..
தங்கள் குழந்தைகளின் தேர்வுகள் முடிவு தெரிந்தவுடன், பெற்றோர்கள் அனைவருக்கும் அடுத்ததாகவரும் கேள்வி தங்கள் குழந்தைகளுக்கு ஏற்ற மேல்நிலை கல்வியை தேர்ந்தெடுப்பது பற்றியதாகஇருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை , இதில் ஒருவரது ஜாதக அமைப்பிற்கு எந்தவகையான உயர் கல்வியை தேர்ந்தெடுத்து படிக்க வைத்தால் , அவர்கள் அதில் சிறந்து விளங்குவார்கள்.
அவர்களுக்கு அதிக ஆர்வம் உள்ள உயர் கல்வி எது ? வாழ்க்கையில் பொருளாதார ரீதியாகமுன்னேற்றம் தரும் உயர் கல்வி எது ? படித்து முடித்தவுடன் நல்ல வேலை வாய்ப்பினை பெற்று தரும்உயர் கல்வியை ஜாதகரீதியாக தேர்ந்தெடுப்பது எப்படி ? என்பதை பற்றி இந்த பதிவில் காண்போம் !
ஒரு ஜாதகருக்கு உயர் கல்வியை தேர்ந்தெடுக்கும் பொழுது , அவரது சுயஜாதகத்தில் நாம் கவனிக்கவேண்டிய பாவகங்கள் , உயர் கல்வி மற்றும் சுக ஸ்தானம் எனும் நான்காம் வீடும், ஜீவன ஸ்தானம்எனும் பத்தாம் வீடும் மட்டுமே , சுய ஜாதகத்தில் இந்த இரண்டு வீடுகளும் மிகவும் சிறப்பாக அமைந்து ,அந்த வீடுகளின் ராசி மற்றும் தத்துவம் என்னவோ அதை அறிந்து , அது சம்பந்தபட்ட மேல்நிலைகல்வியை ஜாதகர் தேர்ந்தெடுத்து படிப்பாரே ஆயின் நிச்சயம் வாழ்க்கையில் வெற்றி பெறுவார் என்பதில்சந்தேகம் இல்லை .
உதாரணமாக :
ஒருவருக்கு லக்கினத்திற்கு நான்காம் வீடு அல்லது பத்தாம் வீடு மேஷ ராசியாக வருமாயின் , ஜாதகர்பெறியியல் துறை சார்ந்த கல்வியினை கற்று கொள்வாரே ஆயின் நிச்சயம் கல்வியிலும், தொழிலும்சிறந்து விளங்கும் தன்மையும் , சிறப்பான வேலை வாய்ப்பினையும் பெற முடியும் .
நான்காம் வீடு அல்லது பத்தாம் வீடு சுய ஜாதகத்தில் நன்றாக இருப்பின் ஜாதகர் கீழ்க்காணும் அமைப்பில், உயர் கல்வியை தேர்ந்தெடுக்கலாம் .
நெருப்பு தத்துவ ராசியாக அமைந்தால் :
பெறியியல் கல்வி , கட்டுமான கல்வி , அரசு நிர்வாக கல்வி , காவல் துறை சார்ந்த படிப்புகள் , மக்கள்மேலாண்மை சம்பந்தபட்ட கல்வி , உணவு மேலாண்மை , ஹோட்டேல் மேலாண்மை , அரசியல்ஆளுமை சார்ந்த கல்வி , விரைவான வளர்ச்சியினை பெரும் துறை சார்ந்த கல்வி , மின் துறை சார்ந்தகல்வி , கணினி கல்வி ,வெளிநாடுகளில் அதிக வேலை வாய்ப்பினை தரும் கல்விகள், ஏற்றுமதிஇறக்குமதி மேலாண்மை சார்ந்த கல்வி , சாலை வசதி சார்ந்த கல்வி என ஜாதகர் விரும்பும் கல்வியைதேர்ந்தெடுக்கலாம் .
நில தத்துவ ராசியாக அமைந்தால் :
மருத்துவ கல்வி , உடல் கூறு சம்பந்தபட்ட கல்வி , கலைத்துறை சம்பந்தபட்ட கல்வி , விவசாயம்மற்றும் இயற்க்கை வாழ்வை அடிப்படையாக கொண்ட கல்வி, மோட்டார் வாகனம் சம்பந்தபட்ட கல்வி ,மண் வளம் சம்பந்தபட்ட கல்வி , இயற்க்கை எரிவாயு ,வாகன எரிபொருள் சார்ந்த கல்விகள் , மருந்துகையாளும் துறை சார்ந்த கல்வி , மக்களுக்கு சேவை செய்யும் துறை சார்ந்த கல்வி , அறிவியல்தொழினுட்பம் சார்ந்த கல்வி , என ஜாதகர் விரும்பும் கல்வியை தேர்ந்தெடுக்கலாம் .
காற்று தத்துவ ராசியாக அமைந்தால் :
வக்கீல் மற்றும் சட்ட துறை கல்வி , புல்லியல் துறை சார்ந்த கல்வி , மக்கள் மேலாண்மை கல்வி ,கணித மேலாண்மை கல்வி , வானவியல் மற்றும் ஜோதிட துறை சார்ந்த கல்வி , ஆடிடிங் துறை சார்ந்தகல்வி , புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சி சார்ந்த கல்வி , புதிய அணுகுமுறை கொண்டகல்விகள் , மக்களிடம் தொடர்பு துறை சார்ந்த கல்வி , இயற்க்கை வளங்கள் மேம்படுத்துதல் சார்ந்தகல்வி என ஜாதகர் விரும்பும் கல்வியை தேர்ந்தெடுக்கலாம் .
நீர் தத்துவ ராசியாக அமைந்தால் :
அழகு கலை துறை சார்ந்த கல்வி , கலை துறை சார்ந்த கல்வி , இயல் இசை நாடக துறை கல்வி , ஆடைஏற்றுமதி , ஆடை வடிவமைப்பு துறை சார்ந்த கல்வி , வங்கி மேலாண்மை , அலுவலக மேலாண்மைசார்ந்த கல்வி , உளவியல் துறை சார்ந்த கல்வி , மனநல மருத்துவம் சார்ந்த கல்வி , விளையாட்டுதுறை சார்ந்த கல்வி , நீர் மற்றும் நுண் உயிரி சார்ந்த கல்வி , பொருளாதாரம் சார்ந்த கல்வி என ஜாதகர்விரும்பும் கல்வியை தேர்ந்தெடுக்கலாம் .
No comments:
Post a Comment