பூமி முழுவதும் பல வகையான அதிசயங்கள் காணப்படுகின்றன. அதிசயங்களை விட அமானுஷ்யங்களே அதிகம் என்று கூறப்படுகின்றது.
அந்த வகையில் விடை கொடுக்க முடியாத சில மர்மங்கள் பல பூமி முழுவதும் விரவிக் கிடக்கின்றன. அவ்வாறானதொரு மர்மமே அமெரிக்க நாட்டின் கலிபோர்னியாவில் உள்ள மரண பள்ளத்தாக்கு எனப்படும் இடமாகும்.
இந்தப் பள்ளத்தாக்கு மிகக்கடினமான நிலப்பரப்பை கொண்டதாக கூறப்படுகின்றது. ஆனாலும், இந்த இடத்தில் கற்கள் தானாக ஒரு இடம் விட்டு இன்னொரு இடத்திற்கு நகர்ந்து செல்கின்றதாம்.
இந்த சம்பவம் நம்ப முடியாத ஒன்றுதான் என்றாலும், உண்மை என்று கூறப்படுகின்றது. ஒரு கல் நகர்ந்தால் ஆச்சரியம் இல்லை. குறித்த பள்ளத்தாக்கில் நூற்றுக்கணக்கான கற்கள் தனது போக்கிற்கு ஏற்ப இடம் பெயர்ந்து கொண்டே இருக்கின்றன. அதுவும் வெவ்வேறு திசையில் நகர்வதாக கூறப்படுகின்றது.
இதற்கான விடையை கண்டுப்பிடிக்க முடியாமல் விஞ்ஞானிகள் ஊகங்களின் அடிப்படையிலேயே இதுவரையில் கருத்து தெரிவிக்கின்றனர்.
குறித்த பள்ளத்தாக்கில் அமானுஷ்ய சக்திகள் நடமாடுவதாகவும், அந்தவகை அமானுஷ்ய சக்திகளால், இந்தச் செயல் நடைபெறுகின்றது எனவும், ஒரு சிலர் தெரிவித்தாலும் உண்மைத் தன்மையினை கண்டுபிடிக்கவில்லை என்று கூறப்படுகின்றது.
1948ம் ஆண்டே இந்த பள்ளத்தாக்கில் பாறைகள் தானாகவே அசைந்து செல்வதை முதன்முறையாக கண்டுபிடித்தனர். அப்போது, முதல் இது மர்மமே. அண்மைக்காலம் வரை இது தொடர்பிலான ஆய்வுகள் நடைபெற்ற வண்ணமே இருக்கின்றன.
அதுமட்டுமல்ல, 300 மற்றும் 400 கிலோ கிராம்களுக்கு அதிகமான நிறை கொண்ட பாறைகள் கூட இந்தப் பள்ளத்தாக்கில் தானாக நடை பவனி செய்வது ஆச்சரியமான விஷயமாக கூறப்படுகின்றது.
No comments:
Post a Comment