அபானன் என்னும் வாயு ஆசனவாயிலும் குஹ்யத்திலும், இடை, முழங்கால், வயிறு, அடிவயிறு,துடைகளின் சந்தி, துடைகளில் சஞ்சரிக்கின்றது. இதனுடைய செயலாவது கழிவுகளை - அதாவது திட, திரவக் கழிவுகளை, சிறு நீர் மற்றும் மலமாக வெளியேற்றுவதாகும்.
வியானன் என்னும் வாயு கண், காது, கணுக்கால்கள் முதலியவற்றிலும்,நாக்கு மற்றும் மூக்கு முதலியவற்றிலும் சஞ்சரிக்கின்றது. இதனுடைய செயல் - பிராணாயாமம், கும்பகம், ரோகம், பூரகம் முதலியனவாம்.
சமானன் என்னும் வாயுவானது நெருப்புடன் கூடியது. இது உடல் முழுவதும் வியாபித்து, 72,000 நாடித் துவாரங்களிலும் சஞ்சரிக்கின்றது. இதன் செயலானது உண்ட உணவின் சாரத்தை அருந்திய பொருளின் சாரத்தை கிரஹித்து உடலுக்கு புஷ்டியைக் கொடுக்கிறது.
உதானன் என்னும் வாயு கால்களிலும் கைகளிலும் அங்கங்கள் சேரும் இடங்களிலும் சஞ்சரிக்கின்றது. உடலை, எழுந்திரிக்கச் செய்தல், படுத்தல்,குதித்தல் முதலிய செயல்களைச் செய்யவைப்பதாம்.
நாகன் முதலான மற்ற ஐந்து வாயுக்கள் உபவாயுக்களாகும்.
நாகன் என்னும் வாயு கழுத்திலிருந்து கொண்டு வாந்தியை உண்டு பண்ணும். கண்களினால் பார்க்கவும் செய்யும்.
கூர்மன் என்னும் வாயு கண்களிலிருந்து கண்களைத் திறக்கவும் மூடவும் செய்யும்.
கிருகரன் என்னும் வாயு பசி. தாகம், உண்டாக்குவதுடன் தும்மலை உண்டாக்கவும் செய்யும்.
தேவதத்தன் என்னும் வாயு கொட்டாவி விடுதலையும், சோம்பல் முறித்தல் செயலையும் செய்யவைக்கின்றது.
தனஞ்ஜயன் என்னும் வாயு சோகமடையச் செய்யும்.
கர்ப்பத்திலிருந்து சிசுவை வெளியில் தள்ளும்.
மரணமடைந்த சரீரத்தை விடாமல் சில மணி நேரங்கள் காத்து நிற்கும்.
அக்னியிடமிருந்து கண் என்னும் இந்திரியத்தையும், உருவத்தையும் , வெண்மை சிவப்பு என்னும் நிறங்களையும், ஜீரணம் செய்தலையும்,பிரகாசத்தையும், பொறுமையின்மை, கொடிய தன்மைகள், இளைத்தல் முதலியவையையும், சக்தியையும் வெப்பத்தையும் பராக்ரமத்தையும் புத்திசாலித்தனத்தையும் கிரஹிக்கின்றது.
தண்ணீரிலிருந்து நாக்கு என்னும் இந்திரியத்தையும், ரசத்தையும்,குளிர்ச்சியையும், அடர்ந்திருத்தலையும் திரவத் தன்மைகளையும்,வியர்வையையும், உடல் மென்மையாக இருக்கும் தன்மைகளையும் கிரஹிக்கின்றது.
பூமியிலிருந்து மூக்கு என்னும் இந்திரியத்தையும், வாசனையையும், கனத்தையும் தைரியத்தையும் பருமனையும் அடைகின்றது.
தோல், இரத்தம், மாமிசம், மேதஸ் எனப்படும் வகை எலும்பு, மஞ்ஜை,சுக்கிலம் முதலானவை தாதுக்கள் எனப்படும்.
மனிதனால் உண்ணப்பட்ட உணவு ஜடாக்னியால் ஜீரணிக்கப்பட்டு மூன்று விதமாக மாறுகின்றது.
1. ஸ்தூலமான பகுதி மலமாக மாறுகின்றது.
2. ஸ்தூலமும் சூட்சுமமும் இல்லாத இடைப்பட்ட பகுதி தசையாக மாறும்.
3. சூட்சுமமான பகுதி மனதின் அம்சமாகும். ஆகையால் தான் மனமானது அன்னமயமானது என கூறப்படுகின்றது.
