For Read Your Language click Translate

Showing posts with label மரங்கள் நமக்கு வரங்கள். Show all posts
Showing posts with label மரங்கள் நமக்கு வரங்கள். Show all posts

12 May 2014

கறிவேப்பிலை-- ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்தது என்ன?



புற்று அபாயத்தை தடுக்கும் கறிவேப்பிலை உணவின் வாசனையை அதிகரிக்கத்தான் கறிவேப்பிலை பயன்படுகிறது என்று பலர் கருதுகின்றனர். இதனால் தான் சாப்பிடும்போது உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து கீழே போட்டு விடுகிறார்கள். ஆனால் இனிமேல் இப்படிச் செய்யாதீர்கள். ஏனெனில் கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.


கறிவேப்பிலையின் தாவரப்பெயர் முரையா கோய்னிஜா. இது ருட்டேசி என்ற தாவரக் குடும்பத்தை சேர்ந்தது. கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் போன்றவைகள் உள்ளன. மேலும் கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின், ஆஸ்பார்டிக் அமிலம், அயாமைன், புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் உள்ளது. இவைகள் தான் கறிவேப்பிலைக்கு இனிய மணத்தை தருகிறது. பல மருத்துவ குணங்களையும் வெளிப்படுத்துகிறது.

இந்திய சமையலில் வாசனைக்கு சேர்க்கப்படும் மசாலா அயிட்டமான கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை அண்மையில் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். நியூட்ரிசன் சைன்டிஸ்ட் ஆப் சிசைய்ரோ என்பது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம்.

மசாலாப் பொருட்கள் நல்ல வாசனை உடையது மட்டுமல்ல அது பல மருத்துவ குணங்களை கொண்டது என்பதை அந்நிறுவனம் கண்டறிந்துள்ளது. இந்நிறுவன தலைமை ஆராய்ச்சியாளர் லனேகோபியாக் கறிவேப்பிலை சிறந்த ஆண்டி ஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்கிறார். இது புற்றுநோய், இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் கறிவேப்பிலையால் ஞாபக சக்தி எளிதில் கிடைக்கிறது என்கிறார் இவர்.


கறிவேப்பிலையிலிருந்து எண்ணை எடுத்து அதை நுரையீரல், இருதயம், கண்நோய்களுக்கு தலைக்கு தேய்க்கும் எண்ணையாக பயன்படுத்தலாம் என இங்கிலாந்தில் உள்ள வேளாண் மருத்துவ ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. சாதாரணமாக 100 கிராம் கறிவேப்பிலையை அரைத்து சாற்றை எடுத்து 100 கிராம் தேங்காய் எண்ணையில் கலந்து இதமான சூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சி தினசரி தலைக்கு தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம் மங்கும். பரம்பரை நரை வராது. கண்பார்வை குறைவு ஏற்படாது. கறிவேப்பிலையை அரைத்து சாப்பிட்டால் நுரையீரல், இருதய சம்பந்தப்பட்ட ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறையும் என்கிறது இந்நிறுவனம்.


திருவனந்தபுரத்திலுள்ள கேரளா யூனிவர் சிட்டியில் கறிவேப்பிலையையும், கடுகையும் தாளிக்க பயன்படுத்தினால் அதனால் நன்மை உண்டா? என்பது பற்றி ஆராய்ந்தார்கள் மருத்துவ குழுவினர். அதில் கறிவேப்பிலையும், கடுகும் சேர்ந்து நமது திசுக்களை அழிவிலிருந்து பாதுகாக்கிறது என்பது தெரிய வந்தது. மேலும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதையும் தடுக்கிறது. பிரிரேடிக்கல்ஸ் உருவாவதால்தான் டி.என்.ஏ. பாதிக்கிறது. செல்களிலுள்ள புரோட்டின் அழிகிறது. விளைவு கேன்சர், வாதநோய்கள் தோன்றுகின்றன. தாளிதம் செய்யும்போது நாம் பயன்படுத்தும் கறிவேப்பிலையும், கடுகும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதை தடுப்பதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

இதுதவிர நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை இலையையும், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாக குறைத்து விடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் கனமாவது குறைக்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும். கறிவேப்பிலை ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும், அறிவை பெருக்கவும் உதவுகிறது. கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும் என்கிறார்கள் மருத்துவர்கள். Posted by hayura hayu at 06:43 No comments:


உடலும் பூரண அமைதி பெற அவசியம் குழு


ஏக்கருக்கு 80ஆயிரம் தரும் கருவேப்பிலை

5ஞாயிறு,மே,
1 கருத்துகள்


கருவேப்பிலை இல்லாத சமையல் இருக்காது. கருவேப்பிலை சாகுபடி எப்போதும் நல்ல லாபம் தருவதாக இருக்கிறது. தொடக்கத்தில் பயிரிட்டு வளர்ப்பது கடினம் போல் தோன்றினாலும், வளர தொடங்கி விட்டால் விவசாயிகளை வியாபாரிகள் நிலத்திற்கு தேடிவந்து எடை போட்டு பணத்தை கொடுத்து வாங்கி செல்கிறார்கள். கருவேப்பிலை களர்நிலம் தவிர மற்ற நிலங்களில் நன்றாக வளரக்கூடியது. செம்மண்ணில் சிறப்பாக வளரும். விதைகளை சேகரித்து எடுத்துக் கொண்டு சிறிய பாலிதீன் பைகளில் மண்நிரப்பி அதில் விதைகளை ஊன்ற வேண்டும். ஆடி மாதத்தில் விதை வாங்கி வந்து நாற்று விட்டு, ஐப்பசி மாதத்தில் வயலில் எடுத்து நட வேண்டும். ஆடி மாதத்தினை தவிர மற்ற காலங்களில் விதை எடுக்க கருவேப்பிலை பழங்கள் கிடைக்காது. விதை ஊன்றும் போது அரை விதை மண்ணின் உள்ளேயும், மீதி விதை வெளியேயும் இருக்குமாறு ஊன்ற வேண்டும். விதை சற்று ஆழமாக மண்ணிற்குள் புதைந்து விட்டால் முளைக்காமல் போய்விடும். ஏக்கருக்கு எட்டாயிரம் பாலிதீன் பைகள் கொண்ட விதை நாற்றுகளை தயார் செய்யலாம். இப்படி விதை ஊன்றப்பட்ட பைகளின் மேல் வைக்கோலினை பரப்பி 15 நாள்கள் வரை வைக்க வேண்டும். பதினைந்து நாட்களுக்கு பிறகு வைக்கோலினை நீக்கி விட வேண்டும். தொடர்ந்து நான்கு மாதங்கள் வரை நீர் விட்டு வரவேண்டும். இந்த நிலையில் அரை அடி உயரத்திற்கு செடி வளர்ந்திருக்கும். இந்த கட்டத்தில் செடிகளை எடுத்து வயலில் நடவேண்டும்.
ஒவ்வொரு செடிக்கும் இரண்டு அடி இடைவெளி இருக்க வேண்டும். தண்ணீர் செல்லும் பாரின்அளவு இரண்டரை அடி இருக்க வேண்டும். செடியினை அரை அடி ஆழத்தில் குழி தோண்டி நடவேண்டும். செடி வைத்த உடன் தண்ணீர் விட வேண்டும். பிறகு 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விட்டு வர வேண்டும். கருவேப்பிலை வறட்சியை தாங்கி வளரும் பயிர் ஆகும். முதல் அறுவடை செய்ய ஆறு மாதம முதல் எட்டு மாதம் ஆகும். அதன் பிறகு மூன்று மாதத்திற்கு ஒரு முறை அல்லது எண்பது நாட்களுக்கு ஒரு முறை அறுவடை செய்யலாம்.
கருவேப்பிலையை இலைப்புள்ளி மற்றும் அசுவனி போன்ற நோய்கள் தாக்குவதுண்டு. இந்த நோயை அகற்ற மோனோசில், பெவிஸ்டின், ஸ்பார்க், செப்டோசைக்கிள் போன்ற மருந்துகளை தெளிக்கலாம். கராத்தே அல்லது மோனோசில் மருந்துடன், பெவிஸ்டின் பவுடர் 25 கிராம் அல்லது செப்டோ 25 கிராம் கலந்து கைத்தெளிப்பான் கலந்து தெளிக்க வேண்டும். மூன்று மாதத்திற்கு ஒரு முறை 20:20 பாக்டம்பாஸ் உரம் இடவேண்டும். (ரசாயன உரம் பயன்படுத்த விரும்பாதவர்கள் கடைகளில் கிடைக்கும் இயற்க்கை பூச்சி கொல்லிகளை பயன்படுத்தலாம்) ஆண்டிற்கு ஒரு முறை அறுவடைக்கு பின் தொழுஉரம் அல்லது கோழி உரம் இட்டு மாட்டு ஏர் மூலம் பார் போட வேண்டும்.
மூன்று மாதத்திற்கு ஒருமுறை தரை மட்டத்திலிருந்து ஒரு இன்ச் விட்டு மீதி உள்ள இலைகளை அறுத்து எடுத்துக்  கொள்ள வேண்டும். இந்த நிலையில் ஏக்கருக்கு குறைந்த பட்சம் நான்குடன் முதல் 5 டன் வரை மகசூல் கிடைக்கும். சித்திரை மாதத்திலிருந்து ஆவணி மாதம் வரை கருவேப்பிலை நன்றாக வளரும். அதாவது வெயில் காலத்தில் நல்ல மகசூல் இருக்கும். விலை எட்டு ரூபாயிலிருந்து 12 ரூபாய் வரை இருக்கும். இதனால் ஏக்கருக்கு80 ஆயிரம் முதல் 1 லட்சத்திற்கும் கூடுதலாக வருமானம் கிடைக்கும்.

