For Read Your Language click Translate

22 January 2017

செய்த பாவம் விடாமல் நம்மை திரும்ப தாக்கும்

எந்த தலைமுறையில் செய்த பாவம் என்றாலும் அது விடாமல் நம்மை திரும்ப தாக்கும் என்று எல்லோராலும் நம்பப்படுகிறது. அப்படி தெரிந்து, தெரியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் தீர்க்கும் அதிசயம் அரிசி மாவில் இருப்பதாக கூறப்படுகிறது. சனிக்கிழமையன்று பச்சரிசியை ஒரு பிடி கையில் அள்ளி, நன்கு பொடி செய்து சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். பின்னர் விநாயகரை மூன்று சுற்று சுற்றி, பச்சரிசி மாவினை விநாயகரை சுற்றி போடவேண்டும். அந்த அரிசி மாவினை எறும்புகள் தூக்கிச்சென்று, மழைக்காலத்தில் சாப்பிடுவதற்காக சேம...ித்து வைத்துக்கொள்கின்றன.
எறும்பின் எச்சில் பட்டதும் அரிசியின் கெடும் தன்மை நீங்கிவிடும். அரிசியை சாப்பிட எறும்புகள் இரண்டரை ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும் என்பதால், அது வரை அந்த அரிசி கெடாமல் இருக்கும். இப்படி எறும்புகள் சாப்பிடுவதை முப்பத்து முக்கோடி தேவர்கள் பார்த்துக்கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை கிரக நிலை மாறும் என்பதால் இப்படி அடிக்கடி எறும்புகளுக்கு உணவு அளிக்க வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் பாவங்கள் அனைத்தும் நீங்கும், சனிபகவானின் தொல்லைகள் கூட நம்மை அண்டாது எனக்கூறப்படுகிறது.

கருப்பு,சிவப்பு, மஞ்சள் கயிறு

காசி, திருப்பதி,நல்லூர் போன்ற இடங்களுக்கும், இன்னும் பல அம்மன் கோயில்களிலும் பைரவர் கயிறு, வெங்கடாஜலபதி கயிறு என கருப்பு கயிறுகள் வாங்கி கட்டி வருகிறார்கள். சில கோயில்களில் சிவப்பு, மஞ்சள் கயிறு கையில் கட்டப்படுகிறது.
இதை ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் கட்டிக் கொள்ள வேண்டும். வரலட்சுமி நோன்பு கயிறை மட்டும் பெண்கள் வலது கையில் கட்ட வேண்டும். இந்தக் கயிறுகளை பெரும்பாலானவர்கள் ஒரு வருடம் வரையிலும் அதற்கு மேலும் கட்டிக் கொள்கிறார்கள்.
அவ்வாறு செய்யக்கூடாது. இந்த கயிறுகளுக்குரிய காலம் 48 நாட்கள் மட்டுமே. அதன்பின், இதைக் கழற்றி ஆற்றிலோ பிற நீர்நிலைகளிலோ போட்டு விட வேண்டும். யார் காலிலும் படும்படி போடக்கூடாது.

ஐப்பசி மாதம் -கார்த்திகை மாதம்- தீப மாதம்


ஐப்பசி மாதத்தில் சூரியன் துலா இராசியில் நீச்சம், கார்த்திகை மாதத்தில் நீச்சம் மாறி உச்சம் ஆகிறார் எனவே தான் அக்னி ரூபமான உண்ணாமுலையம்மை உமையாளுடன் உடனாகிய அண்ணாமலையார் சிவபெருமானை கார்த்திகை மாதம் முழுதும் வழிபடுகிறோம். சிவ பெருமானின் ஐந்து முகங்களான சத்யோஜாதம், தத்புருஷம், வாமதேவம், ஈசானம், அகோரம் இவற்றுடன் கீழ் நோக்கிய அதோ முகம் என்னும் ஆறு முகங்களின் நெற்றிக்க்கண்ணிலிருந்து தோன்றிய ஆறு பொறிகளே சரவணப் பொய்கையில் ஆறு குழந்தைகளாக முருகப்பெருமானாக மாற அந்த அறுவரையும் வளர்த்தவர்கள் கார்த்திகைப் பெண்கள் இதற்காக அவர்கள் அறுவரும் நட்சத்திரமாக விளங்குகின்றனர். அந்த கிருத்திகை நட்சத்திரத்தின் அதி தேவதை 'அக்னி'. கிருத்திகா ப்ரதமம் என்று வேதத்தில் கிருத்திகை நட்சத்திரம் முதலாவதாக கூறப்படுள்ளது.
இந்த கார்த்திகைப் மாதத்தின் கார்த்திகை நட்சத்திரம் மற்றும் பௌர்ணமி இனைந்த அந்த திருக்கார்த்திகை நாளில் அடிமுடி காண முடியாத ஜோதிப்பிழம்பாக எம்பெருமான் நின்றதால் அவரை ஜோதி வடிவாகவே வணங்குகின்றோம். கிருத யுகத்தில், மலையரசன் தன் பொற்பாவை உமையம்மையுடன் பரமேஸ்வரன் "திருக்கயிலையில்" அக்னி ரூபமாகத்தான் மகரிஷிகளுக்கு தரிசனம் தந்து கொண்டிருந்ததாகவும், உமா மஹேஸ்வரர்களின் உண்மையான திவ்ய தரிசனத்தைக் காண்பதற்காக , அம்மாமுனிவர்கள் கடும் தவமியற்றியதாகவும், அப்போது அவர்கள் தவத்திற்காகப் பிரம்மதேவரால் தனது மனதிலிருந்து படைக்கப்பட்டதே மானசரோவரம் என்னும் தெய்வீகத்தடாகம் என்றும் புராண நூல்கள் கூறுகின்றன.
காஞ்சி வரதராஜப் பெருமாளும் பிரம்ம தேவர் இயற்றிய அஸ்வமேத வேள்வியின் அக்னியிலிருந்து தோன்றியவர்தான். பகவான் ஸ்ரீமந்நாராயணின் பத்து அவதாரங்களில் அளவற்ற வீரியம் கொண்ட ஸ்ரீ நரசிம்மருக்கு உகந்த மாதமும் கார்த்திகையே. எனவேதான் சோளிங்கரில் எழுந்தருளியுள்ள யோக நரசிம்மரை கார்த்திகை ஞாயிறன்று வழிபட அந்த ஸ்ரீ நரசிம்மன் கேட்டவற்றை எல்லாம் பக்தர்களுக்குத் தந்தருள் புரிவான் என்பது காலம் காலமாக கண்டுவரும் அனுபவமாகும்.
இவை தவிர நாம் புண்ணிய காலங்களிலும், திதி தினங்களிலும் செய்யும் பித்ரு பூஜையின் பலனைப் பித்ரு தேவதைகளின் மூலமாக, நமது முன்னோர்களிடம் சேர்ப்பிப்பவரும் அக்னிதேவரே ஆவார், ஆதலால் தான் கார்த்திகை மாதத்தில், தினமும் அக்னியை மானசீகமாக பூஜித்து, வீடுகளில் விடியற்காலையிலும் மாலையிலும் தீபம் ஏற்றி வரும்படி மகரிஷிகள் அருளியிருக்கின்றனர், முக்கியமாக பரணி தீப தினம் அன்றும், கார்த்திகை தீபம் அன்றும் நம் இல்லங்களில் மாலையில் தீபங்கள் ஏற்றி வைத்து, இறைவனை வழிபட வேண்டும், இது மட்டுமன்றி, அவரவர் ஊர்களிலுள்ள திருக்கோவில்களிலும் தங்கள் கையினால் தீபம் எற்றி வைப்பது அவசியமாகும்.
இவ்வாறு கார்த்திகை மாதம் அக்னியின் மாதமாகும். நெருப்புக்கோள் (அக்னி கிரகம்) செவ்வாயின் ராசியான விருச்சிகத்தில், மற்றொரு நெருப்புக் கோளான சூரியன் சஞ்சரிக்கும் காலமே, விருச்சிக மாதம் எனப் புராதான நூல்களில் விவரிக்கப்பட்டுள்ள. விருச்சிக மாதத்தின் கார்த்திகை நட்சத்திரம் மற்றும் பௌர்ணமி இனைந்த திருக்கார்த்திகை நாளில் அடிமுடி காண முடியாத ஜோதிப்பிழம்பாக எம்பெருமான் நின்றதால் அவரை ஜோதி வடிவாகவே வணங்குகின்றோம், அந்த கார்த்திகை மாதத்தில் திங்கட் கிழமைகளில் சோம வார விரதமும் இருக்கின்றோம்.
இவ்வாறு இந்த கார்த்திகை(விருச்சிக) மாதத்தில் இரண்டு விரதங்கள் வருகின்றன அவையாவன கார்த்திகை சோம வார விரதம் மற்றும் கார்த்திகை பௌர்ணமி உமா மகேஸ்வர விரதம் ஆகும். அவற்றுள் முதலில் கார்த்திகை சோம வார விரதத்தைப் பற்றிப் பார்ப்போம்.
சோமவார விரதம் தோன்றிய வரலாறு:
சந்திரன் கார்த்திகை மாத சுக்லபக்ஷ அஷ்டமியில் தோன்றினான். சந்திரன் பெயரால் சோமவார விரதம் தோன்றியது. சந்திரன் சிவனை ஆராதித்ததும், கிருத யுகம் தோன்றியதும், சந்திரனை சிவபெருமான் சிரசில் அணிந்ததும் கார்த்திகை சோம வாரத்தில் தான். தட்சபிரஜாபதி தன் மகள்களை தனித் தனியாக மணம் செய்து கொடுத்தால் அவர்களிடையே ஏற்றத் தாழ்வுகள் உண்டாகும் என்று கருதி தந்து 27 மகள்களான , கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிஷம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி, அசுபதி, பரணி ஆகியோரை மஹா பேரழகனான சந்திரனுக்கு மணம் புரிவித்தான். ஆனால் சந்திரனோ ரோகிணி மற்றும் கார்த்திகையிடம் மட்டும் மிகவும் அன்பு கொண்டு தனது மற்ற மனைவியர்களை புறக்கணித்தான். அதனால் மனம் நொந்த மற்ற பெண்கள் தங்கள் தந்தையிடம் சென்று முறையிட்டனர். ஆத்திரமடைந்த தட்சன் உனது அழகில் கர்வம் கொண்டுதானே நீ என் மற்ற பெண்களை அவமதித்தாய் எனவே நீ உனது அழகை இழந்து குஷ்ட ரோகியாகக் கடவது என்று சந்திரனுக்கு சாபம் கொடுத்தான், அதனால் சந்திரன் தனது கலைகளை இழந்தான் அவனை குஷ்ட நோயும் பீடித்தது. தன் சாபம் நீங்க சந்திரன் கார்த்திகை மாதத்தின் அனைத்து திங்கட் கிழமைகளிலும் எம்பெருமானை கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை மிடற்றினிலடக்கிய வேதியனை புனல் விரி நறுங்கொன்றைப் போதணிந்த கனல் புரி யனல் புல்கு கையவனை, ஐந்தலையரவு கொண்டரைக்கசைத்த சந்த வெண்பொடி சங்கரனை நினைத்து விரதம் அனுஷ்டித்தான், அவனது விரததிற்கு மகிழந்த பரம கருணாமூர்த்தியான எம்பெருமான் அவனுக்கு சாப நிவர்த்தி அளித்தார் அதனால் சந்திரன் தான் இழந்த சோபையை பெற்றான், ஆயினும் பதினாறு கலைகளும் நாள் ஒன்றாக வளர்ந்து பௌர்ணமியன்று பூரண சந்திரனாக திகழ்ந்து பின் தன் கலைகளை ஒவ்வொன்றாக இழந்து பின் அமாவாசையன்று ஓளியற்றவனாகவும் ஆகும் வண்ணம் எம்பெருமானை இகழ்ந்தவனே ஆனாலும் தட்சன் அளித்த சாபத்தை முற்றிலும் நீக்காமல் மாற்றியருளினார் கருணைக் கடலாம் சிவபெருமான். என்னே பகைவனுக்கும் அருளும் ஐயனின் பண்பு.
இவ்வாறு சந்திரன், சோம வார விரதத்தின் மகிமையால் எம்பெருமானின் சடாமுடியில் இளம் பிறையாக அமரும் பாக்கியமும் பெற்றான். இவ்வாறு சந்திரனை தனது முடியில் சூடி அருளிய எம்பெருமான் சந்திர சேகரர், சந்திர மௌலீஸ்வரர், சசிதரர், சோம சுந்தரர், சசி மௌலீஸ்வரர், சோமநாதர், சசாங்க சேகரர், சசிசேகரர், சந்திர சூடர், மதி சூடிய மைந்தர் என்று பலவாறாகப் புகழப்பட்டார். இந்த கார்த்திகை விரதம் சோமன் என்னும் சந்திரனின் பெயரால் (உமையம்மையுடன் கூடிய சிவபெருமானின் ஒரு நாமமும் சோமன்) சோமவார விரதம் என்று வழங்கப்படலாயிற்று.
கார்த்திகை விரதம் இருப்பவர்கள் விருப்பத்தை நிறைவேற்றுவதுடன் இறுதியாக அவர்களுக்கு முக்தியும் கொடுத்து அருள வேண்டும் என்று சந்திரன் வேண்ட அவ்வாறே அருள் பாலித்தருளினார் ஐயனும். பன்னிரண்டு ஜோதிர் லிங்கங்களுள் ஒன்று குஜராத் மாநிலத்தில் உள்ள சோமநாதம் ஆகும். இங்கு தான் சோமனாகிய சந்திரன் சோமனாகிய எம்பெருமானுக்காக சோம வார விரதம் இருந்து அவர் ஜடாமுடியில் இளம் பிறையாக அமர்ந்தான் என்பது ஐதீகம்.
சோமவார விரதத்தின் மகிமை:
வசிஷ்டர் கார்த்திகை சோமவார விரதம் அனுஷ்டித்து கற்புக்கரசி அருந்ததியை இல்லாளாக அடைந்தார். இந்த சோமவாரத்தன்று விரதம் இருந்து பலன் பெற்ற ஒரு புராண வரலாறு. சந்திர வர்மன் என்ற மகனுக்கு அழகிய ஒரு பெண் மகவு பிறந்தது. அவளுக்கு சீமந்தினி என்று நாமம் சூட்டப்பட்டது. அவளது ஜாதகத்தை கணித்தவர்கள் அவள் சிறு வயதிலேயே தனது கணவனை இழந்து விடும் துர்பாக்கியம் கொண்டவள் என்று கூறினார்கள். அதனால் மன்னன் மிகவும் துக்கம் கொண்டு பல்வேறு முனிவர்களை கலந்தாலோசித்தான். யாக்யவல்லியர் என்ற முனிவர் அவளை முறையாக கார்த்திகை சோம வார விரதத்தை கடைப்பிடிக்க ஆலோசனை அருளினார், அவளும் கார்த்திகை சோமவாரம் தோறும் அதிகாலையிலேயே எழுந்து உடல் சுத்தி செய்து மந்ததிரமாகும் பால் வெண்ணீராடி , நாள் முழுதும் “ஓம் நமசிவாய” என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை இடைவிடாது ஜபித்து உபவாசம் இருந்து மாலையிலே எம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்து வழிபட்டு வரலானாள். அவள் பருவம் அடைந்தவுடன் அவளூக்கு நளமஹாராஜாவின் பௌத்ரனான இந்திரசேனனின் மகன் சந்திராங்கதனுடன் விவாகம் நடந்தேறியது. ஒரு சமயம் அவர்கள் யமுனை நதியில் நீராடும் போது நீர் சுழலில் சிக்கி அவன் மூழ்க நேர்ந்தது, ஆயினும் சீமந்தினி அனுசரித்த சோம வார விரதத்தின் பலனால் அவனை நாக கன்னியர் காப்பாற்றி சென்றனர்.பின்னர் இறையருளால் அவன் பாதாள லோகம் விடுத்து மீண்டும் பூலோகம் வந்து தன் மனைவியுடன் இனைந்தான். சீமந்தினியும் வெகு காலம் பின் தனது கணவனுடன் சோமவார விரதம் அனுஷ்டித்து வரலானாள். இவ்வாறு நம் தலைவிதியையும் மாற்றும் வல்லமை கொண்டது இந்த சோமவார விரதம். கைலாயப் பேறு அளிக்கும் விரதமிது. இவ்விரதத்தை முறையோடு கடைப்பிடிப்பவர்கள் இந்த பிறவி இறப்பென்னும் சாகரத்திலிருந்து முக்தி அடைந்து எம்பெருமானுக்கு கைலாயத்திலே சென்று பணி செய்யும் பேறு பெறுவர்.
கார்த்திகை சோமவார விரதம் அனுஷ்டிக்கும் முறை:
இந்த விரதத்தை அனுஷ்டிக்கும் முறை ஸ்கந்த புராணத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. அதிகாலையில் துயில் எழுந்து உடல் சுத்தம் செய்து , பஞ்சாட்சர மந்திரம் ஓதி உடல் முழுவதும் வெண்ணீராடி, சந்தியாவந்தனம் முடித்து , பரம கருணாமூர்த்தியை, சங்கரனை, சம்புவை, அம்பலத்தரசை, கங்காதரரை, உமாபதியை மனதில் எந்நேரமும் தியானித்து, சிவபெருமானின் அடியவர்களான ஒரு தம்பதியரை சிவ-சக்தியாக பாவித்து பாத பூஜை செய்து வணங்கி, அவர்களுக்கு அமுது செய்விக்க வேண்டும். விரதம் இருப்பவர் நாளின் ஒரு நேரம் மட்டுமே எளிய உணவை உட்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்ய முடியாதவர்கள் திருக்கோவிலுக்கு சென்று உமா-மஹேஸ்வரரை வழிபட்டு, பஞ்சாமிர்தம் முதலிய இனிய பொருட்களால் எம்பெருமானுக்கு அபிஷேகம் செய்வித்து, வில்வ தளங்களால் எம்பெருமானுக்கு அர்ச்சனை செய்து, சிறந்த அமுதை எம்பெருமானுக்கு நைவேத்தியம் செய்து அந்த பிரசாதத்தை சிவனடியார்களுக்கு வழங்கி தாங்களும் அந்த பிரசாதத்தை உண்ணலாம். இந்த விரதத்தை முறையாக, தூய மனத்துடன் கடைப்பிடிப்பவர்கள், இந்த மண்ணுலகில் எல்லா செல்வங்களையும் அடைந்து அனுபவித்து இறுதியாக கைலாயப் பதவியும் அடைவர்.
கார்த்திகை சோமவார ஆலய வழிபாடுகள்:
இனி தற்போது கார்த்திகை சோமவாரத்தன்று எம்பெருமானுக்கு மணிவளர் கண்டருக்கு, இலை புனல் வேலருக்கு, செஞ்சுடர் வண்ணருக்கு, சாந்தணி மார்வருக்கு, ஏறது ஏறியவருக்கு, சங்கொளி வண்ணருக்கு பூணொடு மார்பருக்கு எந்தெந்த சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றது என்பதை பார்ப்போம். கார்த்திகை சோமவாரத்தன்று சகல சிவாலயங்களிலும் சந்திரனாம் சோமனுக்கு அருள் புரிந்து தட்சன் சாபம் போக்கி பிறை சந்திரனை ஜடா முடியில் அணிந்த சந்திர சேகரராம் லிங்க மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூசனைகள் நடை பெறுகின்றன. பல் வேறு ஆலயங்களிலும் பல் வேறு வகைகளில் வழிபாடு நடை பெறுகின்றது. பெரும்பாலான ஆலயங்களில் 108 சங்காபிஷேகமும் சில விசேஷ தலங்களில் 1008 சங்காபிஷேகமும் நடை பெறுகின்றது. திருநெல்வேலியிலே நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி தந்தருளுகின்றார்.
பைங்கண்வாள் அரவணை யவனொடு பனிமல ரோனுங் காணா
அங்கணா அருளென அவரவர் முறைமுறை யிறைஞ்ச நின்றார்
சங்க நான் மறையவர் நிறைதீர அரிவையர் ஆடல் பேணத்
திங்கள் நாள் விழமல்கு திருநெல்வே லியுறை செல்வர் தாமே.
கார்த்திகை மாதம் தீப மாதம் என்பதால் பல ஆலயங்களில் 1008, இலட்சம் என விளக்குகள் ஏற்றப்படுகின்றன. சென்னை பூந்தமல்லியிலுள்ள ஒத்தாண்டீஸ்வரர் ஆலயத்தில் மூன்றாவது வாரம் இலட்சம் தீபங்கள் ஏற்றப்படுகின்றன பஞ்ச மூர்த்திகள் புறப்பாடும் நடைபெறுகின்றது.. சங்காபிஷேகம் இல்லாத சில ஆலயங்களில் சம்போ சங்கர உமாபதிக்கு, சாம்ப சுந்தர பசுபதிக்கு, நந்தி வாகனனருக்கு, நாக பூஷணருக்கு, சந்திர சேகரருக்கு சிறப்பு அலங்காரங்களும் சிறப்பு பூஜைகளும் நடைபெறுகின்றன.
thank you:Vegetarian சைவம்