தண்ணீரினுடைய ஸ்தூல பாகம் சிறுநீராகின்றது. நடுப்பாகம் இரத்தத்தை அடைகின்றாது; நுண்ணிய பாகம் பிராணனை அடைகின்றது. ஆதலால்,பிராணன் ஜலஸ்வரூபம் எனப்படுகிறது.
அக்னியின் ஸ்தூல பாகம் எலும்புகள் ஆகும். மத்திய பாகம் மஞ்ஞை என்னும் தாது ஆகும். நுண்ணிய பாகம் வாக்கு என்று கூறப்படுகின்றது.
ஆதலால் உலகமானது அக்னி, தண்ணீர் , அன்னம் இவற்றின் சொரூபமாக உள்ளது.
இரத்தத்திலிருந்து தசை உண்டாகின்றது.
தசையிலிருந்து கொழுப்பு உண்டாகின்றது.
கொழுப்பிலிருந்து எலும்புகள் உண்டாகின்றது.
எலும்பிலிருந்து மஞ்ஞை உண்டாகின்றது.
ரேதஸ் மஜ்ஜையிலிருந்து உண்டாகின்றது.
நாடிகள் மாமிசச் சேர்க்கையால் உண்டாகின்றது.
வாதம், பித்தம், கபம் முதலானவை தாதுக்கள் என்று சொல்லப்படுகின்றன.
நம் உடலிலுள்ள தண்ணீர் 10 உள்ளங்கை அளவிலானது.
உணவின் சாரம் 9 உள்ளங்கை அளவு.
இரத்தம் 8 உள்ளங்கை அளவு.
மலம் 7 உள்ளங்கை அளவு.
கபம் 6 உள்ளங்கை அளவு.
பித்தம் 5 உள்ளங்கை அளவு.
மூத்திரம் ( சிறுநீர் ) 4 உள்ளங்கை அளவு.
தண்ணீர் 3 உள்ளங்கை அளவு.
வஸை என்னும் மாமிஸத் திரவம் 2 உள்ளங்கையளவு.
மஜ்ஜை 1 உள்ளங்கையளவு.
சுக்கிலம் 1/2 உள்ளங்கையளவு. இந்த சுக்கிலமே பலமிக்கது.
உடலிலுள்ள எலும்புகளின் எண்ணிக்கை 360 ஆகும். இந்த எலும்புகள்
1. ஜலஜங்கள் - தாமரை போன்ற வடிவுடனிருப்பவை.
2. கபாலங்கள் - தலையிலுள்ள எலும்புகள்
3. ருசகங்கள் - மாதுளை போன்றிருப்பவை
4.ஆஸ்தரணங்கள் - ஆஸனம் போன்ற எலும்புகள்.
5. நளகங்கள் - கணுக்கால் எலும்புகளாகும்.
சரீரத்திலுள்ள சந்தி எலும்புகள் ( ஒன்றோடொன்று கூடுமிடத்தில் உள்ள எலும்புகள் ) எட்டு வகையாகும்.
1. ரௌரவங்கள் 2. பிரசரங்கள் 3. கந்த சேதனங்கள் 4. உலூகலங்கள் 5.சமுத்திரங்கள் 6. மண்டலங்கள் 7. சங்காவர்த்தங்கள் 8. வாமன குண்டலங்கள் என எட்டு வகையான சந்தி எலும்புகளின் மொத்த எண்ணிக்கை 210 ஆகும்.
ரோமங்கள் மூன்றரை கோடியாகும்.
தஸரதன் மகனே! இராமச்சந்திர மூர்த்தியே! என் பிரியமானவனே!
உடலின் சொரூபத்தினை உனக்கு விளக்கினேன்.
மூவுலகிலும் சாரமற்ற ஒன்று இந்த உடல்.
இதைவிட சாரமற்ற பொருள் வேறு எதுவும் கிடையாது.
அபிமானம் என்னும் கெட்ட அகங்காரத்தால், இந்த உடலை எடுத்தவர்கள்,இப்போது நற்கதி அடையத்தக்க சிறந்த உபாயங்களைத் தேடுவதில் புத்தியை வளர்த்துக் கொள்வதில்லை.
இராமனே! சந்தேகம் என்னும் தீ உன்னுள் வளர்ந்து கொண்டிருக்கின்றது. அறிய வேண்டியிருப்பின், மனதினுள் வையாது எம்மிடம் கேட்பாயாக!
தன் உள்ளத்தினை உணர்ந்த இறைவனின் கூற்றினைக் கேட்ட இராமரும் கேட்க ஆரம்பித்தார்.
thank you:Sps ஆலோசனை மையம்
No comments:
Post a Comment