காளான் வளர்ப்பு மற்றும் காளான் உணவுப் பொருட்கள் பயிற்சி பெற அரிய வாய்ப்பு

16செவ்வாய்,ஏப்ரல்,
0 கருத்துகள்


மதுரையை சேர்ந்த வாப்ஸ் நிறுவனம் வேளாண்துறை பட்டதாரிகளின் திறன்மேம்பாட்டுக்காகவும், அவர்கள் அக்ரி கிளினிக் என்ற விவசாயிகளுக்கான வேளாண் சேவை மையம் தொடங்கவும் பயிற்சி அளித்து வருகிறது. மத்திய அரசின் விவசாயத் துறை அமைச்சகத்தின் ஒப்புதலுடன் இங்கு பி.எஸ்.சி வேளாண்மை, பி.எஸ்.சி தோட்டக்கலை, பி.எஸ்.சி ஊரகவியல் அறிவியல், பி.எஸ்.சி வனவியல் உள்ளிட்ட வேளாண்மை சார்ந்த பட்டதாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மதுரை மற்றும் புதுச்சேரியில் வாப்ஸ் நிறுவனத்தின் மையங்கள் அமைந்திருக்கின்றன.
தற்போது காளான் தொடர்பான உணவுப் பொருட்களுக்கு மதிப்பு அதிகரித்து வரும் இந்த வேளையில் அது தொடர்பான தொழில்களை தொடங்க விரும்பும் தொழில்முனைவோருக்கு காளான் வளர்ப்பு மற்றும் காளான் உணவு பொருட்கள் தயார் செய்யும் பயிற்சியை இந்த நிறுவனம் வழங்குகிறது. காளான் வளர்ப்பு மற்றும் விற்பனையில் சிறந்த தொழில்நுட்ப நிபுணர்கள் மூலம் இந்த பயிற்சி வழங்கப்படுகிறது. மிகவும் குறுகிய கால இந்த பயிற்சியை காளான் வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்கள் பயன்படுத்திக் கொண்டு காளான்வளர்ப்பை தொடங்கலாம்.
இது குறித்து மேலும் விபரமறிய....வாப்ஸ்
84897  27415  என்ற எண்ணில் அழைக்கலாம் .



அரிய வகை "தாழி' பனைமரம் கண்டுபிடிப்பு - அழிந்து வரும் தமிழரின் அடையாளம்

சுவடி எழுத பயன்படும் அரிய வகை "தாழி' பனைமரம் கண்டுபிடிப்பு


பண்டைய காலத்தில் எழுதுவதற்கு தேவையான ஓலைச் சுவடிகள் தாழிப்பனை மரங்களில் இருந்து பெறப்பட்டன. இந்த தாழிப்பனை மரங்களில் ஒன்று செம்பரம்பாக்கம் அருகே தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மரத்தில் இதுவரை இல்லாத வகையில் உலகத்திலேயே மிகப்பெரிய பூங்கொத்து பூத்துள்ளதும். அரிய வகையான தாழிப்பனை குறித்து, வருங்கால சந்ததியினர் தெரிந்துகொள்ளும் வகையில...், அதை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பனை குடும்பத்தில் மொத்தம் 21 வகையான மரங்கள் உள்ளன. இவற்றில், மிகவும் அரிதான மரம் தாழிப்பனை (கோரிபா அம்ப்ராக்ரி பெரா). சாதாரண பனை மரத்தைப் போல் இல்லாமல் இந்த மரத்தின் மட்டை நீளமாக இருக்கும்.



சங்க காலத்தில் தென்னிந்தியாவில் தாழிப்பனை மரம் பரவலாக காணப்பட்டது.குறிப்பாக, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இந்த மரத்தை காண முடிந்தது. சாதாரண பனை மரம் வருடத்திற்கு ஒரு முறை காய் காய்க்கும். ஆனால், அரிய வகையான தாழிப்பனை வாழ்நாளில் ஒரே ஒரு முறை மட்டுமே காய்க்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பண்டைய காலத்தில் சுவடிகள் எழுத இந்த மரத்தில் இருந்து பெறப்படும் ஓலைகளைத்தான் பயன்படுத்தினர். இம்மரத்தின் ஓலைகளை பக்குவப்படுத்தி, சுவடிகள் எழுதப்பட்டன.
தாழிப்பனை மரம் நன்கு வளர்ந்து 65 முதல் 70 ஆண்டுகளில் பூ பூக்கும். ஒரு முறை பூத்த பின், அந்த மரம் காய்ந்து விடும். பண்டைய காலத்தில் இம்மரத்தில் பூக்கிறது என்பது தெரிந்தவுடன், பூவின் காம்பை வெட்டி அதிலிருந்து கள் இறக்குவர்.காரணம், வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே பூப்பதால், அனைத்து சத்துகளும் கள்ளில் கிடைக்கிறது.


மருத்துவ குணம் கொண்ட இந்த கள்ளை குடித்தால் தீராத நோய்கள் நீங்கும்.
காலப்போக்கில் தாழிப்பனை இனம் மெல்ல மெல்ல அழியத் தொடங்கியது. தற்போது, தென்னிந்தியாவில் ஒரு சில இடங்களில் மட்டுமே இம்மரம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவைத் தவிர வேறு எந்த நாட்டிலும் தாழிப்பனை இல்லை.


இந்நிலையில், சென்னை அருகே செம்பரம்பாக்கத்தில் அரிய வகையான தாழிப்பனை மரம் ஒன்று இருப்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த மரத்தில் உலகிலேயே மிகப்பெரிய பூங்கொத்து பூத்துள்ளதும் தெரிந்துள்ளது.

