For Read Your Language click Translate

29 December 2015

காரியங்களில் வெற்றி அருளும் ஸ்தோத்திரம்

தினமும் படிக்க வேண்டிய தெய்வ சுலோகங்கள்!

காரியங்களில் வெற்றி அருளும்  ஸ்தோத்திரம்
ஜயா த்வம் விஜயா சைவ ஸ்ங்க்ராமே ச ஜயப்ரதா
மமாபி விஜயம் தேஹி வரதா த்வம் ச ஸாம்ப்ரதம்
கருத்து: ஜயம், விஜயம் ஆகியவற்றின் சொரூபமாக இருந்து கொண்டு, யுத்தத்தில் ஜயத்தைக் கொடுப்பவளாக விளங்கும் தாயே, வரங்களை வாரிக் கொடுப்பவளாகிய நீ இப்போது எனக்கு வெற்றியை நல்கவேண்டும்.
மகாபாரதம் விராட பர்வத்தில், தருமபுத்திரர் துதிப்பதாக வரும் துர்கா ஸ்தோத்திரப் பாடல்களில் ஒன்று இப்பாடல். புதிய காரியங்கள் துவங்குவோர் இந்த ஸ்தோத்திரத்தைப் பாடி தேவியை வழிபட்டால், எடுத்த காரியத்தில் வெற்றிகள் கிட்டும்.
கல்யாணம் கைகூட…
காத்யாயனி! மஹாமாயே! மஹாயோகின்யதீஸ்வரி!
நந்தகோபஸுதம் தேவி! பதிம் மே குரு தே நம:
கருத்து: கத கோத்திரத்தில் பிறந்தவளும், மாயைகளுக்கெல்லாம் இருப்பிடமும், மகத்தான யோக ஸித்திகளை அடைந்தவளுமான ஹே தேவீ ! எனக்கு நந்தகோபருடைய புத்திரரான கிருஷ்ணனைக் கணவனாக அடைய அருள்வாய்! உன்னையே நமஸ்கரிக்கிறேன்.
நவகிரக தோஷங்களும் நீங்கிட…
2016 ஆங்கிலப் புத்தாண்டு, அங்காரகனாகிய செவ்வாயின் ஆதிக்க எண்ணான 9ஐ கூட்டு எண்ணாகக் கொண்டு திகழும். ஆக, புத்தாண்டில் செவ்வாயின் அனுக்கிரகம் எல்லோருக்கும் தேவை. செவ்வாயின் அதிதேவதை முருகப்பெருமான்.  எனவே, அனுதினமும் ஆறுமுகக் கடவுளை வழிபட்டு வந்தால், செவ்வாயின் பாதிப்பில் இருந்து விடுபடுவதோடு, அவரின் பரிபூரண திருவருளைப் பெற்றுச் சிறக்கலாம். அந்த வகையில், அருணகிரி நாதர் அருளிய கீழ்க்காணும் பாடலைப் படித்து, முருகனுக்கு சர்க்கரைப் பொங்கலும், பஞ்சாமிர்தமும் படைத்து வழிபடுவதால், செவ்வாய்  மட்டுமின்றி நவகிரகங்களும் நமக்கு நன்மையே பயக்கும்.
நாளென் செய்யும் வினைதானென் செய்யுமெனை நலியவந்த
கோளென் செய்யும் கொடுங்கூற்றென் செய்யும் குமரேசரிரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்குமுன் னேவந்து தோன்றிடினே!
நவகிரக தோஷங்களும் நீங்கிட…
வேயுறு தோளி பங்கன் விடமுண்டகண்டன்
   மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென்
   உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழம் வெள்ளி
   சனிபாம் பிரண்டு முடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
   அடியா ரவர்க்கு மிகவே
திருஞானசம்பந்தர் அருளிய இந்தப் பதிகத்தை அனுதினமும் படித்து தென்னாடுடைய சிவபெருமானை மனதாரத் துதித்து வழிபட்டு வந்தால், நவ கோள்களாலும் உண்டாகும் பாதிப்புகள் நீங்கும்; வாழ்க்கை செழிக்கும்.

thank you :  vayal 

20 November 2015

அற்புத பரிகார ஸ்தலங்கள்

தோஷங்களை விலக்கும் அற்புத பரிகார ஸ்தலங்கள்




அடுத்த முறை, நீங்கள் எப்போது கும்ப கோணம் சென்றாலும், மிக முக்கியமான , கும்பகோணம் நகரைச் சுற்றியுள்ள ஸ்தலங்களை தரிசித்து வாருங்கள். ரத்தினச் சுருக்கமாக , இந்த ஆலயங்களுக்கு சென்று வருவதால் ஏற்படும் முக்கிய பலன்களை கொடுத்துள்ளேன்.

சில ஆலயங்களைப் பற்றி அந்த வரிகளை படிக்கும்போதே , உங்கள் உள்ளுணர்வு அந்த கோவிலுக்கு போக வேண்டும் என்று சொல்லும். அந்த ஆலயத்திற்கு அவசியம் சென்று வாருங்கள். உங்கள் பூர்வ ஜென்ம , கர்ம வினைகள் நிச்சயம் அகலும்.

எல்லா ஆலயங்களுக்கும் செல்ல முடியவில்லை என்றாலும், கலக்கம் வேண்டாம். அதே நேரத்தில் , உங்களால் மிகத் திருப்தியாக பூஜை , அபிசேகம், அலங்காரம் செய்ய முடியவில்லையே என்று கூட மனக்கலக்கம் வேண்டாம். ஐயா , ஒரு அர்ச்சனை கூட செய்ய வேண்டாம்.. ஒரே ஒரு விஷயம் மட்டும் தவறாமல் செய்யுங்கள்...

மூலவருக்கு முன்பாக, அவரைப் பார்த்தபடியோ , அல்லது உங்களால் முடிந்தவரை அருகிலோ - அல்லது மற்றவருக்கும் தொந்தரவு இல்லா வண்ணம் - ஒரு மணி நேரம் வரை வெறுமனே அமர்ந்து , மனத்தால் இறைவனிடம் உங்கள் குறைகளை தீர்க்க வேண்டி மன்றாடுங்கள். முடிந்தால் மனதுக்குள் - ஓம் சிவ சிவ ஓம் மந்திரம் ஜெபிக்கலாம், அல்லது காயத்ரி மந்திரம் ஜெபிக்கலாம். ஸ்ரீ ருத்ரம் ஜெபிக்கலாம்.

சில சமயங்களில் ஒரு மணி நேரம் ஒதுக்க முடியாத சூழ்நிலை இருந்தால் , குறைந்த பட்சம் 12 நிமிடங்களாவது , அமர்ந்து வாருங்கள். இறைவனின் சிருஷ்டியில் எல்லா நாளும், நேரமும் புனிதமானதே. ஒரு சில மணித்துளிகள் மட்டும் , பலப்பல காரணங்களால் - மிக சக்திவாய்ந்த தருணங்கள் ஆகி விடுகின்றன.

இதில் இன்னொரு சூட்சுமம் உள்ளது. உங்களுக்கு நடக்கும் தசை / புக்தி என்னவென்று பாருங்கள். அதற்கேற்ப உகந்த நேரத்தில் - நீங்கள் அந்த தெய்வத்தின் முன் நிற்க, உங்களுக்கு ஏற்படும் தடைகள் அனைத்தும் , படிக்கற்கள் ஆகிவிடும்.
நல்ல விஷயங்களை , நீங்கள் அறிந்து உணந்த விஷயங்களை - உங்கள் நண்பர்களுக்கும், குடும்பத்திலும், உங்கள் குழந்தைகளுக்கும் தக்க நேரத்தில் எடுத்து சொல்லுங்கள். 

மன நோய் அகற்றும் " திருவிடை மருதூர் "
சிவ பெருமான் தன்னை தானே பூஜித்து, வழிபட்ட லிங்கமானதால் இவர் " மகாலிங்கமானார்". இவரை தரிசிப்போர் மன நோய் நீங்கப் பெறுவர். நீண்ட நாட்கள் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், இத் தல நாயகனை வழிபட்டு வந்தால் குணம் அடைவர். மன நோய் கொண்டுள்ளோர், இத் திருக் கோயிலின் வெளிச் சுற்றை வலம் வந்தால் குணம் பெறுவர். கும்பகோணத்தில் இருந்து மாயவரம் செல்லும் சாலையில் சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது இத் திருத் தலம்.



புற்றுநோய் தீர்க்கும் " திருந்துதேவன் குடி அருமருந்தம்மை " 
புற்று நோய்தீர்க்கும் தலம் திருந்துதேவன்குடி கற்கடேஸ்வரர் திருக்கோவில்.
கற்கடேஸ்வரர் வீற்றிருக்கும் " திருந்துதேவன்குடியின் " நாயகி, தீரா நோய்கள் தீர்க்கும் அருமருந்தம்மை. இங்கு, அம்மனுக்கு சார்த்தப்படும் எண்ணெய், பின்னர் வேண்டுவோர்க்கு, பிரசாதமாய் வழங்கப்படுகிறது. இது, சர்வ வியாதிகளுக்குமான ஒரு நிவாரணி. அதிலும், மிக குறிப்பாக, புற்று நோய் தீர்க்கும் மருந்தாக கருதப்படுகிறது. நோய் தீர்க்கும் தலம் இது என்பதை உணர்த்தும் வண்ணம், வைத்தியர் ஒருவரின் சிற்பம் ஒன்று கோயிலின் வெளிப்புறம், அவர் மருந்து தயாரிப்பதைப் போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. 

கடன் தொல்லைகள் தீர்க்கும் " திருச்சேறை ருண விமோச்சனர் "

கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் திருவாரூர் வழியில் அமைந்துள்ளது " திருச்சேறை உடையார் கோவில் ". இங்கு தனி சந்நதியில் " ருணவிமோச்சனராய் " அருள்பாளிக்கிறார் பரமேஸ்வரன். தொடர்ந்து 11 திங்கட்கிழமைகள் அர்ச்சனை செய்து, 11 வது வாரம் அபிஷேக ஆராதனை செய்ய அனைத்து வித கடன் தொல்லைகளும் தீர்கிறது. இச் சந்நதியின் முன் நின்று " கூறை உவந்தளித்த கோவே யென்று அன்பர் தொழச் சேறை உவந்திருந்த சிற்பரமே " என மனமுருக 11 முறை பாராயணம் செய்தால் மிகச் சிறந்த பலன் கிடைக்கும்

சங்கடங்கள் தீர்க்கும் திருபுவனம் " சூலினி, பிரத்தியங்கரா சமேத சரபேஸ்வரர் "
கடன் தொல்லைகளில் இருந்து விடுபட, வழக்குகளில் வெற்றியடைய, பில்லி, சூனியம், ஏவல்களில் இருந்து விடுபட பரமேஸ்வரன், சரபேஸ்வரராய் வீற்றிருந்து அருள்பாளிக்கும் " திருபுவனம் " சென்று வழிபடலாம். இவர் வழிபடுபவரின் அனைத்து சங்கடங்களையும் தீர்ப்பவர். சூலினி, பிரத்தியங்கரா என தன் இரு தேவியருடன் தனி சந்நதி கொண்டு வீற்றிருக்கும் சரபரை 11 விளக்குகள் ஏற்றி, 11 முறை சுற்றி வந்து, 11 வாரங்கள் வழிபட சங்கடங்கள் அனைத்தும் தீர்ந்து சுக வாழ்வு கிடைக்கும். சரபரை வழிபட ஞாயிற்று கிழமை ராகு கால வேளை சிறந்தது.

பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று சேர , வணங்க வேண்டிய "ஸ்ரீவாஞ்சியம்"
காசிக்கு இணையான தலம் இந்த ஸ்ரீவாஞ்சியம். காசியில் புண்ணியமும் வளரும். பாவமும் வளரும். ஆனால், இத் தலத்திலோ புண்ணியம் மட்டுமே வளரும். ராகுவும், கேதுவும் ஒரே சிலையில் காட்சி தரும் இத் தலத்தில் உள்ள குப்த கங்கையில் நீராடி வாஞ்சிநாதரையும், மங்களநாயகியையும், மஹாலஷ்மியையும் வழிபட்டால், பிரிந்திருக்கும் தம்பதியர், பிணக்குகள் அனைத்தும் தீர்ந்து ஒன்று சேர்வர். கால சர்ப்ப தோஷம் நீக்கும், பாவங்கள் தீர்த்து முக்தி அருளும் இது சனி தோஷ பரிகாரத்திற்கு சிறந்த திருத்தலம்.

அட்சரப்பிரயாசம் ( எழுத்தறிவு ) பெற இன்னம்பூர் எழுத்தறிநாதர்

அகத்திய முனிவர் இத் தலம் வந்து எழுத்தறிநாதரை வழிபட்டு இலக்கணங்களை கற்றுக் கொண்டதால், இன்றளவும் இத் தலத்தில் சிறு பிள்ளைகளுக்கான அட்சரப்பியாசம் நடைபெறுகிறது. குழந்தைகளை பெற்றவர் இத் தலம் அழைத்து வந்து இங்குள்ள நாதனின் முன்பாக எழுத்து பயிற்சி தருகின்றனர்.இத் தல நடராஜரின் விக்கிரகத்தில் இடப் பக்கம் கங்கா தேவியும் வலப் பக்கம் நாகமும் காட்சியளிப்பது அற்புதமான காட்சி. இத் தலம் சஷ்டியப்த பூர்த்தி, பீம ரத சாந்தி ஹோமங்கள் செய்ய மிகச் சிறந்தது.

தடைபட்ட திருமணம் நடக்க 

கோனேரிராஜபுரம் என்றழைக்கப்படும் " திருநல்லம் "முக்கண்ணன் " உமா மகேஸ்வரராய் " மேற்கு நோக்கி வீற்றிருக்க, " அங்கவள நாயகியாய் "அம்பாள் கிழக்கு நோக்கி வீற்றிருப்பது, இருவரும் மாலை மாற்றிக் கொள்ளும் வண்ணம் அமர்ந்திருப்பதாய் ஐதீகம். பூமாதேவி, ஈஸ்வரனை பூஜிக்க வேண்டி, தேவ சிற்பி விஸ்வகர்மா ஆலயம் அமைக்க, தேவகுரு பிரகஸ்பதி மகேஸ்வரனை பிரதிஷ்டை செய்த, திருமணத் தடை அகற்றும் திருக் கோயில் இது. இத் தல நாயகனையும், அம்பாளையும் வழிபட்டால், தடைபட்ட திருமணங்கள் இனிதே நிறைவேறும். " பொல்லாத் துயரையும் பொடிப் பொடியாக்கும் இறைவன் "என இத் தல நாயகனை திருநாவுககரசர் பாடியுள்ளார். இத் தலத்தில், நோய் தீர்க்கும், " ஸ்ரீ வைத்திய நாதர் " சந்நதியும் அமைந்துள்ளது. இத் தலம், திருவிடை மருதூரிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது. கும்பகோணம் - வடமட்டம் பேருந்து வழித் தடத்தில், கோனேரிராஜபுரம் என்ற பஸ் நிறுத்தத்தில் இருந்து 1 கி,மீ. தொலைவில் ஆலயம் உள்ளது. 