பணம் வர எந்த மந்திரம் ஜெபிக்கலாம் ?


அள்ள அள்ளப் பணம் வர எந்த மந்திரம் ஜெபிக்கலாம் ?
விநாயகரின் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கங்கணபதயே...
வரவரத ஸ்ர்வ ஜனம்மே வசமினய ஸ்வாஹா

இருபத்தெட்டு அட்சரங்களை உடைய இம்மந்திரம் பலவிதமான சக்திகளையும், சித்திகளையும் அளிக்கவல்லது.செல்வம், பூமி, ஆகர்ஷணம், வசியம், குண்டலி வின்யாசம் முதலிய அனேக சித்திகள் இம்மந்திர ஜபத்தால் கைகூடும்.
அருகம்புல், தாமரை, வில்வதளம், செவ்வரளி போன்ற நறுமணம் உடைய புஷ்பங்களால் விநாயகரை பூஜை செய்தால் செல்வச் செழிப்பும் ஞானவளமும் கைகூடும். செல்வத்திறவுகோலாக இம்மந்திர உபாசனை நிகழ்ந்து வந்துள்ளது.
கணபதியை மட்டும் வழிபடுபவர்கள் கணபதி உபாசகர்கள் என அழைக்கப்படுகிறார்கள். கர்ண வழிபாடு என்று இதைக் கூறுவர். கணபதி உபாசகர்கள் கருப்பு, நீலம் போன்ற வண்ண ஆடைகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும்.சிவப்பு, பொன் வண்ண உடைகள் மிகவும் ஏற்றவை. துளசியை இவர்கள் கிள்ளக் கூடாது.துளசியை விநாயகருக்கு அணிவிக்கக்கூடாது.
கணபதி மந்திரங்களை பிரம்ம முகூர்த்த வேளை எனப்படும் அதிகாலை 4.30 முதல் 6.00க்குள் ஜபிப்பது மிக நன்று என கணேச உத்தர தாயினி உபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது.
விநாயகரை தேய்பிறை சதுர்த்தி தோறும் வழிபடுவது சங்கடகர சதுர்த்தி என்று வழங்கப்படும்.அதுவும் அந்நாளில் வன்னிமரத்தடியில் வழிபடுவது மிக நன்று. மாசி மாதம் வரும் சதுர்த்தி செவ்வாய்க்கிழமையன்று(தகுந்த ஜோதிடரை அணுகி உரிய நாளை அறிக) துவங்கி ஓராண்டு சங்கடஹர சதுர்த்தியை மாதந்தோறும் பின்பற்றிவர வேண்டும்.இதனை செவ்வாய்க் கிரக அதிபதி பின்பற்றினார்.
வன்னிமர விநாயகருக்கு அரிசி போடுவதன் மூலம் , நீங்கள் ஏழரை சனி, அஷ்டமச் சனி இலிருந்து தப்பிக்கலாம். இதைப் பற்றி நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.
உச்சிஷ்ட கணபதி மந்திரம்
ஓம் நமோ பகவதே ஏகதம்ஷ்ட்ராய
ஹஸ்தி முகாய,லம்போதராய
உச்சிஷ்ட மகாத்மனே ஆம் ஹ்ரேம் ஹ்ரீம்
கம் கேகே ஸ்வாஹா

வேப்பங்குச்சி, ஊமத்தம்பூ,நெய் இவைகளால் இவருக்கு ஹோமம் செய்ய வேண்டும்.
கடன் தீர கணபதி மந்திரம்
ஓம் கணேசருணம் சிந்தி வரேண்யம் ஹீம் பட்ஸ்வாஹா
ஹே பார்வதி புத்ரா ருணம் நாசம் கரோதுமே
ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் அபீஷ்ட சித்திம்மே தேஹி சரணாகத வத்ஸல
பக்த்யா ஸமர்ப்பயே துப்யம் ஸ்வாஹா
ஸ்ரீசக்ரேசாய ஸ்ரீமகா கணபதயே ஸ்வாஹா

கருங்காலி குச்சியால் கணபதி ஹோமம் செய்ய எவ்வளவு பெரியளவில் கடன் இருந்தாலும் அது மிக விரைவாக தீர்ந்துவிடும்.
மஹாஹஸ்தி விநாயகர்
பெரிய துதிக்கையை உடைய இவர் பெரும் தனத்தை (அதாவது கோடிக்கணக்கில் ரூபாய்களாக) அள்ளி வீசுபவராக இருக்கிறார்.
 பின்வரும் மந்திரத்தை லட்ச உருவேற்றினால் போதும்.நமது பாவங்களும் தீரும்.செல்வமும் ஞானமும் நமக்குக் கிடைத்துவிடும்.
ஓம் ஆதூன இந்த்ர க்ஷீமந்தம் சித்ரம் க்ராபம் ஸ்ங்க்ருபாய
மஹாஹஸ்தி தக்ஷ்ணேன

வாஞ்சா கல்பலதா கணபதி
நமது சகல விருப்பங்களையும் அள்ளி வழங்குவதால் இவருக்கு வாஞ்சை கணபதி என்ற பெயர் ஏற்பட்டது.
பின்வரும் மந்திரம் 100 கோடி சூரியனுக்குச் சமமானதாகும். தகுந்த குரு உபதேசம் மூலமாக இந்த மந்திரத்தை தினமும் ஜபித்துவரவும். நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும்.
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கம்
ஐம் கஏஈ லஹ்ரீம்
தத்ஸவிதர் வரேண்யம் கணபதயே
க்லீம் ஹஸகஸல ஹ்ரீம் பர்க்கோ தேவஸ்யதீமஹீ
வரவரத சவு ஸஹல ஹ்ரீம்
த்யோயோநப்ர சோதயாத்
ஸர்வ ஜனம்மே வசமானய ஸ்வாஹா

தசா-புக்தியை சாதகமாக்குவது எப்படி ?


