கணக்கை எளிதாகச் செய்ய ஓர் இணையதளம்!
Posted on October 28, 2014 by Admin3
கணக்கு என்றாலே பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமில்லை, பலருக்கும் கசப்புதான் ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் கணக்குகளை எளிமையாகக் செய்து பார்த்திட உதவ ஓர் இணையதளம் இருக்கிறது.
இந்த இணையதளத்தில் பரப்பளவு (Area), புள்ளியியல் (Statistics), முக்கோணவியல் (Trigonometry), பகுப்பாய்வு வடிவியல் (Analytical Geometry), எண்கள் (Numbers), அணிகள் (Matrix), இயற்கணிதம் (Algebra), மாற்றிகள் (Conversions), நிற மாற்றிகள் (Colour Converters), நாள் மற்றும் கிழமை (Date and Day), அடமானம் (Mortgage), அலகு மாற்றங்கள் (Unit Conversions), மாற்றக் காரணிகள் (Conversion Factors), உடல்நலம் (Health), இயற்பியல் (Physics), வேதியியல் (Chemistry), வானிலை (Weather), மருத்துவம் (Medical), இயந்திரவியல் (Mechanical), மேலான கணக்கீட்டு கருவிகள் (Top Calculators) எனும் முதன்மைத் தலைப்புகள் உள்ளன.
வடிவக் கணக்குகள்
பரப்பளவு எனும் தலைப்பில் சொடுக்கினால் சதுரம், செவ்வகம், வட்டம், முக்கோணம், நாற்கரம் எனப் பல வடிவங்களுக்கான எளிமையான கணக்கீட்டு கருவிகள் கொடுக்கப்பட்டுள்ளன. நமக்குத் தேவையான வடிவத்தினைத் தேர்வு செய்தால் அந்த வடிவத்திற்கான சில கணக்கீட்டு முறைகள் அதற்கான வழிமுறைகள் (Formula) உடன் கிடைக்கிறது.
புள்ளியியல் எனும் தலைப்பில் சொடுக்கினால் புள்ளியியல் தொடர்பான பல்வேறு கணக்கீட்டுக் கருவிகள் கிடைக்கின்றன. இந்தக் கருவிகளில் நமக்குத் தேவையான கணக்கீட்டுக் கருவியைத் தேர்வு செய்து சொடுக்கினால் கிடைக்கும் கணக்கீட்டுக் கருவியின் கீழுள்ள காலிப்பெட்டியில் நம்மிடமுள்ள அளவீடுகளை உள்ளீடு செய்து நமக்குத் தேவையான விடையை உடனடியாகப் பெற முடியும்.
எண் கணிதம்
எண்கள் எனும் தலைப்பில் சொடுக்கினால் எண்கள் தொடர்பான கணக்குகளுக்கான பல கணக்கீட்டு கருவிகள் கிடைக்கின்றன. வர்க்கமூலம் (Square Root), சதவிகிதம் (Percentage), தசமப் பின்னம் (Decimal Fraction), மறுநிகழ்வுப் பின்னம் (Recurring Fraction), மடக்கைக் கணக்கீட்டு கருவி (Logarithmic Calculator), கூட்டு வட்டி (Compound Interest), ரோமானிய எண்கள் (Roman Numbers), தங்க விகிதக் கணக்கீட்டு கருவி (Golden Ratio Calculator) என்பது போன்று பல தலைப்புகளில் கணக்கீட்டு கருவிகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்தக் கணக்கீட்டு கருவிகளில் தேவையானதைத் தேர்வு செய்து அதற்குள் இருக்கும் காலிப்பெட்டிகளில் நம்மிடமுள்ள அளவுகளை உள்ளீடு செய்து அதற்கான விடையைப் பெறலாம்.
வேடிக்கைக் கணக்குகள்
நிற மாற்றிகள் எனும் தலைப்பில் சொடுக்கினால் வேடிக்கைக் கணக்குகள் எனும் தலைப்பில் விலங்குகளின் வேகம் (Animal Speed), பீர் இழப்பு (Beer Loss) எனும் இரு கணக்கீட்டு கருவிகள் கிடைக்கின்றன. இதில் விலங்குகளின் வேகம் எனும் கணக்கீட்டு கருவியில் சொடுக்கினால் தூரம் எனும் தலைப்பில் ஒரு காலிப்பெட்டி கிடைக்கிறது. இதனருகில் மைல், கிலோமீட்டர், மீட்டர் எனும் அளவுகள் கொடுக்கப் பட்டுள்ளன.