தீரா நோய்கள் தீர்க்கும் "வைத்தீஸ்வரன் கோவில் வைத்திய நாதர் "

மயிலாடுதுறை - சீர்காழி வழித் தடத்தில் அமைந்துள்ள நோய் தீர்க்கும் திருத் தலம் " வைத்தீஸ்வரன் கோவில் ". செவ்வாய் தோஷம் நீக்கும் " அங்காரகனுக்குரிய " திரு கோயிலான இது ஒரு பிரார்த்தனை திருத்தலம். வேண்டுபவரது பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேற்றும் வைத்யநாதர், தையல் நாயகி சமேதராய் அருளும் திருக்கோயில் இது. இங்குதான் முத்துசாமி தீட்சிதர் பதிகம் பாடி கண்ணொளி பெற்றார். 18 சித்தர்களில் ஒருவரான, நோய்கள் தீர்க்கும் "தன்வந்திரி" இத் தலத்திற்கு உரியவர். அப்பர் பாடிய தேவாரத்திற்கு ஏற்ப, இத் தலத்தில் தரப்படும் மருந்து உருண்டையை உட்கொண்டு, இத் தல சித்தாமிர்த திருக்குளத்து நீரை பருகினால் தீராத வியாதிகள் அனைத்தும் தீரும் என்பது நிச்சயம். இங்குள்ள சடாயுகுண்டத்தில் உள்ள சாம்பலை பூசிக்கொள்ள நோய்கள் தீருகின்றன.

செல்வம் பெற வணங்க வேண்டிய தலம் "திருவாடுதுறை" 

கும்பகோணம் - மாயவரம் சாலையில் கும்பகோணத்திலிருந்து சுமர் 10 கி.மீ. தொலைவில் உள்ளது ஆடுதுறை எனப்படும் "திருவாடுதுறை". ஞானசம்பந்தரிடம் அவர் தந்தை யாகம் செய்ய தேவையான பொருள் கேட்க, சம்பந்தரும் இத் தல இறைவன் மாசிலாமணி ஈஸ்வரரை வேண்டி பதிகம் பாட, பரம் பொருளும் 1000 பொற்காசுகள் கொண்ட பொற்கிளியை பலி பீடத்தின் மீது வைத்தருளினார்.

சரஸ்வதி கடாட்சம் தரும் கூத்தனூர்

மாணவர்கள் கல்விச் செல்வம் பெறவும், கலைமகளின் பரிபூரண அருளை பெறவும் வழிபட வேண்டிய தலம் ஞானசரஸ்வதி காட்சி தரும் "கூத்தனூர்". நமது பிறப்புகள் அனைத்திலும் நம்முடன் வருவது நாம் பெற்ற கல்விச் செல்வம் மட்டுமே. மயிலாடுதுறை - திருவாரூர் வழித் தடத்தில் பேரளத்தை அடுத்து அமைந்துள்ளது ஞான சக்தியாய் மகா சரஸ்வதி அருளும் கூத்தனூர். வெண்ணிற ஆடை உடுத்தி, வெண் தாமரையில் கிழக்கு முகமாய் வீற்றிருக்கும் சரஸ்வதி தேவி ஆய கலைகள் அனைத்தையும் அருள்பவள். இவள் வாக்கு வன்மையை தருபவள். வாழ்வில் உயர அனைவரும் வழிபட வேண்டியவள். ஞானம் அருள்பவள்.

நாக,புத்திர,மாங்கல்ய தோஷங்கள் நீங்க நாச்சியார் கோவில் கல் கருடன்

காரியங்கள், திருமணம் கைகூட திருநந்திபுர விண்ணகரம் நாதன் கோவில்

கடும் வியாதிகளின் இருந்து விடுபட கும்பகோணம் பாணபுரீஸ்வரர்

கடும் ஜூரம் விலகிட காளகஸ்தீஸ்வரர் திருக்கோவில் "ஜூரகேஸ்வரர் "

பிரிந்த தம்பதியர் ஒன்று சேர கும்பகோணம் ஆதி வராகப் பெருமாள்

ராகு தோஷம், எம, மரண பயம் நீங்க திருநீலக்குடி எனும் தென்னலக்குடி

மாங்கல்ய பலம் பெற, நோய்கள் தீர திருமங்கலக்குடி பிராணவரதேஸ்வரர்

குழந்தைகளின் நோய் தோஷங்கள் தீர சிவபுரம் எனப்படும் திருச்சிவபுரம்

விஷக் கடியில் இருந்து நிவாரணம் பெற அழகாபுத்தூர் சங்கு சக்கிர முருகன்
=============================================================

குரு பகவானின் பரிபூரண அருள் பெற உதவும் - அற்புதமான ஆலயம்

Best Blogger Tips



 குரு பலன் கிடைக்க அதிகம் பரிந்துரை செய்யும் ஸ்தலம். குரு பகவான் - நம் அனைவருக்கும், கல்வி , தனம், வாக்கு , புத்திர பாக்கியம் உள்பட பல முக்கிய விஷயங்களுக்கு காரண கர்த்தாவாக விளங்குகிறார். நவ கிரகங்களில் முழு சுபர் .

குருப் பெயர்ச்சியின் மூலம் ஒவ்வொரு ஆண்டும், நமைப் போன்ற மனிதர்களின் பொருளாதார வாழ்வில் - ஏற்ற , இறக்கத்தை ஏற்படுத்தி - உலக பொருளாதாரத்தையே , முழு கட்டுப்பாட்டில் வைப்பவர் குரு பகவான். சில வருடங்களுக்கு முன் , ஏற்பட்ட கடுமையான பொருளாதார வீழ்ச்சி - குரு பகவான் , தன பலமிழந்து நீச வீட்டில் , மகரத்தில் இருந்த போது நிகழ்ந்ததே. சரியாக 12 வருடங்களுக்கு முன் , இதே நிலைமை தான். பல வங்கிகள் திவால் ஆனது.

நம் வாழ்வில் ஏற்படும் ஏற்ற , இறக்கங்களும் குரு பார்வையைப் பொறுத்தே வேறுபடுகிறது.
ஜாதகப் படி ஜனன காலத்திலோ , அல்லது நடக்கும் கோச்சாரத்திலோ - குரு பகவான் , பலம் இழந்து அல்லது பாதக ஸ்தானத்தில் இருந்தால் - உங்களால் இயன்றவரை அடிக்கடி இந்த ஆலயத்திற்கு சென்று , மனமார குருவருள் வேண்டி பிரார்த்தனை செய்து வாருங்கள். வாழ்வில் , நிச்சயம் நல்ல மாறுதல் கிடைக்கும்.

எவர் ஒருவர் ஜாதகத்தில் குரு நீசமாக இருக்கிறாரோ, அவர்கள் நிச்சயம் இந்த ஆலயம் வந்து குருவுக்கு பரிகாரம் செய்தல் நலம் பயக்கும்.

நீண்ட நாட்களாக , நல்ல வேலை / தொழில் அமையாமல் அல்லல் படும் அனைவருக்கும் - ஒரு நிரந்தர தீர்வு கொடுத்து , ஆயிரக்கணக்கான அன்பர்களுக்கு விடி மோட்சம் கொடுத்துள்ள ஆலயம் இது.
புத்திர சோகம் உள்ளவர்களுக்கும், தீய வழியில் செல்லும் குழந்தைகளுக்கு - நல்ல வழியில் வழிகாட்டிச் சென்று , அவர்களை மேம்படுத்தவும் , நவ கிரகங்களின் தோஷத்தை நீக்கவும் - இந்த சந்திரகாந்த கல்லில் அபிசேகம் பெறும் வசிஷ்டேஸ்வரரை வணங்குதல் , உங்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு ஆகும்.

இன்னும் ஒரு ஆச்சரியத்தக்க விஷயம் . எவர் ஒருவர் ஜாதகத்தில் குரு பகவான் - ஏழாம் வீட்டில் தனியாக இருக்கிறாரோ, அவர்கள் திருமணம் ஒரு கேள்விக்குறியாகி விடுகிறது. திருமணம் நடந்தாலும், அது எப்படி , எவ்வளவு இடையூறுகளுக்கு இடையில் நடந்தது என்பது , அந்த ஜாதர்கள் மட்டுமே அறிந்த ரகசியம்.

விட்ட குறை , தொட்ட குறை போல - அவர்கள் மண வாழ்வும், கொஞ்சம் நெருடலாகவே செல்லும். இவர்களும் ஒருமுறை இந்த ஆலயம் வந்து குரு பகவானுக்கு உரிய ப்ரீத்தி செய்வது அவசியம். அதன் பிறகு , உங்கள் வாழ்க்கை ஜாம் ஜாம் என்று செல்வது நிச்சயம்.

இனி , ஆலயம் பற்றிக் காண்போம்... :


தல அமைவிடமும், பெயர்க் காரணமும்

கும்பகோணம் - தஞ்சாவூர் சாலையில் சுமார் 25 கி.மீ. தொலைவில் திட்டை எனும் ஊரில் அமைந்துள்ளது திருதென்குடித்திட்டை எனும் திட்டை வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில். திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற திருத்தலம் இது. திட்டை என்ற பெயர் ஏன்?. புராண காலத்தில் ஊழிப் பெரு வெள்ளத்தால் உலகின் அனைத்து பகுதிகளும் மூழ்கி விட்டது. மும்மூர்த்திகளும் இருள் உலகம் முழுவதையும் சூழ்ந்து விட்டதை கண்டு மனம் கலங்கினர். அச் சமயம், ஒரு பகுதி மட்டும் சற்று மேடாக, திட்டாக காணப்பட்டதை கண்டனர். விரைந்தனர் அப் பகுதிக்கு. அங்கு "ஹம்" என்ற ஒலியுடன் பல விதமான மந்திர ஒலிகளும் கேட்டனர். அப்பொழுது ஜோதி சொரூபமாய் சிவ பெருமான் தோன்றக் கண்டனர். அவரை போற்றி துதித்தனர். மும் மூர்த்திகளின் வேண்டுதலுக்கு இணங்க இத் தலத்திலேயே வீற்றிருந்து அருள் புரியலானார்.

இறைவனும், இறைவியும்
இறைவன் வசிஷ்டேஸ்வரர். தாமாகவே தோன்றிய சுயம்பு மூர்த்தி. தேரூர் நாதர், பசுபதி நாதர், ரதபுரீஸ்வரர், தேனுபுரீஸ்வரர், அனந்தீஸ்வரர் என்றெல்லாம் வணங்கப்படுகின்றார். யம தர்மன் சாப விமோஷனம் பெற்ற தலம் இது. சனீஸ்வரன் நவ கோள்களில் ஒன்றாக விளங்கும் அருள் பெற்றது இத் தல இறைவனை வேண்டியே. பரசுராமர், கார்த்த வீர்யார்ச்சுனன், முருகன், பைரவர் போன்றோர் வழிபட்ட திருக்கோவில் இது. இறைவி உலகநாயகி. சுகந்த குந்தளேஸ்வரி, மங்களேஸ்வரி என்றும் வழிபடப்படுகின்றாள். இத் தல அம்பிகையை வழிபட்டு சுகந்த குந்தலா எனும் பெண்ணொருத்தி இழந்த தன் கணவனை உயிருடன் மீட்டாள் என்கிறது தல புராணம். மங்களா எனும் வைசியப் பெண்ணொருவள் தன் விதவைக் கோலம் நீங்கி நீடூழி வாழ்ந்து மணித்வீபம் சென்றாள். சங்க பால மன்னன் என்பவன் தன் இறந்து போன மத்சலாவை உயிருடன் மீண்டும் பெற்று இழந்த தன் அரசையும் இத் தல இறைவனை வழிபட்டே பெற்றான்.

சிறப்பு மூர்த்தியாய் குரு பகவான்

அனைத்து சிவாலயங்களைப் போலவே இங்கும் தெட்சிணாமூர்த்தி தென் புறத்தில் அமர்ந்திருக்கின்றார். சுவாமிக்கும் அம்பாள் சந்நதிக்கும் இடையில் குரு பகவான் ராஜ குருவாக நின்ற கோலத்தில் தனி விமானத்துடன், தனி சந்நதி கொண்டு காட்சி தருகின்றார். பெரும்பாலான குரு தலங்களில் குருவின் அதிதேவதையான தெட்சிணாமுர்த்தியே குருவாக பாவித்து வணங்கப்படுகின்றார். ஆனால், இத் தலத்தில் மட்டுமே குரு பகவான நவக்கிரக அமைப்பில் உள்ளது போல் தனி சந்நதியில் காட்சி அருள்கின்றார். இவரே இத் திருத்தலத்தின் சிறப்பு மூர்த்தியாவார். இத் தலத்தில் குரு பகவானுக்கு உற்சவ மூர்த்தியும் உண்டு. திருவிழா நாட்களில் இறைவனுடன் இவரும் வீதி உலா செல்வார். இத் திருத்தலத்தை தவிர குரு பகவான் வீதி உலா செல்வதை வேறு எங்கும் காண இயலாது. இது இத் தலத்தின் மிகப் பெரும் சிறப்பு.

குரு பார்க்க கோடி நன்மை

குரு பகவான் சப்த ரிஷிகளில் நடுவரான ஆங்கிரஸ மகிரிஷியின் புதல்வரே. இவரே தேவர்களுக்கு வழிகாட்டியாகவும் திகழ்கின்றார். ஜோதிட ரீதியாக ஐந்தாவது இடத்தில் இருக்கும் குரு பகவான் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாவார். உயர் பதவி, கல்வி, செல்வம், குடும்பத்தில் மகிழ்ச்சி இவற்றை சந்தோஷமாக அருள்பவர். குரு பகவான் முழுச் சுபர். தோஷங்களை நீக்குவதில் வல்லவர். கேதுவின் தோஷத்தை ராகுவும், ராகு, கேது இருவரின் தோஷங்களை சனியும், ராகு கேது தோஷத்தை புதனும், புதன் உட்பட ஐவரின் தோஷத்தை சந்திரனும் போக்க வல்லவர்கள். ஆனால் குரு பகவானோ அனைத்து நவக்கிர தோஷங்களையும் போக்க வல்லவர். எனவேதான் " குரு பார்க்க கோடி நன்மை " என்பர்.

பஞ்ச லிங்க ஷேத்திரம்

இத் திருக்கோயிலின் நான்கு மூலைகளிலும் நான்கு லிங்கங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. மூலவர் சுயம்பு லிங்கமாக ஐந்தாவதாய் எழுந்தருளியுள்ளார். எனவே இத் தலம் பஞ்ச பூதங்களுக்கும் உகந்த ஸ்தலமாக விளங்குகின்றது. திருகாளத்தி, திரு அண்ணாமலை, திருவானைக்காவல், சிதம்பரம் மற்றும் காஞ்சிபுரம் என்ற பஞ்ச பூத தலங்களும் ஒருங்கிணைந்த தலமாக விளங்குகின்றது இத் திருதென்குடித்திட்டை திருக்கோவில்.

