்கள். முக்கியமாக ஊர்வன ஜந்துக்களிடமிருந்து தங்களைக் காக்கும்படி வேண்டிக் கொள்கிறார்கள். நோய் தீர்க்கும் பல்லியாக வழிபடுகிறார்கள்.
இவ்வாறு இரு தலங்களில் உள்ள பல்லிகள் பக்தர்களின் வழிபாட்டுக்குரியனவாகத் திகழ்கின்றன. இதுபோன்று பல்லியை வழிபாடு செய்வது வேறெங்கும் இல்லை எனத் தெரிகிறது.
பல்லி சொல் கேட்டல் பற்றிய செய்திகள் சங்க இலக்கியங்களில் மிகுதியாகக் காணப்படுகின்றன.
“ஓங்கிய நல்இல் ஒருசிறை நிலைஇ
பாங்கர்ப் பல்லி படுதொறும் பரவி
கன்றுபுகு மாலை நின்றோள் எய்தி…”
இது அகநானூறு, 9&வது செய்யுளில் கல்லாடனார் என்ற புலவர் பாடியது. இதன்பொருள் : சிறப்புற உயர்ந்த நல்ல வீட்டில் ஓரிடத்தில் நின்று தலைவன் வருகையை நினைந்து நன்னிமித்தத்தைக் குறிக்கும்படியாகப் பக்கத்தில் பல்லி சொல்லும் போதெல்லாம் அதனைப் போற்றி வாழ்த்தினேன் (பல்லி சொல்லுந் தோறும் வாழ்த்துதல் மரபு) அப்பல்லியின் ஒலியைக் கேட்டவண்ணம் வீட்டில் இருந்தாள். அவளைத் தலைவனின் மனம் சென்றடைந்தது என்பதாம்.
“பகுவாய்ப் பல்லிப் பாடு ஓர்த்து, குறுகும்”
இது அகநானூறு, 88-வது செய்யுளில் ஈழத்துப் பூதன் தேவனார் பாடியது. பொருள் : பிளவுபட்ட வாயையுடைய பல்லியானது நன்னிமித்தமாக ஒலித்ததை ஆராய வேண்டும் என்பதாம்.
“பதுக்கைத் தாய செதுக்கை நீழற்
கள்ளி முள்ளரைப் பொருந்திச் செல்லுநர்க்கு
உறுவது கூறுஞ் சிறு செந்நாவின்
மணியோர்த் தன்ன தெண்குரல்
கணிவாய்ப் பல்லிய காடிறந் தோரே”
                                                    – அகநானூறு – 151-வது செய்யுள்.
இச்செய்யுளைப் பாடியவர் காவன் முல்லைப் பூதனார் என்னும் புலவராவார். பொருள் : புல்லும் புதரும் கல்லும் முள்ளும் நிறைந்து வழியும் கடினமான காட்டு வழியில் செல்வோருக்கும் உறுவது பற்றிக் கூறும் செவ்விய சிறுநாவைக் கொண்ட பல்லியின் சொல் என்பதாம்.
“இடூஉ ஊங்கண் இனிய படூஉம்
நெடுஞ் சுவர்ப் பல்லியும் பாங்கில் தேற்றும்”
                                                       - நற்றிணை &246&வது பாடல்.
இப்பாடலைக் கூறியவர் காப்பியஞ்சேந்தனார் என்ற புலவராவார். பொருள் : பார்க்குமிடம் எங்கும் இனியன தோன்றும். நெடிய சுவரிலுள்ள பல்லியும் நம் பக்கத்திலிருந்து ஒலி செய்து நன்னிமித்தம் தெரிவிக்கும் என்பதாம்.
“இணை நலமுடைய கானஞ் சென்றோர்
புனை நலம் வாட்டுநர் அல்லர் மனைவயின்
பல்லியும் பாங்கு ஒத்து இசைத்தன
நம் எழில் உண்கணும் ஆடுமால் இடனே”
                                                                  – கலித்தொகை 11-வது பாடல்.
இப்பாடலைப் பாடியவர் பாலை பாடிய பெருங்கடுங்கோ என்னும் புலவராவார். பொருள் : அருள்வாய்ந்த செயல்கள் நிகழும் காட்டிற்கு அவர் சென்றார் ஆதலால் நம் புனைந்த நலத்தைக் கெடுக்க மாட்டார். அதற்குக் காரணம் என்னவென்றால் நம் இல்லத்தில் உள்ள பல்லி அவர் வருகைக்கு ஏற்றவாறு பொருந்தி ஒலித்தது. நல்ல சகுனம் என்பதை நல்ல அழகையுடைய என் கண்ணும் இடப்பக்கத்தில் துடிக்கிறது என்பதாம்.
மேலும் நோய் நீங்கும் பொருட்டு வைத்தியம் பார்க்கச் செல்ல யோசிக்கும் போதும், திருத்தல யாத்திரை மேற்கொள்ள முனையும் போதும், வீடுகட்ட, திருமணப் பேச்சுப் பேச, மற்ற சுபகாரியங்கள் பற்றிப் பேசும் போதும் பல்லி சொல்லும் சொல்லைக் கவனமுடன் கேட்டு நம்பிக்கையுடன் பின்பற்றி நடப்பதில் மக்கள் உறுதியாக உள்ளனர் என்பதையும் சங்க இலக்கியங்கள் தெரிவிக்கின்றன.
பல்லி சொல்லும் ராசிபலன் ஓர் அற்புதமான பாடல் மூலம் சொல்லப்படுகிறது.
“எழுவாய் மேஷம் படைபூசல்
இடவங் கடகங் குடிபோக்கும்
நழுவாய் மிதுன நல்வசனம்
நண்டு விழுந்து களிப்பாகும்
கழிவே யாகுந் தனஞ் சிங்கம்
கன்னி பழங்காய் வெற்றிலையாம்
தொழுதே தூதன் றுலமாகும்
தூங்கு தேள் பொன் பெண் வருத்தே
வில்லில் விருந்து மிகவுண்டு
வேண்டும் மகரம் விண்ணமுதாம்
நல்ல கும்ப நோயுண்டாம்
நாட்டு மீனங் களியாகும்
அல்லிற் சிறந்த குழன்மடவா
யறியச் சொன்னோ மன்னிசையாஞ்
சொல்லும் பல்லி கொடி சூரன்
தும்ம லென்றே யறிந்திடவே”
இப்பாடலில் மேஷம், இடவம், கடகம், மிதுனம், நண்டு, சிங்கம், கன்னி, தேள், வில், மகரம், கும்பம், மீனம் ஆகிய பன்னிரு ராசிகளும் அவற்றுடன் பல்லி சொல்லுக்குப் பலன்களும் கூறப்பட்டுள்ளன.
இப்பாடல் யாரால் எப்பொழுது இயற்றப்பட்டது என்ற விபரம் கிடைக்கவில்லை. கௌளி சாஸ்திரம் தோன்றிய காலத்தில் உருவாக்கப்பட்ட பாடலாகக் கருதலாம்.
பல்லி சொல்லும் பதினாறு பலன்கள் : இது பல்லி தொடர்ந்து ஒன்று முதல் பதினாறு முறை சொல்லும் சொல்லுக்குரிய பலன்களைக் குறிக்கும் பாடலாகும்.
“அருக்கன் மேற் பயநாச மிரண்டிற் சாவு
அகன்ற வர்பின் மீண்டிடுவார் மூன்றே யாகில்
உருக்கமுள்ள சாவதனைக் கேட்க நாலு
ஒரு சண்டை யுண்டைந்தா முறவாமாறு
விரிதலையு மழுகுரலு மழையு நோயு
மென் மேலுந் துக்க முண்டாகு மேழு
தரித்திடு பூச்சந்தனமு மணமும் கொண்டு
தகுதியுள்ளோர் கூடி வரலாகு மெட்டே”
“சித்தமிக மகிழ்ச்சியுண்டா நாலோ டைந்து
தீதாகவே யுரைக்குந் தெரியும் பத்து
அத்தமிசை யாத்திரை காணா றோடைநது
அக மகிழ்ச்சிக் கலியாணமா றோடாறு
பத்தி வருங் காணிக்கை பதிமூன்றிற்குப்
பறந்துவரு மிழவோலை பதினாலுக்கு
மெத்தவரு முறவின் முறை யேழுமெட்டும்
மென்மேலும் போகமுண்டாம் பதினாறுக்கே”
இப்பாடலில் பல்லி ஒருமுறை ஒலி எழுப்பினால் என்ன பலன். இரண்டு முறை ஒலித்தால் என்ன பலன். இப்படி வரிசைக் கிரமமாக எண்ணிக்கைப்படி பதினாறு முறை ஒலித்தால் என்ன பலன் என்பதையும் தெளிவாகத் தெரிவிக்கின்றது. இப்பாடலும் யாரால் எப்போது இயற்றப்பட்டது என்ற விபரம் தெரியவில்லை. இப்பாடல்கள் பழம்பெரும் நூலான அபிதான சிந்தாமணியில் கூறப்பட்டுள்ளன.
இவ்வாறு பல்லி சொல் குறித்த பழம் பாடல்கள் அதன்மீது மக்கள் கொண்ட நம்பிக்கையை வலியுறுத்திக் கூறுகின்றன. சங்க காலம் தொட்டே மனிதகுலம் பல்லியின் சொல்லுக்குக் கட்டுப்பட்டே வந்திருக்கிறது என்பதை உறுதியுடன் நம்பலாம்.
பழமொழிகள்