இது குறித்து, சென்னையில் இயங்கி வரும் சமூக வனவியல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி சங்கத்தின் நிர்வாக இயக்குனர் ஜெயினலாவுதீன் கூறியதாவது:

தாழிப்பனை மரங்களை ஒரு மனிதன் தன் வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே பார்க்க முடியும். ஓலைச் சுவடிகள் பல நூறு ஆண்டுகளாகியும் நல்ல நிலையில் இருப்பதைக் கொண்டே இந்த மரத்தின் சிறப்புகளை நாம் தெரிந்து கொள்ளலாம்.தற்போது, தென்னிந்தியாவில் சில தாழிப்பனை மரங்களே உள்ளன.
நமது சந்ததியினர் ஓலைச் சுவடிகளின் சிறப்புகளை பற்றி தெரிந்து கொள்ள இந்த மரங்களே உதாரணம் என்பதால், அவை அழியாமல் பாதுகாக்கப்பட வேண்டும். செம்பரம்பாக்கத்தை அடுத்த மேப்பூர் தாங்கல் கிராமத்தில் ஒரு மூதாட்டி வீட்டில் அந்த அரிய வகையான தாழிப்பனை மரம் இருப்பதை, பொதுமக்கள் கொடுத்த தகவலின் படி கண்டுபிடித்தோம்.

இந்த மரத்தில் இதுவரை இல்லாத அளவில் உலகி லேயே மிகப்பெரிய பூங்கொத்து பூத்துள்ளது என்பது வியப்பாக உள்ளது. பூங்கொத்தின் நீளம் 24 அடி. பூங்கொத்தில் குறைந்தபட்சம் 10 லட்சம் முதல் அதிகபட்சமாக 30 லட்சம் பூக்கள் வரை இருக்கும். ஒரு லட்சம் காய்கள் உள்ளன. மரத்தின் உயரம் 25 மீட்டர். சுற்றளவு 3.9 மீட்டர். இந்த மரத்தில் இருந்து பழுத்து விழும் காய்களை பராமரித்து, அதன் மூலம் தாழிப்பனையின் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்.அரசும் காய்களில் இருந்து நாற்றுக்களை உற்பத்தி செய்து, வன உயிரின மையங்களில் நட்டு வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இல்øயெனில் அடுத்த சில நூற்றாண்டுகளில் இப்படி ஒரு மரம் இருந்ததற்கான அடையாளமே தெரியாமல் போய்விட வாய்ப்புள்ளது.இவ்வாறு ஜெயினலாவுதீன் கூறினார்
 ------------------------------------------------------------------------------------------------------------------------


120 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் அதிசய பனைமரம் பூத்தது!.

120 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் அதிசய பனைமரம் பூத்தது!.

பனை மரத்தை போல் 60 முதல் 80 அடி உயரத்துக்கு ஓங்கி வளருகின்ற கொடப்பனை மரங்கள், பழங்காலங்களில் அழகுக்காக வீடுகளில் அதிக அளவில் வளர்க்கப்பட்டுள்ளன. இப்போது இந்த மரங்களை காடுகளில்தான் பார்க்க முடிகிறது. இந்த வகை மரங்கள் கூந்தல் பனை, காலிப்பனை, விசிறிப்பனை என்ற புனை பெயர்களாலும் அழைக்கப்படுகின்றன.

தாவரவியலில் இந்த மரத்துக்கு ‘கோர சாசு‘ என்று பெயர். பனை மரத்தின் ஓலைகள் போலத்தான் இதனுடைய ஓலைகளும் காணப்படுகின்றன. இந்த வகை மரங்கள் 120 ஆண்டு வரை வளருகின்றன. 40 முதல் 70 ஆண்டுகளுக்கு மேல்தான் பூக்கும் தன்மையை பெறுகிறது. ஒரு முறை பூ பூப்பதோடு இதன் வாழ்நாள் முடிந்து விடுகிறது.

பெரிய அளவில் வெள்ளை நிறத்தில் காணப்படும் பூக்கள், நன்றாக விரிந்து ஒருவித மணம் வீசுகிறது. மரத்தின் உச்சி பகுதியில்தான் பூவை பார்க்க முடிகிறது. இதன் ஓலைகள் தொப்பி, ஓலை சுவடிகள், கதகளி விசிறிகள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.

மார்த்தாண்டம் அருகே பள்ளியாடி குன்னம்பாறை வருக்கவிளையை சேர்ந்த நேசையன் (70) என்பவரது வீட்டில் இந்த அரியவகை மரத்தை பார்க்க முடிகிறது. இவரது பாட்டி கொடப்பனை மரத்தை வீட்டின் அருகே நட்டு பராமரித்து வந்துள்ளார். 120 வருடமாக வீட்டில் வளர்ந்து வரும் இந்த மரம் இப்போதுதான் பூத்துள்ளது....!

120 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் அதிசய பனைமரம் பூத்தது!.

120 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் அதிசய பனைமரம் பூத்தது!.

120 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் அதிசய பனைமரம் பூத்தது!.



அழிந்து வரும் தமிழரின் அடையாளத்தை காப்பாற்ற அரசுக்கு கோரிக்கை



உலகின் மூத்த மொழி தமிழ். தமிழின் எழுத்துக்கள் முதலில் பதியப்பட்டது பனைஓலையில்தான். இத்தையை முக்கியத்துவம் வாய்ந்த பனைமரத்தின் உயிருக்கு இன்று ஆபத்து நேர்ந்திருக்கிறது.
பனைமரம் தமிழர்களின் அடையாளம், தமிழர் வாழும் பகுதிகளில் மட்டுமே பனைமரங்களும் வாழுகிறது அல்லது தமிழர்களின் மூதாதையர்கள் வாழும் பகுதியில் மட்டுமே பனைமரங்களும் இருக்கின்றது.

தமிழகத்தில், மலேசியாவில், ஈழத்தில், மோரீசியஸ் தீவில், தென்னாப்பிரிக்காவில் என்று தமிழர்கள் வாழும் இடங்களில் மட்டுமே பனைமரமும் வளருகிறது.

இலங்கையில் பனை வளர்ச்சித்துறை என்று ஒரு துறையும் அதற்கு தனி ஒரு அமைச்சரையே நியமனம் செய்து பனை மரத்தின் பயனை மக்களுக்கு கொடுக்கிறது இலங்கை அரசு.

மலேசியாவில், பனை மரங்களில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணை இன்று உலகத்தின் பெரும்பாலான நாடுகளில் உணவு எண்ணையாக பயன்படுகிறது. பாம்ஆயில் என்று சொல்லப்படும் இந்த எண்ணை தான் நம் ஊரில் கிடைக்கும் அனைத்து என்னையிலும் கலந்துள்ளது.

சங்க காலம் முதல், தமிழரின் வாழ்வில் பனைமரம் ஒரு அங்கமாகவே இருந்துள்ளது. பனங்கருக்கு என்று சொல்லப்படும், சிறு மரங்களை உடைக்கும் போது அதில் கிடைக்கும் பச்சை குருத்து உண்பதற்கு சுவையாகவும் சத்தானதாகவும் இருக்கும்.

கொஞ்சம் வளர்ந்து பனை மரமானதும் அதில் கிடைக்கும் பனை ஓலை, வீடுகள் மேயவும், படுப்பதற்கும், உட்காருவதற்கும், பண்டங்கள் கட்டுவதற்கும் தேவையான பாய்கள் செய்ய பயன்பட்டது. கடுமையான வறட்சி காலங்களில் கால்நடைகளுக்கு தீவனமாக இந்த பனை ஒலைகள் கொடுக்கப்பட்டு வந்தது. இப்போதும் கூட பனை ஓலையில் செய்யப்பட்ட விசிறிகளில் வீசும் போது குளுமையான காற்று கிடைக்கும்.