திருக்கோவிலின் அமைப்பும், சிறப்பும்

கிழக்கு நோக்கிய ராஜ கோபுரத்துடன் திகழ்கின்ற இத் திருத்தலம் முற்றிலும் கருங்கற்களை மட்டுமே கொண்டு கட்டப்பட்டுள்ளது. நிறைய கோவில்கள் இவ்வண்ணம் கருங்கற் கோவில்களாக விளங்குகின்றன. ஆனால், இத் திருத்தலத்தில் மட்டுமே கொடி, கலசங்களும் கூட கருங்கற்களை கொண்டு வடிவமைக்கப்படுள்ளன. இப் பேரழகினை காண கண் கோடி வேண்டும்.

சந்திர காந்தக் கல்லும், சூரிய காந்தக் கல்லும்

இத் திருக்கோவில் அக்கால கட்டிடக் கலைக்கு ஓர் சிறந்த உதாரணம். கோவிலின் மூலவர் விமானத்தில் சந்திர காந்தக் கல் மற்றும் சூரிய காந்தக் கல் வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சந்திர காந்தக் கல் சந்திரனிடமிருந்து குளுமையை வாங்கி 24 நிமிடங்களுக்கு ஒரு முறை ஒரு சொட்டு நீரை மூலவர் லிங்கத்தின் மீது தாமாகவே அபிஷேகம் செய்கின்றது. சிவ பெருமான் , சந்திரனது சாபத்தினை நீக்கி, தன் சிரசில் இருக்க இடம் கொடுத்ததால் சந்திரன் தன் நன்றிக் கடனாக அனு தினமும் இவ்வாறு அபிஷேகம் செய்வதாக ஐதீகம். இந்த அதிசயம் உலகில் வேறெங்குக் காண இயலாத ஒன்று.

தல விருட்சங்கள்

திருக்கோவிலின் முன் உள்ள சக்கர தீர்த்தம் எனும் திருக்குளம் தல தீர்த்தமாகும். இது மஹா விஷ்ணுவின் சக்ராயுதத்தால் உண்டாக்கப்பட்டது. விநாயகர் அருளுடன் சகல சித்திகளையும் அளிக்க வல்லது. இங்கு தேவர்களும், தேவ மாதாக்களும் மரம், செடி, கொடிகளாக மாறி தல விருட்சமாக அருள்கின்றனர். இங்கு மற்ற கோவில்களை போலன்றி தல விருட்சங்கள் பல, ருத்ரன் ஆல மரமாகவும், ருத்ராணி ஸமி மரமாகவும், விஷ்ணு அரச மரமாகவும், லஷ்மி வில்வ மரமாகவும், மற்றைய தேவர் அனைவரும் செடி, கொடிகளாகவும் திருத்தல விருட்சங்களாகவும் அருளுகின்றனர்.

சனி தோஷம் உள்ளவர்கள், அர்த்தாஷ்டம சனி, ஏழரைச் சனி மற்றும் அஷ்டமச் சனி தோஷம் உள்ளவர்கள் ,இத் தல பசு தீர்த்தத்தில் நீராடி, பசுபதீஸ்வரரை வேண்டி, நவக்கிரகங்களை வலம் வந்து, சனி பகவானுக்கு அர்ச்சனை செய்தால் தோஷங்கள் நிவர்த்தியாகின்றன. 



 பல பல ஆயிரம் வருடங்களாக , சில நம்பிக்கை - பரம்பரை பரம்பரையாக நமக்கு சொல்லப் பட்டு வந்து இருக்கிறது. அந்த நம்பிக்கையில் இன்னும் போகிறோம். புராணங்கள் வெறும் கதைகள் என்று நினைத்தால் அது கதை தான். ஆனால், அவை உண்மை என்று நினைத்தால்..... (அட.. சூப்பரா இருக்குமே ? 


சொர்க்கம் , நரகம் என்று இருப்பது உண்மை என்று நம்மில் சிலர் சொல்லிக் கொண்டாலும், மனதளவில் நம்புவதே இல்லை. நம்பினால் , நாம் தவறு செய்யத் துணிய மாட்டோமே...


தேவர்கள் சொர்க்கத்தில் இருக்கின்றனர். தேவர்களும் தொழும் மும்மூர்த்திகள் இருக்கின்றனர். ரிஷிகள், சித்தர்கள் அவர்களை எல்லாம் , தரிசித்து இருப்பதாக புராணங்கள், செவி வழிச் செய்திகள் , காலம் காலமாக நமக்கு போதிக்கப் பட்டு வரும் நம்பிக்கைகள் கூறுகின்றன... 


அவை எல்லாம் , உண்மையாக இருக்குமா? என்கிற கேள்வி , இந்த விஞ்ஞான உலகில் வருவது இயல்பு தான்.  நாம் தான் இதை எல்லாம் நம்புவதே இல்லையே... 


அடி மனதில், ஆழ் மனதில் நமக்கு இந்த எண்ணம் தான் வருகிறது. எதையும் நாம் அனுபவித்து உணர்ந்து கொண்டால் ஒழிய, நம் மனது நம்புவதே இல்லை.


சிகரெட் பிடிப்பதால் புற்று நோய் வரும். குடித்தால் - லிவர் , கிட்னி போயிடும் என்று படித்து படித்து கூறினாலும், அதை நாம் அவ்வளவு எளிதில் விட்டு விடுவதில்லை. (நம்புவதில்லையோ?)


எவ்வளவு பிரார்த்தனை பண்ணினாலும் நமக்கு கடவுள் கண் திறப்பது இல்லை என்று ஒரே ஒரு முறை தோன்றினாலும், உடனே கடவுளை நம்புவதை நிறுத்தி விடுகிறோம்..... இது நியாயமா? 


நம் தமிழ் மொழி எவ்வளவு புராதனமானது என்று , இதுவரை உறுதியாக கூற முடியவில்லை. எத்தனை மகான்கள், புண்ணிய புருஷர்கள், சித்தர்கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள் எத்தனையோ பேர் இறைவனை தரிசித்து, அந்த ஆவணங்கள் நமக்கு கிடைத்தும், இன்னும் இறைவன் இருக்கிறானா என்கிற ஊசல் ஆட்டத்தில் தான் நமது மனது இருக்கிறது.


பாம்பன் சுவாமிகளோ, ராமலிங்க அடிகளாரோ , ராமகிருஷ்ண பரமஹம்சரோ - முருக தரிசனம் பெற்றதோ, காளி தரிசனம் பெற்றதையோ பொய் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.


புராணங்கள் வெறும் கட்டுக் கதைகள் அல்ல. நம் முன்னோர்களில் யாரோ ஒருவருக்கு, அந்த கால கட்டத்தில் பலருக்கு இறைவன் சிவனாகவோ, விஷ்ணுவாகவோ , முருகனாகவோ, விநாயகராகவோ - பல ரூபங்களில் காட்சி அளித்து இருக்க கூடும். அந்த நம்பிக்கை வாழையடி வாழையாக அந்த சந்ததிகளுக்கு தொடர்ந்து இருக்க கூடும்.


எத்தனையோ வருடங்களாக , கோடிக் கணக்கில் மகான்களின் மந்திர அதிர்வுகளை உள்ளடக்கிய - ஆலயங்கள் நம் தமிழ் நாட்டிலும் , இந்தியாவிலும் எவ்வளவோ இருக்கின்றன. ஒவ்வொரு ஆலயமும், ஒவ்வொரு சூட்சுமத்தை உள்ளடக்கி , பலன்களை உள்ளடக்கியது. நமக்கு ஆனால், இன்னும் 50 :50 நம்பிக்கையும், ஒரு வித க்யூரியாசிட்டியும் தான் இருக்கிறது.நான் சொல்வது தீவிர நம்பிக்கை உள்ளவர்களாக காட்டிக் கொள்பவர்களுக்கே.


நம்மில் உள்ள ஒரே குறை என்ன தெரியுமா? பல ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முந்தைய புராதனமும், பெருமையும் இருப்பதால் - மிகுந்த மெத்தனமும், அஜாக்கிரதையுமாக இருந்து விடுகிறோம்.... 


சரி, வெளி நாட்டில் உள்ளவர்கள் அனைவரும் எப்படி? அவர்களுக்கு ஜோதிடம், ஜாதகம் - கடவுள் நம்பிக்கை எதுவும் இருப்பதாக தெரியவில்லையே...


அங்கும் பல வருடங்களுக்கு முன்பு , பல கலாச்சாரங்களுக்கு முன்பு - நம் வழிபாடு முறை போன்றே இருந்து இருக்க கூடும்... ஜப்பானிலும், இந்தோனேசியா விலும், இந்தோ சீனா பகுதிகளிலும் பல ஆயிரக்கணக்கான புராதன சிலைகள் நம் இந்து மத கடவுள்களின் உருவத்தை ஒத்து இருப்பதை நாம் கேள்விப் படுகிறோம்.


நமது மதம் பெரியதா, உலக முழுவதும் பரவி இருந்த ஒன்றா என்பது இங்கு கேள்வி இல்லை. நமக்கு தேவை இல்லாத விஷயம். ஏதோ ஒரு காரணத்தால், நான் எத்தியோப்பியாவில் பிறந்து இருந்தால், இஸ்லாமையோ அல்லது வேறு எதோ ஒரு மதத்தையோ தழுவி இருந்து இருப்பேன். இந்து மதம் என்ற ஒன்று இருப்பது கூட தெரிந்து இருக்காது. 


உலகத்தில் பிறந்த எந்த ஒரு ஜீவனும், அவர்கள் வெளி நாட்டவராக இருந்தாலும், அவர்களும் கிரக பலன்களால் ஆட்படுவர் என்பது ஜோதிட விதி. யார் , யாருக்கு என்ன தலை எழுத்து என்பது பிறக்கும்போதே விதிக்கப் பட்டு விட்ட ஒன்று தான். நமது உடலில் உள்ள நவ சக்கரங்களின் மூலம் நவ கிரகங்களும் நம்மை இயக்கி - நம் பூர்வ புண்ணிய பலன்களை கிடைக்க செய்கின்றன என்பது ஜோதிட சாஸ்திரம். 


அது அப்போதே அளக்கப்பட்டு விட்டது என்று இருக்கும்போது , வழிபாடும், பரிகாரமும் - இயற்கைக்கு முரணா என்று நினைக்கவும் தோன்றுகிறது. வழிபாடும் , பரிகாரங்களும் - நமக்கு பாதகமான நேரங்களில் தீய பலன்களால் நமக்கு பாதிப்பு குறைவாக ஏற்படவும், நல்ல நேரங்களில் நமக்கு கிடைக்க விருக்கும் நற்பலன்களை உரிய நேரத்தில் கிடைக்க செய்யவும் தான். நான் ஏற்கனவே பல கட்டுரைகளில் கூறியபடி - ஜாதகம் மூன்றில் ஒரு பங்கு, நம் சுய எண்ணம் செயல்கள் ஒரு பங்கு , வாழும் வீடு, சூழல் - ஒரு பங்கு - இவை மூன்றும் தான் ஒருவரின் வாழ்க்கையின் வெற்றி , தோல்வியை தீர்மானிக்கின்றன.


நம் பூர்வ புண்ணிய கர்மாக்கள் நம் பிறப்பை தீர்மானித்தாலும், நாம் இப்போது செய்யும் நற்செயல்கள் - நமக்கும், நம் சந்ததிக்கும் நல் வழி காட்டும். 
அயல் நாடுகளில் பிறப்பவர்களுக்கும் இது பொருந்தும். ஒரு சின்ன உதாரணம் சொல்றேன். கஷ்டப்பட்டு உழைச்சு , IIT , IIM னு நல்ல படிப்பு படிச்சு - கை நிறைய சம்பளம் வாங்கி , இல்லை நல்ல பிசினஸ் பண்ணி - நல்ல நிலைக்கு , சொத்து , தோட்டம் தொறவுனு - நீங்கபண்ற எல்லாமே - கிரகங்களாவது , கட்டமாவது.... உங்க சுய முயற்ச்சின்னு வைச்சுப்போமே, ஒரு பேச்சுக்கு... 

அந்த மாதிரி ஒரு நல்ல படிப்பு, வசதி , நற்பண்பு உள்ள ஒருவருக்கு - ஒரு குழந்தை பிறக்குதுன்னு வைச்சுப்போம்..... இவர் அடிச்ச குட்டிக் கரணம் எதுவும் இல்லாம straight ஆ - அதுக்கு எல்லா வசதியும் கிடைக்குதா, அது பூர்வ ஜென்ம புண்ணியம்... 

நம்மளை விடுங்க, நம்ம புள்ளைகளுக்கு - பூர்வ ஜென்ம புண்ணியம் நிறைய இருக்கணுமா? வேண்டாமா? நாமளும் நம்ம திறமைய வளர்க்கணும் இல்லையா? நல்ல செயல்கள் செய்ய, நல்ல சம்பாதிக்கணும் இல்லையா?  பசங்களுக்கு பெஸ்ட் எஜுகேசன் , வசதிகள் செஞ்சு கொடுக்கணும் இல்லையா? முயற்சி செய்வோம்... நம்ம கர்ம வினை இடம் கொடுத்தா, நம்ம புள்ளைய ஒழுங்கா வளர்த்தா... அவனுக்கே புள்ளையா , நாம கூட திரும்ப பொறக்கலாம்... நாமே திரும்ப , நம்ம வசதிகளை அனுபவிக்கலாம்... நம்மை குழந்தைகளாக வளர்த்த , நம் பெற்றோர்களைநாம் குறைந்த பட்சம் மதிக்கவாவது செய்வோம்... எந்த அளவுக்கு நம்மை அவர்கள் கவனித்து இருக்க கூடும்...



ஒரு குழந்தையாய் நம் கடமையை , குடும்பத் தலைவனாய் நம் கடமையையும் செய்தால் போதும்... குடும்பம் என்கிற அமைப்பு கட்டுக் கோப்பாக இருக்கும்...

சரி, வெளிநாட்டுக் காரங்க - நம்ம அளவுக்கு கடவுள் என்னும் நம்பிக்கை இல்லாதவங்க, எல்லாரும் நன்றாகத் தானே இருக்கிறார்கள்...?

இது எனக்கு கொஞ்சம் நெருடலாகத் தான் இருக்கிறது. 
நம்மில் பக்குவமடைந்த யாரையேனும் கேட்டுப் பாருங்கள். அவருக்கு எது முக்கியம்? மனசாட்சியுள்ள எவரும் சொல்வது, என் குழந்தைகள்... என் குடும்பம்... அவங்க நலனுக்கு அப்புறம் என் நலம். அதன் பிறகு சமூகம்.