ஜாதகப்படி தசா-புக்தியை சாதகமாக்குவது எப்படி
உங்கள் ஜாதகப்படி நடக்கும் தசா-புக்தியை சாதகமாக்குவது எப்படி?
ஒருவருடைய வாழ்வை நிர்ணயிப்பது முன்ஜென்ம கர்மவினை. இதையே விதிபயன் என்றும் சொல்கிறோம்.
ஒழுக்கம், மனிதாபிமானம், நேர்மை, கலாசார கட்டுப்பாடு போன்றவை ஒரு மனிதன் தன் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்.
இத்தகைய விதிகளை அவன் மீறும்போதுதான், சட்டவிதியை மீறும்போது தண்டனைக்கு ஆளாவது போல, நல்லவற்றை செய்ய தவறிய காரணத்தால் கொடும் தீவினை மனிதனை ஆட்டிபடைக்கிறது
. ஒரு மனிதன் செய்கிற தீய செயல்கள் ஒரு கட்டத்திற்கு பிறகு அவனை நோக்கியே திரும்பும் என்கிறது சாஸ்திரம்.
அந்த சமயம் அந்த தீய பலன்களை மனிதன், இந்த ஜென்மத்திலும் அனுபவிக்க்க்கூடும் அல்லது அடுத்து வரும் பிறவிகளிலும் அனுபவிக்க்க்கூடும். இதைதான் விதி என்கிறோம்.
முன்ஜென்ம பயனாக ஒருவர் இந்த ஜென்மத்தில் அனுபவிக்க இருப்பது சுகங்களா? அல்லது சோகங்களா? என்பதைதான், அவரவர் ஜாதக தசா-புக்தி விரிவாக எடுத்துக்காட்டுகிறது
. “ஒரு காலத்தில் அவன் எப்படி
வாழ்ந்தவன் தெரியுமா?. ஆனால் இன்றோ தெருவில் நிற்கிறான்” என்பார்கள். அதுபோல,
“ஒரு காலத்தில் அவன் அடுத்த வேலை உணவுக்கு கூட வழியில்லாமல் இருந்தவன். ஆனால் இன்றோ சமுதாயத்தில் பெரிய மனிதாக நல்ல அந்தஸ்தில் இருக்கிறான்” என்பார்கள். இதில் இருந்து என்ன தெரிகிறது?
எதிர்காலத்தில் யாருடைய வாழ்க்கை நிலையும் இன்று இருக்கும் இதே நிலையில் இருப்பதில்லை. அதனால்தான், “30 வருடம் வாழ்நதவனும் இல்லை. 30 வருடம் தாழ்ந்தவனும் இல்லை.” என்று சொல்வார்கள். அது என்ன 30 வருடம்? சனியின் சஞ்சாரத்தை கணகிட்டுதான் நம்மவர்கள் அப்படி சொல்லி வைத்தார்கள்.
சனி, ஒரு இராசியில் இருந்து புறப்பட்டு மீண்டும் அதே இராசிக்கு வந்து சேர 30 வருடங்கள் ஆகிறது. அந்த 30 வருட காலகட்டத்திற்குள், ஒருவரின் வாழ்க்கையில் எண்ணற்ற மாற்றங்கள் நிகழ்கிறது
. விண்வெளியில் புதிது புதிதாக கிரகங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து வந்தாலும், யுகம் யுகமாக ஜோதிட ரீதியில் பலன் தரும் கிரகங்கள் ஒன்பது. இதில் இராகு-கேது, கண்களுக்கு தெரியாத சாயா கிரகங்கள். இந்த ஒன்பது கிரகங்களும் நமது முன்ஜென்ம கர்மவினைக்கு ஏற்ப இந்த ஜென்மத்தில் பலன் தரும் பணியை செய்கிறது.
விதியை மதியால்
வெல்லலாம் என்பது என்ன?
ஒருவர் துன்பத்தைதான் அனுபவிக்க வேண்டும் என விதி இருந்தால், தன் மதியை பயன்படுத்தி துன்பங்களுக்கு நிவர்த்தி தேடி அதை செய்து, அந்த துன்பங்களில் இருந்து பாதிப்பு இல்லாமல் மீண்டு வருவதே, விதியை மதியால் வெல்லலாம் என்பதற்கு பொருள்.
நல்ல திசையை நோக்கி ஒருவரின் புக்தி செல்ல வேண்டும் என்றால், ஜாதகப்படி அந்த நபருக்கு நல்ல தசா-புக்தி நடைப்பெற வேண்டும். ஒருவருக்கு தசா-புக்தி பாதகமாக இருந்தாலும் அதற்கேற்ப எளிய பரிகாரம் செய்தால், பாதகமான தசா-புக்தியும் சாதகமாக மாறும்.
அனைத்து இராசிகாரர்களும் அவரவர் ஜாதக தசா-புத்திக்கு ஏற்ப அந்தந்த கிரகங்களுக்கு வழிபாடு – பரிகாரம் போன்றவற்றை தாராளமாக செய்யலாம்.
சூரிய திசை – புக்தி நடப்பவர்களுக்கு ஏற்ற பரிகாரம்
ஞாயிற்று கிழமையில் சூரியபகவானை வணங்க வேண்டும். அன்றைய தினம் சிகப்பு ஆடை அணியலாம். கோதுமையால் தயாரித்த உணவை பசுவுக்கோ அல்லது காக்கைக்கோ தர வேண்டும். திங்கள் கிழமையில் சிவ வழிபாடு செய்வது இன்னும் விசேஷம். மாணிக்கம் என்ற ரத்தினத்தை வலது கையில் மோதிர விரலில் வெள்ளியில் செய்து அணியலாம்.
சூரியனுக்கு உகந்த காயத்திரி மந்திரத்தை தினமும் 9 முறை ஜபித்து வர வேண்டும்.
சூரிய காயத்திரி மந்திரம்
ஓம் அச் வ த்வஜாய வித்மஹே
பாச ஹஸ்தாய தீமஹி
தன்நோ சூர்ய ப்ரசோதயாத்.
சந்திர திசை – புக்தி நடப்பவர்களுக்கு ஏற்ற பரிகாரம்
திங்கள் அன்று அம்பாளை வணங்க வேண்டும். சந்திரனுக்கு உகந்த தெய்வம் அம்மன்தான். வெள்ளை நிற ஆடை அணியலாம் அல்லது நீங்கள் அணியும் உடையில் சிறிய அளவிலாவது வெள்ளை நிறம் இருப்பது நல்லது.
நெல் தானியத்தை ஒரு கைபிடி அளவு பறவைகளுக்கு வைக்க வேண்டும். வலது கை மோதிர விரலில் முத்து மோதிரம் அணியலாம்.
பசு மாடுக்கு உணவு தர வேண்டும். இதனால் மன அமைதி ஏற்படும். புத்தி தெளிவு பெறும் புத்தி தெளிவாக இருந்தாலே அனைத்து காரியங்களும் நடக்கும்.
சந்திரனுக்கு உகந்த காயத்திரி மந்திரத்தை தினமும் 9 முறை ஜபித்து வர வேண்டும்.
ஸ்ரீ சந்திர காயத்ரீ மந்திரம்
ஓம் பத்ம த்வஜாய வித்மஹே
ஹேம ரூபாய தீமஹி!
தந்தோ ஸோம ப்ரசோதயாத்!
செவ்வாய் திசை நடப்பவர்களுக்கு ஏற்ற பரிகாரம்
முருகப்பெருமானையும், துர்காதேவியையும் வணங்க வேண்டும். சிகப்பு ஆடை அணியலாம். சிகப்பு மலர்களை இறைவனுக்கு சமர்ப்பிக்க வேண்டும். பவழ மோதிரம் அணிய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால் கையில் செம்பு காப்போ, மோதிரமோ அணிந்தால் நன்மை தரும். பருப்பு சாதம் அதாவது துவரம் பருப்பை சாதத்தில் கலந்து காக்கைக்கு வைக்க வேண்டும். செவ்வாய் பகவானுக்கு
உகந்த காயத்திரி மந்திரத்தை 9 முறை சொல்லி வர வேண்டும்.
ஸ்ரீஅங்காரக காயத்ரீ மந்திரம்
ஓம் வீர த்வஜாய வித்மஹே:
விக்ன ஹஸ்தாய தீமஹி!
தந்நோ பௌம ப்ரசோதயாத்!
புதன் திசை நடப்பவர்களுக்கு ஏற்ற பரிகாரம்
பெருமாளை வணங்க வேண்டும். துளசியை பெருமாளுக்கு சமர்பிக்க வேண்டும். 5 பேருக்கு புளிசாதம், தயிர்சாதம் தானமாக கொடுக்க வேண்டும் அத்துடன் காக்கைக்கும் வைக்க வேண்டும்.
பசுவுக்கு கீரை தர வேண்டும். பச்சைபயிரை வேக வைத்து இறைவனுக்கு படைத்து அதை பிரசாதமாக சாப்பிட வேண்டும்.
மரகத பச்சை அல்லது சாதாரண பச்சை நிறத்தில் இருக்கும் ரத்தினத்தை மோதிரம் செய்து, வலது கையில் மோதிர விரலில் அணியலாம்.
9 முறை புதன் பகவானுக்கு உகந்த காயத்திரி மந்திரத்தை சொல்லி வர வேண்டும்.
ஸ்ரீபுத காயத்ரீ மந்திரம்
ஓம் கஜ த்வஜாய வித்மஹே:
சு க ஹஸ்தாய தீமஹி
தந்நோ புத ப்ரசோதயாத்.
குரு திசை நடப்பவர்களுக்கு ஏற்ற பரிகாரம்
ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும், பெருமாளையும் அல்லது நவகிரகங்களில் உள்ள குரு பகவானையோ வணங்க வேண்டும். வியாழ கிழமையில் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும்.
கொண்டைக் கடலையை இறைவனுக்கு படைத்து அதை பிரசாதமாக சாப்பிட வேண்டும். கொண்டைக் கடலையை சிலருக்கு தானம் செய்யலாம். அல்லது ஒரு கைபிடி அளவு கொண்டைக் கடலையை காக்கைக்கும் வைக்கலாம். முல்லை மலர் அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்கும் மலர்களை ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கோ, பெருமாளுக்கோ சமர்ப்பிக்கலாம்.
புஷ்பராக ரத்தினத்தை வலது கையில் ஆள்காட்டி விரலில் மோதிரமாக அணியலாம்.
9 முறை குருவுக்கு உகந்த காயத்திரி மந்திரத்தை வியாழன்தோறும் சொல்லி வர வேண்டும்.
ஸ்ரீ குரு காயத்ரீ மந்திரம
ஓம் வ்ருஷப த்வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குரு ப்ரசோதயாத்.
சுக்கிர திசை நடப்பவர்களுக்கு ஏற்ற பரிகாரம்
வெள்ளி கிழமையில் ஸ்ரீமகாலஷ்மியையும், அரங்கநாதரையும் வணங்க வேண்டும். இனிப்பை தானம் செய்ய வேண்டும். வெள்ளை நிறத்தில் இருக்கும் இனிப்பு வைத்து ஸ்ரீமகாலஷ்மியை வணங்க வேண்டும். மொச்சை பயிரை சாப்பிட வேண்டும். அத்துடன் மொச்சை பயிறை தானம் செய்ய வேண்டும்.
மல்லிகைப்பூ தாமரையை ஸ்ரீமகாலஷ்மிக்கு சமர்ப்பிக்க வேண்டும்
சுக்கிர பகவானுக்கு உகந்த காயத்திரி மந்திரத்தை 9 முறை சொல்ல வேண்டும்.
ஸ்ரீ சுக்ர காயத்ரீ மந்திரம்
ஓம் அச் வ த்வஜாய வித்மஹே:
தநுர் ஹஸ்தாய தீமஹி
தந்நோ சுக்கிர ப்ரசோதயாத்.
சனி திசை நடப்பவர்களுக்கு ஏற்ற பரிகாரம்
சனிகிழமையில் அனுமாரையும் திருப்பதி பெருமாளையும் வணங்க வேண்டும். நீலம் அல்லது கறுப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும்.
எள் சாதத்தை காக்கைக்கு வைக்க வேண்டும். நல்லெண்ணை தானம் கஷ்டத்தை தீர்க்கும். ஆகவே சனிஸ்வர ஆலயத்தில் நல்லெண்ணைய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
இது சிறப்பான பலன்களை கொடுக்கும். சனிஸ்வர பகவானுக்கு நீலம் அல்லது கறுப்பு வஸ்திரத்தை காணிக்கையாக கொடுக்க வேண்டும். சனி பகவானுக்கு உகந்த காயத்திரி மந்திரத்தை 9 முறை உச்சரிக்க வேண்டும்.
ஸ்ரீ சனீஸ்வர காயத்ரீ மந்திரம்
ஓம் காக த்வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ மந்த ப்ரசோதயாத்.
இராகு திசை நடப்பவர்களுக்கு ஏற்ற பரிகாரம்
செவ்வாய் கிழமையில் துர்க்கை தேவியை வழிபட வேண்டும். உளுந்து வடையை தானம் செய்யலாம். உளுந்தை
பறவைகளுக்கு வைக்க வேண்டும். புளி சாதத்தை ஒருவருக்காவது தானம் செய்யவேண்டும். கோமேதக ரத்தினத்தை இடது கையில் சூரிய விரலில் மோதிரமாக அணிய வேண்டும். நீல ஆடை அணிய வேண்டும்.
இராகுபகவானுக்கு உகந்த காயத்திரி மந்திரத்தை 9 முறை ஜெபிக்க வேண்டும்.
ஸ்ரீ இராகு காயத்ரீ மந்திரம்
ஓம் நாக த்வஜாய வித்மஹே:
பத்ம ஹஸ்தாய தீமஹி
தந்நோ ராகு ப்ரசோதயாத்.
கேது திசை நடப்பவர்களுக்கு ஏற்ற பரிகாரம்
வியாழ கிழமையில் விநாயகரை
வணங்க வேண்டும்.
விநாயகருக்கு அறுகம்புள்ளை சமர்பித்து வணங்க வேண்டும். நல்லது. பறவைகளுக்கு கொள்ளு தானம் நல்லது. வைடூரிய ரத்தினத்தை மோதிரமாக இடது கையில் மோதிர விரலில் அணிய வேண்டும். பல நிறங்கள் கலந்த வஸ்திரம் அணியலாம்.
ஸ்ரீ கேது காயத்ரீ மந்திரம்
ஓம் அச் வ த்வஜாய வித்மஹே
சூ ல ஹஸ்தாய தீமஹி
தந்நோ கேது ப்ரசோதயாத்.
இப்படி அந்தந்த திசை மற்றும் புக்திகளுக்கு ஏற்ற பரிகாரங்களை அந்தந்த கிழமைகளில் செய்தாலே குறிப்பிட்ட கிரகங்களால் ஏற்படும் பெரிய அளவிலான பாதகங்களை தவிர்க்கலாம்.
நம்பிக்கையுடன் இந்த பரிகாரங்களையும், கிரகங்களுக்குரிய காயத்திரி மந்திரங்களையும் நம்பிக்கையுடன் உச்சரித்து வந்தால், காயத்ரீ தேவியின் ஆசியாலும் கிரகங்களின் அருளாலும் நன்மைகள் கிடைக்கும்.!

