For Read Your Language click Translate

01 November 2014

மரத்தடி பிள்ளையாரின் வழிபாட்டு பலன்கள்

மரத்தடி பிள்ளையாரின் வழிபாட்டு பலன்கள்

வில்வமரப் பிள்ளையார் - தெற்கு நோக்கி அமர்ந்திருக்கும் வில்வமர பிள்ளையாரை சித்திரை நட்சத்திரத்தன்று வணங்கி இயன்ற வரை மளிகைப் பொருட்களை இல்லாதவர்க்கு தானம் செய்ய பிரிந்த தம்பதியர் ஒன்று கூடுவர்.
அரசமரப் பிள்ளையார் - மேற்கு நோக்கி உள்ள அரசமர பிள்ளையாரை பூச நட்சத்திரத்தன்று அன்னாபிஷேகம் செய்து வழிபட விளைச்சல் பெருகிடும். எதிர்பார்த்த பண உதவிகள் கிடைத்திடும். பணக் கஷ்டங்கள் தீர்ந்திடும்.

ஆலமரப் பிள்ளையார் - வடக்கு நோக்கிய ஆலமரப் பிள்ளையாரை மக நட்சத்திரத்தன்று ஐந்து வகையான சாதம் கொண்டு வழிபட்டு அவற்ரை அன்னதானம் செய்தால் தீராத கடுமையான நோய்கள் அனைத்தும் தீர்ந்திடும்.

வேப்பமரப் பிள்ளையார் - கிழக்கு முகம் காட்டி அருளும் வேப்பமரப் பிள்ளையாரை உத்திரட்டாதி நட்சத்திரத்தன்று ஐந்து வகையான எண்ணெய் தீபம் கொண்டு ( பஞ்ச தீபம் ) வழிபட்டால் மனதுக்கு ஏற்ற திருமணம் அமைந்திடும்.

மாமரப் பிள்ளையார் - திருக்கேட்டை நட்சத்திரத்தன்று மாமாரப் பிள்ளையாரை விபூதி காப்பிட்டு வணங்கி சுமங்கலி பெண்களுக்கு தானம் செய்தால் பகைவர்கள் விலகிடுவர். வியாபாரம் தடைகள் நீங்கி செழிப்படையும்.

புன்னைமரப் பிள்ளையார் - இவரை ஆயில்ய நட்சத்திரத்தன்று இளநீர் அபிஷேகம் செய்து, வஸ்திரங்கள் சார்த்தி அதனை ஏழை நோயாளிகளுக்கு தானம் செய்தால் கணவன் மனைவிக்கிடையே இருக்கும் மனக் கசப்பு, கருத்து வேற்றுமைகள் அனைத்தும் நீங்கி தம்பதியர் ஒற்றுமை பெருகும். தம்பதியரின் தாமபத்ய உறவு சிறப்படையும்.

மகிழமரப் பிள்ளையார் - அனுஷ நட்சத்திரத்தன்று மாதுளம் பழம் கொண்டு அபிஷேகம் செய்தால் அண்டை அயலாரின் பொறாமைகள் நீங்கும். பில்லி, சூனிய, செய்வினைகள் அகன்றிடும். பொறாமையால் பிறர் கொண்ட கண் திருஷ்டி விலகிடும். வெளியூரில் வசிக்கும் சொந்த, பந்தங்கள் சுகம் பெறுவர்.