மேலை நாடுகளில் அப்படியா? குடும்பம் என்கிற அமைப்பு சீர் குலைந்து இருக்கிறது.

நன்றாக இருப்பது என்றால்.... நினைத்த நேரத்தில் குடி, புகை, கறி, மீன்.... நினைத்த பெண்களோடு சுற்றுவது,நோ பாமிலி பாண்டிங் , கை நிறைய கிரெடிட் கார்ட் .... இது தான் அவர்கள் வாழ்க்கை. அவர்கள் அனைவரும் நம் தேசத்தின் குடும்ப அமைப்பை பார்த்து பொறாமைப் படுகிறார்கள். ஒரு சாதாரண குடும்பம் (என நம் பார்வையில் உள்ள) சேமிக்கும் திறனை பார்த்து வியந்து நிற்கிறார்கள். நமது கோவில்களையும், யோகா தியான முறைகளையும் பார்த்து , நாம் இங்கு பிறக்க வில்லையே என ஏங்குகிறார்கள். 


மிக கேவலமான சுகாதார வசதிகள் இருந்தும், நம் உடம்புக்கு ஏற்பட்டுள்ள நோய் எதிர்ப்பு சக்தியைப் பார்த்து மிரள்கிறார்கள்.
சுத்தம், சுகாதாரம் இரண்டு விஷயங்களில் தான் நாம் பின் தங்கி இருக்கிறோம். 

ஆனால் , நாம் அவர்களை பார்த்து அவர்கள் நன்றாக இருப்பதாக நினைத்துக் கொள்கிறோம். மியாமி பீச்ல பொண்ணுங்க எல்லாம் துணியே இல்லாம இருக்கிறதை, ஆட்டம் போடுறதை, பார்க்கிறதுக்கு நல்லாத் தான் இருக்கும். நம்ம தங்கச்சி, வீட்டுக்கார அம்மணி அந்த மாதிரி ஆட்டம் போட்டு , மத்தவங்க பார்த்தா - தாங்க முடியும்னு நினைக்கிறீங்க..?

அவர்கள் பெண்களுடன் சல்லாபிப்பது நமக்கு உள்ளூர அவர்கள் மேல் பொறாமைப் பட வைக்கிறது. சரி, நாமளும் பண்ணுவோம்... நாம நல்ல இருக்கிறதா ஆகிடுமா? வெளியில் ஆட்டம் போடுவதாக இருந்தாலும் நமக்கு வீட்டுல மனைவி, அம்மா, குழந்தைகளும் இருக்கணும்.. நாம அதிகாரம் பண்ணனும் இல்லை. அவங்க பாசம் நமக்கு வேணும் இல்லை? ஐயா.. சரி... ஆம்பளைக்கு ஒரு நியாயம், பொம்பளைக்கு ஒரு நியாயமானு வீட்டுக்கார அம்மணியும் நினைச்சுட்டா.. நினைக்கவே சகிக்கலை இல்லையா... இது தான் அங்கே நடக்குது... சர்வ சாதாரணமா .... மூணு , நாலு டிவோர்ஸ் . 


Honey, See there.... How Sweet....!
My children and your children are playing with our children....


அர்த்தம் புரியுதா... " ஏ கண்ணு அங்கே பாரேன் .. உன் புள்ளைகளும், என் புள்ளைகளும் நம்ம புள்ளைகளோட விளையாடுராக...ஒரே மஜாவா கீது இல்லே? " அவரோட இப்போதைய மனைவி கூட பேசுறாரு..


உருகி உருகி அன்பு பொழிஞ்சு குடும்பம் நடத்திப் புட்டு - பிரிஞ்சுடுவோம்னு சொன்னா , நல்லாவா இருக்கு? கொஞ்சம் கொஞ்சமா நமக்கும் இந்த தொற்று வியாதி வந்து தொலைச்சு இருக்கு. 

கடைசியா இளநீர், பதநீர், பனை நுங்கு எப்ப சாப்பிட்டு இருப்போம்? குடும்பத்தோட ஒரு ரெண்டு நாள் ஒரு பிக்னிக் - கடற்கரை, கன்னியாகுமரி , குற்றாலம் எப்போ போயிருப்போம்.. யோசிச்சுப் பாருங்க..! ஆனா, ஒரு நாள் கையில காசு கம்மி, சரக்கு அடிக்கலைன்னா... ரொம்பவே பீல் பண்ண ஆரம்பிக்கும் மனசு...! மறுநாள் எப்படியாவது காசு ரெடி பண்ணி, ஒரு கட்டிங் உள்ளே போனாத்தான் நிம்மதி அடையும்... 


ஆனா, "இந்த மாசம் சீட்டுக்கு காசு கட்டவே என்ன பாடு பட்டோம்னு தெரியும்ல ... இந்த லீவுக்கு நாம எங்கேயும் போகப் போறது இல்லை.. சும்மா கிடங்கடா" ன்னு பசங்களுக்கு , ஊட்டு அம்மணிக்கு ஈசியா சமாதானம் சொல்ல மனசு உடனே தயாராகுது.. ...

சரி, நான் வுட்டா பேசிக்கிட்டேத் தான் போவேன்... மேட்டருக்கு வாரேன்..
உலகத்துல உள்ள எல்லாரையும் விட, நிம்மதியா - உயிர் பயம் இல்லாம , தலை தலைமுறையா , சோத்தோட பாசத்தையும் தின்னு வளர்ற நம்மளை விட --- வேற எல்லாப் பயலுகளும் ஏழைகள் தான்...பாவம் தான்...!

அடுத்து....


குரு, கோவிலுக்கு போனா சாமியை ஏன் சுத்திக் கும்பிடுறோம்னு என் நண்பர் கேட்டார். அப்போ எனக்கு உடனே தோணுனது இது தான். 


நீ இங்கே வாயேன், இப்படியே நில்லுன்னு , அவரை ஒரு சுத்து சுத்தினேன்.. அவனுக்கு சிரிப்பு அடக்க முடியலை.. என்னடா? எப்படி பீல் பண்றேன்னு கேட்டேன்.. இப்போ தெரியுதா.. நான் உன்னை சுத்துறப்போ , நீ வேற எல்லாத்தையும் விட்டுட்டு , எந்த நினைப்பும் இல்லாம , என்னை மட்டும் தானே பார்த்தே... அந்த மாதிரி, அந்த இறைவனோட கவனத்தை ஈர்க்கும் ஒரு முயற்சி, அவரை வலம் வருவது. அவர் நம்மளை பார்த்தாப் போதுமே, அடுத்து நாம பேசுறது எல்லாம் அவருக்கு கேட்கும். நமக்கும் சீக்கிரம் நல்லது நடக்கும்... இல்லையா? 


நாம் இருக்கும் இடத்தில் இருந்து இறைவனை கும்பிடலாம், தவறில்லை. கோவிலுக்கு போகணுமா அவசியம்? அண்ணாமலை கிரிவலம் , குல தெய்வம் - ஆகியவை பற்றி நான் ஏற்கனவே நிறைய எழுதி இருக்கிறேன். பழைய கட்டுரைகளை ரெபர் செய்து கொண்டால் தன்யனாவேன். கட்டுரையும் ஏற்கனவே நீண்டுக் கிட்டே போகுது.. திரும்பவும் பிளேடு போடணுமா? 


கதிர்களை ஈர்த்து , கும்பம் வழியாக கருவறை சேர்த்து , நீங்கள் மூலவரை வணங்கும்போது உங்கள் நாடி சக்கரங்களின் சுழற்சியை சரி செய்ய ஆலயங்கள் நம் முன்னோர்கள் அளித்த பெரிய வரப் பிரசாதம்.. 


உங்க வீட்டுக்கு பால்காரர் பால் கொண்டு வர்றாருன்னு வைச்சுப்போம். அவர் வர்ற நேரத்தில தான் வருவாரு. எனக்கு உடனே வேணும் கொஞ்சம் அவசரம் ... ஐயா, வீட்டுல திடீர்னு கொஞ்சம் விருந்தாளிக வந்துட்டாக, பால் காரர் கம்மியாத் தான் தருவாரு, வழக்கம்போல தான் எடுத்து வருவாரு... என்ன பண்றோம்..? உடனே ஓடுறோம்ல பால் பூத்துக்கு... இல்லை பால் பண்ணைக்கு... 


அந்த மாதிரி , நமக்கு சில விஷயங்கள் சீக்கிரம் வேணும்னா, நாம கோவில்களுக்கு போய் தான் ஆகணும்.. உங்களோட மன பாரம் இறங்க , மன நிம்மதி கிடைக்க ஆலயங்கள் , நமக்கு கிடைத்து இருக்கும் அருட் கொடைகள்..


சரி, இன்னைக்கு இவ்வளோ போதும்... நிச்சயமா குட்டையை குழப்பி விட்டு இருப்பேன் என நம்புகிறேன். தெளிவான விளக்கங்கள் இல்லை எனினும் , உங்களை கொஞ்சம் சிந்திக்க வைத்து இருக்கும்.. நான் சொன்னா கேட்கவா போறீக.. நீங்களே யோசிச்சு உங்க மனசு என்ன சொல்லுதுன்னு கேட்டு பாருங்க... அது சொல்றதை , நீங்க நிச்சயம் நம்புவீங்க...! அப்புறம் கீழே ஒரு குட்டிக் கட்டுரை, படிச்சுப் பாருங்க... 
அவசியம் மறக்காமல் , உங்கள் எண்ணங்களை பின்னூட்டம் இடுங்கள்.... 
போதும் முடிச்சுக்கலாம்... என்னது ... இன்னொரு கேள்வி இருக்கா? அட ஆமா இல்லை... ரொம்ப உஷாரா இருக்கிறீங்க....


நீ கடவுளை பார்த்து இருக்கிறாயா? அந்த கேள்வி தானே....!


'அன்பே சிவம்' கமல் மாதிரி சொல்லப் போறது இல்லை.. ரொம்ப கிரிஸ்டல் கிளியரா சொல்றேன் ...... YES . ஆனா, இது உங்களுக்கு தேவை இல்லாத ஒன்று.. நீங்களே தரிசிக்கும் வரை , நீங்கள் நம்ப வேண்டிய அவசியம் இல்லை... ஆனாலும், உண்மையான தேடல் ஒரு நாள் உங்களை பக்குவப் படுத்தும்... 



அதனால் தான் அப்பழுக்கற்ற நம்பிக்கையில் சொல்கிறேன்... உங்கள் அனைவரின் துக்கங்களும் கரைய, லட்சியங்கள் நிறைவேற , இறைவனையும் உங்களுடன் வைத்துக் கொண்டு போராடுங்கள்... அவனைப் பற்றிக் கொள்ளுங்கள்... 
thank you :மணக்கால் அய்யம்பேட்டை

15 October 2015

கோவில்களுக்கு போகும்போது நாம் என்ன செய்யலாம் , எதை செய்யக் கூடாது??


நம்மை அறியாமலே சில செய்யக் கூடாத பழக்கங்களை செய்து கொண்டு இருக்கக் கூடும். அவற்றை தவிர்த்து விடுதல் நலம். 


சாஸ்திரங்கள் கூறும் சில நல்ல பழக்கங்கள் :
1. ஆலய நுழைவாயிலில் கை கால்களை கழுவிவிட்டு உள்ளே செல்லுங்கள். தலையில் நீரைத் தெளிக்க வேண்டாம்.

2. முதல்நாள் இரவே பரிகார ஸ்தலத்திற்கு சென்று விடுவது நல்லது.

3. போகும்போதோ வரும்போதோ உறவினர் வீடு மற்றும் பிற ஸ்தலங்களுக்கு செல்ல வேண்டாம்.

4. குடும்பத்தோடு செல்வது நல்லதுதான். அதற்காக பூஜையை வாரக்கணக்கில் தாமதப்படுத்தக் கூடாது.

5. புறப்படுவதற்கு 24 மணி நேரம் முன்பும், பின்பும் அசைவ உணவு, மது இவற்றை தவிர்ப்பீர். மற்ற விஷயங்களிலும் கட்டுப்பாடு தேவை.

6. போகும்போதோ வரும்போதோ யாருக்கும் பிச்சை போட வேண்டாம்.

7. பெண்கள் வீட்டுக்கு விலக்காகி 7 நாட்கள் கழித்துச் செல்வது நல்லது.

8. யாரிடமும் கடன் வாங்கி செல்ல வேண்டாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் பூஜைக்கென்று சொல்லி வாங்காதீர்.

9. போகும்போதோ வரும்போதோ குல தெய்வத்தை வழிபடலாம். தோஷமில்லை.

10. தர்ப்பணம் கொடுக்காதவர்களுக்கு எந்த பூஜையும் பலன் தராது.

11.சுவாமி தரிசனம் சிலமணி நேரம் ஆகும் என்பதால் புறப்படுவதற்கு முன்பு பன், டீ, பிஸ்கட், காபி, ரஸ்க், டிரை ப்ரூட்ஸ், கூல்ட்ரிங்ஸ், போன்ற ஸ்லைட் ஃபுட் சாப்பிடலாம்.

12. பரிகாரங்கள் அனைத்தையும் தாங்களே முன்னின்று செய்யவும்.

13.ஆலயம் வர இயலாதவர்கள், வெளி நாடு வாசிகள், விரும்பாதவர்கள் இவர்களுக்கு அவர்களது இரத்த உறவுக்காரர்கள், விசுவாசமுள்ளவர்கள் குருமார்கள் பூஜை செய்தால் பலிதமாகும்.

14. பூஜைக்காக தாங்கள் நேரம், பணம் செலவழிப்பது பெரிய விஷயமல்ல. கணிந்த, தாழ்ந்த, முறையான பக்தி மனோபாவமே பலனை நிர்ணயம் செய்கிறது.

15. முக்கிய பூஜை சம்பந்தப்பட்ட விஷயங்களை பிறரிடம் சொல்லாமல் இருப்பது நல்லது.

16. பூஜை சம்பந்தப்பட்ட கிரகத்தின் நாள் ஹோரையில் செய்யுங்கள்.

17. தேவையான காலம் வரை வருடத்திற்கு ஒரு முறையாவது இப்பூஜையை செய்ய வேண்டும்.

18. எல்லா ஆலயங்களுக்கும் சம்பந்தாசம்பந்தமின்றி சென்று வருவது பயனற்றது.

19. பொழுதுபோவதற்காக (சுற்றுலா) ஆலயம் செல்லாதீர்.

20.தங்கள் சக்திக்கேற்றபடி பூஜை செய்ய வேண்டும். வசதியுள்ளவர்கள் சாதாரண பூஜை செய்தால் பலிக்காது. எளியவர்கள் கடன் வாங்கி பெரிதாக செய்ய வேண்டாம்.

21. பூஜைக்கு அமாவாசை, பவுர்ணமி தங்கள் பிறந்த நாள், சித்திரை 1, ஜனவரி 1 போன்றவை உகந்தவை.

