For Read Your Language click Translate

21 September 2014

பாம்பு கனவில் வந்தால் எதிர்காலத்தில் என்ன நடக்கும்::



மனிதர்களின் நிறைவேறாத ஆசைகளின் ஒரு பகுதியே கனவுகளாக வெளிப்படுகிறது. பாம்புகளை அடிக்கடி கனவில் பார்ப்பது ஒரு வகையில் நல்லது என்றே சொல்லப்படுகிறது.....

1.ஒற்றை நல்ல பாம்பைக் கனவில் கண்டால் விரோதிகளால் தொல்லை உண்டாகும்.
2.இரட்டைப் பாம்புகளை கண்டால் நன்மை உண்டாகும்.
3.பாம்பை கொல்வதாக கனவு கண்டால் விரோதிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.
4. பாம்பு கடித்து விட்டதாக கனவு கண்டால் தனலாபம் உண்டாகும்.
5. பாம்பு விரட்டுவதாக கனவு கண்டால் வறுமை உண்டாகும்.
6. காலைச்சுற்றி பாம்பு பின்னிக்கொள்வது போல் கனவு கண்டால் சனி பிடிக்கப் போகிறது என்று பொருள்.
7. பாம்பு கடித்து ரத்தம் வருவதாக கனவு கண்டால் பிடித்த சனி நீங்கிவிட்டது என்று அர்த்தம்.
8. கழுத்தில் மாலையாக பாம்பு விழுவதாக கனவு கண்டால் பணக்காரன் ஆகலாம்.இதேபோன்று கனவில் கரும்பூனையை(முற்றிலும் கருப்பாக இருக்கும் பூனை) பார்ப்பதும் நல்ல சகுனமாக கருதப்படுகிறது. கனவில் மட்டுமின்றி சாதாரணமாகவே அதுபோன்ற பூனையைப் பார்ப்பது நல்லதாம்....!

No comments:

Post a Comment