பல்லி குறித்துப் பல பழமொழிகளும் உள்ளன. இல்லை இல்லை என்ற இடத்தில் பல்லியும் சேராது என்றும், பல்லி சொல்லுக்குப் பலனுண்டு என்றும், கௌளி சொன்னா கடவுள் சொன்ன மாதிரி என்றும், ஈசான்யத்தில் பல்லி சொன்னா ஈசுவரனே சொன்ன மாதிரி என்றும் மொழியப்படும் சொலவடைகள் மக்களிடையே வழங்கப்படுகின்றன. ஈசான்ய மூலையில் பல்லி சொல்வது மிகவும் உத்தமமானது என்ற நம்பிக்கையும் மக்களிடம் மிகுதியாகக் காணப்படுகிறது.
வீட்டில் பல்லிகள் நிறைந்து காணப்பட்டால், மயில் தோகைகளை அங்கங்கே செருகி வைத்தால், அவற்றின் நடமாட்டத்தைக் குறைக்கலாமாம்.

அன்புடன்

ஜெயபாரதி

திருத்தலங்களில் நோய் தீர்க்கும் பல்லிகள்

THE EIGHT-ARMED WONDER

எண்தோள் வீசி நின்ற அற்புதன்

    அப்பர் பெருமான் திருவங்கமாலை என்னும் பாடலைப் பாடியுள்ளார். இந்தக் காலத்திலெல்லாம் இந்த மாதிரியான பாடல்கள் கிட்டத்தட்ட வழக்கொழிந்து போய்விட்டன.
    கோயில்களில்கூட யாராவது இந்தக் காலப் பாடகர்கள் ரொம்ப ரொம்ப ரொம்ப உருக்கமாகக் குரலை வைத்துக்கொண்டு தழுதழுக்கப் பாடிய பாடல்கள், அல்லது டபுக்குடப்பான் டப்பான் டப்பான் என்று தாளம் 
போட்டுக் கொண்டு பாடும் 'சாமிப் பாடல்கள்', அல்லது "காளியம்ம்ம்ம்ம்ம்மாஆஆஆஆ ஆஆஆ"....." என்று டண்டனக்கா டணக்குனக்கா என்று உடுக்கு, பம்பை, உருமி, தவில் முதலியவற்றை இடித்து...... ஓ... திருத்தம் திருத்தம் - அடித்து ..... அந்த நிசும்பசூதினியையே திடுக்கிடவைக்கும் பாடல்களைத்தாம் போடுகிறார்கள்.
     இல்லையென்றால் பாம்பே 
சகோதரிகள் பாடிய பாடல்கள்.