22. தலங்களுக்கு செல்வதற்கு முன் 1 நாளும், பின் 1 நாளும் இறந்தவர் வீட்டிற்கு செல்லாதீர்.

23. நெருங்கிய உறவினர் இறந்துவிட்டால் ஐயர் அல்லது ஜோதிடரைக் கேட்டு தகுந்த காலம் கடந்து தரிசிக்க வேண்டும்.

24. வசதியுள்ளவர்கள் புத்தாடை அணிந்து செல்லலாம்.

25. மாலை நேர பூஜைக்கு காலை அணிந்த உடையை அணியாதீர்.

26. ராகுகால பூஜையைத் தவிர மற்ற பூஜைகளை காலை 7.00 மணிக்குள் ஆரம்பித்து விட வேண்டும்.

27. பொருட்கள் தரமாக இருந்தால் அனைத்தையும் பரிகார ஸ்தலத்தில் வாங்குவது சிறந்தது.

28. அதிகம் பேரம் பேச வேண்டாம்.

29. முதலில் விநாயகர், அருகம்புல் வைத்து பிரார்த்தித்து, ஒரு தேங்காயை வலது கையில் வைத்துக்கொண்டு 1 பிரதட்சணம் வந்து பூஜையைத் துவங்கி ஒதுக்கப்பட்ட இடத்தில் அந்த சிதறு காயை உடையுங்கள்.

30. ஆலயத்திற்குள் யாருடனும் பேச வேண்டாம். செல்போன்களைத் தவிர்க்கவும்.

31. வெற்றிலைக்கு நுனியும், வாழைப் பழத்திற்கு காம்பும் இருக்க வேண்டும்.
வில்வம் மற்றும் தாமரைப்பூவிற்கு இதழ்கள் மட்டுமே உயர்ந்தவை. காம்பு,
மஞ்சள் கரு, உள் இழைகள் இருக்கக்கூடாது.

32. வெற்றிலை, வாழைப்பழம், தேங்காய், உதிரி புஷ்பங்கள், பழவகைகள், மண் விளக்கு, ஸ்பூன், அலங்கார மாலை,அர்ச்சனைத் தட்டு முதலியவற்றை கழுவி எடுத்துச் செல்லவும்.

33. சிதறு காயைத் தவிர மற்ற காய்களை மஞ்சள் தடவி (இளநிற மஞ்சள்) எடுத்துச் செல்லுங்கள்.

34. மண்விளக்குகளில் ஐந்து இடத்தில் மோதிர விரலால் மஞ்சள், குங்குமம் வைக்க வேண்டும். இதற்கு சந்தனம் உபயோகிக்கக் கூடாது.

35. பூஜை சாமான்களை கைகளில், பிளாஸ்டிக் பைகளில் கொடுக்காமல் பித்தளை, எவர் சில்வர் தாம்பாளம், கூடை இவற்றில் வைத்துக் கொடுங்கள்.

36. நைவேத்யம் அந்தந்த ஆலய மடப்பள்ளியில் தயார் செய்ய வேண்டும். நீங்கள் தயாரித்து எடுத்துச் செல்லக்கூடாது.

37. பால்கோவா, ஸ்வீட்ஸ், அவல் பொரி, கடலை இவற்றையும் நைவேத்தியமாகப் பயன்படுத்தலாம்.

38. திரி, தீப்பெட்டி, டிஸ்யூ பேப்பர், கேண்டில், நெய் துடைக்க துணி, ஸ்பூன் முதலியவற்றை எடுத்துச் செல்லவும்.

39. திரை போட்ட பின் பிரதட்சணம் வர வேண்டாம்.

40. விநாயகருக்கு ஒன்று. தனி அம்பாளுக்கு இரண்டு. சிவனைச் சார்ந்த அம்பாளுக்கு மூன்று என்ற கணக்கில் வலம் வாருங்கள்.

41. ஒரு பிரதட்சணம் முடிந்ததும் கொடி மரத்தடியில் கைகூப்பி நின்று வணங்கியதும் அடுத்ததை துவங்கவும்.

42. கொடிமரத்தடியைத் தவிர வேறெங்கும் விழுந்து வணங்கக் கூடாது.

43. ஸ்பெஷல் எண்ட்ரன்ஸ் வழியாகச் சென்றால் சிறப்பான நிம்மதியான தரிசனம் கிடைக்கும். வசதி இருப்பின் செய்து கொள்ளவும். குற்ற உணர்ச்சி தேவையில்லை.

44. பிற தீபங்களிலிருந்து உங்கள் தீபத்தை ஏற்ற வேண்டாம்.

45. நெய் அல்லது எண்ணையை பிற விளக்குகளில ஊற்ற வேண்டாம்.

46. அபிஷேக ஆராதனைகளும், ஹோமங்களும் உயர்வு தரும்.

47. பரிகாரம் சம்பந்தப்பட்டவர்களுக்கு விபூதி, பிரசாதம் அனுப்பி வைக்க வேண்டும்.

48. பரிகாரம் செய்யும் நேரத்தில், பரிகாரம் சம்பந்தப்பட்ட நபர் வீட்டில் உறங்கக் கூடாது.

49. பூஜை செய்து கொண்டிருக்கும் சமயம், யாராவது பிரசாதம் கொடுத்தால், அதை பெற்றுக்கொண்டு பூஜை முடிந்தபின் உண்ணவும்.

50. பரிகாரம் செய்தபின் பூஜை பொருட்களை அங்கேயே கொடுத்து விடுவது நல்லது. பசுமாட்டிற்கு வாழைப்பழம், மற்றவற்றை ஐயரிடம் கொடுக்கலாம்.
சிப்பந்திகளிடமும் கொடுக்கலாம்.

51. பிரத்யேக கனி வகைகளை வைத்துப் படைப்பது நல்லது. எலுமிச்சை, மாதுளை, ஆப்பிள், சாத்துக்குடி, ஆரஞ்சு, மா முதலியன.

52. வேகமாக ப்ரதட்சணம் வராமல் பொறுமையாக நமச்சிவாய என்ற 5 எழுந்து மந்திரத்தை உச்சரித்தபடி பொறுமையாக வருவது நல்லது. ஓம் சிவ சிவ ஓம் ஜெபிக்கலாம்.

53. பலன் முழுமையாகப் பெற 1 வருஷ காலம் வரை ஆகலாம். நமக்கு 1 வருஷம் என்பது ஆண்டவனுக்கு 1 நாள்.

54. ஒவ்வொரு ஆலயத்திலும் தீபம் ஏற்றுவதற்கென்று உரிய தனியான இடத்தில் ஏற்றவும், சிலைகள் அருகில் ஏற்றக்கூடாது.

55. சுவாமியைத் தொடாமல் பூஜிக்கவும்.

56. பூஜை செய்த சாமான்கள் பூஜை செய்யாதவற்றுடன் சேர்ந்து விடக்கூடாது.

57. நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களுக்காக 5 மூக்கு தீபம் ஏற்ற வேண்டும்.

58. திரி கனமாக இருந்தால் தீபம் நின்று எரியும். தீபம் ஏற்றிய பின் விளக்குகளை தூக்கி தீபம் காட்டுவது, நகற்றுவது கூடாது. தீபத்துடன் பிரதட்சணம் வருவது தவறு.

59. ஒரு கையில் விபூதி குங்குமம் வாங்கக்கூடாது. இடது கையை
கீழே வைத்து வலது கையை மேலே வைத்து பௌவ்யமாக பெற்றுக் கொள்ள வேண்டும். விபூதி, குங்குமத்தை பேப்பரில் வாங்ககூடாது.

60. பெற்ற விபூதி குங்கும பிரசாதத்தை கீழே கொட்டாமல் வீட்டிற்கு பேப்பரில் மடித்து எடுத்துச் செல்லவும்.

61. விபூதியை நிமிர்ந்து நின்று அப்படியே பூசிக் கொள்ளவும். இடது கையில் வைக்க வேண்டும்.

62. பரிகாரங்கள் அனைத்தும் தங்கள் ஜோதிடரின் அறிவுரைப்படி வரிசைக் கிரமமாக இருக்க வேண்டும்.

63. அலங்கார மாலை அவசியமானது தான். ஆனால் மாலையை விட உதிரிப்பூக்கள் விசேஷமானது.

64. அருகம்புல், வில்வம், தாமரைப்பூ, சம்பங்கி, சாமந்தி, பச்சை, மரிக்
கொழுந்து, சங்குப்பூ, நீலப்பூ, துளசி, மல்லிகை, ரோஜா, பன்னீர் ரோஜா,
விருட்சிப்பூ போன்ற பூ வகைகளால் பூஜிப்பது நல்லது.

65. காளி, துர்கா, முருகனுக்கு பஞ்ச அரளிப் பூக்கள் விசேஷமானது.

66. அம்பாளுக்கு மெருன் நிற குங்குமமே சிறந்தது.

67. எண்ணையை விட நெய்க்கு வீரியம் மிக அதிகம்.

68. சாதாரண மாலையை வாங்காமல் பாதம் வரையிலுள்ள வாகை மாலையை வாங்குங்கள்.

69. சுவாமி சன்னதியில் ஸ்தோத்திரங்கள் பாடுவது பிறருக்கு தொல்லையாக அமையும். அமைதி தேவை. அல்லது மெல்லிய குரலில் பாடவும்.

70. கஜ பூஜை, ஒட்டக பூஜை, கோ பூஜை, சிப்பந்திகளுக்கு தட்சணை தருவது இவை பூஜையின் பலனை அதிகரிக்கும். ஜீவகாருண்யம் உயர்வு தரும்.

71.சிவன், அம்பாளை மட்டும் தரிசிப்பது சரியல்ல. பரிவார தேவதைகள் என
வழங்கப்படும் பிற சன்னதிகளிலும் வழிபாடு தேவை. நெய் தீபம் ஏற்றி உதிரி
புஷ்பங்களை சமர்ப்பிக்கலாம்.

72. வாழைப்பழத்தில் பூவம் பழம் உயர்ந்தது. அடுத்து நாட்டுப்பழம்.

73. சூடம் ஏற்றினால் புகையினால் இடம் மாசுபடும்.

74. ஆலயத் தூய்மை ஆலய தரிசனத்தை விட முக்கியமானது.

75. தல வரலாறு புத்தகம் வாங்கி ஸ்தலம் சம்பந்தப்பட்ட அனைத்து விசேஷங்களையும் தெரிந்துகொள்வது பூஜைக்கு உதவும்.

76. கோயிலுக்குள் சில்லறை கிடைக்காது. ரூ. 10,50,100 என மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். சில்லறைக் காசுகள் போடுவதைத் தவிர்ப்பீர்.

77. கூட்டம் அலைமோதும் ஸ்தலங்களில் பொறுமை தேவை.

78. காசு செலவழித்து செல்பவர் மீது பொறாமை வேண்டாம். நிர்வாகத்திற்கு பணம் தேவை.

79. வி.ஐ.பி. க்கு முன்னுரிமை கொடுப்பதில் எவ்வித தவறும் இல்லை. அது நியாயமானதுதான்.

80. விபூதி குங்குமம் வாங்கும் முன்பே பிராமணருக்கு தட்சணை கொடுத்து விட வேண்டும்.

81. சங்கல்பம் மிக முக்கியம்.

82. கோபுர தரிசனம் கோடி நன்மை.

83. சண்டிகேஸ்வரருக்கு கடைசிப் பிரகாரத்தில் தீபம் ஏற்றி வழிபடுங்கள். அமைதியாக கையை தட்டுங்கள். சொடுக்குப் போடாதீர்.

84. கொடி மரத்தடியில் வடக்குப் பார்த்து விழுந்து வணங்கி பிரார்த்தனையை நிறைவேற்ற வேண்டும்.

85. பிறகு சற்று விலகி கீழே அமர்ந்து 1 நிமிஷம் தியானம் பண்ணி பிரார்த்தனையை நிறைவேற்றவும்.

86. ஆரம்பத்தில் விநாயகரிடம் விடுத்த வேண்டுகோள்தான் இறுதி வரை இருக்க வேண்டும். மாறக்கூடாது.

87. பிரார்த்தனைகள் 1 அல்லது 2க்கு மேல் இருக்கக்கூடாது.

88. காவல் தெய்வங்கள் இருந்தால் அவர்களை வழிபட்ட பிறகே விநாயகர் வழிபாடு செய்ய வேண்டும்.

89. இத்தகைய பூஜைகள் காரியசித்தி பூஜைகள் தானே தவிர கர்ம வினைகளை முற்றிலும் மாற்றாது. ஆனால் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தும்.

90. பூஜைக்கு முன்னுரிமை பெறுபவை. 1. பித்ருக்கள், 2. குலதெய்வம், 3.
விநாயகர், 4. திசாநாதன், 5. பிரச்சனை அல்லது கோரிக்கை சார்ந்த தெய்வம்.

91. நவக்கிரகங்கள் சம்பந்தமின்றி நேரடியாக செயல்படும் ஆற்றல் முனீஸ்வரர், அனுமார், பசு, யானை இவர்களுக்கு உண்டு.

92. இயன்றவரை இறைவனைப் பற்றிய சிந்தனையிலேயே இருங்கள்.

93. தோஷ நிவர்த்திப் பூஜாக்களை இளம் வயதிலேயே 30 வயதிற்குள் செய்து விடுங்கள்.

94. ஸ்தோத்ர பாராயணம் எல்லோருக்கும் அவ்வளவு பலன் தராது.

95. கடுமையான விரதங்களை மேற்கொள்வது, அடிக்கடி பட்டினி கிடப்பது இவற்றை தவிர்க்கவும்.

96. இயல்பான முழுமையான நம்பிக்கையுடன், நேர்த்தியாக, பூரண மன அமைதியுடன் பிரார்த்தனை செய்யுங்கள்.

97. பூஜைக்கு விபூதி, குங்குமம், மஞ்சள், நெய், உதிரி புஷ்பம், வஸ்திரம்,
மாலை, சந்தனம், தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, ஊதுபத்தி, நைவேத்யம், தட்சணை இவை முக்கியம்.

98. சின்னச்சின்ன பூஜைகளை விட அனைத்தும் அடங்கிய முறையான ப்ரத்யேக பூஜைதான் பலன்களை அள்ளித் தருகின்றன.

99. ஆண்டவன் நினைத்தால் மட்டுமே பூஜைக்குரிய அனுமதி கிடைக்கும்.

100. ஆண்டவனை நினைத்துக் கொண்டே இருங்கள். காலம் கனியும்போது ஆண்டவன் நம்மை நினைப்பார்.