மாசி மாத விசேஷங்கள்

மாசி மாசந்தான் கெட்டி மேள தாளந்தான்....
மாசி மாதம் பல விசேஷங்கள் வருகிறது, இவற்றில் சில நமக்கெல்லாம் தெரிந்த சிவ-ராத்ரி, மற்ற சில விசேஷங்கள் நம்மில் பலருக்கும் தெரியாதது. இவ்வாறாக இன்று வழக்கில் (அவ்வளவாக) இல்லாத சில விஷயங்களை கோடிட்டுக் காட்டுவதாக நினைத்து இதை எழுதுகிறேன்.
மாக மாத சுக்ல சதுர்த்தி (வளர்பிறை) “குந்த சதுர்த்தி” என்று வழங்கப்படுகிறது. இந்த நாளில் பகல் முழுவதும் உபவாசம் இருந்து மாலையில் குந்த (மல்லிகை) புஷ்பத்தால் சதாசிவனை அர்சித்துப் பூஜை செய்வது குறைவற்ற செல்வம் மற்றும் நிறைவான வாழ்வுக்கு அடிக்கோலும் என்று கூறுகிறார்கள். இதன் அடுத்த நாளான பஞ்சமி தினமானது “வஸந்த பஞ்சமீ” என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் மஹாவிஷ்ணுவை லக்ஷ்மியுடன் சேர்த்துப் பூஜிப்பதும், நாம சங்கீர்த்தனம் போன்றவை செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள். இந்த வழிபாட்டால் குடும்பத்தில் ஒற்றுமையும், தம்பதியிடத்து அன்யோன்யமும் ஏற்படும் என்று கூறியிருக்கிறார்கள். இந்த இரு விசேஷங்களும் சாந்திரமான மாசி மாதத்தை அடிப்படையாக்க் கொள்ளாது, தைமாத அமாவாசைக்குப் பின்னர் வரும் சதுர்த்தி மற்றும் பஞ்சமீ திதிகளைக் கொண்டு அமைகிறது என்பது கவனிக்கத்தக்கது.

சாதாரணமாக ஏகாதசி விரதம் என்பது மனிதனாகப் பிறந்த எல்லோருக்கும் அவசியம் என்று கூறுகிறது புராணங்கள். அந்த வகையில் இந்த மாதத்தில் வரும் இரு ஏகாதசிகளும் சிறப்பானவை. மாசி மாத வளர்பிறையில் வரும் ஏகாதசிக்கு ‘ஜயா ஏகாதசி’ என்று பெயர். இந்திரன் சபையில் நடனமாடும் காந்தர்வர்கள் தவறாக நடனமாடியதால் சாபம் பெற்று, பின்னர் இந்த ஏகாதசி விரத்த்தின் மூலமாக விமோசனம் பெற்றதாகச் சொல்கிறார்கள். இந்த ஏகாதசியன்று விரதமிருப்பவர்கள் செயல்படும் கார்யம் யாவும் ஜெயம் என்கிறார்கள். காவிரிக்கரையில் உள்ள திரு-ஈங்கோய் மலைக்குச் சென்று அங்கு அருள் பாலிக்கும் மரகதேஸ்வரர் மற்றும் அகஸ்தியர் ஸ்தாபித்த ஸ்ரீசக்ர பீடத்தை தரிசிப்பது பல பாவங்களையும் போக்கக்கூடியதாகச் சொல்கிறார்கள்.
மாசி மாத த்தில் வரும் கிருஷ்ண பக்ஷ (தேய்பிறை) ஏகாதசிக்கு ‘ஷட்திலா ஏகாதசி’ என்று பெயர். இந்த நாளில் எள்ளை அரைத்துப் பூசிக் குளிப்பது, எள்ளை தானமாக அளிப்பது, எள்ளை திரவியமாகக் கொண்டு ஹோமம் செய்வது, எள் மற்றும் நீர் தானமாக அளிப்பது, எள் கலந்த உணவினை உண்பது என்பதாக எள்ளை வைத்து ஆறுவிதமான செயல்களைச் செய்வதால் இந்த ஏகாதசிக்கு இப்பெயர். தெளலப்யர் என்னும் மஹரிஷியின் சிஷ்யர் ‘பசுவைக் கொன்றவர்கள், பிறன் பொருட்களை அபகரித்தவர்கள்’ போன்றோருக்கு பிராயச்சித்தம் என்ன என்று கேட்ட சமயத்தில், தெளலப்யர் இந்த விரதம் குறித்துச் சொன்னதாகத் தெரிகிறது.
ஈஸ்வரனின் சாபம் பெற்ற அம்பிகை, ஒரு மாசி மகத்தில் பூமியில், காளிந்தி நதிக்கரையில், தக்ஷனின் மகளாக அவதரித்த்தாகச் சொல்லப்படுகிறது. மாசி மகம் என்பது “ஸ்ரீ லலிதா ஜெயந்தி” என்று அழைக்கப்படும் அளவிற்கு சாக்தத்தில் சிறப்பான தினமாகச் சொல்லப்படுகிறது. மாக மாசம் என்று சொல்லப்படும் மாசி மாத பெளர்ணமி தினத்தன்று மாலையில் ஸ்ரீ லலிதையின் அவதாரம் நிகழ்ந்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே எல்லா பெளர்ணமி தினங்களிலும் செய்யப்படும் ஆவரண பூஜைகள் இந்த் மாசி மாத பெளர்ணமியன்று மாலை மிகச் சிறப்பாகச் செய்யப்படுகிறது.
இந்த மாசி மாத பெளர்ணமி தினமே ஹோலிப் பண்டிகை என்று வடநாட்டில் கொண்டாடப்படுவதாம். இந்த ஹோலிப் பண்டிகையானது கண்ணுக்குத் தெரியாத ராக்ஷசர்களிடத்திருந்து குழந்தைகளைக் காப்பதற்காக என்று பவிஷ்யோத்தர புராணத்தில் கூறப்பட்டிருக்கிறதாகத் தெரிகிறது.
மாசிமாத ஞாயிற்றுக் கிழமையில் அமாவாசை, திருவோணம் வருமானால் அந்த தினம் மிகச் சிறப்பானதாக ‘அர்த்தோதயம்’ என்று சொல்லப்படுகிறது. இதுவே ஞாயிறுக்கு பதிலாக திங்கள் வருமாயின் ‘மகோதயம்’ என்று கூறியிருக்கிறார்கள். இந்த தின்ங்களில் செய்யும் கர்மாக்கள் மிகுந்த விசேஷம் என்கிறார்கள் பெரியோர். மாசி மகத்தன்று கும்பகோணம் மகாமக குளத்தில் பிதுர் தர்பணம் செய்தால் பித்ரு தோஷம் நீங்குமாம்.
மாக ஸ்நானம் என்பது மிகுந்த நற்பலன்களை அளிக்க்க் கூடியது என்று கூறியிருக்கிறார்கள். தை அமாவாசைக்கு அடுத்த தினத்தில் இருந்து, பிரம்ம முஹூர்த்த காலத்தில் சங்கல்பம் செய்து ஸ்நானம் செய்தவதற்கு என்று ஸ்லோகம் செய்து கொடுத்திருக்கிறார்கள் பெரியோர். பலகாலம் விசேஷ தீர்த்தங்களில் நீராடிய பலனை மாக ஸ்நானம் அளித்துவிடுவதாகப் புராணங்கள் கூறுகின்றன. தேவேந்திரன் மாசி மகத்தன்று துங்கபத்ராவில் நீராடி, சிவ பூஜை செய்து, சாப விமோசனம் பெற்றதாகச் சொல்லப்படுகிறது.

thank you:https://www.facebook.com/vegetarian1111/posts/525826480786085
Vegetarian சைவம்

 தியானப் பயிற்சியில் வெற்றி காணவும் கண்டிப்பாக காய்கறியுண்போராக இருக்க வேண்டும்.

இந்துமதம் மாமிச உணவுக்கு எதிரானதா?
இந்துச் சைவர்கள் புலால் உண்ணுவதை மறுக்கின்றனரா?
.
சைவர்கள் உயிர் வாழ்க்கைக்கு, மற்ற உயிர்களுக்கு மிகக் குறைந்த துன்பம் தரும் வகையில் சைவ உணவு மட்டும் உண்ணும்படி கற்பிக்கப்படுகின்றனர். ஆனால் தற்காலத்தில் எல்லா இந்துக்களும் சைவ உணவு உண்பவர்களாக இல்லை.
இன்று இருபது விழுக்காடு இந்துக்கள் சைவமாக இருக்கிறார்கள். சைவ உணவு உண்பவர்கள் வட இந்தியாவை விட தென் இந்தியாவில் அதிகமானோர் உண்டு. ஏனெனில் வட இந்தியாவின் காலநிலை மற்றும் கடந்த கால முகலாயர் செல்வாக்கும் காரணமாகிறது.
நமது சமயம் கடுமையான விதிகளான "கட்டாயம் செய்ய வேண்டியவை, நிச்சயம் செய்யத் தகாதவை" போன்றவற்றைச் சார்ந்திருக்கவில்லை. நமது சமயத்தில் கட்டளைகள் இல்லை. சைவ சமயம் நமது உடலுக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க ஞானத்தை நமக்கு கொடுத்துள்ளது.
அர்ச்சகர்களும் சமயச் சான்றோரும் கண்டிப்பாக சைவமாக இருக்கிறார்கள். மிகவுயர்ந்த புனிதத் தன்மையைக் காக்கவும் ஆன்மீக உணர்வும் கொண்டு அவர்களின் பொறுப்புகளை நிறைவேற்றவும் அவர்களது இயல்பான தூய்மையைத் தூண்டவும் முடிகிறது. யோகப் பயிற்சி செய்யவும் தியானப் பயிற்சியில் வெற்றி காணவும் கண்டிப்பாக காய்கறியுண்போராக இருக்க வேண்டும். பொதுவாக இராணுவத்தினரும் சட்ட அமலாக்கப் பிரிவினரும் சைவமாக இருப்பதில்லை. ஏனெனில் அவர்கள் தங்கள் கடமைகளைச் செய்யும் பொருட்டு சற்று மூர்க்கமாக இருக்க வேண்டியிருகிறது.
இத்தகைய கேள்விகளுக்கு வரையறுக்கப்பட்ட விதியான இன்னா செய்யாமை (அகிம்சை) ஒர் இந்துவின் பதிலின் அடிப்படையாகும். அகிம்சை என்பது ஒருவருக்கு அல்லது ஒர் உயிருக்கு உடலால், மனத்தால், உணர்ச்சியால் வன்முறை செய்யக்கூடாது என்பதாகும். வன்முறையை கடுமையாக எதிர்ப்பவர் இயல்பகவே சைவ உணவுக்கு மாறிவிடுகிறார். எல்லாவற்றிற்கும் மேலாக அவரவர் மனசாட்சியே நல்ல ஆசானாகிறது.
நாம் இறைச்சி, மீன், கோழி, முட்டை ஆகியவற்றை உண்ணும் பொழுது அவற்றின் அதிர்வுகளை நாம் கிரகிப்பதால் நம் உடலின் நரம்பு மண்டலங்களில் போய்ச் சேர்கின்றன. இவை இரசாயனமாகி நமது மன உணர்வுகளை மாற்றுகிறது. கீழ்நிலை குணங்களான பயம், கோபம், பொறாமை, குழப்பம், ஆத்திரம் போன்றவற்றிற்கு ஆளாகிறோம்.
சைவ தீட்சை பெறுவதற்கு முன் சைவமாக மாறும்படியும் அதன் பிறகு அதனை விடாமல் கடைப்பிடிக்கும்படியும் ஆலோசனை கூறுகிறார்கள். ஆனால் பலர் தீட்சை பெறாதவர்களை சைவமாக மாறும்படி வலியுறுத்துவதில்லை.
அசைவமாயிருப்பவர்களை விட சைவமாயிருப்பவர்களின் குடும்பத்தில் குறைந்த பிரச்சனைகள் இருப்பதை அறியமுடியும்.
புகழுக்குறிய திருமறைகள் இறைச்சி உண்பதை எதிர்க்கின்றன. யசுர் வேதம் (36.18) பூமியில் நீரிலும் வெளியிலும் வாழும் எல்லா ஜீவராசிகளிடமும் அன்பைப் பொழிய வேண்டுமெனக் கூறுகிறது. 2,200 ஆண்டுக்கு முற்பட்ட நன்னெறிகளின் கருவூலமான திருக்குறள் கூறுகிறது: வேறொரு உயிரைக் கொன்று கிடைத்தது தான் அந்த இறைச்சி என்று மனிதன் உணர்ந்தால் அதை உண்ண மாட்டான்.
"உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ணது உணர்வார்ப் பெறின்."
(குறள் 257)
இந்துக்கள் புலால் உண்ணுவதற்கு எதிரான காரணங்களை நன்கு அறிந்திருக்கிறார்கள். சிலர் முழுமையாக கைவிட்டு விட்டனர். சுவையான ஆரோக்கியமான சைவ உணவு இருக்கும் போது புலால் வேண்டுவதேன்?
துன்புறுத்திக் கொன்று கிடைத்த இறைச்சியைப்பற்றி நன்கு சிந்தித்துப் பார்ப்பவர்கள் புலால் உண்ண மறுப்பார்கள். உணவு தூய்மையாயிருந்தால் நமது மனமும் இதயமும் தூய்மையாயிருக்கும்.
இந்துக்கள் இதற்காகவும் மற்ற விஷயங்களுக்காகவும் வழிகாட்டியாக அவர்களது குரு, அவர்களது மனச்சாட்சி மற்றும் புலால் மறுப்பதால் விளையும் நன்மைகள் பற்றிய அறிவு முதலியவற்றை வழிகாட்டியாக ஏற்றுக் கொள்கின்றனர். முழு சைவ உணவை உண்டு மகிழ்கிறார்கள்.
சில நல்ல இந்துக்களும் அசைவ உணவு உண்கிறார்கள் என்பது உண்மைதான். அவ்வாறே சில இந்துக்கள் சைவமாக இருந்தும் அவ்வளவாக நல்லவர்களாக இருப்பதில்லை என்பதும் மறுக்கமுடியாத உண்மை!.
இன்று அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் மில்லியன் கணக்கான மக்கள் சைவமாக உள்ளனர். ஏனெனில் அவர்கள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக இருக்க விரும்புகின்றனர். புலால் உண்ணுவது அதிகரிப்பதால் தான் வன்முறை அதிகரித்து வருகிறது, அதைத் தவிர்க்கலாம் என்ற மனப்போக்கிற்காக சைவமாகின்றனர். அங்கெல்லாம் சைவ உணவு பற்றி நல்ல நல்ல நூல்கள், சஞ்சிகைகள் “Diet for a New America by John Robbins” , “Vegetarian Times”. “ How to Win an Argument with a Meat-Eater by Mr. Robbins”. போன்றன வெளிவந்துகொண்டிருக்கின்றன.
- ஹவாய் இமாலயன் அகாதமியின் “இந்து சமயம் பற்றிய 10 கேள்விகள்” நூலிலிருந்து.
*