    யார் இந்த திருவங்க மாலை, திருநீற்றுத் திருப்பதிகம், கோளறு திருப்பதிக மெல்லாம் பாடுகிறார்கள்?

    "யோவ்..... ரொம்ப இழுக்காதய்யா.... நேரமாயிக்கிட்டு போஹ¤தில்ல? தங்கம்,செல்லமே எல்லாம் போயிறப் போஹ¤து. அந்த ராதிகா புருசனோட கழுத்துல அருவால வெக்கிற எடத்துல விட்டிருக்காம்யா?..... ராதாரவிமேல பழி போடப் பாக்குறா பாவிப் பொம்பள.... வேகமா வேகமா....", என்று கோயில் தலைவர் தேவாரம் பாட வந்த ஆசாமியைப் பார்த்துச் சொல்வார்.

திருவங்க மாலை என்றால் என்னமோ ஏதோ என்று நினைத்துவிடாதீர்கள்.

"தலையே நீ வணங்காய்.....
தலை மாலை தலைக்கணிந்து
தலையாலே பலி தேறும் தலைவனைத்
தலையே நீ வணங்காய்"

    இதன் இரண்டாம் அடியை ஒரு முறைப் பாடியபோது......

"கண்காள் காண்மின்களோ
கடல் நஞ்சுண்ட கண்டன் தனை
எண்டோள் வீசி நின்றாடும் பிரான் தனைக்
கண்காள் காண்மின்களோ"

"எண்டோள்'னா என்னங்க?" என்று ஒருவர் தனியாகக் கேட்டார்.
"எட்டுத் தோள்கள். அதாவது எட்டுக் கைகளை வீசி ஆடுவது"
"சிவனுக்கு எப்பவும் நாலு கைதானே இருக்கு. எட்டுக் கை ஏது?"
"இருக்கு....... மாணிக்கவாசகர்கூட பாடியிருக்கார் இல்லையா......?

"அன்றே என்றன் ஆவியுடன் உடலும் உடமை எல்லாமும்
குன்றே அணையாய், என்னை ஆட் கொண்ட போதே கொண்டிலையோ?
இன்றோர் இடையூறு எனக்குண்டோ, எண்டோள் முக்கண் எம்மானே?
நன்றே செய்வாய், பிழை செய்வாய்.... நானோ இதற்கு நாயகமே?"

     அந்த எண்டோள் கொண்ட எம்மானை மேலே உள்ள படத்தில் பார்த்துக் கொள்ளுங்கள்.
    இந்த சிலைக்குத் 'திரிபுர சம்மார மூர்த்தி' என்று பெயர்.  

பவானி தேவி தந்த சிவாஜி வாள்

SWORD OF SHIVAJI

பவானி தேவி தந்த சிவாஜி வாள்

இந்தியாவிலிருந்து வெளிநாட்டுக்குக் கொண்டுபோகப்பட்ட அரிய பொருள்கள் அனேகம். கணக்கில் அடங்கமாட்டா. ஏனெனில் அதையெல்லாம் கணக்கெடுக்கக்கூடிய அளவில் எடுத்துச் செல்லப்படவில்லை. அள்ளிக் கொண்டு சென்றார்கள். எத்தனையோ யானைகள், குதிரைகள், ஒட்டகங்கள் தூக்கிச்சென்றிருக்கின்றன!
சாதாரணமாக மக்களுக்குத் தெரிவது கோகினூர் வைரமும் மயிலாசனமும்தான்.
இப்போது வெளிநாட்டில் இருக்கும் பொருள்களின் பட்டியலே மிகப் பெரிய பட்டியல்.
அதில் சிவாஜியின் வாளும் இருக்கிறது.

சிவாஜி ஒரு சாக்தர். தாந்திரீக வழிபாட்டில் அவருக்கு ஈடுபாடு இருந்திருக்கிறது. அவருக்கு இரண்டு முறை முடிசூட்டும் வைபவம் நடந்தது. அதில் ஒன்று தாந்திரீக முறையில் நடந்தது.

ஆஞ்சநேய உபாசகராகிய ஸ்மார்த்த ராமதாசர் அவருடைய குரு.

ஸ்மார்த்த ராமதாசர் எப்படி ஆஞ்சநேயரை உபசனா மூர்த்தியாக வசப்படுத்திக்கொண்டார் என்பது ஒரு ரசமான வரலாறு.
சிவாஜி அம்பாள் பவானியின் வழிபாட்டைச் சிறப்பாகச் செய்துவந்தார்.
முகலாயரை அடக்குவதற்காக அவருக்கு பவானி அம்பாள் ஒரு வாளைத் தந்திருக்கிறாள்.

அந்த வாள் சிவாஜிக்கு மனோதைரியத்தையும் மன உறுதியையும் தொடர்ந்த வெற்றிகளையும் கடைசிவரைக்கும் கொடுத்துவந்தது.

