தினமும் படிக்க வேண்டிய தெய்வ சுலோகங்கள்!
காரியங்களில் வெற்றி அருளும் ஸ்தோத்திரம்
ஜயா த்வம் விஜயா சைவ ஸ்ங்க்ராமே ச ஜயப்ரதா
மமாபி விஜயம் தேஹி வரதா த்வம் ச ஸாம்ப்ரதம்
கருத்து: ஜயம், விஜயம் ஆகியவற்றின் சொரூபமாக இருந்து கொண்டு, யுத்தத்தில் ஜயத்தைக் கொடுப்பவளாக விளங்கும் தாயே, வரங்களை வாரிக் கொடுப்பவளாகிய நீ இப்போது எனக்கு வெற்றியை நல்கவேண்டும்.
மகாபாரதம் விராட பர்வத்தில், தருமபுத்திரர் துதிப்பதாக வரும் துர்கா ஸ்தோத்திரப் பாடல்களில் ஒன்று இப்பாடல். புதிய காரியங்கள் துவங்குவோர் இந்த ஸ்தோத்திரத்தைப் பாடி தேவியை வழிபட்டால், எடுத்த காரியத்தில் வெற்றிகள் கிட்டும்.
கல்யாணம் கைகூட…
காத்யாயனி! மஹாமாயே! மஹாயோகின்யதீஸ்வரி!
நந்தகோபஸுதம் தேவி! பதிம் மே குரு தே நம:
கருத்து: கத கோத்திரத்தில் பிறந்தவளும், மாயைகளுக்கெல்லாம் இருப்பிடமும், மகத்தான யோக ஸித்திகளை அடைந்தவளுமான ஹே தேவீ ! எனக்கு நந்தகோபருடைய புத்திரரான கிருஷ்ணனைக் கணவனாக அடைய அருள்வாய்! உன்னையே நமஸ்கரிக்கிறேன்.
நவகிரக தோஷங்களும் நீங்கிட…
2016 ஆங்கிலப் புத்தாண்டு, அங்காரகனாகிய செவ்வாயின் ஆதிக்க எண்ணான 9ஐ கூட்டு எண்ணாகக் கொண்டு திகழும். ஆக, புத்தாண்டில் செவ்வாயின் அனுக்கிரகம் எல்லோருக்கும் தேவை. செவ்வாயின் அதிதேவதை முருகப்பெருமான். எனவே, அனுதினமும் ஆறுமுகக் கடவுளை வழிபட்டு வந்தால், செவ்வாயின் பாதிப்பில் இருந்து விடுபடுவதோடு, அவரின் பரிபூரண திருவருளைப் பெற்றுச் சிறக்கலாம். அந்த வகையில், அருணகிரி நாதர் அருளிய கீழ்க்காணும் பாடலைப் படித்து, முருகனுக்கு சர்க்கரைப் பொங்கலும், பஞ்சாமிர்தமும் படைத்து வழிபடுவதால், செவ்வாய் மட்டுமின்றி நவகிரகங்களும் நமக்கு நன்மையே பயக்கும்.
நாளென் செய்யும் வினைதானென் செய்யுமெனை நலியவந்த
கோளென் செய்யும் கொடுங்கூற்றென் செய்யும் குமரேசரிரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்குமுன் னேவந்து தோன்றிடினே!
நவகிரக தோஷங்களும் நீங்கிட…
வேயுறு தோளி பங்கன் விடமுண்டகண்டன்
மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழம் வெள்ளி
சனிபாம் பிரண்டு முடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே
திருஞானசம்பந்தர் அருளிய இந்தப் பதிகத்தை அனுதினமும் படித்து தென்னாடுடைய சிவபெருமானை மனதாரத் துதித்து வழிபட்டு வந்தால், நவ கோள்களாலும் உண்டாகும் பாதிப்புகள் நீங்கும்; வாழ்க்கை செழிக்கும்.
thank you :
No comments:
Post a Comment