பனைமரம் பாலை விட்டு காய்க்க தொடங்கினால், அந்த பாலையிளிருந்து பதநீர் எனும் தெலுவு கிடைக்கும், அதே தெலுவில் சுண்ணாம்பு அடிக்காமல் விட்டால் அது சுவையானதாகவும், அதே நேரம் கொஞ்சம் போதையுடன் கூடிய இயற்கையான கள் என்ற பானம் கிடைக்கும்.

கொஞ்சநாள் கள்ளு இறக்கிய பின்னர் வளரும் பாளையில், பனங்காய் காய்க்கும், இந்த காய்களில் தான் குறிப்பிட்ட பருவத்தில் நொங்கு கிடைக்கும்.

அதற்கு அடுத்த கட்டமாக, காய்கள் கொஞ்சம் முதிர்ந்த பின்னர் சேவாய் என்று சொல்லப்படும் முற்றிய பணங்காயிலிருந்து சதை பகுதியை கத்தியால் சீவி எடுத்து வேகவைத்து உண்ணலாம்.

அதற்கு பின்னர், பழுத்து கனிந்தால் பனம்பழம் கிடைக்கும், பழத்தை உண்டு விட்டு போடும் கொட்டை முளைவிட்டு வளரும், கொஞ்ச நாட்கள் போனால் கொட்டைக்குள் உருவாகும் சீப்பை கிடைக்கும், இந்த சீப்பை குழந்தைகள் உண்பதற்கு சுவையாகவும், சத்தானதாகவும் இருக்கும்.

அதை இன்னும் கொஞ்சநாள் விட்டால் பனங்கிழங்கு கிடைக்கும் சத்து மிகுதியான இந்த கிழங்கு மனிதனின் வயிற்றுப் புண்ணுக்கு மிகச்சிறந்த மருந்தாகும். இப்படி மனித வாழ்வில் உணவுத் தேவைக்கு மட்டுமில்லாமல், வீடுகள் கட்ட வெட்டுக்கை, விட்டம், ஓடுகள் பாதிக்கும், பனை வாரைகள் கொடுத்தது பனைமரம்.

பனை மரத்திலிருந்து அறுத்து எடுக்கப்படும் பனம்பட்டையை வெய்யலில் கொஞ்சம் வாடிய பின்னர் உரித்து எடுக்கப்படும் நார் முன்பு கட்டுகள் கட்டவும், கால்நடை தீவனங்கள் கட்டி அடுக்கிவைப்பதர்க்கும், ஓலை வீடுகளை அமைக்கவும், பண்டங்கள் கட்டுப்போட்டவும் நார் பயன்பட்டது.


நம் வீட்டு பெண்கள் விறகு அடுப்பில் சமையல் செய்த காலங்களில், அடுப்பில் நெருப்பு பத்தவைக்க பெண்களுக்கு பனை மரத்தின் பன்னாடையும், வரண்டு போன ஓலைகளும் அவசியம் இருக்கவேண்டிய கட்டாயம் இருந்தது. காய்ந்து போன பனம்பட்டைகள், காய்ந்து போன நொங்கு காய்களும் அடுப்பு எரிக்க சிறந்த விறகாகப் பயண்பட்டது.

இப்படி மனித வாழ்கையின் ஒரு அங்கமாக இருந்த பனைமரம்... சமீபகாலத்தில் உருவாகிய இரும்பு, சனல், நைலான், எரிவாயு போன்ற நவீன சாதனங்கள் தோன்றியதால்... இக்கால மனிதர்களுக்கு பனைமரத்தின் அவசியமே இல்லாமல் போய்விட்டது.

எத்தனை வருடமானாலும் தண்ணீர் இல்லாமலேயே வளரும் தனமையுடைய பனைமரம், காடு, தோட்டம் என வித்தியாசம் இல்லாமல் வயல் ஓரங்களிலும், வேலி ஓரங்களிலும் விவசாயிகள் வைத்து வளர்த்தார்கள்.

சமீப காலமாக இதன் பயன்பாடு இல்லாமல் போனதாலும், வருடம் ஒருமுறை பனைமரத்தில் வளர்ந்துள்ள ஓலைகளை வெட்டி, பட்டையை அறுத்து சுத்தம் செய்து சிரை எடுத்து விடுவதற்கு மட்டும் ஒரு மரத்திற்கு ஐம்பது ரூபாய் செலவு செய்ய வேண்டியுள்ளது.

அப்படி சிரை எடுக்காவிட்டால், மரத்தில் உள்ள பட்டைகள் எல்லாம் வரண்டு காய்ந்து இலை தலைகள் விழுந்து பனைமரத்திலேயே தொங்குவதால், பாம்புகள் கூட குடியிருக்க தொடங்கிவிடும் ஆபத்து உள்ளது. பெரும்பாலும் அணில், எலி போன்றவைகள் கூடு கட்டிவிட்டால் அதில் இருந்து கொண்டு நிலத்தில் விளையும் தானியக் கதிர்களை வெட்டிக் கொண்டுபோய் விடும் என்பதால் பனைமரத்தில் ஓலையை வெட்டி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

இப்படிப்பட்ட சூழலில் பனைமரங்களை வளர்க்கும், எந்த ஒரு விவசாயிக்கும் பனைமரத்தால் எந்தவித பயனும் கிடையாது, ஆனால் வருடத்திற்கு ஒரு மரத்திற்கு குறைந்தது ஐம்பது ரூபாயாவது செலவு செய்தால் தான், பனைமரத்தை சுத்தமாக வைத்திருக்க முடியும் என்ற நிலை உள்ளது.

இவ்வளவு செலவு செய்தாலும், ஐம்பது அறுபது வருடம் வளர்ந்த ஒரு பனைமரத்தை வியாபாரியிடம் விற்றால் இருநூறு ரூபாய் முதல் முன்னூறு ரூபாய் வறை மட்டுமே காசு கொடுத்து வாங்கிக்கொள்கிறார்கள். ஒவ்வொரு பனை மரத்துக்கும் விவசாயி செய்துள்ள செலவை கணக்கிட்டால் இந்த காசு எதற்கும் உதவாது என்பதால், எல்லா இடங்களிலும் உள்ள பனைமரங்களை விவசாயிகள் வெட்டி செங்கல் சூளைக்கு அனுப்பி வருகிறார்கள்.

நகரங்களில், ஒரு பக்கம் மரம் வைக்கவும், அவற்றை வளர்க்கவும் அரசு பல கோடி ரூபாய்களை செலவு செய்கிறது. ஆனால், மறுபக்கம் கிராமங்களில் உள்ள விவசாயிகள், தாங்கள் நிலங்களில் உள்ள கெட்டுப்போன கரியமிலவாயு போன்ற காற்றை சுத்தமான தூய பிரானவாயுவாக மாற்றிக்கொண்டிருக்கும் கற்பகவிருச்சமான பனை மரங்களை கட்டுபடியாகாத விலைக்கு வெட்டி விற்பனை செய்கிறார்கள்.

இந்த முரண்பாட்டின் காரணம் என்ன...? இயற்கை ஆர்வலரும், மரங்கள் பற்றிய ஆய்வாளரும், கீழ் பவாணி பாசன விவசாயிகள் சங்க தலைவருமான நல்லசாமி அவர்களிடம் கேட்டோம்.

முதலில் ஒரு மரம் என்று இருந்தால், அதில் எதாவது உபயோகம் இருக்கவேண்டும்..., பனை மரத்தால் இன்றைய காலகட்டத்தில் உழவர்களுக்கு எந்த நேரடியான பயனும் கிடையாது, தவிர அவர்களுக்கு செலவுகள் தான் வருகிறது. அதனால் பனைமரங்களை வெட்டி விற்கிறார்கள்.

அதை எப்படி தடுப்பது...? அந்த மரத்தில் எதாவது லாபம் கிடைக்க வழி ஏற்படுத்த வேண்டும், அதற்கு ஒரே வழி... கள் இறக்க அனுமதிக்க வேண்டும்.