சிவாஜிக்குப் பிறகு அவருடைய வாரிசுகளான பான்ஸ்லே மன்னர்கள் வலுக்குறைந்து போய் பெயரளவில் ஆண்டுவந்தனர்.
உண்மையான அதிகாரமும் பலமும் பேஷ்வா எனப்படும் அமைச்சர்/தளபதி/தனாதிகாரி/கவர்னர் ஆகிய பதவிகளின் கூட்டைக் கையில் வைத்திருந்த ஆட்களிடம்தான் இருந்தது.
அத்துடன் படைபலம் வைத்திருந்த ஆளுனர்கள், படைத்தலவர்கள் முதலியோரிடமும் இருந்தது. ஸிந்தியா, ஹோல்க்கார், கெய்க்வாட் போன்றோர் இந்த வட்டத்தில் அடங்குவர். இன்னும் பல நூற்றுக்கணக்கான மராத்தியர்கள் ஆங்காங்கு ஊர்களையும் பிரதேசங்களையும் கைப்பற்றிக்கொண்டு ஆண்டுவந்தனர்.
பிரிட்டிஷ்காரர்கள் ஆண்டபோது நூற்றுக்கும் மேற்பட்ட மராத்திய சமஸ்தானங்கள் இருந்தன. இன்னும் ஜமீன்கள் வேறு. பதினெட்டாம் நூற்றாண்டில் இவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகம். அது படிப்படியாகக் குறைந்துவிட்டது. 1857-இல் வெகுவாகக் குறைக்கப் பட்டுவிட்டது.
ஜான்ஸி போன்ற நாடுகள் பிரிட்டிஷாரால் பிடுங்கிக்கொள்ளப்பட்டு விட்டன.
இந்தப் பானிப்பட்டும் ஈஸ்ட் இண்டியா கம்பெனியும் மட்டுமில்லை யென்றால் நாமெல்லாம் கீற்றுநாமத்தைப் போட்டுக் கொண்டு மராத்தி பாஷையைப் பேசிக்கொண்டிருப்போம்.
பான்ஸ்லேக்களின் ஆட்சியில் சத்தாரா நாடு இருந்தது. இரண்டு மூன்று தலைமுறைகள் கழித்து சத்தாராவிலிருந்து கோல்ஹாப்பூர் பிரிந்துவிட்டது. அதையும் பான்ஸ்லேக்களின் ஒரு கிளையினர் ஆண்டனர்.

கோல்ஹாப்பூர் ராஜா வசம் சிவாஜியின் வாள் இருந்திருக்கிறது. பிற்காலத்தில் அந்த வம்சத்தைச் சேர்ந்த ஓர் அரசர் அதனை 'மொட்டைத்தலை மவராசா' என்று அன்பாகக் குறிப்பிடப்படும் ஏழாம் எட்வர்டு சக்கரவர்த்திக்கு அன்பளிப்பாகக் கொடுத்துவிட்டார்.
அம்பாள் பவானி கொடுத்த கத்தி அது!
என்ன பிரமாதம்! அம்பாள் பவானியே அம்புட்டிருந்தால் அந்த ராஜா அவளையும்கூட அன்பளிப்பாக லண்டனுக்கு அனுப்பியிருப்பான், அந்த தோஸ்த்தி லண்டன்.

மராட்டிய மாவீர‌ன் சிவாஜி வாழ்வில் நடந்த நிகழ்வு …

நட்புக்கரம் நீட்டி வரவைழத்த ஒளரங்கசீப், நயவஞ்சகமாகத் தன்னையும் தன் மகனையும்  கைதுசெய்து சிறையில் அடைப்பான் என்று கொஞ்சமும் எதிர்பார்த்திராத மராட்டிய மாவீர‌ன் சிவாஜி, அடிபட்ட புலி போல ஆக்ரா சிறையில் உறுமிக்கொண்டு இருந்தார்.
 சிவாஜி : மகனே‘‘ஒவ்வொரு வியாழனும் ஏராளமான பழங்கள் வைத்து பூஜித்து,அதைத் தானம் செய்வது வழக்கம் என்று சிறை அதிகாரிகளிடம் சொல்லி, அதற்கான ஏற்பாடுகளைச் செய்’’
 மகன்(சம்பாஜி ):‘‘தந்தையே! நாம் பெரும் ஆபத்தில் இருக்கிறோம். இப்போது எதற்காக பூஜை?’’
 சிவாஜி: ‘‘மகனே! நீ அச்சத்தின் பிடியில் அகப்பட்டுவிட்டாய் என நினைக்கிறேன். அச்சப்பட்டவர்கள் வெற்றி பெற்றதாகச் சரித்திரம் கிடையாது. நான் இங்கிருந்து தப்பிக்கத்தான் வழி சொல்கிறேன்’’
 மகன் (சம்பாஜி ): ‘‘முகலாயர்களிடம் இருந்து தப்புவதா… அது முடியுமா? (சந்தேக‌த்துடன்)’’
சிவாஜி : ‘‘துணிந்தவனுக்குத் தோல்வியில்லை’’ (உறுதியோடு) அதன்பின்,சிறைக்கு பழக்கூடைகள் வருவதும் போவதும் வழக்கமாயிற்று. அந்தக் கூடைக்குள் அமர்ந்துதான் சிவாஜியும் சம்பாஜியும் ஒருநாள் தப்பித்தார்கள்.
 பூனேவுக்கு அருகே, 1630-ல் சிவானி கோட்டையில் பிறந்தார் சிவாஜி. தந்தை ஷாஜி, பூனே சுல்தானின் படைப்பிரிவில் மேஜராகப் பணியாற்றி வந்ததால், தாய் ஜீஜாபாய் மற்றும் தளபதி ஷாயாஜியின் மேற்பார்வையில் வளர்ந்தார் சிவாஜி.
 சிறு வயதிலேயே குதிரை ஏற்றம், வாட்ப்போர், வில் வித்தை, குஸ்தி போன்ற வீர‌ தீர விளையாட்டுகளில் அதிக ஆர்வம் காட்டினார். இந்துக்களை அடக்கி ஆண்ட முகலாய ஆட்சியின் மீது அவருக்கு இயல்பாகேவ வெறுப்பு இருந்தது. தாய் ஜஜீ போய் சொன்ன வீர‌க்கதைகளும், சுவாமி ராமதாசரின் ஆசீர்வாதமும், இந்து சாம்ராஜ்யம் நிறுவ சிவாஜிக்கு ஆர்வமும் ஊக்கமும் தந்தன.
‘‘மாபெரும் படை கொண்ட முகாலையர்களை என்னால் வெல்ல முடியுமா?’’ என்று சிவாஜி கேட்டேபாது, அவரது தாயும், சுவாமி ராமதாசரும் ஒரு சேரச் சொன்ன பதில். ‘துணிந்தவனுக்குத் தோல்வியில்லை’.
 பூனாவுக்கு அருகே மலைகளில் வசித்து வந்த ‘மாவலி’ மக்களிடமிருந்து இளைஞர்கைளத் திரட்டி, ‘கொரில்லா’ படை அமைத்தார் சிவாஜி. முகலாயர்களின் பிடியில் இருந்த ரோஹிதேசுவரர் ஆலயத்தையும், தேரான் கோட்டையையும் கைப்பற்றினார்.
 சிவாஜியின் இந்த வெற்றி, இந்துக்களிடையே பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தவே, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அவரது படையில் இணைந்தார்கள். அதன்பின் குபா கோட்டை, இந்திரபுரி, ஜாவ்லி என கிட்டத்தட்ட முந்நூறு கோட்டைகள் சிவாஜி வசமாயின. ஒவ்வொரு முறையும் போருக்குப் புறப்படும் முன், தனது படையினரிடம், ‘‘தோல்வியில்லை, தோல்வியில்லை… துணிந்தவனுக்குத் தோல்வியில்லை’’என்று உற்சாகக் குரல் கொடுப்பார் சிவாஜி. துணிந்து கிளம்பும் அந்தப் படை வெற்றி வாகை சூடி வரும்.
 ஒருமுறை, சிவாஜியின் கோட்டை முன் பெரும் கடெலன முகலாயர் படை நின்றது. போரைத் தவிர்க்க விரும்பினால்,சிவாஜி நிராயுதபாணியாக தன்னிடம் பேச்சு வார்த்தை நடத்த வரேவண்டும் என அழைப்பு விடுத்தான் தளபதிஅப்சல்கான். தனிமையில் போக‌வண்டாம் என அனைவரும் தடுத்தபோதும்,‘‘துணிந்தவனுக்குத் தோல்வியில்லை’’ எனப் புன்னைகத்தவாறு பகைவனைத் தேடிப் புறப்பட்டார் சிவாஜி. ஆயுதமின்றித் தனிமையில் வந்த சிவாஜியைப் பார்த்துக் கேலியாகச் சிரித்த அப்சல்கான், ‘‘உன்னிடம் சமாதானம் பேசவா இத்தனை படையுடன்வந்திருக்கிறேன்’’ என்றபடி சரேலென‌ தன்னுடைய வாளை உருவி, சிவாஜியின் மார்பில் செலுத்தினான். உள்ளே கவசம் அணிந்திருந்த சிவாஜி, கண் இமைக்கும் நேரத்தில் அப்சல் மீது பாய்ந்து, தன் கைகளில் மறைத்து வைத்திருந்த விஷம் தேய்த்த புலி நகங்களால் அவைனக் கீறிக் கொன்று போட்டார். தலைவன் இல்லாத படைகளைப் பந்தாடியது மராட்டிய சேனை. மாபெரும் வீர‌னாக, ‘சத்ரபதி’ என முடிசூடினார் சிவாஜி.
 1680-ம் ஆண்டு மரணமைடயும் வரையில், சிவாஜியைத் தோல்வி என்பது நெருங்கவே இல்லை. காரணம், ‘துணிந்தவனுக்குத் தோல்வியில்லைஎன்கிற அவரது தாரக மந்திரம்தான்.

