கருச்சிதைவு! இது ஒரு பாவச் செயலா?
எங்களுக்குத் திருமணமாகி பத்து வருடங்கள் ஆகிவிட்டன. இன்னும் குழந்தைப் பாக்கியம்கிடைக்கவில்லை. என் கணவரின் குடும்பத்தில் சிலர் கஎருத்தரித்த பின் தாமாக முன்வந்து கருச்சிதைவு
[அபார்ஷன்] செய்து கொண்டுள்ளனர். இது ஒரு பாவச் செயலா?
அதனால்தான் எங்களுக்குக் குழந்தை பிறக்கவில்லையா? இதற்கு
என்ன பரிகாரம் செய்ய வேண்டும்.
கருத்தரித்த பிறகு தாமாக முன் வந்து அபார்ஷன் செய்து கொள்வது
மிகக் கடுமையான பாவச் செயல். நமது சாஸ்திரங்கள் இதை
பஞ்சமாபாதகச் செயல் என்கிறது. ஒவ்வொரு கருவுக்கும் ஆத்மா
உண்டு. அந்தக் கருவை அழிக்கும் உரிமை நமக்குக் கிடையாது.
நமது குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த யாரோ ஒருவர் மீண்டும் பிறவி
எடுப்பதற்காக வயிற்றில் கருவாக உருவாகிறார்.
அபார்ஷன் செய்து கொள்வதன் மூலமாக அவர்களைக் கொலை செய்த
பாவம் உண்டாகிறது. இதனால் ஜாதகத்தில் பித்ரு தோஷம்
ஏற்படும். 'சிசுஹதனம்' என்னும் பஞ்சமாபாதகச் செயலைச்
செய்த குடும்பங்களில் நான்கு விதமான பிரச்னைகள் வரும்.
திருமணமே நடக்காது, அல்லது 40 வயதுக்கு மேல் திருமணம்ஆகும். அல்லது
மணவாழ்க்கை முறிவடையும் அல்லது
குழந்தை பிறக்காது. அல்லது
மூளை வளர்ச்சி இல்லாதகுழந்தை பிறக்கும்.
இதற்க்குப் பரிகாரமாக கயா சென்றுவிஷ்ணு பாதத்தில் முன்னோர்களுக்கு பிண்டம் போட்டுஅட்ஷய வட சிரார்த்தம் செய்ய வேண்டும்.
ராமேஸ்வரத்தில் தில ஹோமம் செய்தாலும் இந்த தோஷம் விலகும்.
மாமனார் இருக்கிறார் என்றால் பரிகாரங்களை அவர்தான்
செய்ய வேண்டும். தந்தை உயிரோடு உள்ளவர்கள் தில ஹோமம்
கயா சிரார்த்தம் போன்றவை செய்யக்கூடாது.
Posted by narayanasamy jagadeesan at 05:35 No comments:
Thank you narayanasamy jagadeesan
Labels: கரு சிதைவு
No comments:
Post a Comment