காலிப்பெட்டியில் தூரத்தினை உள்ளீடு செய்து அதற்குரிய அளவையும் தேர்வு செய்து கீழுள்ள முடிவு எனும் பொத்தானை அழுத்தினால் சிங்கம், சிறுத்தைப் புலி, டயனோசர், யானை, வரிக்குதிரை, முயல், கங்காரு, பூனை, நரி, அணில், பன்றி, ஆமை, நத்தை, எறும்பு ஆகியவைகளின் பெயர்கள் கொண்ட பட்டியல் இடம் பெற்றுள்ளது. இதன் வலப்புறம் பட்டியலில் குறிப்பிட்டுள்ள விலங்குகள் உள்ளீடு செய்த தூரத்தைக் கடக்க எடுத்துக் கொள்ளும் காலம் மணி: நிமிடம்: வினாடி: மி.வினாடி எனும் அளவுகளில் தரப்பட்டுள்ளன. அதற்கடுத்து ஒவ்வொரு விலங்கும் சராசரியாக ஒரு மணி நேரத்தில் கடக்க எடுத்துக் கொண்ட தொலைவும், அதற்கடுத்து விலங்குகள் ஓட்டத்தில் பெற்ற இடத்தின் மதிப்பும் தரப்பட்டுள்ளன. பீர் இழப்பு எனும் தலைப்பில் சொடுக்கி அதில் கேட்கப்பட்டுள்ள அளவீடுகளை உள்ளீடு செய்து முடிவுக்கான பொத்தானை அழுத்தினால் விலை வடிவிலான இழப்புகள், வாரம், மாதம் கால அளவுகளிலான இழப்புகள் மற்றும் மொத்த இழப்புகள் போன்றவை கிடைக்கின்றன.
இதுபோல முக்கோணவியல், பகுப்பாய்வு வடிவியல், அணிகள், இயற்கணிதம், மாற்றிகள் எனும் தலைப்புகளிலும் கணக்கீட்டுக் கருவிகள் கிடைக்கின்றன. தேவையான கணக்கீட்டுக் கருவியைத் தேர்வு செய்து அங்குள்ள காலிப்பெட்டிகளில் நம்மிடம் உள்ள அளவுகளை உள்ளீடு செய்து நமக்குத் தேவையான விடையைப் பெற முடியும்.
மொத்தத்தில் இந்த இணைய தளம் பல்வேறு கணக்கீட்டுக் கருவிகளைக் கொண்டு அனைவருக்கும் பயன் தருவதாக உள்ளது. இந்த இணையதளத்திற்குச் செல்லhttp://easycalculation.com/ எனும் இணைய முகவரியினைப் பயன்படுத்தலாம்.