பத்து இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழ் மொழி எப்படி இருக்கும்?

மொழிச்சிதைவில் உருவான மொழி

சில ஆண்டுகளுக்கு முன்னர் யூனெஸ்க்கொ நடத்திய கணிப்பின்படி அந்தச் சமயத்தில் ஆறாயிரத்து எழுநூற்றுச்சொச்சம் மொழிகள் இருந்தனவாம்.
அவற்றில் பாதி, மிகக்குறுகிய காலத்தில் மறைந்துவிடக்கூடிய அபாயத்தை எதிர்நோக்கியிருந்தன.
தற்காலத்தில் விளங்கும் Information Explosion, இடம் பெயர்தல், வேலை வாய்ப்புகள், படிப்பு, டீவீ, சினிமா, சமயத்தாக்கங்கள், அரசு மொழிகளின் ஆதிக்கம், வர்த்தகம், பெரும்பான்மையினர் பேசும் மொழிகளின் தாக்கம் முதலிய சில முக்கிய காரணங்களால் மொழிகளில் பெரும்பான்மையின அழிந்துபோய்விடும் என்று யூனெஸ்க்கொ ஆய்வு கூறுகிறது.
பல மொழிகள் Pidginisation, Creolisation போன்ற மாற்றங்களுக்கும் ஆளாக நேரிடும்.

முக்கியமாக ஆதிவாசிகள் பேசும் மொழிகள் விரைவில் காணாமற் போகக்கூடும். நியூ கினீ என்னும் தீவு ஆஸ்திரேலியாவுக்கு வடக்கில் உள்ள பெருந்தீவு. உலகிலேயே நான்காவது பெரிய தீவாக அது இருக்கக்கூடும். முதல் மூன்றை நீங்களே தேடிப்பார்த்துக்கொள்ளுங்கள்.
அந்த தீவில் எண்ணூற்று முப்பது மொழிகள் பேசப்படுகின்றன.      
        பலவற்றுக்கு எழுத்துக்கூட கிடையாது. பேச்சு மொழிதான். அவற்றில் பத்து மொழிகள் சமீபத்தில் பேசுவாரற்று மறைந்துபோயின. மிச்சம் எண்ணூற்று இருபது மொழிகள் இருக்கின்றன.

நியூ கினீ தீவில் இரண்டு நாடுகள் உள்ளன. இந்தோனீசியாவின் பகுதியான இரியான் ஜயாவும் தனிநாடாக விளங்கும் பாப்புவா நியூகினீயும். இந்தோனீசியாவின் அரசு மொழியாகிய பாஹாஸா இந்தொனேசியாவின் தாக்கம் இரியன் ஜயாவில் உண்டு.
பாப்புவா நியூகினியில் உள்ள முக்கிய மொழி Tok Pisin என்பது. அது Pidgin Talk என்னும் ஆங்கிலச்சொல்லின் மருவல். அங்குள்ள கஜபுஜ மொழிக் கதம்பம், சீனம், மலாய், ஆங்கிலம் ஆகியவற்றின் கசபுசாவெல்லாம் சேர்ந்து உருவாகியதுதான் பிட்ஜின் மொழி. அன்றாட வழக்கிற்காக அந்த மொழி உருவாகியது. ஆகவே அதனை Business Talk மொழி என்று அழைத்தார்கள். அது தேய்ந்துபோய் பிட்ஜின் ஆகி, பிசின் ஆகி இப்போது அதிகாரபூர்வ மொழியாகிய Tok Pisin ஆகத் திகழ்கிறது.
இது ஒரு தினுசான Linguistic Evolutionதான்.
இன்னும் பத்து இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழ் மொழி எப்படி இருக்கும்?