திருவள்ளுவர் உட்பட இந்து ஆன்மீகப் பெரியோர்கள் கொல்லாமையை வற்புறுத்துகிறார்கள். ‘அருள் ஆட்சி ஆங்கில்லை ஊன் தின்பவர்க்கு’ என்பது வள்ளுவர் வாக்கு. எல்லாவற்றிலும் உயர்ந்த அறம் கொல்லாமை (அஹிம்ஸா பரமோ தர்ம:) என்று முன்னோர் தெளிவுறக் கூறியுள்ளனர். திருவள்ளுவரும் ‘புலால் மறுத்தல்’ என்ற அதிகாரத்தைத் துறவற இயலில் வைத்துள்ளார் என்பதையும் நாம் இங்கே கவனிக்க வேண்டும்.
இப்போது சமுதாயம் மாறிவிட்ட நிலையில் நாம் மனித சமத்துவத்துக்கு எதிரானதாகிவிட்ட வர்ணம் என்பதைக் களைய வேண்டியிருக்கிறது.
ஆனால் ஆசிரமம் என்பது வாழ்க்கையின் படிநிலை. பிரம்மசரியம் (மாணாக்க நிலை); கிரஹஸ்தம் (கல்விமுடிந்து சம்பாதிக்கிற காலத்தில் திருமணம் செய்துகொண்டு குடும்பத்தை ஏற்படுத்தும் நிலை), வானப்பிரஸ்தம் (குடும்பக் கடமைகளை நிறைவேற்றிவிட்ட பின்னர் பந்தங்களைத் துறந்து காட்டுக்குப் போகும் நிலை); சன்யாசம் (உலகியல் பற்றுக்கள் எல்லாவற்றையும் துறந்து இறைவனை அடையும் பொருட்டுத் தவம் மேற்கொள்ளும் நிலை) ஆகிய நிலைகள் அதே பெயரிலும் வடிவிலும் இல்லாவிட்டால் செயல்முறைப் படிநிலைகளாக இருக்கத்தான் செய்கின்றன. கல்வி, திருமணம், வயது முதிர்ச்சி ஆகியவை ஏற்படத்தான் செய்கின்றன. ஆனால் நாம் நமது மதம் விதித்த அறவழியில் செல்லாமல், இறுதிவரை பொருள்தேடுவதிலேயே கவனமாக இருப்பதால் மாணவன், குடும்பஸ்தன் என்ற நிலைகளைத் தாண்டுவதே இல்லை.
அப்படி அல்லாமல் ஒருவருக்கு மாணவப் பருவத்திலேயும் இறைநாட்டம் வந்துவிடலாம். ஆக, எந்த நிலையில் இருந்தாலும், தன்னில் இருக்கும் இறைத்தன்மையை வளர்ப்பது என்னும் ஆன்மீகப் பாதையை ஒருவர் தேர்ந்தெடுத்துவிட்டால் அவருக்குத் தாவர உணவே சாதகமாக இருக்கும் என்பது இந்து சமயத்தின் பரிந்துரை.
மாமிசம் மனித உணவு அல்ல!
முட்டை, மீன், இறைச்சி, புழு முதலானவையும் மாமிசம் ஆகும்.)
தாவர உணவே மனிதருக்குத் தகுதியான உணவு!
மனிதர் உடலமைப்பு, தாவர உணவு உண்ணும் விலங்குகள் உடலமைப்பு போலவே இருக்கிறது. மாமிச உணவு விலங்கு உடல் அமைப்பு, வேறுபட்டு இருப்பதை எல்லோரும் காணமுடியும்.மனிதர் மற்றும் தாவர உணவு விலங்குகள் பற்கள், நகங்கள் தட்டையாக இருக்கின்றன. ஆனால், பூனை, நாய் முதலான மாமிச விலங்குகளின் பற்களும், நகங்களும் கூர்மையாக இருக்கின்றன.
மனிதரும், தாவர உணவு விலங்குகளும் நீரை உதடுகளால் உறிஞ்சிக் குடிக்கின்றன. ஆனால், மாமிச உணவு விலங்குகள் நாக்கால் நீரை நக்கிக் குடிக்கின்றன. மாமிச உணவு விலங்குகள் பச்சையாக மாமிசத்தை தின்கின்றன. ஆனால், மனிதர் மாமிசத்தை வேக வைத்துப் பக்குவப்படுத்தியே தின்கின்றனர். இவற்றால், மாமிசம் மனிதர் உணவு அல்ல் தாவர உணவுதான் மனிதர் உணவு என்பது தெளிவாகிறது.
தாவர உணவில் சக்தி இல்லை; மாமிச உணவில் சக்தி இருப்பதாகக் கூறுகின்றனர். ஆனால், மிகு பளு தூக்கும் யானை, விரைந்து ஓடும் குதிரை, உழைக்கும் மாடு, பால் தரும் பசு முதலான எல்லாம் தாவர உணவே கொள்கின்றன. “ஹார்ஸ் பவர்”என்று கூறுகிறோம். அந்த “ஹார்ஸ்” குதிரை தாவர உணவே தின்கிறது. பசு தின்னும் தாவரமே பாலாகிறது. அந்தப் பால் சக்தியான உணவு. அந்தப் பாலிலிருந்துதான் நெய் தயாராகிறது. முதலானவை எல்லாம் இலை, தழை, புல் முதலான உணவு உண்பனவே!
இந்த விலங்குகள் தின்னும் தாவர வகை சிலவே. அவை கிடைக்கலாம், சில காலத்தில் கிடைக்காமலும் போகலாம். ஆனால், மனிதருக்கு எத்தனை வகையான உணவு. அரிசி, கோதுமை, பட்டாணி, கடலை, முதலான தானியங்களும், அவரை, தக்காளி முதலான காய்கறிகளும், வாழை, மாம்பழம், முதலான பழங்களும் என பலவகையான உணவுப் பொருட்கள் கிடைக்கின்றன. இவற்றை சேர்த்து (ஸ்டாக்) வைக்கிறான். இவற்றை கொண்டு சக்தியான உணவைப் பெறலாம். பிறகு ஏன் மாமிசத்தின் பக்கம் போகிறான்? அதில் தாவரத்தைக் காட்டிலும் அதிக சக்தி பெறமுடியுமா?
தம் உடலையும், குழந்தைகளையும் மனிதர் எவ்வளவு சிரத்தையோடு காப்பாற்றுகின்றனர். அதே போல விலங்குகள், தம் உடலையும், குட்டிகளையும் சிரத்தையோடு காப்பாற்ற உரிமை இல்லையா?
தனக்கும், தன் குழந்தைக்கும் தீங்கு செய்வாரோடு சண்டை போடுகின்றனர் மனிதர் அதற்காக வழக்கு மன்றம் போகவும் செய்கின்றனர். ஆனால், விலங்குகள் மனிதரோடு சண்டை இட முடியுமா? வழக்கு மன்றம் போக முடியுமா?
தாய், தன் வயிற்றில் வளரும் குழந்தை பிறந்தால் எப்படி எல்லாம் வளர்க்கலாம் என்று கற்பனை செய்து மகிழ்கிறாள். அதே போல கோழி தன் முட்டையில் வளரும் குஞ்சு வெளியே வந்தால் எப்படிப் பாதுகாக்கலாம் என்று கற்பனை செய்து மகிழாதா? அந்த முட்டை வெளியே வந்து குஞ்சு வெளியே வரும் முன் அதனை எடுத்துத் தின்பது எவ்வளவு கொடுமை? முட்டை நிலையில் மூச்சு காணப்படுகிறது. என்று அமெரிக்க டாக்டர் கூறியுள்ளார். அதனால், அது மாமிசமே; தாவர உணவு அன்று. அதுமட்டுமல்லாமல் சேவலும் கோழியும் சேர்ந்து தோன்றிய அசுத்த பொருள்களால் ஆனது முட்டை அது உண்ணத்தக்கது அன்று.
தன்னை வீட்டிலிருந்தோ, பணியிலிருந்தோ விலக்கி விட்டால் மனிதன் எவ்வளவு துன்பம் அடைகின்றான்? தண்ணீரில் வாழும் மீனை தரையில் போட்டால் அது எவ்வளவு துடிதுடித்துத் துன்பம் அடைகிறது. அதனைக் கொன்று தின்னுவது கொடுமை! கொடுமை! வெளியேற்றியதால் வேதனை அடைபவனே தண்ணீரை விட்டு வெளியே போட்ட மீனின் வேதனையை அறிய முடியும்.
இப்படி இந்த ஊமை விலங்குகளுக்குக் கொடுமை செய்து துன்பம் தந்து பெற்ற மாமிசத்தை உண்டு மனிதன் நலமாக வாழ முடியுமா? மனிதருக்கு ஒன்றுமே நேராதா?எந்த குற்றமும் செய்யாத நிலையில் பிறக்கும் போதே, குருடு, நொண்டி, ஊமையாக, வறுமையில் ஏன் பிறக்கிறது குழந்தை? காரணம் சொல்ல முடியுமா? கருணையுள்ள கடவுள் இப்படி யாரையும் செய்யமாட்டார். அதனால், முன் பிறவியில் செய்த பாபங்களின் விளைவு இவை என அறிதல் வேண்டும்.
பாபங்கள் ஐந்து என்பர். அவை இம்சை, பொய், திருடு, காமம், பா¢க்ரஹம் (பற்று) இவற்றுள் பெரும் பாபம் எது? உங்களுக்குத் தெரியும். இம்சையே பெரும் பாபம்.உன்னை அடித்தவனை நீ திருப்பி அடித்தால் அது அத்தனை பாபம் அன்று ஆனால், உனக்கு எந்த தீங்கும் செய்யாத விலங்கை கொன்று மாமிசமாகக் தின்னுகிறாயே அது எத்தனை பெரும் பாபம். மகா பெரும் பாபம்.
ஆனால், எல்லா தருமங்களும், சான்றோர்களும், சாஸ்திரங்களும் தன்னை ஒன்றும் செய்யாத விலங்குகளைக் கொன்று தின்னும் பாபி கடவுளை, குருவை, சாஸ்திரங்களைத் தொடும் பாக்கியத்தை இழக்கிறான் என்று கூறுகின்றனர். நல்லோர் தொடர்புகளையும் அவன் இழக்கிறான். அதனால்தான் விரத நாட்களில் மாமிசம் உண்ணுதலை விலக்குகிறான். என்றுமே புலால் உண்ணுதலை நீக்கினால் எவ்வளவு நன்மை அடையலாம்.
மஹாவீரர், புத்தர், ஏசு, இராமன், அனுமான், அல்லா முதலானவர் காலத்தில் மாமிசம் உண்டார்களா?
ஆகையால், மாமிசம் உண்ணுதலை விட்டு அந்த மகா சான்றோர்களைப் போல நாமும் மகான் ஆன்மாவாக ஆக முயற்சிப்போமாக.

இன்று நாம் சாப்பிடுகிற, பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவுகளில்,ஏதோ ஒருவகையில் மிருகங்களில் இருந்து பெறப்பட்ட பல வேதிப்பொருள்கள்
சுவைக்காகவும்,நிறத்திற்காகவும்...
கலக்கப்படுகிறது.

இத்தகைய மிருகங்களில் இருந்து பெறப்பட்ட வேதிப்பொருள்களில்
எது நாம் சாப்பிடுகிற உணவில்
சேர்க்கப்பட்டுள்ளது என்பதனை நாம் எளிதில் அறிந்துகொள்ள முடியும்.
குறிப்பாக ingredients என்கிற தலைப்பின் கீழ் சேர்மானங்கள்
உணவுபாக்கெட்டின் ஒரு பகுதியில்
வரிசைப்படுத்தப்பட்டிருக்கும்.
அதில் நீங்கள் கவனிக்க வேண்டியது
E என்று பெரிய ஆங்கில எழுத்தில் ஆரம்பித்து அதன் தொடர்ச்சியாக எண்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.
(நம்மூரில் விற்பனையாகும் உணவுப்பொருள்களின் பாக்கெட்டுகளில் 'E' குறிப்பிடப்படாமல் வெறும் எண் மட்டும் கூட குறிப்பிட்டு இருக்கலாம்)
'E' - என்றால் ஐரோப்பா என பொருள்படும்.
எண்கள் வேதிப்பொருளினை குறிப்பிடும்.
'e' -என்றால் எமல்சிபையர் என பொருள்படும்.
நூற்றுக்கணக்கில் இது போன்ற குறியீடுகள் உலகளவில் இன்றும்
நடைமுறையில் இருக்கிறது.
அவற்றில் சில மிருக (எருது,கோழி மற்றும் பன்றி) இறைச்சிகளில் இருந்தும்,கடலில் இருந்தும் பெறப்படும் வேதிப்பொருள்களை குறிக்கிறது.
அந்த குறியீட்டு எண்கள் மற்றும் அது குறிக்கும் வேதிப்பொருள்கள்.....
E120-
கொச்சினில்
(cochineal)
E441-
ஜெலட்டின்
(gelatin)
E542-
எலும்பு பாஸ்பேட்
(bone phosphate)
E570-
ஸ்டெரிக் அமிலம்
(stearic acid )
E572-
மெக்னீசியம் ஸ்டிரேட் மற்றும்
கால்சியம் ஸ்டிரேட்
(magnesium stearate and calcium stearate)
E585-
பெர்ரோஸ் லாக்டேட் (ferrous lactate)
E620-
குளுட்டாமிக் அமிலம்
(glutamic acid)
E621-
மோனோசோடியம் குளுட்டாமேட்
(monosodium glutamate)
E626-
குவானிலிக் அமிலம்
(guanylic acid)
E631-
டைசோடியம் இனோசினேட்
(disodium inosinate)
E635-
டைசோடியம் 5'-ரிபோநீக்ளியோ டைடுகள்
(disodium 5'-ribonucleotides)
E640 -
கிளைஸின் மற்றும் அது சார்ந்த சோடியம் உப்பு
(glycine and its sodium salt)
என்ன நண்பர்களே....
நீங்கள் சைவப்பிரியர் என்றால், சாப்பிடுவதற்கு முன் உணவு பாக்கெட்டை (பிஸ்கட்,மேகி,சிப்ஸ், பப்பிள் கம்,கேக்,சாக்லேட் என எதுவாகவும் இருக்கலாம்) கொஞ்சம் திருப்பி பாருங்கள்.
மேலே சொன்ன குறியீடுகளில்
ஏதேனும் ஒன்று இருந்தாலும்,அந்த உணவுப்பொருளில் அசைவம் கலந்திருக்கிறது என உணர்ந்து கொள்ளுங்கள்.

thank you:https://www.facebook.com/vegetarian1111/posts/525826480786085
Vegetarian சைவம்
 

ஏன் செவ்வாய் கிழமைகளில் முடி வெட்டக்கூடாதுனு தெரியுமா?