23 May 2015

ஜோதிடமுத்துக்கள்:

ஜோதிடம் உண்மை... சரியான ஜோதிடரை சந்தித்த பின்:   



ஜோதிடத்தில் நேர்மறை மனப்பாங்கு:

லக்னாதிபதியே ஒருவரின் மனப்பாங்கை தீர்மானிப்பவர். லக்னாதிபதி இருக்கும் இடம் அவர்மனப்பாங்கை தீர்மாணிக்கும்.
லக்னாதிபதி லக்னத்தில் பலம் பெற்றால் நேர்மறை மனப்பாங்கு உடையவர், 1,2,3,4,5,7,9,10,11 ல் இருப்பது நேர்மறை மனப்பாங்கைத் தரும்....
உச்சம், ஆட்சி, நட்பு, பகை, சமம், நீசம் பெறும் பலம் பொறுத்து நேர்மறை மனப்பாங்கை செயல்படுத்தும் நிலை தரும்.

லக்னாதிபதி 6,8,12ல் இருப்பது எதிர்மறை மனப்பாங்கை தரும். பெறும் பலம் பொறுத்து செயல்படும் நிலை இருக்கும்.
தீய திசை புத்திகளில் தொடர்ந்து வரும் பிரச்சினைகளால் நமது சூழ்நிலைகளால் எதிர்மறை மனப்பாங்கு ஏற்பட்டு எல்லா வகையிலும் பிரச்சினைகளை அதிகரிக்கும்.
நல்ல திசை புத்திகளால் உற்சாகமும் வெற்றி களிப்பும், மகிழ்ச்சியும் உருவதால், நேர்மறை மனப்பாங்கு ஏற்பட்டு சோதனைகளை சாதனைகளாக, எல்லோர்க்கும் நல்லவனாகும் நிலை ஏற்படும்.
6,8,12 , பாதகஸ்தானம், சனி , ராகு , கேது, இவற்றின் திசையில் சுய புத்தியில் மிகுதியான எதிர்மறை மன்பாங்கு அதிகரிக்கும். சனி ராகு கேது உபஜெய ஸ்தாணங்களில் இருந்தால் நேர்மறை மனப்பாங்கு தரும்
மற்ற நல் பாவங்களின் 1,2,3,4,5,7,9,10,11 மற்றும் சூரி, சந், செவ், குரு, சுக் திசா புத்திகளில் நேர்மறை மனப்பாங்கு தந்து வாழ்வில் வெற்றி தரும்.
சூரியன் சனி, சனி செவ்வாய் தொடர்பு , சேர்க்கை, சம்பந்தம் சந்தேகபுத்தியை தரும்

ஜோதிட முத்துக்கள் :

லக்னாதிபதி 8 -ல் இருந்தால் - ஜாதகன் கஞ்சனாகவும் செல்வத்தை சேமிப்பவனாகவும் இருப்பான். லக்கனாதிபதி சுபக்கோளாகில் நீண்ட ஆயுள் உடையவனாகவும், பாபராகில் குறைந்த ஆயுள் உடையவனாகவும் இருப்பான்.
2-ஆம் அதிபதி 8-ல் நின்றால் - ஜாதகன் தற்கொலை செய்து கொள்பவனாயும், கபாலத்தைக் கொள்பவனாயும் , உயர்ந்த குடியில் பிறந்தாலும் வெகு விரைவில் தாழ்ந்த நிலையை அடைவான்.
3 - ஆம் அதிபதி 8 -ல் நின்றால்- ஜாதகனின் சகோதரன் நோயாளியாவான். அசுபக்கிரகமானால் 8 - வது வயதில் ஜாதகனுக்கு நோ...ய் - கண்டத்தை ஏற்படுத்தும். சுபக்கிரகமாயின் நோயிலிருந்து விடுபடுவான்.
4 - ஆம் அதிபதி 8 -ல் நின்றால்- ஜாதகனுக்கு தீராத வியாதி இருந்து கொண்டேயிருக்கும். தீய செயல்களில் ஈடுபடுபவனாகவும் இருப்பான்.
5 - ஆம் அதிபதி 8 -ல் நின்றால்- ஜாதகனின் மனைவி ஒல்லியாகவும், வீட்டுச்செயல்களை முடிக்க இயலாதவளாகவும் இருப்பாள்.
6 - ஆம் அதிபதி 8 -ல் நின்றால்- ஜாதகன் எப்பொழுதும் கவலைப்பட்டவனாகவும், நண்பர்கள் அற்றவனாகவும், எதிரிகளால் ஆயுளுக்கு பங்கத்தை ஏற்படுத்திக் கொள்பவனாகவும் இருப்பான்.


ஜோதிடமுத்துக்கள் :

பிறப்பு ஜாதகத்தில் குருவும் சனியும் சேர்ந்திருந்தால் இளம் வயதிலேயே வேலைக்கு செல்லும் நிலை ஏற்படும்

சுக்கிரன் + புதன் + சனி - சேர்க்கை சுப ஸ்தானங்களில் வலிமை பெற்ற ஜாதகன்- பொன், ஆடை , ஆபரணங்கள், வீடு, வாகன வசதிகளை அடைவான்.
சுக்கிரன் + குரு + சனி - சேர்க்கை சுப ஸ்தானங்களில் வலிமை பெற்ற ஜாதகன்- வாலிப வயதில் ஏராளமாக சம்பாதித்து மிகுதியான செலவு செய்வான்.
செவ்வாய் + சந்திரன் + சூரியன்- சேர்க்கை சுப ஸ்தானங்களில் வலிமை பெற்ற ஜாதகன்- கிராம தலைவனாகும் அமைப்பு உண்டு. பேச்சு திறமையின் காரணமாக புகழ் பெறுவான்....
சூரியன் + சந்திரன் + புதன் சேர்க்கை- சேர்க்கை சுப ஸ்தானங்களில் வலிமை பெற்ற ஜாதகன்- அரசனைப் போல செல்வமும் செல்வாக்கும் பெற்றவனாவான்


குரு + புதன் + சூரியன் சேர்க்கை சுப ஸ்தானங்களில் வலிமை பெற்றால் ஜாதகன் செல்வந்தன் ஆவான். வீடு, நிலம் ஆகியன பெற்று சிறப்பான வாழ்க்கை அமையும்.
குரு + சுக்கிரன் + புதன் - சேர்க்கை சுப ஸ்தானங்களில் வலிமை பெற்றால் ஜாதகன் பாக்கியமுள்ளவன். இளம் வயதில் செல்வம் சேர்ப்பவன். குடும்பத்தாருடன் ஒற்றுமையாக வாழ்பவன்.

செவ்வாய் + சுக்கிரன் + சனி - சேர்க்கை சுப ஸ்தானங்களில் நின்றால் , ஜாதகனுக்கு பிறக்கும் மகன் நற்பண்புகள் இல்லாதவனாக இருப்பான். அதனால் ஜாதகனுக்கு பொருள் நஷ்ட...மும் மான இழப்பும் ஏற்படும்.
குரு + சனி சேர்க்கை - வலிமை பெற்று சுப ஸ்தானங்களில் நிற்க - ஜாதகன், புகழ் உள்ளவன். செல்வம் சேர்ப்பவன். ஒழுக்கமுள்ளவன், கொடுத் வாக்கை காப்பபாற்றுபவன். பெரியோர்களை மதிக்கத் தெரிந்தவன்.
7-ல் சனி, லக்கனத்தில் - குரு இருக்க பிறந்த ஜாதகனுக்கு வாதநோய், பக்கவாதம் ஏற்படும்.
5, 9 -ல் சனி இருந்து -அந்த சனியை செவ்வாய் , சூரியன் பார்த்தால் பல் வியாதி.
லக்கனத்திற்கு 4 அல்லது 10 -ல் - சூரியன் + செவ்வாய் சேர்க்கை - மலை மீதிருந்து வீழ்ந்து சாவான் அல்லது உயரமான இடத்தில் இருந்து விழுந்து உயிர் துறப்பான்.
லக்னத்திற்கு 10 - ல் சந்திரன், 7 -ல் செவ்வாய், சூரியனுக்கு 2-ல் சனி இருக்க பிறந்தவன் - அங்க வீணணாக இருப்பான்.


லக்கனத்திற்கு 10 -ல் சந்திரன், 7 -ல் சுக்கிரன், 4-ல் பாவர்கள் இருக்கப் பிறந்த ஜாதகனுக்கு புத்திரர்கள் ( சந்ததி ) நசிந்து போகும்.
5- க்குடையவன் 10-லும் , 10 -க்குடையவன் 5-லும் பரிவர்த்தனைப் பெற்று இருப்பது , அல்லது
5- ல் 2 -ஆம் அதிபதி அல்லது புதன் + சனி + செவ்வாய் --- சேர்க்கைப் பெற்று பலம் பொருந்தி இருக்க பிறந்த ஜாதகர்- வைத்தியத்தில் வல்லுனர் + இரண சிகிச்சை புரிவதில் சமர்த்தர்.
1-5-9- க்குடையவர்வர் 6- ல் அமர்ந்து 12-ஆம் அதிபதி 5- அமர்ந்து இருக்கப் பிறந்த ஜாதகி- கர்ப்பச்சேதம் அல்லது வயிற்றிலேயே குழந்தை இறந்து பிறக்கும்.
5 - ஆம் வீட்டில் அல்லது 5 -ஆம் அதிபதியுடன் , அல்லது குரு - இவர்களை செவ்வாய் பார்கினும் அல்லது சேர - பிறந்த ஜாதகிக்கு கர்ப்பத்திலேயே குழந்தை இறந்து பிறக்கும்.
5 -ஆம் வீடு - கன்னி , கும்பமாகி அதில் புத்திர ஸ்தானாதிபதி + மாந்தி நிற்கினும், 5 -ஆம் வீட்டை 6-8-12- க்குடையவர்கள் பார்த்தால் தத்துபுத்திரர் உண்டு.







புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்த பெண் அதிகமாக தூங்குவாள்
சுகமும், உணவும் அதிகமாக விரும்பமாட்டாள்
யாருக்கும் வஞ்சகம் செய்ய மாட்டாள்...
இவள் மனதில் ஆசையும் இருக்காது.,
பயமும் இருக்காது

கொண்ட கணவன் மீது குறை சொல்ல மாட்டாள்
கணவனே தனக்கு எல்லாம் என்று கருதுவாள்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்த பெண் உருவான தொடையும்,
மெலிந்த காலும், கரிய கூந்தலும்,
பருத்த கண்ணும், அளவில்லாத தனங்களும், சிறு சொல் சொல்லுதலும்,
நல்ல அழகும் உடையவள் இவள்.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்த பெண் உச்சந்தலை சிறிது உயர்ந்திருக்கும்
பொய் பேசுவாள், ஆனால் அச்சம் இருக்கும்.
அன்பில்லாதவள் போல் காணப்படுவாள்...
அண்டியவருக்கு உதவி செய்வாள்
உறவினரைக் காப்பாற்றுவாள்
இரவு நேரத்தில் சாப்பிட்டு விட்டுப் படுத்தால் தன் பெருமையை பற்றியே பேசிக் கொண்டிருப்பாள்

ஆண் ஜாதகத்தில களத்திரகாரகனான சுக்கிரன் கன்னியில் நின்று அந்த ஆணுக்கு வரும் மனைவியின் ஜாதகத்தில் கன்னி ராசியில் கேது கிரகம் இருக்கக்கூடாது. இந்நிலையில் உள்ள ஜாதகம் இணைந்தால் அந்த ஆணின் காமம் அந்த பெண்ணிடம் செல்லாது. காம விஷயத்தில் விரக்தியே மிஞ்சும். மற்ற கிரக நிலையை அனுசரித்து விவாகப்பிரிவினைக்கும் இட்டுச் செல்லும். பொருத்தம் பார்க்கும் போது இந்நிலையை கவனித்துச் சேர்க்க நலம்.

மணவாழ்க்கை மகிழ்ச்சிக்கான விதிகள்

ஒருவரின் மணவாழ்க்கை மகிழ்ச்சியாக அமைய லக்கின ராசிக்கு 7ம் பாவமும், களத்திரகாரகன் சுக்கிரனும் லக்கின சுபர்களின் சம்பந்தம் பெறவேண்டும்.
இவர்கள் அம்சத்தில் ஆட்சி உச்சம் பெற்று எந்த வொரு பாவ கிரக தொடர்பு பெறாமல் இருந்தால் அச் ஜாதகரின் திருமண வாழ்க்கையானது மகிழ்ச்சியாக இருக்கும் என்பதை உறுதியாக கூறலாம். மேலும் 7ம் அதிபதி அம்சத்தில் ஆட்சி, உச்சம் பெற்று இருப்பின் திருமணத்திற்கு பிறகு முன்னேற்றம் பன்மடங்கு இருக்கும்....

லக்கினத்திற்கும் லக்கினாதிபதிக்கும் கேந்திர கோணங்களில் 7ம் அதிபதி சுபர் தொடர்பில் இருந்தால் அவரின் மணவாழ்க்கை பிரகாசிக்கும்.
தோஷம் இல்லாத் குருவின் பார்வை 7ம் அதிபதி மேல் இருப்பது யோகத்தை உறுதிசெய்யும். சுபரான சனியின் பார்வை 7ம் அதிபதி மேல் இருந்தால் திருமணத்திற்கு பின் யோகத்தை கொடுத்து நிம்மதியை பரித்துவிடுவார். அல்லது வாழ்க்கை துனைவிக்கு எதேனும் நிரந்தர நோயை தந்துவிடுவார்.
செவ்வாயின் பார்வை அதிகாரம் மிக்க துனைவி அமைவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் உண்டு. பொதுவாக திரிகோணதிபதிகளின் பார்வை 7ம் அதிபதி அல்லது சுக்கிரன் மேல் இருப்பது நலம் பயக்கும்.

ஜென்ம லக்கினத்திற்கு 2, 7ம் அதிபதிகள் 6, 8, 12 ல் மறையாமல் இருப்பதும் 2, 7ம் அதிபதிகள் வக்ரம் பெறாமல் இருப்பதும். ஜென்ம லக்கினாதிபதியும் 7ம் அதிபதியும் ஒருவருக்கொருவர் மறையாமல் இருப்பதும் நல்லது. ஒற்றுமையை நிலை நிறுத்தும்.
மேலும் ஆண்களுக்கு 7ம் அதிபதி மற்றும் சுக்கிரனும், பெண்களுக்கு 7ம் அதிபதி செவ்வாயும் , குருவும் நல்ல நிலையில் இருப்பது அவசியம்.
இவர்கள் யாருடனும் சேர்ந்து கெட்டுவிட கூடாது. குறிப்பாக இவர்கள் நின்ற வீட்டதிபதிகள் ராசியிலோ அல்லது அம்சத்திலோ நீச்சம் பெறக்கூடாது. ராகு கேதுக்களுடன் சேரவும் கூடாது.
ஒருவரின் ஜாதகத்தில் திருமண பாவகங்களான 1,2,4,7,8,10,12 ல் பாவகிரகங்கள் ஏதும் இல்லாமல் பலமாக அமையப் பெற்றால் மண வாழ்க்கையானது மகிழ்சிகரமானதாக‌ இருக்கும்,.பொதுவாக 7ம் மிடம் சுத்தமாக இருப்பது அவசியம்.