INDIAN'S THARKKA , NIYAYA SHASTRA

இந்திய தர்க்க, நியாய சாஸ்திரம் -#1

முன்னர் சாண்டில்யன் எழுதிய 'மன்னன் மகள்' நாவலைப் பற்றிய விமரிசனத்தில் 'கௌடில்யரின் தர்க்க சாஸ்திரம்' என்று காணப் பட்டிருந்தது. 
அந்த நாவலின் நாயகனாகிய கரிகாலன், கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம் படித்தவன். அர்த்த சாஸ்திரம் என்பது இந்தியர்களுடைய பதினெட்டு வித்யா ஸ்தானங்களில் ஒன்று. 
'பொருள் நூல்' என்று இதனைத் தமிழில் கூறுவார்கள். 
தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் என்பனவற்றைத் தமிழில் நாம் அறம், பொருள், இன்பம், வீடு என்று சொல்கிறோம்.
இதில் பொருள் நூலாக விளங்குவது அர்த்தசாஸ்திரம்.
இதைப் பற்றி ஏற்கனவே அகத்தியத்தில் அடிக்கடி குறிப்பிட்டிருக்கிறோம். 
தர்க்க சாஸ்திரம் என்பது இன்னொரு துறை. 
இதுவும் இந்தியர்களின் பதினெட்டு வித்யா ஸ்தானங்களில் ஒன்றுதான். 
ஆங்கிலத்தில் இதை Logic என்று சொல்கிறோம்.
தமிழில் 'அளவை சாஸ்திரம்' என்று சொல்கிறோம்.

தர்க்க சாஸ்திரத்தைப் பற்றி எழுத ஆரம்பித்து அந்தத் தொடரில் நான் எழுதிய மடல்களைத் தொகுத்து அனுப்பியுள்ளேன். 

அதன் பின்னர் இந்தியர்களின் தர்க்க சாஸ்திரத்தைப் பற்றி சொல்லி யிருந்தேன். நியாய சாஸ்திரம் என்றும் குறிப்பிடுவார்கள்.
அளவை சாஸ்திரம் என்றும் இதனைச் சொல்வார்கள். 
Logic என்பது ஆங்கில மரபு. 
இந்திய அளவை சாஸ்திரம் மிகவும் வளமுடையது. கல்லைக் கசங்கிப் பிழிந்து சாரத்தை எடுப்பது போன்ற தன்மை படைத்த தர்க்க முறைகள் நம்மிடம் இருக்கின்றன. 
கையில் இருப்பதைக் கையால் உணர்ந்து கண்ணாலும் காண்பது போன்ற நேரடியான உண்மையை 'ஹஸ்தாமலக நியாயம்' என்று சொல்வார்கள். உள்ளங்கை நெல்லிக்கனி என்பது எல்லாருக்கும் பரிச்சயமாயிருக்கும். 
ப்ரத்யக்ஷப் பிரமாணம் என்பது கண்ணால் காண்பதே உண்மை, அதுவே அத்தாட்சி என்னும் நியாயம். 
கண்ணால் பார்க்கமுடியாதது; அதை அனுமானத்தில் தெரிந்து கொள்வது எப்படி என்பதைச் சொல்லும் முறைகளும் சில இருக்கின்றன. 
மலையின் உச்சியில் நெருப்பு இருக்கிறது. 
எங்கு புகை யிருக்கிறதோ அங்கு நெருப்பு இருக்கும். 
நெருப்பில்லாமல் புகையாது. 
மலையின் உச்சியில் புகை இருக்கிறது. 
ஆகவே மலையின் உச்சியில் நெருப்பு இருக்கிறது. 

இந்த விஷயத்தில் நெருப்பு இருப்பதை நாம் காணவில்லை. ஆனால் புகையை வைத்து நெருப்பும் அங்கு இருப்பதாக அனுமானம் செய்து விடுகிறோம்.
இதில் Fallacy என்பது உண்டு. 
மலையின் உச்சியில் இருப்பது புகைதான் என்பது என்ன நிச்சயம்? மூடு பனியாக இருக்கலாம். மேகமாக இருக்கலாம். 
பல தவறான வாதங்களும் உண்டு. 
எல்லா மனிதர்களும் மிருக இனத்தைச் சேர்ந்தவர்கள்.
எல்லாக் குரங்குகளும் மிருக இனத்தைச் சேர்ந்தவை. 
ஆகவே மனிதரெல்லாம் குரங்கு. 
இது தவறான தர்க்கவாதம். 

ஆராய்ச்சி நெறி முறைகளில் இந்திய நியாய சாஸ்திரம் மிகவும் அதிகமாக உதவக் கூடியது. 

தர்க்கசாஸ்திரத்தைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தேன். 
அந்த மாதிரி நேரத்தில் தர்க்க சாஸ்திரத்தைப் பற்றி சொல்லக் கூடிய ஆள் நானாகத்தான் இருக்கும். 

பார்க்காததையும் ஊகித்தறியும் சில தார்க்கீக முறைகளில் ஒன்றைச் சொன்னேன். 
ஒரு ஆசாமி இருக்கிறான். 
அவன் பெயர் குண்டு ராமன். 
உடல் மிகவும் பருமனாக வாட்டசாட்டமாக இருந்ததால் அவனுக்கு அப்பெயர். 
ஆனால் அவன் உணவு சாப்பிட்டதை யாரும் பார்த்ததேயில்லை. 
பகல்பூராவும் அவன் பாட்டுக்கு அவன் பார்க்கவேண்டிய வேலையைப் பார்ப்பான். இல்லையெனில் தூங்கிக்கொண்டிருப்பான். 