- தேனி. மு. சுப்பிரமணி
Leave a Reply
Name & Country (required)
Mail (will not be published) (required)
WebSite
Submit Comment
Search
MENUஇறப்புச் செய்திகள்இலக்கியம்உலகச்செய்திகள்ஊர் செய்திகள்கடைவீதிகல்விசட்டம் (LAW)சமுதாயச் செய்திகள்செய்திகள்தகவல்தேர்தல் 2014நாட்டு நடப்புபுஷ்ரா நல அறக்கட்டளைபொதுவானவைமருத்துவம்வளைகுடாவீடியோவேலை வாய்ப்புBaby NamesbabynamesworldBabyNologymuslimbabynamesnames4muslimsDUBAI AIRPORT FLIGHTS STATUS
ONLINE NEWS PAPERDinamaniInneramThatstamilThina ThanthiThinakaranThoothuOnlineவிடுதலைTamil Typingகல்வி களஞ்சியம்தமிழ் டிக்ஸனரி / அகராதிAIR LINE TICKET BOOKINGairarabiaairindiaEmirates Flight Booking onlineExchange Rate-KhaleejTimesவி.களத்தூர் பாரூக் on வி.களத்தூரில் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் சார்பாக பெண்களுக்கான கருத்தரங்கம்!Nowshad Abu Dhabi on கல்லாரை பற்றி வி.களத்தூர் சரீப் எழுதிய கவிதை…….G.PERIYASAMY.SINGAPORE on வி.களத்தூர் ஐடியல் பள்ளி அருகில் உள்ள குப்பைகள் அகற்றம்!MUSTHAFA on புதிய தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா!G.PERIYASAMY.SINGAPORE on வி.களத்தூர் ஆற்றில் கரைபுரண்டு ஓடும் தண்ணீர்!Thuraiyur s.saleem sheik on வி.களத்தூர் ஆற்றில் தண்ணீர்!jamil basha on வி.களத்தூரில் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் சார்பாக பெண்களுக்கான கருத்தரங்கம்!www.vkalathur.com » வி.களத்தூரில் காணமல் போன சகோதரி கிடைத்தார்! on வி.களத்தூரைச் சேர்ந்த S.ஜெரினா என்ற பெண்மணி காணவில்லை!!FAHAD on என்ஜினீயரிங் படிப்பில் 51 சதவீத மாணவர்கள் தோல்வி: தமிழ்நாட்டில் கல்வியின் தரம் சீரழிந்து வருகிறது டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு!கே.எம்.சரீப் on பால் விலை லிட்டருக்கு ரூ. 10 உயர்வு: தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு!RECENT POSTSஇடி விழுந்த இடத்தில் நீர்க்குமிழாக பொங்கிய நீர்-உடும்பியம் பகுதியில் பரபரப்பு!பெரம்பலூர் மாவட்ட மின்மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்க நவ.5 ம்தேதி கடைசி நாள்மில்லத் நகருக்கு புதிய நிர்வாக பொருப்பாளர் தேர்வு!வி.களத்தூரில் நடந்த புஷ்ரா நல அறக்கட்டளையின் செயற்குழு கூட்டம்!!தமிழகத்தின் புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக சந்தீப் சக்சேனா பதவி ஏற்றார்பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மின்சாதனங்களை பயன்படுத்துவது எப்படி?: மின்ஆய்வுத்துறை விளக்கம்ராமதாஸ் இல்ல திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் – வைகோ சந்திப்பு: புதிய கூட்டணிக்கான அச்சாரமா?ஜாமீனில் விடுதலையான பிறகு முதல்முறையாக முதல்வர், அமைச்சர்களுடன் ஜெயலலிதா முக்கிய ஆலோசனை‘ஹீரோ’ கனவு கண்டாலும் கிடைக்கப் போவது ‘ஸீரோ’தான்: கருணாநிதிக்கு ஓ.பி.எஸ். பதிலடிபெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல்: இன்று சிறப்பு கிராமசபைக் கூட்டம்bushracaretrust.comvkalathur.comvkalathurtntjதைக்கால்
CATEGORIESஇறப்புச் செய்திகள்இலக்கியம்உலகச்செய்திகள்ஊர் செய்திகள்கடைவீதிகல்விசட்டம் (LAW)சமுதாயச் செய்திகள்செய்திகள்தகவல்தேர்தல் 2014நாட்டு நடப்புபுஷ்ரா நல அறக்கட்டளைபொதுவானவைமருத்துவம்வளைகுடாவீடியோவேலை வாய்ப்புPAGESஎங்களைப்பற்றி
ARCHIVESOctober 2014September 2014August 2014July 2014June 2014May 2014April 2014March 2014February 2014January 2014December 2013November 2013October 2013September 2013August 2013July 2013June 2013May 2013April 2013March 2013February 2013January 2013December 2012November 2012October 2012September 2012August 2012July 2012June 2012May 2012April 2012March 2012February 2012January 2012December 2011November 2011October 2011September 2011August 2011July 2011June 2011Log inValid XHTMLXFNWordPress
Page Visit
- See more at: http://www.vkalathur.com/?p=24176#sthash.I9B6MyB7.73jCAvZK.dpuf
No comments:
Post a Comment