துர்க்கை மற்றும் லட்சுமி தினம்
இந்த மூட பழக்கத்திற்கு வேறு காரணங்கள் உள்ளன. இந்தியாவின் பல பகுதிகளில் செவ்வாய் கிழமை என்பது துர்க்கை மற்றும் லட்சுமிக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது.
...
செலவு கூடாது:
செல்வத்தை வாரி வழங்கும் லட்சுமிக்கு உரிய நாள் செவ்வாய். இதன் காரணமாக இந்த நாளில் செல்வத்தை வீட்டை விட்டு வெளியேற்ற பெரியவர்கள் மறுத்து வருகிறார்கள். நம்மிடம் உள்ள லட்சுமியை தானம் செய்தால், லட்சுமி சென்று விடுவாள் என்ற நம்பிக்கை பண்டைய காலம் முதல் தொன்றுதொட்டு இருந்து வருகிறது.
வீட்டை சுத்தம் செய்யமாட்டார்கள்
எப்படி முடி வெட்டவோ, ஷேவிங் செய்யவோ, நகம் வெட்டவோ கூடாதோ அதேப் போல் வீட்டை தண்ணீர் ஊற்றி கழுவி விடவோ அல்லது வீட்டில் உள்ள பழைய பொருட்களை தூக்கி எறியவோ மாட்டார்கள். இப்படி, செய்தால் வீட்டில் குடி கொண்டுள்ள லட்சுமி நம்மை விட்டு வெளியேறிவிடுவாள் என்ற நம்பிக்கை தான் முக்கிய காரணமாம்.
ஜோதிடம்
இச்செயல்களை செய்தால் அவரது வாழ்நாளில் 8 மாதங்கள் குறைவதாக ஜோதிடம் சொல்கிறது. காரணம், செவ்வாய் கிழமைகளில் செவ்வாய் குடி கொண்டிருக்கிறார். மனித உடலில், செவ்வாய் இரத்தத்தில் குடியிருக்கிறார். இரத்தத்தில் இருந்த தான் முடி வளர்கிறது. எனவே செவ்வாய் கிழமைகளில் முடி வெட்டினால், இரத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள் வருமாம்.
செவ்வாய் கிரகத்தின் எதிர்மறை விளைவுகள்
நம் உடலின் முடியை சனி நிர்வகிக்கிறது. செவ்வாய் கிழமைகளில் செவ்வாய் ஆளுகிறது. உண்மையிலேயே சனி தான் செவ்வாயின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கிறது. ஒருவேளை செவ்வாய் கிழமைகளில் முடியை வெட்டினால் சனி கிரகத்தின் சக்தி குறைந்து பின் செவ்வாயின் எதிர்மறை விளைவுகளுக்கு உள்ளாகக்கூடும். எனவே தான் செவ்வாய் கிழமைகளில் முடியை வெட்ட வேண்டாம் என்று சொல்கிறார்களாம்.

thank you:https://www.facebook.com/vegetarian1111/posts/525826480786085
Vegetarian சைவம்.

28 June 2016

பலாபழத்துக்குள்ள எத்தனை சுளைகள் இருக்குதுன்னு கண்டு பிடிக்க வழி சொல்லுது தமிழ் பாட்டு..

ஒரு பழைய தமிழ் பாட்டு கிடைச்சது..
அது ஒரு பலாபழத்துக்குள்ள எத்தனை சுளைகள் இருக்குதுன்னு கண்டு பிடிக்க வழி சொல்லுது..
அந்த பாட்டு –
” பலாவின் சுளையறிய வேண்டுதிரேல் ஆங்கு
சிறுமுள்ளுக் காம்பருகு எண்ணி – வருவதை
ஆறிற் பெருக்கியே, ஐந்தினுக்கு ஈந்திடவே
வேறெண்ண வேண்டாஞ் சுளை”
அர்த்தமென்னான்னா
பலாப்பழத்தோட காம்பச் சுத்தி எத்தன முள்ளு இருக்குன்னு எண்ணி அத ஆறால பெருக்கி அஞ்சால வகுத்தா வர்றதுதான் பழத்துக்குள்ளே இருக்குற சுளைகள்.. i.e., No of சுளைகள் = No of முள்ளுகள் around காம்பு X 6 /5
இந்த மாதிரி ரிசர்ச் ஏன் பண்ணுனாங்க – பொழுது போகலையா இல்ல வேற ஏதாவது
ட்ரை பண்ணுனாங்களா…?
என்னைப் பொருத்தவரையில இந்த பாட்டுல தப்பு இருக்குற மாதிரி தெரியுது..
இந்த formula வ இதுவரைக்கும் செக் பண்ணல…
இந்த வருசம் சரியா இருக்கான்னு பாக்கணும்..

22/7 என்பது எப்படி வந்தது -கணித சூத்திரத்தின் விளக்கம்

நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது எனது கணித ஆசிரியர் வட்டத்தின் சுற்றளவிற்கான சூத்திரம் கற்பித்தார், அப்போது
வட்டத்தின் சுற்றளவு = 2*Pi*R (or) Pi*D. எனக்கூறி Pi என்பதை 22/7 அல்லது 3.142 எனவும், D - விட்டம். R - ஆரம் எனவும் விளக்கமளித்து சந்தேகமிருந்தால் கேளுங்கள் என்றார்.
சக மாணவர் சிலர் அவர்களது சந்தேகத்தை கேட்டு விளக்கம் பெற்றனர். (விளக்கம் பெற்றதாக நம்பவைக்கப்பட்டனர்.)
நான் கேட்ட கேள்வியும் ஆசிரியரின் பதில்களும். உரையாடலாக கீழே...
நான்: இந்த Pi என்பது இங்கு எப்படி வந்தது? அதன் விளக்கம் என்ன? ஐயா.
ஆசிரியர் : அது தான் வட்டத்தின் சுற்றளவு சூத்திரம் என்று கூறினேனே?
நான்: சதுரம் மற்றும் செவ்வகம் சுற்றளவு சூத்திரங்களில் இந்த Pi வரவில்லையே.
ஆசிரியர்: இப்போது நான் வட்டத்தின் சுற்றளவு பற்றிதானே பாடம் நடத்துகிறேன் நீ எதற்காக சதுரம் செவ்வகத்தை பற்றி இங்கே கேட்கின்றாய்.
நான்: ஐயா எனது சந்தேகம் சதுரத்தின் சுற்றளவிற்கு 4A எனவும், A என்பது பக்கத்தின் நீளம் என்று கூறினீர்கள். செவ்வக சுற்றளவிற்கு 2LB எனவும், L = நீளம் எனவும், B = அகலம் எனவும் கூறினீர்கள்.அது போல Pi என்பது என்ன சற்று தெளிவாக கூறுங்களேன்.
ஆசிரியர்: அதுவா, Pi is a constant value.
இருப்பினும் நான் கேட்ட 22/7 என்பது எப்படி வந்தது என அவரால் விளக்கமளிக்க முடியவில்லை. எனக்கும் விளங்கவில்லை. இதனால் ஏற்பட்ட வாக்கு வாதத்தினால் இரு தினங்கள் வகுப்பிலிருந்து விலக்கி வைக்கப்பட்டு, இது போன்ற கேள்விகளை இனி கேட்க மாட்டேன் என்ற உத்தர வாதம் தந்து உள்சென்றேன்.
இச்சம்பவத்தை மறந்து சிலநாள் கடந்த பின்பு எதேட்சயாக இதன் விளக்கம் கிடைத்தது.
எனது தாத்தா எங்கள் ஊரின் மிகச்சிறந்த தச்சர் எனும் பெயர் பெற்றவர். எங்கள் ஊர் கோயிலின் தேர் சக்கரங்கள் பழுதுபட்ட காரணத்தினால் அச்சகரங்களை மாற்றும் பணி எனது தாத்தாவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
அவருக்கு எழுத படிக்க தெரியாத காரணத்தினால் தேவையான சாமான்களை பட்டியலிடும் பணிஎன்னிடம் வழங்கப்பட்டது.(உண்மையில் தினிக்கப்பட்டது). தாத்தா ஒவ்வொன்றாக கூற நான் எழுத வேண்டும்.
அப்படி அவர் கூறி வரும் போது வந்த ஒரு வாக்கியம் என்னை நெருடியது. அவ்வாக்கியம்,
ஐந்தடி உயர சக்கரத்திற்கு 15அடி 9 அங்குல நீள இரும்பு பட்டை, (இரும்பு பட்டை என்பது மரக்கட்டை தேயாமல் இருக்க சக்கரத்தில் ஒட்டப்படும் இரும்பு ). 7 அடி உயர சக்கரத்திற்கு 22 அடி நீள இரும்பு பட்டை.
இதில் வந்த 7 அடிக்கு 22 அடி என்பது எங்கோ கேட்டதாக நினைவுக்கு வர, என் தாத்தாவிடம் எப்படி 7 அடி உயர சக்கரத்திற்கு 22 அடி என கணக்கிட்டீர்கள் என்று வினவினேன்.
பழைய சக்கரங்கள் இருந்த இடத்திற்கு அழைத்து சென்று ஏழடி உயர சக்கரத்தின் ஒரு இடத்தில் குறியிட்டு அக்குறிக்கு நேராக மண்ணிலும் குறித்துக்கொண்டு, சக்கரத்தை ஒரு முழு சுற்று வரும் வரை தள்ளிக்கொண்டு வந்து மீண்டும் சக்கரத்தில் குறியிட்ட பகுதி மண்ணை தொட்ட இடத்தில் குறியிட்டார். மண்ணில் முதலில் குறியிட்ட இடத்திற்கும் இரண்டாம் இடத்திற்குமான தொலைவை அளந்தால் சரியாக 22 அடி வந்தது.
அதாவது சக்கரத்தின் விட்டம் 7 அடியாக இருந்தால் அதன் சுற்றளவு 22 அடி. சக்கரத்தின் விட்டம் 1 அடியாக இருந்தால் அதன் சுற்றளவு 3 அடி 1.7 அங்குலம் (3.142) என விளக்கினார்.
இந்த விளக்கம் என் தாத்தாவுக்கு எப்படி தெரிந்தது? அவருடைய அப்பா சொல்லிக்கொடுத்தார். நானும் சிலவற்றை தெரிந்துகொள்ள அவரிடம் சில விளக்கங்கள் கேட்டேன். அதற்கு என் தாத்தா கூறிய வார்த்தைகள் தான் என்னை மிகவும் பாதித்தது.
அவ்வார்தைகள்.....
உனக்கெதற்கு சாமி இந்த பொழப்பு நல்லா படிச்சு பெரிய ( கஞ்சிக்கு கையேந்து) உத்யோகத்துக்கு போ....
ஆண்டாண்டு காலமாக செய்து வந்த குலத்தொழிலை கேவலமாக நினைக்கும் தலைமுறையில் பிறந்ததை என்னி வெட்கமும் வேதனையும் அடைந்தேன்..
ஆனாலும் ஒரு தச்சு தொழிலாளியிடமிருந்து இத்தகைய கணித சூத்திரத்தின் விளக்கம் கிடைக்குமானால், மற்ற மரபு வழி தொழிளாலர்களிடம் இருந்து ரகசியங்களும் நுணுக்கங்களும் எவ்வள்வு கிடைக்கும்??? தற்காலத்தில் அவை என்ன ஆனது???
எதனால் பள்ளி கல்வி எனும் பெயரில் இளம் தலைமுறையினர் முட்டாளாக்கப்படுகின்றனர்????
உலகின் எந்த பகுதியிலும் இல்லாத அளவு சுய தொழில் மூலம் உண்டு வாழ்ந்து வந்த சமூகம் ஐந்துக்கும் பத்துக்கும் பிச்சை எடுக்க வெளிநாடுகளுக்கு ஓடுவதன் காரணம் என்ன???

26 June 2016

பங்கு சந்தையில் பணம் சம்பாதிக்க வழிகாட்டும் ஜோதிடம்

பங்கு சந்தையில் பணம் சம்பாதிக்க வழிகாட்டும் ஜோதிடம்


பங்கு சந்தை தான் இன்று வீட்டுப்பெண்கள் கூட ஆர்வம் காட்டும் முக்கிய தொழிலாக மாறிக்கொண்டிருக்கிறது...10 வருசத்துக்கு முன்னாடி காசில்லைன்னு ஒரு கம்பெனிக்காரன் 200 ஷேரை கொடுத்தான்..இன்னிக்கு அது கோடிக்கணக்குல மதிப்புக்கு போயிருச்சு என சிலர் சொல்லும்போது பங்கு சந்தையின் வீரியம் உணரலாம்...