தர்க்கவாதி ஒருவர் சொன்னார்: 
"குண்டு ராமன் பகலுண்ணான்; 
இரவுண்பான்". 

இரவுண்பான் என்பது அவருடைய முடிபு.
எப்படி அதனைச் சொல்கிறார்? 

தர்க்கவாதி மேலும் சொல்கிறார்: 
"உணவு உண்ணாதான் உடல் மெலிந்திருப்பான். குண்டு ராமன் மெலிய வில்லை. மாறாக பருமனாக இருக்கிறான்". 
தர்க்கவாதி இன்னும் சொல்கிறார்: 
"உணவை அதிகமாக சாவகாசமாக உண்டால் உடல் பருமனாக ஆகும்". 
"குண்டுராமன் பகலில் உண்ணாததால் வேறு ஏதோ நேரத்தில் உண்ண வேண்டும்". 
"அதுவும் யாரும் பார்க்காத நேரமாக இருக்கவேண்டும்". 
"ஆகவே குண்டுராமன் இரவில் உண்பவனாக இருத்தல் வேண்டும்". 

துணிபு: 'பகலுண்ணான், இரவுண்பான் குண்டுராமன்'.

இந்த தார்க்கிக்க வாதத்தை நான் என்னுடைய சொந்தச் சொற்களால் சொந்தமான பாணியில் சொல்லியிருக்கிறேன். 
உங்களில் யாருக்கும் இந்திய தர்க்க சாஸ்திரம் பரிச்சயமாக இருந்தால் நீங்கள் வேறு விதமாகப் படித்திருக்கக்கூடும்.

இதற்கு தர்க்கசாஸ்திரத்தில் ஒரு பெயர் உண்டு: 

'அருத்தாபத்தி நியாயம்'.

இன்னும் வரும்......

ARTHA SATRA OF KAUTILYA @ CHANAKYA

சாணக்கியர் என்னும் கௌடில்யரின் அர்த்தசாஸ்திரம்
ஓர் அறிமுகம்

அர்த்தசாஸ்திரம் என்றால் நினைவுக்கு வருபவர் சாணக்கியர்.
அர்த்த சாஸ்திரத்தை சாணக்கியர் மட்டுமே எழுதினார் என்ற எண்ணம் ஒன்று தற்கால இந்தியர்களிடம் இருக்கிறது.
'அர்த்த சாஸ்திரம்' என்பது அறம், பொருள், இன்பம், வீடு எனப்படும் தர்ம, காம, அர்த்த, மோக்ஷம் என்னும் நான்கில் பொருள்அல்லது 'அர்த்த' என்னும் துறையைப் பற்றிய சாஸ்திரம்.
அப்பாடா!
ஒருவகையாக define செய்தாச்சு.
சாக்ரட்டெஸ் சொன்னமாதிரி "ஒரு விஷயத்தை அது இன்னது என்றோ, ஒரு கேள்வி எதைப் பற்றியது என்றோ define செய்துகொள்ள வேண்டும். அப்படிச் செய்துவிட்டால் முக்காலே மூணு வீசம் காரியம் பூர்த்தியாகிவிட்டது என்றாகிவிடும்".
வாஸ்தவம்தான்.
'எதைப் பற்றி நாம் ஐயப்பாடு கொண்டிருக்கிறோம்; எதைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது; என்ன பிரச்னை'என்பதை நாம் புரிந்து கொண்டு வரையறுத்துக் கொள்ளவில்லையென்றால் ஒரு மாயச்சுழலில் மாட்டிக்கொள்ள நேரிடும்.

சில மடற்குழுக்களில் நடைபெறும் பரிமாற்றங்களையும் பல ப்லாகுகளையும் பார்த்தாலேயே இது நன்கு புரிந்துவிடும்.
பொழுதைப் போக்கவேண்டும் என்று அங்கெல்லாம் போகிறவர்களுக்கு அதெல்லாம் தட்டுப்படமாட்டாது. அதற்காகத்தானே அவர்கள் அங்கு போகிறார்கள். இருக்கக்கூடிய clutter-இல் இன்னும் கொஞ்சம் clutter-ஐக் கொட்டிக்கொள்கிறார்கள். அது அவர்களுக்குப் பிடிக்கிறது.
அதது அவரவருக்கு; அதது அங்கங்கு.

அர்த்த சாஸ்திரத்திற்கு வருகிறேன்.

அர்த்த சாஸ்திரம் என்பது ஒரே ஒரு துறையைப் பற்றியது மட்டுமில்லை. அதற்குள் பல பிரிவுகள் இருக்கின்றன.
சாணக்கியர் எழுதியது என்பதால் அது ராஜதந்திரம் பற்றியது என்று நினைப்பார்கள். அதுவும் குறிப்பாக சாணக்கியர் என்னும் பெயரைக் கேட்டதுமே 'அரசியல் சூழ்ச்சி' என்றுதான் உருவகம் தோன்றும்.
பார்த்தீர்களா!
பாரடைம் என்று முன்பு சொன்னேனல்லவா? இதெல்லாம் Paradigmatic எண்ண ஓட்டம்தான்.
சாணக்கியருக்குக் கௌட்டில்யர் என்றொரு பெயரும் உண்டு.
அந்தப் பெயரை ஒட்டி 'கௌட்டில்லியம்' என்று அவர் இயற்றிய அர்த்த சாஸ்திர நூலைக் குறிப்பிடுவார்கள்.
அதில் அவர் பல விஷயங்களைப் பற்றி எழுதியுள்ளார்.
அவற்றில் சில ராஜதந்திரம், ராஜரீகம், நிர்வாகம், அரசு இயல் போன்றவை.
நாணயம் அடிப்பதுபற்றிக்கூட அவர் எழுதியிருக்கிறார்.
வெள்ளிநாணயம் என்றால் அது எத்தனை கனமாக இருக்கவேண்டும்; என்ன எடை இருக்கவேண்டும்; அந்த வெள்ளியில் எந்தெந்த உலோகங்கள் எந்த விகிதத்தில் கலந்திருக்கவேண்டும். அச்சு என்பது எப்படி இருக்கவேண்டும். அக்கசாலை எப்படி இருக்கவேண்டும் என்பதையெல்லாம் வரையறுத்துள்ளார்.
அக்கசாலை என்பது நாணயம் அச்சிடும் இடம். Mint என்று சொல்லப் படுவது.
சென்னையின் ஒரு முக்கியமான பஸ் ரூட்டாக Mint இருந்தது. ஏனெனில் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் அங்கு பிரிட்டிஷ்காரர்களின் அக்கசாலை இருந்தது.