இதனால், பனைமரமும் வளரும், பனைமரம் வளர்க்கும் விவசாயிகளுக்கும் லாபம் கிடைக்கும், எந்த விதமான இரசாயன கலப்பும் இல்லாத, அருந்தும் மனிதனின் குடலையும், வயிற்றையும் வேகவைக்காத... மிகவும் குறைவான போதையை கொடுக்கும், சத்தான கள்ளும் கிடைக்கும், கள் என்பது போதை பொருள் அல்ல... அது ஒரு வகை உணவுப்பொருள் தான்... அதை மது என்ற சொல்லுவதே தவறு...

இன்றைக்கு, இயற்கையான முறையில் உரம், யூரியா போடாத வயலில் விளைந்த நெல் என்றும் காய்கறி என்றும் சொன்னால் அதைத்தான் மக்கள் ஓடிப்போய் வரிசையில் நின்று வாங்குகிறார்கள். மக்களுக்கு இயற்கையின் மீது நம்பிக்கையும், செயற்கையின் மீது பயமும் வந்து விட்டது. இதற்க்கு காரணம் மனிதருக்கு வரும் புதிய புதிய நோய் தான்.

நோயுக்கு பயந்து இயற்கையின் பக்கம் போகும் மக்களுக்கு ஓன்று சொல்லுகிறேன், ஒரு துளி கூட பூச்சி மருந்து அடிக்காமல், உரம் போடாமல் சொல்லப்போனால் தண்ணீர் கூட விடாமல், சத்தான எருவும் போடாமல் இயற்கையில் தானாக விளையும் ஒரு காமதேனு பனை மரத்தில் உற்பத்தியாகும் பணம் பால் தான். அதை நம்முடைய மக்கள் குடிக விடாமல் பன்னாட்டு நிறுவனங்கள், நம்மூர் அரசியல் தலைவர்களுக்கும், அரசியல் தரகர்களுக்கும், உயர் அதிகாரிகளுக்கும் கையூட்டு கொடுத்து நம் நாட்டிலேயே நம்முடைய மரத்தில் விளையும் பணம்பாலுக்கு தடை வாங்கி கொடுத்துள்ளார்கள்.

கள் குடிப்பதால் உடலுக்கு தீமை என்று யார் நிரூபித்தாலும் அவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசாக குடுக்க கள் இயக்கம் தயாராக உள்ளது. தமிழகத்தில் கள் இறக்கி விற்கவேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல..., தமிழகத்தில் இறக்கப்படும் கள்ளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவாவது அரசு முன்வரவேண்டும்.

பனை மரத்தின் அவசியத்தை வலியுறுத்தி வரும் ஜனவரியில் கன்னியாகுமரி முதல் சென்னை வறை ஒரு பிரசார இயக்கம் தொடங்கி நடை பயணம் செல்ல ஏற்பாடு செயப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகள், பனைத் தொழிலாளர்கள், சமூக ஆர்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள், மருத்துவர்கள் என அனைத்து தரப்பினரும் இந்த பிரச்சாரத்தில் கலந்து கொண்டு பனை மரத்தின் அவசியம் பற்றி மக்களுக்கு சொல்ல இருக்கிறார்கள்.

இந்தியாவில் எட்டுக்கோடி பனைமரங்கள் இருப்பதாக கணக்கிடபட்டுள்ளது, அதில் ஐந்து கோடி பனைமரங்கள் தமிழகத்தில் தான் உள்ளன.... தமிழ நாட்டில், எதை இழந்தாலும் பனை மரத்த காப்பாற்றியாக வேண்டும் என்றார் நல்லசாமி.

சரிதான் அது. பனை என்பது வெறும் மரம் மட்டுமல்ல.... தமிழரின் அடையாளம்.

பெ.சிவசுப்ரமணியம்.

நன்றி
நக்கீரன்
------------------------------------------------------------------------------------------------------------------------
பனம்பழம் (Palm fruit) பூலோக கற்பக விருட்சம் என்று அழைக்கப்படும் பெருமையுடையது பனைமரம். பனையின் அனைத்து பாகங்களும் பயன்தரக்கூடியவை என்பதாலேயே இதற்கு இந்த பெயர் கிடைத்துள்ளது. இது கூந்தல் பனை, மற்றும் கரும்பனை என இரு வகைப்படும். பனை இந்தியாவி...ல் தமிழ் நாட்டிலும், இலங்கையிலும் அதிகமாகக் காணப்படும். இது எல்லா மண்வளத்திலும் வளர்க்கூடியது. வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது.

“தென்னையை வைத்தவன் தின்று விட்டு சாவான், பனையை வைத்தவன் பார்த்துக்கொண்டே சாவான்” என்று கிராமப்புறங்களில் ஒரு பழமொழி உண்டு. அதற்கேற்ப பனையின் வளர்ச்சி மெதுவாகவே இருக்கும். ஆனால் நூறு ஆண்டுகள் வரை பனை உயிருடன் இருக்கும். இது விதை மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. பனை மரத்தில் நொங்கு, பனம்பழம், பனங்கிழங்கு, பனை ஓலை, குருத்து, பனை கருக்கு, பனைப்பால், முற்றிய மரம் முதலிய அனைத்துமே பயன் தரும் பகுதியாகும். பனை உடலுக்கு ஊட்டத்தை அளிப்பது. குளிர்ச்சி தருவது. வெப்பத்தைத் தணிப்பது, துவர்ப்பும் இனிப்பும் கலந்த சுவை உடையது. கூந்தல் பனை, கரும்பனையில் கரும்பனையே மருத்துவ குணமுடையதாகும்.

உடலுக்கு குளிர்ச்சி தரும்: பனை மரத்தின் பால் தெளுவு-தெளிவு எனப்படும். சுண்ணாம்பு கலவாதது கள் எனப்படும். தினமும் காலை எழுந்தவுடன் இந்தப் பாலை 100 -200 மி.லி. அருந்தி வந்தால் போதும். உடல்குளிர்ச்சி பெறும். ஊட்டம் பெறும். வயிற்றுப் புண் குணமடையும். புளிப்பேறிய கள் மயக்கம் தரும், அறிவை மயக்கும் ஆனல் உடல் நலத்தைக் கொடுக்கும். சுண்ணாம்பு சேர்த்த தெளிவு எல்லோருக்கும் சிறந்த சுவையான சத்தான குடிநீராகும். அதைக் காய்ச்சினல் இனிப்பான கருப்பட்டி கிடைக்கும்.

நுங்கு வெயிலின் கொடுமையைக் குறைக்க மனிதனுக்குக் கிடைத்த அரு மருந்தாகும். எல்லா வயதினருக்கும் ஏற்ற சிறந்த சத்துணவாகும். நுங்கின் நீர் வேர்க்கருவிற்குத் தடவ குணமாகும். கோடை காலத்தில் பதநீரும் நுங்கும் கலந்து பருக உடலுக்கு குளுமை தரும்.

ஊட்டச்சத்து நிறைந்த பனம்பழம்: பனைமரத்தின் பழமே பனம் பழமமாகும். இது உருவத்தில் தேங்காயை விட பெரியதாகவும், உருண்டையாகவும் இருக்கும். பழம் கருப்பாக இருக்கும். தலையில் லேசாக சிவந்த நிறத்துடனும் காணப்படும். பனம் பழத்தினுள் இரண்டு அல்லது மூன்று பெரிய உறுதியான கொட்டைகளிலிருக்கும். இந்த கொட்டைகளைச் சுலபத்தில் சுலபத்தில் உடைக்க முடியாது. கெட்டியானது. பனம் பழத்தினுள் நார் நிறைந்திருக்கும். நார்களினூடே சிவந்த ஆரஞ்சு அல்லது சிவந்த மஞ்சள் நிறத்துடன் கூடிய கெட்டியான சாறு கலந்திருக்கும். இந்த சாறு இனிப்பு சுவையுடன் இருக்கும். பனம் பழத்தை அவித்தும் சுட்டும் உண்ணலாம்.
பனம்பழம் சிறந்த சத்துணவாகும். உயிர் சத்து நிறைந்தது. பித்தம் தருவது. சொரி சிரங்கு, புண், உள்ளவர்கள் தின்றால் இவைகள் மேலும் அதிகரிக்கும். பனம்பழம் மலத்தை இறுக்கிவிடும்.