சம்போக விஷயம்:

திருமணம் ஆன தம்பதியினரின்  தாம்பத்யம் (உடல் உறவு ) வைத்துக்கொள்ள கூடாத நாட்கள்...

ஏகாதசி , பவுர்ணமி , அமாவாசை ,மாதப் பிறப்பு ஆகும்.
இது தவிர மாதவிடாய் ஏற்பட்ட முதல் மூன்று நாட்களும் சேர்க்கைக்கு ஆகாத நாட்களாகும்.

பெண்ணானவள் மாதவிடாய் முடிந்த நான்காம் நாள் சேர்ந்தால் பிறக்கும் ஆண் குழந்தை சிறந்த கல்வியாளனாக இருக்கும்

6ம் நாள் சேர்ந்தால் பிறக்கும் ஆண் குழந்தை சிறந்த தவ வலிமையும் ஞானமும் உடையதாக இருக்கும்
7,ம் நாள் சேர்ந்தால் பிறக்கும் பெண் குழந்தை கொடைத் தன்மை மிகுந்ததாகவும், தயை தாட்சண்யம் கொண்டதாகவும் இருக்கும்
9ம் நாள் சேர்ந்தால் பிறக்கும் பெண் குழந்தையானது செல்வச் செழிப்பு மிக்கதாக இருக்கும்
10ம் நாள் சேர்ந்தால் பிறக்கும் ஆண் குழந்தையானது காமம் மிகுந்ததாகவும், பெண் மோகங் கொண்டதாகவும் இருக்கும்
12ம் நாள் சேர்ந்தால் பிறக்கும் ஆண் குழந்தையானது சிறந்த பாண்டித்தியமுடைய நிபுணராகவும்
கல்வி , கேள்விகளில் வல்லவனாகவும் விளங்கும்

15,ம் நாள் சேர்ந்தால் பிறக்கும் பெண் குழந்தையும்
16ம் நாள் சேர்ந்தால் பிறக்கும் ஆண் குழந்தையும் சிறந்த யோகியாகவும், ஞான மார்க்கத்தில் ஈடுபடுவதாகவும் இருக்கும்
நல்ல நாட்கள் மட்டுமே பதிவிடப்பட்டு உள்ளது. நன்றி-காளிதாஸர், உத்தர காலாமிர்தம்
புகழ் உடைய குழந்தை பிறக்க. ஒருவருடைய சாதகத்தில் குரு,செவ்வாய்,சந்திரன் ஆகிய மூன்று கிரகங்களும் சேர்ந்து 1,2,5,9,11 ஆகிய ஜந்து வீட்டில் ஏதேனும் ஒரு வீட்டில் இருந்தால் இளமையிலே பேரும்,புகழும் அடைய கூடிய குழந்தை பிறப்பான்.

புத்திர தோஷம்

ஒரு ஜாதகத்தில் புத்திர ஸ்தானம்என்பது ஜந்தாமிடம் அதேபோல்
ஜந்தாமிட அதிபதி புத்திரஸ்தானாதிபதி,குரு புத்திரகாரகன்....
ஒருவருக்கு குழந்தை பாக்கியம் குறைவின்றி கிடைக்க மேற்கண்ட மூன்று ஸ்தானங்களும் பாதிப்படைய கூடாது.


மேற்கண்ட மூன்று ஸ்தானங்களுடன் பாவிகள்( ராகு,கேது,சனி) சேர்க்கை, பார்வை, நட்சததிர சாரம் பெற்று,சுபர் பார்வையின்றி இருந்தாலும்,
இதேபோல் குரு, புத்திர ஸ்தானதிபதி நீசம்,அஸ்தங்கம்,பகை மற்றும் மறைவு ஸ்தானங்களிலிருந்து பாவிகள் பார்வை பெற்று,சுபர் பார்வையின்றி இருந்தாலும் புத்திர தோஷம்

பரிகாரம் :ராகு,கேது ஸ்தலங்களுக்கு சென்று சர்ப்ப சாந்தி பரிகாரம் செய்து கொள்ளவும்.
குரு ஸ்தலத்திற்கு வியாழக்கிழமை சென்று வழிபடவும்.
அரச மரம் சுற்றி வந்து சுமங்கலி பெண்களுக்கு பூ,பொட்டு,மஞ்சள்,துணி தாணம் செய்யவும்

1.ஜந்துக்குசடையவர் புதன் வீட்டில் ஏறி ஏகனாய் தனித்து நின்றால்குழந்தை இல்லை.கூட்டு கிரகம் இருந்தால் அல்லது பார்வை பெற்றால் மறுதாரம் செய்து 7 ஆண்டுக்கு பிறகு ஆண்குழந்தை பிறக்கும்
2.குருவோடு,சூரியன் அவருக்கு ஏழில் சனியும்,செவ்வாயும் சேர புத்திர வம்சம் நிற்காது.சந்திரன் கூடியிருக்கில் தாய்க்கு தோஷம்....
நன்றி கேரள சோதிடம்


திருவாதிரை நட்சத்திரத்திலாவது,அஸ்த்த நட்சத்திரத்திலாவது புத்திர ஸ்தானதிபதி இருந்தால் புத்திரன் இல்லை.

புத்திர ஸ்தானதிபதி புதனாகி சனி வீடு ஏறினாலும், புத்திரஸ்தானாதிபதி சனியாக அமைந்து புதன் வீடு ஏறினாலும் புத்திரம் இல்லை என பிரஹத் சோதிடம் கூறுகிறது.

அதிமதுரம் :
மாதவிடாய் காலத்தில் இதை உட்கொண்டு, பின் கணவனுடன் இணையும் பெண், கருத்தரிப்ப‍து நிச்ச‍யம்!!!
ம‌ணமாகியும் இன்னும் குழந்தை பேறு கிட்ட‍வில்லையே என்று ஏங்கும் கணவன் மனைவிகளை நாம் அன்றாடம் பார்த்து வருகிறோம். அவர் களுக்கு ஓர் இனிப்பான
செய்தி...
அதிமதுரம், உலர் திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50 – 100 கிராம் எடுத்து தண்ணீ­ரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாத விடாய் தொட ங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், 6 ஆவது நாளில் கணவனுடன் தாம்பத் தியம் கொள்ளும் பெண்ணுக்குக் கருத்தரிக்கும். சில பெண்களுக்கு இது தாமதப்படலாம். அவர் கள் சோர்ந்து போகாமல் கருத்தரிக்கும் வரை 2-3 மாதங்கள்வரை இதுபோன்றே சாப்பிட்டு வந்தால் நல்ல பலனை கூடிய விரைவில் எதிர்நோக்க‍லாம்.
 

புதன் அஸ்தங்கம் ஒருவரை கல்வியில் சிறந்தவர் ஆக்கும். புதன் வக்கிர அஸ்தங்கம் ஒருவரை மிக சிறந்த அறிவாளியாக்கும். எனினும் சந்திரனின் நிலை கொண்டே அவர்களின் புத்திசாலிதனத்தை (நல்ல வழி/தீய வழி ) செயல்படுத்தும் என்ற நிலை அமையும். ஏனெனில் புதனின் இயக்கம் சந்திரனின் நிலை பொருத்தது.
இங்கே சந்திர நிலை என்பது
1. சந்திரனுடன் சேர்க்கை பெற்ற கிரகம்,
2. சந்திரனை பார்க்கும் கிரகம்
3. சந்திரன் அமர்ந்த நட்சத்திர அதிபதி....
4. சந்திரன் உச்சம் மற்றும் நீசம்
5. சந்திரன் இருக்கும் ராசி
Note: சந்திரனுடன் குரு சேர்க்கை இதில் சிறப்பு மிக்கது

சந்திரன், சுக்ரன் , ராகு ஆகியவை பெண் கிரகங்கள்சூரியன், செவ்வாய், குரு ஆகியவை ஆண் கிரகங்கள்.புதன், சனி, கேது ஆகியவை அலி கிரகங்கள்.

அமாவாசையில் பிறந்தவர்களிடம் ரகசியம் அறிய முடியாது.பௌர்ணமியில் பிறந்தவரின் ரகசியம் உடன் அறியலாம்.

சுகத்திலும்(4),விரயத்திலும்(12) பாவியிருக்க(பாவ கிரகங்கள்) பஞ்சம ஸ்தானாதிபதியுடன்(%) கதிரோன் மைந்தன்(சனி) கூட பெற்ற தாய் இட்ட சாபத்தால் பிள்ளை இல்லாமல் போகும்.

ஆறுமி ஆறுதன்னில் அம்புலி கதிரோன் சேர
கூறுவார் ஈனம் என்று கொடும் பிணி விரோதன்
சீருள அன்னை தந்தை செல்வமும் விரயமாவதுடன்
வேறு வேறு ஆவார் என்பது வேதியர் உரைத்த வாக்கு."
பலன்: சூரியனும்,சநதிரனும் 12_ல் கூடினால் தாய்,தந்தை செல்வம் குறைவதோடு தனித்தனியாக வாழ்வார்கள்.


பேசிடும் நாலாமாதி பலத் திரி கேண மேறில்
காசி யாத்திரையே போவான் கணக்கனும் பார்வை
யுற்றால்
தேசமும்சுற்றி மன்னன் திசையெட்டும் பேரு மோங்க
வாசமாயிருக்கப் பூவியில் வணங்கு வாரிவரைத்தானே
...
நான்காம் அதிபதி பலம் பெற்று 1-5-9-ல் இருந்தால் பல புண்னிய திர்த்த யாத்திரைகள் செல்வார்கள். புதனும் நான்காம் அதிபதியை பார்த்தால் பல நாடுகள் சுற்றி வருவர்கள். எட்டு திசையிலும் மன்னனைப்போல் புகழ் பெறுவர்கள். உலகில் அனைவரும் இவரை வணங்குவர்கள்.
பிரபல சாமிஜி சர்சைக்குரீய ஒருவர் ஜாதகத்தில் இந்த அமைப்புள்ளது.

நவக்கிரக காரகத்துவங்கள் :

சூரியன்: தந்தை, மகன், வலது கண்,அரசாங்கம், அமைச்சர், ஆத்மா, புகழ்,கீர்த்தி, மாநகரம், நிர்வாகப்
பொறுப்பில் உள்ளவர், சிவன்,...அரசியல்வாதி, வீட்டின் வலது ஜன்னல்,சந்தன மரம், தேக்கு, பொன் ஆபரணம்,மண், அணுத் தொழில், அறுவைசிகிச்சை நிபுணர், துப்பறிதல்,தந்தையின் தொழில்.

சந்திரன்: மனம், ஆழம், அறிவு, தாய்,மாமியார், திரவப் பொருள், பயணம்,உணவுப்பொருள், இடது கண்,
இடமாற்றம், கற்பனை, பால், நதி,கள்ளக்காதல், வீட்டின் இடப்புற ஜன்னல்,துர்நடத்தை, குளிர்ச்சி, தாய்மாமன்மனைவி, சோதிடம், அரிசிவியாபாரம், பழ வியாபாரம், கவிதை,ஓவியம், நீர் தொடர்பான தொழில்,பார்வதி.

செவ்வாய்: சகோதரன், கணவன், பழி வாங்குதல், மனவலிமை,காவல்துறை, இராணுவம், வெட்டுக்
காயம், வீரம், பூமி, ரத்தம், பல்,முருகன், எதிரிகள், கூர்மையான ஆயுதம், திருமணம், விவசாயம்,
அடுப்பு, மின் கருவி, பாறை, வீட்டு உத்திரம், தீயணைப்புத் துறை,செங்கல் சூளை, தாதுப் பொருட்கள்,
பொறியியல் துறை, சுரங்கத் துறை, அறுவை சிகிச்சை.

 செவ்வாய் காரகத்துவம் : { ஆண்கள் }

கட்டுக்கோப்பான உடல், குறையில்லாத ரத்த ஓட்டம், சுகபோகம் தரும் வீரியம், ஆகிய தன்மைகள், செவ்வாய் நல்ல முறையில் ஒரு ஆண் ஜாதகத்திலிருந்தால் அமையக்கூடியனவாகும்.
 செவ்வாய் காரகத்துவம்: { பெண்கள் }
காலத்தே பூப்பெய்துதல், முறையான மாத விடாய் ஆகியன, ஒரு பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் நல்ல முறையில் இருந்தால் அமையக்கூடியனவாகும்.


புதன்: கல்வி, அறிவு, வணிகம்,பேச்சுத்திறன், நிலபுலன், கணக்கர்,கணிதம், பத்திரிகைத் தொழில்,
நண்பன், இளைய சகோதரி, சகோதரன், தாய் மாமன், காதலி, காதலன், சட்டம்,கைகள், கழுத்து, வரவேற்பு அறை,உள்ளங்கை, சோதிடம், தொலை பேசி,புலனாய்வுத் துறை, தரகு,
மஹாவிஷ்ணு, தூதரகப்பணி.

குரு: ஜீவன், வேதம், பக்தி, ஞானம்,ஒழுக்கம், கோவில், வழக்கறிஞர்,நீதிபதி, உயர்குலம், ஆசிரியர்
கௌரவம், சாந்த குணம், தெற்கு,சதை, தொடை, பூஜை அறை, பசு,அமைச்சர், நிர்வாகி, மூக்கு,
கரும்பு, வாழை, சோதிடம்,நீதித்துறை, தட்சணாமூர்த்தி.

சுக்கிரன்: மனைவி, சகோதரி,காமம், காதல், பாடகன், நடிகன், வீடுசுகம், வாசனைத் திரவியங்கள்,
ருப்பை, கன்னம், வட்டித் தொழில், மதுபானம், ஆடை ஆபரணங்கள், மலர்,வேசி, திருமணம், பிந்து, பணம்,இனிப்பு, சிறுநீரகம், கேளிக்கை விடுதி, துணிமணிகள், பிரம்மா,மஹாலட்சுமி, மூத்த சகோதரி,
மூத்த மரு மகள்.

சனி: மூத்த சகோதரன், சேவகன்,கழுதை, எருமை, தொழில்காரகன்,தாடை, பிட்டம், பூட்டு, ஜீரண
உறுப்பு, சேமிப்பு அறை,சாப்பாட்டு அறை, சாலை, வாயுசம்பந்தமான நோய், நிலக்கரி,
சோம்பேறித்தனம், பிச்சை எடுத்தல்,தொழிற்சாலையில் எடுபிடிவேலை, ஹோட்டல் சுத்தம் செய்யும்
வேலை, பழைய பொருள் விற்பனை,துப்புறவுத் தொழில், கால்நடைவளர்த்தல், லட்சுமி, பரமசிவன், கர்மா,அரசு தூதுவர்.