சாணக்கியர் எழுதியுள்ள நூலில் போரியலைப் பற்றியும் காணலாம்.
போரியல் என்றதும் சிலருக்கு ஸ¤ன் ட்ஸ¥ Sun Tzu பற்றிய ஞாபகம் வந்துவிடும்.ஸ¤ன் ட்ஸ¥ சீனர்களில் ஒரு பெரிய போரியல் விற்பன்னர். அவருடைய சொந்த வாழ்க்கையைப் பற்றி மிகக் குறைவாகவே அறிந்து கொள்ள முடிகிறது.
அவரை ஆதரித்த வள்ளலாக விளங்கியவர் ஒரு சீனச் சிற்றரசர்.
ஸ¤ன் ட்ஸ¥வை அவர் தம்முடைய போரியல் ஆலோசகராக வைத்துக் கொண்டதற்கு ஒரு பின்னணி உண்டு......

இன்னும் வரும்......

விக்னநாசன கணபதி

VIGNA NAASANA GANAPATHI

விநாயகருக்குப் பதினாறு வகையான மூர்த்தங்கள் இருக்கின்றன.
அவருக்குச் சிறப்பாக பதினாறு நாமங்கள் கொண்ட சோடச நாமாவளியும் இருக்கிறது.
இந்தச் சிறப்பான நாமாவளி விநாயகரின் விக்னநாசன கணபதி அம்சத்துக்கு உரியது.
விநாயகரை விக்னநாசனனாக வழிபடுவதற்கென்று தனிப்பட்ட மந்திரங்கள் இருக்கின்றன. 'விக்னேஸ்வர சோடச நாமம்' என்று பெயர் பெற்றவை.
சங்கடங்களை நீக்குவதற்கென்று சங்கடஹர கணபதி. அதுபோலவே விக்னங்களை நீக்குவதற்கு விக்னநாசனன் அல்லது விக்னஹரன்.
விக்னநாசன கணபதியின் சோடச நாமங்களைத் தனித்தனியாகவும் சொல்லலாம். பதினாறையும் ஒரே மந்திர சுலோக தோத்திரமாகவும் சொல்லலாம்.

ஸ¤முகச்ச ஏகதந்தச்ச கபிலோ கஜகர்ணக:
லம்போதரச்ச விகடோ விக்நராஜோ விநாயக:
தூமகேதுர் கணாத்ய§க்ஷ¡ பாலச்சந்த்ரோ கஜானன:
வக்ரதுண்ட: சூர்ப்பகர்ணோ ஹேரம்ப: ஸ்கந்தபூர்வஜ:

இதனையே நாமாவளியாக:

ஸ¤முகாய நம:
ஏகதந்தாய நம:
கபிலாய நம:
கஜகர்ணகாய நம
லம்போதரய நம
விகடாய நம
விக்நராஜாய நம
விநாயகாய நம
தூமகேதவே நம
கணாத்யக்ஷ¡ய நம
பாலச்சந்த்ராய நம
கஜானனாய நம
வக்ரதுண்டாய நம
சூர்ப்பகர்ணாய நம
ஹேரம்பாய நம
ஸ்கந்தபூர்வஜாய நம

                இவை அனைத்திற்கும் சுருக்கமான பதார்த்தமும் - பத +அர்த்தம் - சொல்லும் அதன் பொருளும் - இருக்கிறது. அதே சமயத்தில் நீண்ட விரிவான பாஷ்யம் போன்ற விளக்கவுரையும் இருக்கிறது.

                சுருக்கமான பதவுரையை எளிமைப்படுத்திச் சொல்கிறேன்.

ஸ¤முகாய நம: = மங்கலகரமான முறுவலுடன் கூடிய இனிய முகத்தோன்
ஏகதந்தாய நம: = ஒற்றைத் தந்தமுடையவன்
கபிலாய நம: = கபில நிறமுடையவன்
கஜகர்ணகாய நம = யானைக்காது உடையவன்
லம்போதராய நம = தொப்பையான வயிற்றையுடையவன்
விகடாய நம = வேடிக்கையானவன்
விக்நராஜாய நம = விக்னங்களை மேலாதிக்கம் செய்து தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து அடக்கி ஆளும் அரசன்
விநாயகாய நம = தனக்கு மேலாக உள்ள நாயகன் - தலைவன் யாரும் இல்லாதவன்.
தூமகேதவே நம = புகை போன்ற வண்ணம் கொண்ட உருவம் உடையவன்
கணாத்யக்ஷ¡ய நம = கணங்களுக்கு அதிபதியாக உள்ளவன்
பாலச்சந்த்ராய நம = நெற்றியில் சந்திரனை அணிந்துள்ளவன்
கஜானனாய நம = யானை முகத்தோன்
வக்ரதுண்டாய நம = வளைந்த துதிக்கையை உடையவன்
சூர்ப்பகர்ணாய நம = முறம் போன்ற காது உடையவன்
ஹேரம்பாய நம = ஐந்து செம்முகங்களும் மஞ்சள் நிறமும் பத்துக்கரங்களும் கொண்டு, சிம்ம வாகனத்தில் அமர்ந்திருப்பவன்.
ஸ்கந்தபூர்வஜாய நம = முருகனுக்கு முன்பு தோன்றியவன்