உடலைத் தேற்றும் பனங்கிழங்கு: பனங்கொட்டையை மிருதுவான மண் அல்லது ஈர மணலில் புதைத்து வைத்து இரண்டு மூன்று இலை விட்ட பின் தோண்டி கொட்டைக்குக் கீழ் உள்ள நீண்ட கிழங்கை எடுத்து வேக வைத்துச் சாப்பிட்டால் மிகச் சிறந்த ஊட்ட உணவாகும். சிறு குழந்தைகளுக்கு உடலைத் தேற்றும்.

பனை மரத்தின் அடி பாகத்தில் வெட்டினால் வரும் நீரை எடுத்து அதை கருப்படை, தடிப்பு, ஊரல், சொறி உள்ளவர்களுக்கு அதன் மீது தடவினால் குணமடையும். ஐந்தாறு முறை தடவ வேண்டும். கண்ணில் புண் ஆனால் பனை குருத்து மட்டையைத் தட்டிப் பிழிந்த சாறு மூன்று நாள் விட குணமடையும் எரிச்சல் தீரும்.

பனை மரத்தின் பாகங்கள்: பனையின் அனைத்து பாகமும் பயன்படுகிறது. பனையோலை வேய்த இருப்பிடம்ஆரோக்கிய வாழ்வைத் தரும். வெப்பம் தாக்காது. இதில் விசிறி, தொப்பி, குடை, ஓலைச்சுவடி போன்ற கைவினைப் பொருள்கள் செய்யலாம். இந்தோனேசியாவில் ஓலையை எழுதும் பேப்பராகப் பயன் படுத்தினார்கள். பனங்காயில் பிரஷ்,கயிறுகள் தயார் செய்யலாம். வேலிக்கும் பயன்படுகிறது.





Photo: பனம்பழம் (Palm fruit) பூலோக கற்பக விருட்சம் என்று அழைக்கப்படும் பெருமையுடையது பனைமரம். பனையின் அனைத்து பாகங்களும் பயன்தரக்கூடியவை என்பதாலேயே இதற்கு இந்த பெயர் கிடைத்துள்ளது. இது கூந்தல் பனை, மற்றும் கரும்பனை என இரு வகைப்படும். பனை இந்தியாவில் தமிழ் நாட்டிலும், இலங்கையிலும் அதிகமாகக் காணப்படும். இது எல்லா மண்வளத்திலும் வளர்க்கூடியது. வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது.

“தென்னையை வைத்தவன் தின்று விட்டு சாவான், பனையை வைத்தவன் பார்த்துக்கொண்டே சாவான்” என்று கிராமப்புறங்களில் ஒரு பழமொழி உண்டு. அதற்கேற்ப பனையின் வளர்ச்சி மெதுவாகவே இருக்கும். ஆனால் நூறு ஆண்டுகள் வரை பனை உயிருடன் இருக்கும். இது விதை மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. பனை மரத்தில் நொங்கு, பனம்பழம், பனங்கிழங்கு, பனை ஓலை, குருத்து, பனை கருக்கு, பனைப்பால், முற்றிய மரம் முதலிய அனைத்துமே பயன் தரும் பகுதியாகும். பனை உடலுக்கு ஊட்டத்தை அளிப்பது. குளிர்ச்சி தருவது. வெப்பத்தைத் தணிப்பது, துவர்ப்பும் இனிப்பும் கலந்த சுவை உடையது. கூந்தல் பனை, கரும்பனையில் கரும்பனையே மருத்துவ குணமுடையதாகும்.

உடலுக்கு குளிர்ச்சி தரும்: பனை மரத்தின் பால் தெளுவு-தெளிவு எனப்படும். சுண்ணாம்பு கலவாதது கள் எனப்படும். தினமும் காலை எழுந்தவுடன் இந்தப் பாலை 100 -200 மி.லி. அருந்தி வந்தால் போதும். உடல்குளிர்ச்சி பெறும். ஊட்டம் பெறும். வயிற்றுப் புண் குணமடையும். புளிப்பேறிய கள் மயக்கம் தரும், அறிவை மயக்கும் ஆனல் உடல் நலத்தைக் கொடுக்கும். சுண்ணாம்பு சேர்த்த தெளிவு எல்லோருக்கும் சிறந்த சுவையான சத்தான குடிநீராகும். அதைக் காய்ச்சினல் இனிப்பான கருப்பட்டி கிடைக்கும்.

நுங்கு வெயிலின் கொடுமையைக் குறைக்க மனிதனுக்குக் கிடைத்த அரு மருந்தாகும். எல்லா வயதினருக்கும் ஏற்ற சிறந்த சத்துணவாகும். நுங்கின் நீர் வேர்க்கருவிற்குத் தடவ குணமாகும். கோடை காலத்தில் பதநீரும் நுங்கும் கலந்து பருக உடலுக்கு குளுமை தரும்.

ஊட்டச்சத்து நிறைந்த பனம்பழம்: பனைமரத்தின் பழமே பனம் பழமமாகும். இது உருவத்தில் தேங்காயை விட பெரியதாகவும், உருண்டையாகவும் இருக்கும். பழம் கருப்பாக இருக்கும். தலையில் லேசாக சிவந்த நிறத்துடனும் காணப்படும். பனம் பழத்தினுள் இரண்டு அல்லது மூன்று பெரிய உறுதியான கொட்டைகளிலிருக்கும். இந்த கொட்டைகளைச் சுலபத்தில் சுலபத்தில் உடைக்க முடியாது. கெட்டியானது. பனம் பழத்தினுள் நார் நிறைந்திருக்கும். நார்களினூடே சிவந்த ஆரஞ்சு அல்லது சிவந்த மஞ்சள் நிறத்துடன் கூடிய கெட்டியான சாறு கலந்திருக்கும். இந்த சாறு இனிப்பு சுவையுடன் இருக்கும். பனம் பழத்தை அவித்தும் சுட்டும் உண்ணலாம்.
பனம்பழம் சிறந்த சத்துணவாகும். உயிர் சத்து நிறைந்தது. பித்தம் தருவது. சொரி சிரங்கு, புண், உள்ளவர்கள் தின்றால் இவைகள் மேலும் அதிகரிக்கும். பனம்பழம் மலத்தை இறுக்கிவிடும்.

உடலைத் தேற்றும் பனங்கிழங்கு: பனங்கொட்டையை மிருதுவான மண் அல்லது ஈர மணலில் புதைத்து வைத்து இரண்டு மூன்று இலை விட்ட பின் தோண்டி கொட்டைக்குக் கீழ் உள்ள நீண்ட கிழங்கை எடுத்து வேக வைத்துச் சாப்பிட்டால் மிகச் சிறந்த ஊட்ட உணவாகும். சிறு குழந்தைகளுக்கு உடலைத் தேற்றும்.

பனை மரத்தின் அடி பாகத்தில் வெட்டினால் வரும் நீரை எடுத்து அதை கருப்படை, தடிப்பு, ஊரல், சொறி உள்ளவர்களுக்கு அதன் மீது தடவினால் குணமடையும். ஐந்தாறு முறை தடவ வேண்டும். கண்ணில் புண் ஆனால் பனை குருத்து மட்டையைத் தட்டிப் பிழிந்த சாறு மூன்று நாள் விட குணமடையும் எரிச்சல் தீரும்.