ஒருவருக்கு திடீர்னு அதிகளவில் பணம் சம்பாதிக்கனும்னா அது புதையல் யோகம் மாதிரி ந்னு சொல்வாங்க...ஜாதகத்தில் யோகாதிபதிகள் திசை ஆரம்பிச்சா திடீர்னு பல வழிகளிலும் பணம் வரவு ஆரம்பிச்சு திக்குமுக்காட வைத்துவிடும்..அல்லதுஒரு நல்லநாளில் ஒரு தொழிலை தொடங்கினால் அது நல்லபடியா படிப்படியா உயர்வு உண்டாக்கும்..

பணம் நிறைய சம்பாதிக்க ,நிறைய வருமானம் உண்டாக சிலர் பங்கு சந்தையில் தினசரி சந்தையில் முதலீடு செய்வர் சிலர் கம்மாடிட்டி சந்தையில் முதலீடு செய்வர்...சிலர் சம்பாதிக்கிறார்கள்..பலர் கடனாளி ஆகிறார்கள்...மத்தவங்க கிட்ட கடன் வாங்கி முதல் போட்டு இழந்தவர்கள் நாடு முழுக்க லட்சக்கணக்கில் இருப்பர்..சில நிமிடங்களில் லட்சத்தை இழப்போர் அநேகம்..இப்படி பல ஆயிரங்களை லட்சங்களை தொலைக்கும் நீங்கள் ,ஏன் நல்ல நேரம்,நல்ல நாள்,நல்ல நட்சத்திரம்,நல்ல யோகம் பார்த்து முதலீடு செய்வதில்லை என சிலரை கேட்டிருக்கிறேன் இதுல திறமை அறிவுதான் சார் முக்கியம்..அதைவிட பங்கு சந்தை துவங்குற நேரத்துல எப்படி நல்ல நேரம் பார்க்குறது என்பார்கள் ஆனா..ஏன் திறமையானவர்களும்,அறிவு நிறைந்தவர்ளும் லட்சக்கணக்கில் இழந்து மூலையில் முடங்கி கிடக்கிறார்கள்..? இதற்கு என்ன காரணம்..?


நம் ராசிக்கு என்று யோகமான நாளோ,நம் நட்சத்திரத்துக்கு எதிரிடை நட்சத்திரம் இல்லாத நாளோ ,அன்று இதை செய்ய வேண்டும்..நம் திசாபுத்தி வரவை சொல்கிறதா இழப்பை சொல்கிறதா...என கவனித்து இறங்க வேண்டும்...6,8,12 ஆம் அதிபதி திசாபுத்தி நடப்பவர் நிச்சயம் சம்பாதிப்பதில்லை..பாதகாதிபதி புத்தி நடந்தாலும் ஆபத்துதான்...

நீங்கள் பங்கு சந்தையில் ஆர்வம் உடையவரா...அதில் முதலீடு செய்ய போகிறீர்களா...? எப்போது முதலீடு செய்யலாம்..கம்மாடிட்டியில் என்ன பொருள் உங்களுக்கு யோகம்.. ? உங்கள் திசாபுத்தி லாபத்தை தரும்படி இருக்கிறதா..? உங்கள் நட்சத்திரப்படி எப்போதெல்லாம் யோகமான நாட்கள் என தெளிவாக என்னிடம் தெரிந்து கொண்டு இறங்குங்கள் வெற்றி உங்களுக்கே..
 
 
 
THANK YOU :Mr.sathish
 
இதற்கான கட்டணம் ரூ 1500..
வங்கி விபரம்;.k.sathishkumar 20010801181  State bank of India ,bhavani  Ifsc;sbin0000971  
 sathishastro77@gmail.com எனும் மெயிலுக்கு பிறந்த தேதி,பெயர்,பிறந்த நேரம்,பிறந்த ஊர் விபரங்கள் எழுதி அனுப்பவும்..கட்டணம் அனுப்பியபின் அனுப்பினால் போதுமானது..

10 January 2016

உடலும் பஞ்சபூதங்களும்

அபானன்  என்னும் வாயு ஆசனவாயிலும் குஹ்யத்திலும்இடைமுழங்கால்வயிறுஅடிவயிறு,துடைகளின் சந்திதுடைகளில் சஞ்சரிக்கின்றது. இதனுடைய செயலாவது கழிவுகளை - அதாவது திடதிரவக் கழிவுகளைசிறு நீர் மற்றும் மலமாக வெளியேற்றுவதாகும்.
வியானன்  என்னும் வாயு கண்காதுகணுக்கால்கள் முதலியவற்றிலும்,நாக்கு மற்றும் மூக்கு முதலியவற்றிலும் சஞ்சரிக்கின்றது. இதனுடைய செயல் - பிராணாயாமம்கும்பகம்ரோகம்பூரகம் முதலியனவாம்.
சமானன்  என்னும் வாயுவானது நெருப்புடன் கூடியது. இது உடல் முழுவதும் வியாபித்து, 72,000 நாடித் துவாரங்களிலும்  சஞ்சரிக்கின்றது. இதன் செயலானது உண்ட உணவின் சாரத்தை அருந்திய பொருளின் சாரத்தை கிரஹித்து உடலுக்கு புஷ்டியைக் கொடுக்கிறது.
உதானன்  என்னும் வாயு  கால்களிலும் கைகளிலும் அங்கங்கள் சேரும் இடங்களிலும் சஞ்சரிக்கின்றது.  உடலைஎழுந்திரிக்கச் செய்தல்படுத்தல்,குதித்தல் முதலிய செயல்களைச் செய்யவைப்பதாம்.
 நாகன் முதலான  மற்ற ஐந்து வாயுக்கள் உபவாயுக்களாகும்.
 நாகன் என்னும் வாயு கழுத்திலிருந்து கொண்டு வாந்தியை உண்டு பண்ணும். கண்களினால் பார்க்கவும் செய்யும்.
கூர்மன் என்னும் வாயு கண்களிலிருந்து கண்களைத் திறக்கவும் மூடவும் செய்யும்.
கிருகரன் என்னும் வாயு பசி. தாகம்உண்டாக்குவதுடன் தும்மலை உண்டாக்கவும் செய்யும்.
தேவதத்தன் என்னும் வாயு கொட்டாவி விடுதலையும்சோம்பல் முறித்தல் செயலையும் செய்யவைக்கின்றது.
தனஞ்ஜயன் என்னும் வாயு சோகமடையச் செய்யும்.
கர்ப்பத்திலிருந்து சிசுவை வெளியில் தள்ளும்.
மரணமடைந்த சரீரத்தை விடாமல் சில மணி நேரங்கள் காத்து நிற்கும்.
அக்னியிடமிருந்து கண் என்னும் இந்திரியத்தையும்,  உருவத்தையும் வெண்மை சிவப்பு என்னும் நிறங்களையும்,  ஜீரணம் செய்தலையும்,பிரகாசத்தையும்பொறுமையின்மைகொடிய தன்மைகள்இளைத்தல் முதலியவையையும்சக்தியையும்  வெப்பத்தையும் பராக்ரமத்தையும் புத்திசாலித்தனத்தையும் கிரஹிக்கின்றது.
தண்ணீரிலிருந்து  நாக்கு என்னும் இந்திரியத்தையும்,  ரசத்தையும்,குளிர்ச்சியையும்அடர்ந்திருத்தலையும் திரவத் தன்மைகளையும்,வியர்வையையும்உடல் மென்மையாக இருக்கும் தன்மைகளையும் கிரஹிக்கின்றது.
பூமியிலிருந்து  மூக்கு என்னும் இந்திரியத்தையும்,  வாசனையையும்கனத்தையும் தைரியத்தையும் பருமனையும் அடைகின்றது.
தோல்இரத்தம்மாமிசம்மேதஸ் எனப்படும் வகை எலும்புமஞ்ஜை,சுக்கிலம் முதலானவை  தாதுக்கள் எனப்படும்.


மனிதனால் உண்ணப்பட்ட உணவு ஜடாக்னியால் ஜீரணிக்கப்பட்டு மூன்று விதமாக மாறுகின்றது.
1. ஸ்தூலமான பகுதி மலமாக மாறுகின்றது.
2. ஸ்தூலமும் சூட்சுமமும் இல்லாத இடைப்பட்ட பகுதி தசையாக மாறும்.
3. சூட்சுமமான பகுதி மனதின் அம்சமாகும்.  ஆகையால் தான் மனமானது அன்னமயமானது என கூறப்படுகின்றது.
தண்ணீரினுடைய ஸ்தூல பாகம் சிறுநீராகின்றது.  நடுப்பாகம் இரத்தத்தை அடைகின்றாதுநுண்ணிய பாகம் பிராணனை  அடைகின்றது.  ஆதலால்,பிராணன் ஜலஸ்வரூபம் எனப்படுகிறது.
அக்னியின் ஸ்தூல பாகம் எலும்புகள் ஆகும். மத்திய பாகம் மஞ்ஞை என்னும் தாது ஆகும். நுண்ணிய பாகம் வாக்கு என்று கூறப்படுகின்றது.
ஆதலால் உலகமானது அக்னிதண்ணீர் அன்னம் இவற்றின்  சொரூபமாக உள்ளது.


இரத்தத்திலிருந்து தசை உண்டாகின்றது.
தசையிலிருந்து கொழுப்பு உண்டாகின்றது.
கொழுப்பிலிருந்து எலும்புகள் உண்டாகின்றது.
எலும்பிலிருந்து மஞ்ஞை உண்டாகின்றது.
ரேதஸ் மஜ்ஜையிலிருந்து உண்டாகின்றது.
 நாடிகள் மாமிசச் சேர்க்கையால் உண்டாகின்றது.
வாதம்பித்தம்கபம் முதலானவை தாதுக்கள்  என்று சொல்லப்படுகின்றன.
 நம் உடலிலுள்ள தண்ணீர் 10 உள்ளங்கை அளவிலானது.
உணவின் சாரம் 9 உள்ளங்கை அளவு.
இரத்தம் 8 உள்ளங்கை அளவு.
மலம் 7 உள்ளங்கை அளவு.
கபம் 6 உள்ளங்கை அளவு.
பித்தம் 5 உள்ளங்கை அளவு.
மூத்திரம் ( சிறுநீர் ) 4 உள்ளங்கை அளவு.
தண்ணீர் 3 உள்ளங்கை அளவு.
வஸை என்னும் மாமிஸத் திரவம் 2 உள்ளங்கையளவு.
மஜ்ஜை 1 உள்ளங்கையளவு.
சுக்கிலம் 1/2 உள்ளங்கையளவு.  இந்த சுக்கிலமே பலமிக்கது.

உடலிலுள்ள எலும்புகளின் எண்ணிக்கை 360 ஆகும். இந்த எலும்புகள் 
1. ஜலஜங்கள் - தாமரை போன்ற வடிவுடனிருப்பவை.
2. கபாலங்கள் - தலையிலுள்ள எலும்புகள்
3. ருசகங்கள் - மாதுளை போன்றிருப்பவை
4.ஆஸ்தரணங்கள் - ஆஸனம் போன்ற எலும்புகள்.
5. நளகங்கள் - கணுக்கால் எலும்புகளாகும்.

சரீரத்திலுள்ள சந்தி எலும்புகள்  ( ஒன்றோடொன்று கூடுமிடத்தில் உள்ள எலும்புகள் ) எட்டு வகையாகும். 
1. ரௌரவங்கள் 2. பிரசரங்கள் 3. கந்த சேதனங்கள் 4. உலூகலங்கள் 5.சமுத்திரங்கள் 6. மண்டலங்கள் 7. சங்காவர்த்தங்கள் 8. வாமன குண்டலங்கள் என எட்டு வகையான சந்தி எலும்புகளின் மொத்த எண்ணிக்கை 210 ஆகும்.
ரோமங்கள் மூன்றரை கோடியாகும்.
தஸரதன் மகனே!  இராமச்சந்திர மூர்த்தியே! என் பிரியமானவனே!
 உடலின் சொரூபத்தினை உனக்கு விளக்கினேன். 
மூவுலகிலும் சாரமற்ற ஒன்று இந்த உடல்.
இதைவிட சாரமற்ற பொருள் வேறு எதுவும் கிடையாது.
அபிமானம் என்னும் கெட்ட அகங்காரத்தால்இந்த உடலை எடுத்தவர்கள்,இப்போது நற்கதி அடையத்தக்க சிறந்த உபாயங்களைத் தேடுவதில் புத்தியை வளர்த்துக் கொள்வதில்லை.
இராமனே!  சந்தேகம் என்னும் தீ உன்னுள் வளர்ந்து கொண்டிருக்கின்றது. அறிய வேண்டியிருப்பின்மனதினுள் வையாது எம்மிடம் கேட்பாயாக!
தன் உள்ளத்தினை உணர்ந்த இறைவனின் கூற்றினைக் கேட்ட இராமரும் கேட்க ஆரம்பித்தார்.