வன்னிமரப் பிள்ளையார் - மிகவும் அரிதாக காணப்படும் இந்த பிள்ளையாரை, அவிட்ட நட்சத்திரத்தன்று நெல் பொரி கொண்டு அர்ச்சித்து அபிஷேக வழிபாடுகள் செய்தால் தடைபட்டு கொண்டிருக்கும் திருமணம் இனிதே நடைபறும். குடும்பத்தில் ஒற்றுமையும், மகிழ்ச்சியும் நிலவும். பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று சேர்வர்.வினைகள் அனைத்தும் தீர்க்கும் விநாயகர் வழிபாடு

வில்வமரப் பிள்ளையார் - தெற்கு நோக்கி அமர்ந்திருக்கும் வில்வமர பிள்ளையாரை சித்திரை நட்சத்திரத்தன்று வணங்கி இயன்ற வரை மளிகை...ப் பொருட்களை இல்லாதவர்க்கு தானம் செய்ய பிரிந்த தம்பதியர் ஒன்று கூடுவர்.
அரசமரப் பிள்ளையார் - மேற்கு நோக்கி உள்ள அரசமர பிள்ளையாரை பூச நட்சத்திரத்தன்று அன்னாபிஷேகம் செய்து வழிபட விளைச்சல் பெருகிடும். எதிர்பார்த்த பண உதவிகள் கிடைத்திடும். பணக் கஷ்டங்கள் தீர்ந்திடும்.

ஆலமரப் பிள்ளையார் - வடக்கு நோக்கிய ஆலமரப் பிள்ளையாரை மக நட்சத்திரத்தன்று ஐந்து வகையான சாதம் கொண்டு வழிபட்டு அவற்ரை அன்னதானம் செய்தால் தீராத கடுமையான நோய்கள் அனைத்தும் தீர்ந்திடும்.
வேப்பமரப் பிள்ளையார் - கிழக்கு முகம் காட்டி அருளும் வேப்பமரப் பிள்ளையாரை உத்திரட்டாதி நட்சத்திரத்தன்று ஐந்து வகையான எண்ணெய் தீபம் கொண்டு ( பஞ்ச தீபம் ) வழிபட்டால் மனதுக்கு ஏற்ற திருமணம் அமைந்திடும்.
மாமரப் பிள்ளையார் - திருக்கேட்டை நட்சத்திரத்தன்று மாமாரப் பிள்ளையாரை விபூதி காப்பிட்டு வணங்கி சுமங்கலி பெண்களுக்கு தானம் செய்தால் பகைவர்கள் விலகிடுவர். வியாபாரம் தடைகள் நீங்கி செழிப்படையும்.
புன்னைமரப் பிள்ளையார் - இவரை ஆயில்ய நட்சத்திரத்தன்று இளநீர் அபிஷேகம் செய்து, வஸ்திரங்கள் சார்த்தி அதனை ஏழை நோயாளிகளுக்கு தானம் செய்தால் கணவன் மனைவிக்கிடையே இருக்கும் மனக் கசப்பு, கருத்து வேற்றுமைகள் அனைத்தும் நீங்கி தம்பதியர் ஒற்றுமை பெருகும். தம்பதியரின் தாமபத்ய உறவு சிறப்படையும்.
மகிழமரப் பிள்ளையார் - அனுஷ நட்சத்திரத்தன்று மாதுளம் பழம் கொண்டு அபிஷேகம் செய்தால் அண்டை அயலாரின் பொறாமைகள் நீங்கும். பில்லி, சூனிய, செய்வினைகள் அகன்றிடும். பொறாமையால் பிறர் கொண்ட கண் திருஷ்டி விலகிடும். வெளியூரில் வசிக்கும் சொந்த, பந்தங்கள் சுகம் பெறுவர்.
வன்னிமரப் பிள்ளையார் - மிகவும் அரிதாக காணப்படும் இந்த பிள்ளையாரை, அவிட்ட நட்சத்திரத்தன்று நெல் பொரி கொண்டு அர்ச்சித்து அபிஷேக வழிபாடுகள் செய்தால் தடைபட்டு கொண்டிருக்கும் திருமணம் இனிதே நடைபறும். குடும்பத்தில் ஒற்றுமையும், மகிழ்ச்சியும் நிலவும். பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று சேர்வர்.வினைகள் அனைத்தும் தீர்க்கும் விநாயகர் வழிபாடு

No comments:

Post a Comment