பனை மரத்தின் பாகங்கள்: பனையின் அனைத்து பாகமும் பயன்படுகிறது. பனையோலை வேய்த இருப்பிடம்ஆரோக்கிய வாழ்வைத் தரும். வெப்பம் தாக்காது. இதில் விசிறி, தொப்பி, குடை, ஓலைச்சுவடி போன்ற கைவினைப் பொருள்கள் செய்யலாம். இந்தோனேசியாவில் ஓலையை எழுதும் பேப்பராகப் பயன் படுத்தினார்கள். பனங்காயில் பிரஷ், கயிறுகள் தயார் செய்யலாம். வேலிக்கும் பயன்படுகிறது.


 


நெல்லி மரம்-


 




ஆல்பிரூனியும் அருணகிரிநாதரும்
Statue of Al Biruni
அதியமான், அவ்வையார், ஆல்பிரூனி, அருணகிரிநாதர் ஆகிய நால்வருக்கும் நெல்லிக்காயுக்கும் இடையே சுவையான தொடர்பு உண்டு.

அதியமான் நெடுமான் அஞ்சி என்ற குறுநில மன்னன் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டின் தகடூர் பகுதியை ஆண்டு வந்தான்.தமிழ்ப் புலவர்களை ஆதரித்த வள்ளல்களில் முதல் வரிசையில் நின்றவன். ஒரு முறை அவனை தமிழ் மூதாட்டி அவ்வையார் சந்திக்க வந்தார். நல்ல விருந்து கொடுத்து நிறைய பரிசுகளையும் கொடுத்தான். தமிழ் கூறு நல்லுலகில் அவ்வைக்குள்ள புகழழாலும் விரல் விட்டு எண்ணக்கூடிய பெண்பால் புலவர்களில் ஒருவர் என்பதாலும் அவரை விஷேசமாகக் கவனிக்க விரும்பினான் அதியமான்.

நெல்லிக்காய் ஆரோக்கியம் தரும் ஒரு அருமருந்து. பழங்களையுயும் மிஞ்சும் அளவுக்கு சத்து உடையது. ஆயுளை வளர்க்கச் செய்வது. வைட்டமின் சி சத்தும் புத்தியை வளர்க்கும் பாஸ்பரஸ் சத்தும் மிக்கது.

வட இந்தியாவில் ரத்த சுத்திக்குப் பயன்படுத்தும் திரிபலா சூர்ணத்திலும்  சியவனப் ப்ராஷிலும் நெல்லிக்காய் பயன்படுத்தப் படுகிறது. தென் இந்தியாவில் ஊறுகாய், துவையல்,பச்சிடியில் முக்கிய அங்கம் வகிப்பது.

இவ்வளவு புகழ் உடைய நெல்லிக்காயிலும் ஒரு அரிய வகை நெல்லிக்காய் மரம் அதியமான் ஊரில் இருந்தது. அது கரு நெல்லி மரம். அதில் நன்கு வளர்ந்து முற்றிய ஒரு நெல்லிக்காய் மன்னன் கைக்கு வந்தது. நாட்டில் ஏதேனும் அரிதாகக் கிடைத்தால் அதை ஓடோடி வந்து மன்னரிடம் ஒப்படைப்பது பழங்கால இந்திய வழக்கம். புதையல் ஆனாலும் சரி, பெரிய வைரமானாலும் சரி, அரிதான பொருள் எல்லாம் இறைவனுக்குச் சமமான மன்னனுக்கே உரியது. இப்படிக் கிடைத்த அரிய நெல்லிக்காயை மன்னன் சாப்பிட்டால் நீண்ட காலம் வாழ்ந்து எல்லோருக்கும் மேலும் மேலும் உதவுவான் என்று மக்கள் எண்ணினர்.


ஆனால் அதியமானோ தமிழின் மீது ஆராக் காதல் கொண்டவன். நான் சாப்பிடுவதை விட, வயதான அவ்வைப் பாட்டி சாப்பிட்டு இன்னும் நீண்ட காலம் உயிர்வாழ்ந்தால் தமிழ் மொழியும் வாழும் உலகமும் உய்வு பெறும் என்று எண்ணி அதை அவ்வையாரிடம் கொடுக்கிறான். என்ன அதிசயம் பாருங்கள். அவ்வையார் வாழ்ந்தாரோ இல்லையோ அது பற்றி ஒன்றும் இலக்கியச் சான்று இல்லை. ஆனால் ஈராயிரம் ஆண்டுகளாக அதியமானின் புகழ் வாழ்கிறது. இன்னும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு தமிழ் வாழும் வரை அவன் புகழும் வாழும். தங்கமும் வைரமும் சாதிக்காத பணியை நெல்லிக்காய் சாதித்தது என்றால் அது அதிசிய நெல்லிதானே! இது காலத்தால் அழியாத புறநானூற்றுக் கவிதையில் (91) இடம் பெற்றுவிட்டது.

நீல மணிமிடற்று ஒருவன் போல
மன்னுக பெரும நீயே! தொன்னிலைப்
பெருமலை விடர் அகத்து அருமிசை கொண்ட
சிறி இலை நெல்லி தீங்கினி குறியாது,
ஆதல் நின்னகத்து அடக்கிச்
சாதல் நீங்க எமக்கு ஈந்தனையே.
(அதியமான் நெடுமான் அஞ்சி மீது ஔவையார் பாடியது-புறம் 91)
பொருள்: மலைச் சரிவிலே கடு முயற்சியுடன் பெற்ற நெல்லியின் இனிய கனியைப் பெறுதற்கு அரிது என்றும் கருதாது, அதனால் விளயும் பலனையும் கூறாது, அதை உன் மனதில் மட்டும் வைத்துக் கொண்டு என் மரணத்தைத் தவிர்க்க எனக்குக் கொடுத்தாயே நீ சிவ பெருமான் போல நீண்ட புகழோடு வாழ்வாயாக.

இந்தியவியலின் தந்தை ஆல்பிரூனி
 
ஆல்பிருனி என்பவர் இஸ்லாமியர்களில் மாமேதை. லியார்னோ டா வின்சி போல அவர் பல் துறை வித்தகர். பன் மொழிப் புலவர். கணிதம், மருத்துவம் ,வான சாத்திரம், உயிரியல், மொழியியல் என்று எல்லா துறைகளிலும் புலமை பெற்றவர். ஒரு பாரசீக மன்னர், அவரை இந்தியாவுக்கு அனுப்பி இந்து மத சாத்திர ரகசியங்களை அறிந்துவர உத்தரவிட்டார். அவர் கி.பி.1017 முதல் இந்தியாவில 13 ஆண்டுகள் தங்கி இந்திய அறிவியல் ரகசியங்களை அராபியர் மூலம் உலகத்துக்கு அறிவித்தார். இந்தியவியல் (Father of Indology) படிப்பின் தந்தை என்று இன்று அவரை உலகம் பாராட்டுகிறது. அவர் இந்தியாவின் சரித்திரம் என்ற புத்தகம் எழுதியுள்ளர். கஜினி முகமது படை எடுப்பு பற்றியும் எழுதியுள்ளார். அவர் நெல்லிக்காய் மகிமையை இந்தியர்களிடமிருந்து அறிந்து தனது மருத்துவப் புத்தகத்தில் எழுதியுள்ளார். திரிபலா சூர்ணத்தில் பயன்படும் கடுக்காய் மகிமையையும் எழுதியுள்ளார். நெல்லிக்காய், புளி ஆகியவற்றுடன் தயாரிக்கும் சில பொருட்களை அவர் குறிப்பிடுகிறார்.