thank you:Sps ஆலோசனை மையம் 

‘வளையல் அணியும் பழக்கத்தை காரணமாகத் தான் ஏற்படுத்தியுள்ளார்கள் நம் முன்னோர்

‘‘வளையல் அணியும் பழக்கத்தை காரணமாகத் தான் ஏற்படுத்தியுள்ளார்கள் நம் முன்னோர்.!
‘‘வளையல்கள் ஒன்றோடு ஒன்று உரசும்போது ஏற்படும் ஒலிநமக்குள் பாசிட்டிவ் எண்ணங்களை உண்டு பண்ணிக்கொண்டே இருக்கும். நமது எண்ணங்கள் தெளிவு பெறும். மூளையின் செயல்பாடுகள் சுறுசுறுப்பாகும். நாடி நரம்பில் படும்படி அணியப்படும் வளையல்மேலும் கீழுமாக அசைவுறப் பெறுவதால் ஒரு சின்ன சூடு உண்டாகும். இது உடலின் ரத்த ஓட்டத்தையும்இதயத் துடிப்பையும் சீராக வைத்திருக்கும்.
இப்போது பல வடிவங்களில் வளையல்கள் கிடைக்கின்றன. ஆனால்,பாரம்பர்ய வட்ட வடிவ வளையல் அணிவதே சிறந்தது. வளையலின் சிறப்பம்சமேஅதன் வட்ட வடிவம். இதனால் எப்போதும் ஒரு சந்தோஷ மனநிலையிலேயே இருப்போம். தொடர்ந்து குலுங்கக் குலுங்க வளையல் அணிபவர்களுக்குரத்த அழுத்தம் வராது. சீரற்ற மாதவிடாய் ஏற்படாமலிருக்கும்.
தங்கம்வெள்ளிகண்ணாடி மற்றும் பித்தளை வளையல்கள் அணிவது பரிந்துரைக்கத்தக்கவை. பருமனான உடல்வாகு கொண்டவர்கள் செம்பு வளையல்கள் அணியலாம். உடலில் தேவையில்லாத கொழுப்பை கரைக்க அது உதவும். பித்தளை வளையல் கனமாக இருக்கும். அதனால்கைகளில் இருக்கும் பிரெஷர் பாயின்ட்டுக்கு நல்லது.
`சீ ஷெல்’ (சிப்பிகிளிஞ்சல்) வளையல் கள் அணிந்தால்,வாயுத்தொல்லையில் இருந்து  நிவாரணம் கிடைக்கும். பிளாஸ்டிக் வளையல்கள் அணிவதால் பயனேதும் இல்லை’’, கர்ப்பிணிப் பெண்கள் வளையல் அணிய வலியுறுத்தப்படுவதன் அறிவியல் காரணத்தையும்.
‘‘கர்ப்பம் தரித்த நாளில் இருந்தே பெண்கள் தங்க வளையல் அணிவது நல்லது. தங்கம்ஒரு சிறந்த ஆன்டிபயாடிக்காகச் செயல்படும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். வயிற்றில் இருக்கும் குழந்தையும் நல்ல மூளை செயல்பாட்டுடன் வளரும். பின்வளைகாப்பு நாளில் இருந்து கண்ணாடி வளையல் அணிந்துகொள்ள
லாம். குழந்தைக்கு அதன் ஒலி கேட்டுக் கொண்டே இருக்கும்,கர்ப்பப்பைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். குழந்தையின் மூளை சுறுசுறுப்புடன் இருக்கும்.  பிரசவத்துக்குப் பின் ஏதாவது ஒரு வகை வளையல் கண்டிப்பாக அணிய வேண்டும்’’, வளையல்களை எப்படி அணிய வேண்டும்.
‘‘மணிக்கட்டில் இருந்து கைமூட்டு வரைசின்னதில் இருந்து பெரிதாக வளையல் அணிவது சிறப்பு. தளர்வாக வளையல்கள் அணிய வேண்டாம். கையில் ஒட்டி உரசிக்கொண்டே இருப்பதுபோலசின்ன வளையல்களாக அணியலாம். ஃபேஷனுக்காக ஒரு வளையல் மட்டும் அணிவதுஒரு கையில் மட்டும் வளையல் அணிவதால் எல்லாம் பலன் எதுவும் கிடைக்காது. தமிழ்நாட்டில்மங்களகரமான நிறங்கள் என்பதால் பச்சை மற்றும் சிவப்பு நிற வளையல்களைத்தான் சடங்குதிருமணம்வளைகாப்பு என சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பயன்படுத்துவார்கள். குணம் பெற உதவும் சக்தி பச்சை நிறத்துக்கு உள்ளது என்பதால்தான் மருத்துவமனைகளில் பச்சை நிறத்தைப் பயன்படுத்தியிருப்பார்கள்.
ஊதா வளையல்கள்முடிவெடுக்கும் திறனை அதிகரிக்க செய்யும். பர்பிள் வளையல்கள்சுய சுதந்திர எண்ணத்தை அதிகரிக்கும். மஞ்சள் நிற வளையல்கள்பாசிட்டிவ் எண்ணத்தைக் கொடுக்கும். கறுப்பு நிற வளையல்கள்மன தைரியத்தை அதிகரிக்கும். தங்கம் மற்றும் வெள்ளி வளையல்கள்எதிர்மறை எண்ணங்கள் நம்மை அண்ட விடாது!’’.
இனிஆரோக்கியத்தை நினைத்தும் அணிவோம் வளையல்!

வளையல் தகவல்!
உலகிலேயே அதிகளவில் வளையல் உற்பத்தியாகும் இடம்… இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மொராதாபாத் நகரம்.
ஹைதராபாத்தில் உள்ள லாட் பஜார்வளையலுக்கு உலகப்புகழ் பெற்ற சந்தை… குறிப்பாகமுத்து வளையல்களுக்கு!
கண்ணாடி வளையல்கள் வட இந்தியாவில் பிரோஜாபாத் என்னுமிடத்தில் அதிகமாக தயாரிக்கப்படுகின்றன.

விளக்கேற்றும் பலன்கள்


காலை 6 மணி முதல் 7 மணி வரை வீட்டில் தீபம் ஏற்றுவது சர்வ மங்கள யோகம் தரும்.
பௌர்ணமியன்று விளக்கேற்றும் பலன்கள் :
ஒவ்வொரு மாதத்திலும் வரும் பௌர்ணமியன்று திருவிளக்கேற்றி வழிபடுவதன் மூலம் சிறப்பான பலன்கள் ஏற்படும் என்று முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு பலன்
நடைபெறும்.
சித்திரை மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் தான்யம் பெருமளவில் கிடைக்கும்.
வைகாசி மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் விவாக பேச்சுக்கள் முடிவாகி மனநிம்மதியைக் கொடுக்கும்.
ஆனி மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் புத்திர பாக்கியம் ஏற்படும்.
புரட்டாசி மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் பசுக்கள் விருத்தியாகும் .
ஐப்பசி மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் பசிப்பினிகள் நம்மை விட்டு அகலும் .
கார்த்திகை மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் ஐஸ்வரியம் பெருகும், நிலைத்த புகழ் ஏற்படும் .
மார்கழி மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் துன்பம் அகலும் .இன்பங்கள் வந்து சேரும் .
பங்குனி மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் தர்ம புண்ணிய சிந்தனைகள் அதிகரிக்கும்.
ஒரு முகம் ஏற்றினால் - நினைத்த செயல்கள் நடக்கும்
இரு முகம் ஏற்றினால் - குடும்பம் சிறக்கும்
மூன்று முகம் ஏற்றினால் - புத்திரதோஷம் நீங்கும்
நான்கு முகம் ஏற்றினால் - செல்வம் பெருகும்
ஐந்து முகம் ஏற்றினால் - நற்பலன்கள் உண்டாகும்
யாருக்கு என்ன எண்ணெய்
(விளக்கேற்றுவதில் ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு எண்ணெய் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.)
கணபதி - தேங்காய் எண்ணெய்
நாராயணன், சர்வதேவதைகள் - நல்லெண்ணெய்
மகாலட்சுமி - பசுநெய்
குலதெய்வம் - வேம்பு, இலுப்பை, பசுநெய் கலந்த எண்ணெய்
ருத்திரர் - இலுப்பெண்ணெய்
பராசக்தி - விளக்கெண்ணெய், வேம்பு, தேங்காய், இலுப்பை, பசுநெய் சேர்ந்த எண்ணெய்
எண்ணையும் அதன் பயன்களும்
விளக்கு எண்ணெய் - துன்பங்கள் விலகும்
பசுநெய் - சகல செல்வமும் பெருகும்.
நல்லெண்ணெய் - பீடை விலகும். எம பயம் அணுகாது
ஆமணக்கு எண்ணெய் - தாம்பத்யம் சிறக்கும்.
இலுப்பை எண்ணெய் - பூஜிப்பவருகும், பூஜிகப்படும்
இடத்துக்கும் விருத்தி உண்டு
கடலை எண்ணெய் மட்டும் பயன்படுத்தவே கூடாது
தீபம் ஏற்றும் திசைகள்
கிழக்கு நோக்கி தீபமேற்ற - துன்பங்கள் நீங்கி பீடை விலகும்
மேற்கு நோக்கி தீபமேற்ற - கடன் தொல்லை அகலும், கிரக தோஷம் கழியும்
தெற்கு நோக்கி தீபமேற்ற - பாவம், அபசகுனம், எமனுக்குப் பிரீதி.
வடக்கு நோக்கி தீபமேற்ற - திருமணத்தட ை, சுபகாரியத் தடை, வேலை வாய்ப்புத் தடை நீங்கி செல்வம் பெருகும். சர்வ மங்களம் உண்டாகும்.
விளக்கு துலக்க வேண்டிய நாட்கள் அதன் பயன்கள்
ஞாயிறு - கண் சம்பந்தமான நோய் தீரும்
திங்கள் - அலை பாயும் மனம் அடங்கி அமைதியுறும ்
வியாழன் - குரு பார்க்கக் கோடி நன்மை உண்டாகும். மனக்கவலை தீரும்
சனி - வாகன விபத்துகள் ஏற்படாமல் நம்மைக் காக்கும்
குத்துவிளக்கை ஞாயிறு, திங்கள், வியாழன், சனி ஆகிய நாட்களில் துலக்குவது மிகவும் நல்லது.
செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் துலக்குவதை விட இந்நாட்கள் அதிக பலன்களை தரக்கூடியவை.
இதற்கு ஒரு காரணமும் உண்டு.
திருவிளக்கில் திங்கள் நள்ளிரவு முதல் புதன் நள்ளிரவு வரையில் தனயட்சணி குடியிருக்கிறாள்.
எனவே செவ்வாய், புதன் கிழமைகளில் விளக்கை கழுவினால் இவள் வெளியேறிவிடுவாள் என்பதால் அந்நாட்களில் கழுவக்கூடாது
திரிகளும், பயன்களும்
குத்துவிளக்கிற்கு பயன்படுத்தும் எண்ணெயை பொறுத்து பலன்கள் வேறுபடுவதைப் போல, திரிகளாலும் பயன்கள் மாறுபடுகின்றன.
* பருத்தி பஞ்சினால் ஏற்றப்படும் திரியால் குடும்பம் சிறக்கும், நற்செயல்கள் நடக்கும். வீட்டில் மங்களம் நிலைக்கும்.
* வாழைத் தண்டின் நாரில் செய்த திரியால் முன்னோர் சாபம், தெய்வ குற்றங்கள் நீங்கி மனச் சாந்தி உண்டாகும். புத்திரபேறு உண்டாகும்.
* தாமரைத்தண்டு நூலால் செய்யப்பட்ட திரியால் முன்வினைப் பாவங்கள் நீங்கி, நிலைத்த செல்வம் கிடைக்கும்.
* வெள்ளை எருக்கம்பட்டை மூலம் செய்யப்படும் திரியால் செல்வம் பெருகும்.வறுமையைப் போக்கும். கடன் தொல்லை தீரும்.
* புதிய மஞ்சள் துணியால் செய்யப்பட்ட திரியால் அம்பாளின் அருளால் நோய்கள் குணமாகும்.
* சிவப்பு வண்ண துணியால் திரிக்கப்பட்ட திரி குழந்தையின்மை தொடர்பான தோஷம் நீங்கும்.
* வெள்ளை துணி திரியால் அனைத்து நற்பலன்களும் கிடைக்கும். இந்த துணியின் மீது பன்னீர் தெளித்து காயவைத்து பின்பு திரியாக்கி விளக்கேற்றுவது மிகவும் நல்லது.
வளம் பெருக்கும் அகல்:
கார்த்திகை மதம் பௌர்ணமி அன்று வானில் முழு நிலவு பிரகாசிக்கும் நேரத்தில் வீட்டு முற்றங்களில் தீபம் ஏற்றிவைத்தால் அந்த இல்லத்தில் ஐஸ்வரியம் பெருகும் என்பார்கள்.
இந்தநாளின் மற்ற விளக்குகளை விட அகல் விளக்கு ஏற்றுவதே உத்தமமானது என்கிறது ஆன்மீகம்.
அகல் என்பதற்கு விரிவடைதல் என்ற அர்த்தமும் உண்டு.
வாழ்க்கை அனைத்து வசதிகளுடன் விரிவடைந்து வளம் பெருக வேண்டும் என்பதற்காகவே இந்த வழிபாடு
விளக்கேற்றும் திசைகள்
1. வடக்குத்திசை - தொழில் அபிவிருத்தி. செல்வம் சேரும்.
2. கிழக்குத்திசை - சகல சம்பத்தும் கிடைக்கும்.
3. மேற்குத்திசை - கடன்கள் தீரும். நோய் அகலும்.
4. தெற்குத்திசை - இந்த திசையில் தீபம் ஏற்றக்கூடாது
விளக்கேற்றும் எண்ணெய் வகைகள்.
1. பசு நெய் - மோட்சம் கிடைக்கும். பாவங்கள் தீரும்.
மகாலட்சுமி அருள் கிடைக்கும்.
2. விளக்கெண்ணெய் - குடும்ப சுகம் சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.
3. இலுப்பையெண்ணெய் - குலதெய்வ அருள் கிடைக்கும். முன்னோர் சாபங்கள், முற்பிறவிப் பாவங்கள் நீங்கும்.
4. நல்லெண்ணெய் - கடன்கள் தீரும். நோய்கள் நீங்கும்.
5. தேங்காயெண்ணெய் - வினாயகரிற்கு மட்டும் தான் இதில் தீபமேற்ற வேண்டும். திருமணத்தடை நீங்கும்.
6. முக்கூட்டு எண்ணெய் - பசுநெய், விளக்கெண்ணெய், இலுப்பையெண்ணெய் மூன்றும் சமஅளவில் கலந்தது முக்கூட்டெண்ணெயாகும்.
இதில் தீபம் ஏற்றுவதால் தேவ ஆகர்~ணம் குடும்பத்தில் அமைதி உண்டாகும். செல்வம் சேரும்.
ஐந்தெண்ணெய் தயாரிக்கும் போது வேப்பெண்ணெய் சேர்க்கக்கூடாது.
பசுநெய்யுடன் நல்ணெ;ணெய் கலப்பதும் தவறானது.
எந்த காரணத்தைக் கொண்டும் கடலையெண்ணெய், சன் ஆயில் கொண்டு தீபம் ஏற்றக்கூடாது.
இதனால் தெய்வ சாபம், தரித்திரம் உண்டாகும்
....

thank you:https://www.facebook.com/ananthanarayanan.ramaswamy/posts/590944577641185