ராகு: வாய், உதடு, காது, முஸ்லீம்,கோபுரம், அகலமான வீதி, தகப்பன்வழிப் பாட்டன், தலை, நிழல், மாயை,குடை, பாம்பின் தலை, கடத்தல்தொழில், உலர்ந்த தோல், பிளாஸ்டிக்,இரசாயனம், மொட்டை மாடி,சேமிப்புக் கிடங்கு, விதவை,தொழுநோய், மருத்துவம்,வெளிநாட்டு வர்த்தகம், விபசாரம்
செய்தல், வாகனம் ஓட்டுதல், சினிமாத்தொழில், போகக்காரகன்.

கேது: சாயா கிரகம், மோட்ச காரகன்,கயிறு, நூல், கூந்தல், மூலிகை,பாம்பின் வால், குறுகிய சந்து,
மருத்துவம், சோதிடம், ஆன்மீகம்,சட்டத்துறை, துறவறம், தாய்வழிப்பாட்டன், நரம்பு, குளியல் அறை,
ஞானம், தவம், மனவெறுப்பு,கொலை செய்தல்.



பாதகாதிபதி யார் ??
=======================

சரத்திற்கு (மேசம், கடகம், துலாம், மகரம்) லாப ஸ்தானமும்
ஸ்திர ராசிக்கு (ரிஷபம், சிம்மம், விருச்சகம்) பாக்ய ஸ்தானமும்
உபயதிற்க்கு (மிதுனம், கன்னி, தனுசு, மீனம்) களத்திர ஸ்தானமும்...
பாதக ஸ்தனங்கள் மற்றும் அதன் அதிபதிகள் பாதகாதிபதிகள்.

சர லக்னத்து பாதகாதிபதிகள் - கால புருஷ சக்கரத்திற்கு பண பர கேந்திரங்களையும் (2, 5, 8, 11) பாதிப்பதை காணவும்
ஸ்திர லக்ன பாதகாதிபதிகள் - கால புருசனின் லக்ன கேந்திரங்களையும் (1, 4, 7, 10) பாதிப்பதை காணவும்
உபய லக்ன பாதகாதிபதிகள் - கால புருசனின் அசுப கேந்திரம் என்னும் அபோலீகதையும் (3, 6, 9, 12) பாதிப்பதை காணவும்.


இதன் மூலம் சர லக்ன பாதகாதிபதி பலம் பெற, பாதகாதிபதி தன் காரகத்துவ மூலம் பணவரவை தடுக்கும், பணம் தேவையற்ற வழிகளில் செலவழியும் அல்லது சேர்த்துவைத்த பணத்தால் அவமானம் ஏற்படும்.
இதன் மூலம் ஸ்திர லக்ன பாதகாதிபதி பலம் பெற, கேந்திரத்தில் இருக்க, பாதகாதிபதி காரகதுவதில் தொழில், மனைவி மற்றும் ஆரோக்கியம் மூலம் அவமானம், இழப்பு ஏற்படும்.
இதன் மூலம் உபய லக்ன பாதகாதிபதி பலம் பெற, கேந்திரத்தில் இருக்க, பாதகாதிபதி காரகதுவதில் வீரிய இழப்பு, எதிரிகளால் தொல்லை மற்றும் காம எண்ணங்களால் பாதிப்பு போன்றவைகள் ஏற்படும்.


ரிஷிபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் ஆகிய நான்கு லக்னங்களும் ஸ்திர லக்னங்கள்.இந்த லக்னங்களில் பிறந்த பெரும்பாலான ஜாதகர்கள் ஜோதிட கலையில் ஆர்வம் உள்ளவர்களாவும் மற்றும் சிறந்த ஜோதிடர்களாவும் திகழ்கிறார்கள்
பாதகாதிபதி எப்போது நன்மை செய்வார்
====================================

1. பாதகாதிபதி லக்ன திரிகோணத்தில் இருந்து, திரிகோண அதிபதி பலம் பெற நற்பலன்கள் உண்டாகும். முன்னோர்கள் செய்த புண்ணிய காரியங்கள் ஜாதகனை காக்கும்.
2. பாதகாதிபதி லக்ன தொடர்பு கொள்ளாமல், லக்னத்துக்கு மறைவு பெறும் போது நன்மை செய்வார்கள். கெட்டவன் கெட நற்பலன்கள் உண்டு
3. பாதகாதிபதி நீச பங்கம் பெற்று இருக்க நன்மை உண்டு. கெட்டவன் கெட நற்பலன்கள் உண்டு
4. தன் சுய வீட்டிற்க்கு மறைந்திருந்தால் நன்மை உண்டு. கெட்டவன் கெட நற்பலன்கள் உண்டு
5. பாதகாதிபதி திரிகோனாதிபதிகள் நட்சத்திரத்தில் இருக்க பலன் உண்டு. கெட்டவன் கெட நற்பலன்கள் உண்டு
6. பாதகாதிபதி வக்கிரம் பெற நன்மை உண்டு. கெட்டவன் கெட நற்பலன்கள் உண்டு
7. பாதகாதிபதியை சனி பார்க்க நன்மை உண்டு. கெட்டவன் கெட நற்பலன்கள் உண்டு
8. பாதகாதிபதி ராகு மற்றும் கேதுகளின் சமந்தம் பெற நன்மை உண்டு. கெட்டவன் கெட நற்பலன்கள் உண்டு
9. பாதகாதிபதி பலம் இழந்தால் பாதக ஸ்தானமும் பலம் இழக்கும் என்ற கூற்றுபடி, பாதகாதிபதியால் பாதிப்பு பெரிய அளவில் இருக்காது.
10. பாதகாதிபதி திரிகோண அதிபதியுடன் பரிவர்த்தனை பெற்றால் நற்பலன்கள் உண்டு.
11. பாதகாதிபதி அஸ்தங்கம் பெற, அந்த கிரக காரகத்துவம் பாதிக்கபட்டு, பாதகா ஸ்தனம் பலம் இழக்கும்.
12. பாதகாதிபதி ராசியதிபதியாக வரும்போது தீமைகள் செய்வதில்லை.


குறிப்பு: குரு பாதகாதிபதி வரும் கன்னி மற்றும் மிதுன லக்ன ஜாதகத்தில், குருவின் பார்வை நமையே செய்யும். ஏனெனில் பார்வை என்பது ஒரு கிரகத்தின் காரகத்துவ வெளிபாடு என்பதே. அது பாவஆதிபத்திய வெளிபாடு அல்ல.


பாவம்
6,8,12 அதிபதிகள் லக்கின அசுபர்கள் இல்லை. லக்கின அசுபர்கள் 3,6,11 ஸ்தானாதிபதிகள் தான். மேச லக்கினம் 1,8க்கு அதிபதி செவ்வாய் லக்கின அசுபர் இல்லை, ரிஷப லக்கினம் 1,6 க்கு அதிபதி சுக்கிரன் அசுபர் இல்லை, கும்ப லக்கினம் 1,12 அதிபதி சனி அசுபர் இல்லை. எந்த பாவமும் நல்ல பாவம் இல்லை, எந்த பாவமும் கெட்டபாவமும் இல்லை. எந்தக் கோளும் நல்வர்கள் இல்லை எந்தக் கோளும் கெட்டவர்கள் இல்லை. அந்த அந்த பாவங்களும் அதன் வேலையை செய்கிறது. இதெபோல் கோள்களும். 6,8,12 ல் நல்ல காரகத்துவங்களும் இருக்கத்தான் செய்கிறது. உதாரணம். 6 - உப ஜெயம். 8 - பணபரம் (பணம் வரும் வழி). 12 - வெளி நாட்டு வாசம் / படுக்கை சுகம்.
 
 ராகு
உயிர்யுள்ள தன்மைகளை அழிக்கும்...உயிர் அற்ற தன்மைகளை பெருக்கும்
கேது
உயிர்யுள்ள தன்மைகளை பிரிக்கும்...உயிர் அற்ற தன்மைகளை அழிக்கும்

கிரக நீச்சம் யாரைபாதிக்காது?
*********************************************

சூரியன் - வேளாளர்,முதலியார்,வேடர்கள்,மலைவாசிகள்
சந்திரன்-
வன்னார்,செம்படவர் செவ்வாய்...
குயவர்,கருமன்
புதன் ,செட்டியார்,வாணியர்,கோமுட்டி
குரு
பிராமணர்,சேட்டு,ஜனர்கள்,
சுக்கிரன் வேசிகள்,நட்டுவனர்,கோனார்,மந்திரி,இடையர்
சனி
அரிஜனம்
ராகு
முகமதியர்கள் கேது
கிருஸ்துவர்கள், மேற்கண்டவர்களுக்கு கிரகநீசத்தினால்பாதிப்புஇல்லை


திதி சூன்ய ராசிகள்:

திதி - சூன்ய ராசிகள் -அதிபதிகள்
பிரதமை - மகரம், துலாம் - சனி ...
சுக்கிரன்

துதியை - தனுசு, மகரம் - குரு சனி
திருதியை - மகரம், சிம்மம் - சனி
சூரியன்
சதுர்த்தி - கும்பம்,ரிஷபம் - சனி
சுக்கிரன்
பஞ்சமி - மிதுனம், கன்னி - புதன்
சஷ்டி - மேஷம், சிம்மம் - செவ்,
சூரியன்
சப்தமி - தனுசு, கடகம் - குரு , சந்திரன்
அஷ்டமி - மிதுனம், கன்னி - புதன்
நவமி - சிம்மம் - சூரியன்
தசமி - விருச்சிகம் - செவ்வாய்
ஏகாதசி - மகரம்,துலாம் - சனி
சுக்கிரன்
திரயோதசி - ரிஷபம் , சிம்மம் - சுக்கிரன்,
சூரியன்
சதுர்தசி - மிதுனம், கன்னி,
் - புதன்
துவாதசி - துலாம் மகரம் - சுக சனி
# பௌர்ணமி, அமாவாசை திதி சூன்ய ராசிகள் இல்லை.
# ராகு, கேது சூன்ய ராசிகளில் இருந்தால் அதன் தசாபுத்திகளில் நன்மை தரும்.
# ஒருவர் துதியை திதியில் பிறந்தவரானால் தனுசு, மகரம் சூன்ய ராசிகளாகிறது. அதன் அதிபதிகள் குரு , சனியின் தசாபுத்திகளில் நன்மையான பலன்கள் நடைபெறுவதில்லை.
# சூன்யமடைந்த கிரகங்கங்கள் நலம் தரும் பாவங்களான, 1,2,4,5,7,9,10,11 இல் இருந்தால் நன்மை தருவதில்லை.
# அவை லக்கினத்திற்கு மறைவு ஸ்தானங்களான 3,6,8,12 இல் இருந்தால் நலம் தரும்.
# கேந்திர ஸ்தானங்களில் ஒரு கிரகம் சூன்யம் பெற்றால் தோஷம் நீங்கி நன்மை தரும்.
# சூன்ய ராசிக்குரிய கிரகம் வக்கிரம் நீசம் பெற்றால் நன்மையே தரும்.
# திதி சூன்யம் பெறும் கிரகங்கள் தன் காரக பலத்தை இழந்துவிடும். அதன் காரகத்துவத்தால் பாதிப்பு ஏற்படுத்தும்
# செவ்வாய் திதி சூன்யம் பெற்றால் உடன் பிறப்புகளால் நன்மை இல்லை.
# சந்திரன் திதி சூன்யம் பெற்றால் தாயாரின் அன்பை பெற மாட்டார்.
# சூரியன் திதி சூன்யம் பெற்றால் தந்தை பாசம் குறையும்
# புதன் திதி சூன்யம் பெற்றால் கல்வியில் தடங்கல் ஏற்படும்
# சுக்கிரன் திதி சூன்யம் பெற்றால் திருமணம் தாமதப்படும்
# குரு திதி சூன்யம் பெற்றால் புதல்வர்களால் நன்மை இல்லை
# சனி திதி சூன்யம் பெற்றால் தொழிலாளர்களால் பாதிப்பு ஏற்படும்

சகல தேவதை வசிய அஞ்சனம் :
இதனை நெற்றியில் திலகம் இட்டுக் கொண்டு எந்த மந்திரம் ஜெபம் செய்தாலும் அந்த தேவதை பிரசன்னமாகி நமக்கு வசம் ஆகும்
தொட்டால் சுருங்கி வேர் பேய்தும்பை வேர் சிருமுன்னை வேர் வெண்குன்றி வேர் வெள்ளெருக்கன் வேர் பேய்தேத்தான் வேர் புன்னை வேர் சந்தனவேர்
இவைகளை முறையாகக் காப்பு கட்டி சாபம் நிவர்த்தி செய்து ஹோமத் தீயில் கறுக்கி எடுத்து வைத்துக் கொண்டு பச்சை கற்பூரம் புனுகு கொரோசம் கும்குமப்பு கஸ்துரி இவைகளை வகைக்கு ஒரு குன்றிமணி பிரமாணம் சேர்த்து ஒரு ஜாமம் அரைத்து மை...யை எடுத்து வெள்ளி சிமிழில் பத்திரம் செய்யவும்.


சத்துரு வசிய அஞ்சனம்:
வெள்ளைக் காக்கரட்டைவேர் வெள்ளெருக்கன் வேர் வெண் குன்றிவேர் வெள்ளை விஷ்ணு காந்தி வேர் வெண்கொழிஞ்சிவேர் ஆனைவணங்கி வேர்
இவைகளை முறைப்படி காப்பு கட்டி சாபம் பொக்கி ஆணிவேர் அறாமல் வெட்டி எடுத்து தீயில் கறுக்கி எடுத்துக் கொண்டு பச்சைக் கற்பூரம் கொரோசனம் புனுகு குங்குமப்பூ கஸ்துரி இவைகளை வகைக்கு ஒரு குன்றிமணி எடை வீதம் மேல்கண்ட வேருடன் சேர்த்து கலுவத்திலிட்டு காராம்பசு நேய் விட்டு இரண்டு ஜாமம் அரைத்து கொம்பு சிமிழில் பத்திரம் செய...்யவும்
இதற்கு பூஜை மந்திரம்
ஒம் க்லீம் ஸெளம் ஸ்ரீம் நமோ பகவதி ராஜமோகினி க்லீம் க்லீம் சகல ஸ்தாவர ஜங்கமம் மமவசம் ஆகர்ஷய ஆகர்ஷய ஸ்வாஹா
இந்த மந்திரத்தை பத்தொன்பது தினம் ஜெபம் செய்ய வேண்டும் தினம் 1008உருவு வீதம் ஜெபம் செய்தால் மை உயிர்பெறும் இதன் பின் தான் இதைக் கொஞ்சம் எடுத்து நெற்றியில் அணிந்து சென்றால் பகையாளி கிடையாது எதிரி நம்மை காணும் போது வணங்கி மரியாதை செய்வான் இந்த சத்ரு வசியம் மட்டுமின்றி சத்துரு இல்லாமல் எல்லா நன்மையும் கூட அடையலாம்! பெண்களும் இது பயன்படுத்தலாம் ! சத்துருயாராயினும் நமக்கு நண்பராவது உறுதி !
 ஆன்மாவைப் பற்றி அறியும் கலைக்குப்பெயர் ஆன்மீகம்