நெல்லிக்காய் நிற விஷ்ணு
 
அருணகிரிநாதர் திருப்புகழில் விஷ்ணுவை கரு நெல்லி நிறத்துடன் ஒப்பிடுவது வியப்பான ஒரு உவமை. ஒருவேளை நெல்லி போல விஷ்ணுவும் நமக்கு ஆரோக்கியம் அருள்வான் என்பதை அருணகிரி நாதர் நமக்குச் சொல்லாமல் சொல்ல நினைக்கிறாரோ!! (கரு நெல்லி நிறமுடைய அரியின் மருகன் நீ)

“மருமல்லி யார் குழலின்    மடமாதர்
மருளுள்ளி நாயடியன்       அலையாமல்
இருநல்ல வாகும் உனது    அடிபேண
இனவல்ல மான மனது     அருளாயோ
கரு நெல்லி மேனியரி         மருகோனே
கன வள்ளியார் கணவ           முருகேசா
திருவல்லிதாயம் அதில்     உறைவோனே
திகழ் வல்ல மாதவர்கள்    பெருமாளே.

நெல்லிக்காயின் மகிமை 2000 ஆண்டுகளாக எழுதப்பட்டாலும் அந்த ஏழைகளின் ஆப்பிளுக்கு தமிழர்களிடையே இன்னும்  சரியான புகழ் கிட்டவில்லை! வட இந்தியர்கள் இதை தங்க பஸ்பம் போல கருதி பயன்படுத்துகிறார்கள்.




நெல்லி(காட்டு நெல்லி ) இந்தியாவில் எங்கும் காணக்கிடைக்கும். 800 மீட்டர் உயரம் வரை மலைகளில் நன்றாக விளையும். மற்ற நிலங்களில் சுமாராகவிளையும். தென்னிந்தியாவில் அதிகமாகக்கிடைக்கும். இலையுதிர் மர வகையைச் சேர்ந்தது. இலைகள் நீண்டிருக்கும், அகலம் குறைவானது. இளம் மஞ்சள் நிறக்காயகளையும் உடைய மரம். காய் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு சுவைகள் ஒருங்கே பெற்றுள்ளது.

இலையடி செதில் மிகச்சிறியதாக நீண்டு இருக்கும். பூக்கள் இலைக்கோணங்களில் கொத்தாக இருக்கும். ஆண் பூக்களும் பெண்பூக்களும் கலந்து இருக்கும் இலைகளில் மேல் பகுதியில் இருப்பவை ஆண் பூக்களாகவும் கீழ்பகுதியில் உள்ளவை பெண் பூக்களாகவும் இருக்கும்.பெண் பூக்களின் எண்ணிக்கை ஆண் பூக்களின்எண்ணிக்கையைவிடக் குறைவு. பூ விதழ்கள் ஆறு.தலைகீழ் ஈட்டி வடிவமானது. மகரந்தக் கேசங்கள் மூன்று இணைந்திருக்கும். இணைக்கும் பகுதி சேர்ந்து கூர்மையாக இருக்கும். செங்குத்தாக வெடிக்கும். கனி ட்ரூப் வகையைச் சேர்ந்தது.

வெடியாக்கனி பல வீனப் பட்டதாக இருக்கும். உருண்டைவடிவமானது. சதைப்பற்றுள்ளது, சாறு இருக்கும். விதைகள் மூன்றுகோணங்கள் உடையது. விதையுறைக் கடினமாக இருக்கும். ஒட்டுச்செடிகள் 3 வருடங்களில் காய் விடும், மற்றவை 6 வருடங்கள் கூட ஆகும்.இது விதைமூலமும், ஒட்டுக் கட்டு மூலமும் இனப்பெருக்கும் செய்யப் படுகிறது. இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது.

இது இதயத்திற்கு வலிமையை வழங்குகிறது. மற்றும் குடற்புண், இரத்தப்பெருக்கு, நீரிழிவு, கண் நோய் ஆகியவற்றைக் குணமாக்கும். அதன் காரணமாக கல்ப உருவிலும், வற்றல் உருவிலும், பாகு வடிவத்திலும், களிம்பு வடிவத்திலும் இதைப் பயன்படுத்துவர். இது தவிர நெல்லிக்காய் தைலம் உச்சந்தலையைக் குளிரச் செய்யும் மற்றும் கருமையான தலைமயிரைத் தரும்.காய் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு சுவைகள் ஒருங்கே பெற்றது


வகைகள் -: பி.எஸ்.ஆர் 1, காஞ்சன் என் ஏ 7கிருஷ்ணா சக்கையா, மற்றும் கருநெல்லி, அருநெல்லிஎன்ற இரு இனம் உண்டு.

வேறு பெயர்கள் -: அம்லா, ஆமலகம், கோரங்கம்,மிருதுபாலா.

மருத்துவப்பயன்கள் -: நெல்லியன் செய்கை, இலை, பட்டை, காய்த பழம் துவர்ப்பியாகச் செயல்படும்பூ குளிர்ச்சியுண்டாக்கி மலத்தை இளக்கும். பழமும் சிறு நீரைப் பெருக்கி, மலக்காரியாகவும், சீதள காரியாகவும் செயல்படும்.

நெல்லி காயகற்ப மூலிகையில் முக்கியமானது. இதன் பொருட்டே அன்று அதியமான் ஔவைக்கு கொடுத்து சரித்திரத்தில் சான்றாக நிற்கின்றார் இதன்சிறப்பை பின் வரும் சத்துக் களில் விவரம் தெளிவுறுத்துகிறது. மாவுச் சத்து-14 கி. புரத சத்து-0.4 கி. கொழுப்புச்சத்து- 0.5 கி, பாஸ்பரஸ்- 21 மி.கி.கால்ஷியம்-15 மி.கி. இரும்புச்சத்து - 1 மி.கி. வைட்டமின் பி1 28 மி.கி. வைட்டமின் சி 720 மி.கி. நியாசின் - 0,4 மி.கி. கலோரிகள் - 60 வேறு எந்த காயகனியிலும் இதிலுள்ள வைட்டமின் 'சி ' அளவைப் போல் பெற இயலாது.

ஒரு நெல்லிக் காயில் முப்பது ஆரஞ்சுப் பழங்களில் உள்ள வைட்டமின் சி சத்து உள்ளது. நெல்லிக்காய் சாறு 15 மி.லி. தேன் 15 மி.லி.எலுமிச்சைச்சாறு 15 மி.லி.கலந்து காலை மட்டும் சாப்பிட்டு வர மதுமேகம் முற்றிலும் தீரும்.

இதன் இலைக்கொழுந்து ஒரு கைப்பிடி அளவிற்று எடுத்து, அரைத்து மோரில் கலந்து சீதக் கழிச்சல் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம். நெல்லிக்காய்ச் சாறு, பொன்னாங்கண்ணிச் சாறு, பால் வகைக்கு அரை லிட்டர், செவ்விளநீர் 2 லிட்டர், நல்லெண்ணெய்ஒன்றரை லிட்டர் கலந்து அதிமதுரம், ஏலம், கோஸ்டம், பூலாங்கழங்கு, கஸ்தூரி மஞ்சள், ஜாதிக்காய், ஜாதிபத்திரி, திருகடுகு, தான்றிக் காய், கடுக்காய், வகைக்கு 15 கிராம்தூள் செய்து கலந்து பதமுறக் காய்ச்சி வடிகட்டி (நெல்லித்தைலம்) வாரம் 2 முறை தலை முழுகி வர கண்காசம், காமாலை, மாலைக்கண், பொடுகு, முடி உதிர்தல் தீரும்.

2 கிலோ வற்றலை 4 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி இறுத்து அரைக் கிலோ சர்கரை சேர்த்துப் பாகாக்கி அதில்திரிகடுகு வகைக்கு 30 கிராம், கிராம்பு, ஏலம், வெள்ளைக் குங்கிலியம்,கற்பூரம், வாயய் விளங்கம், அதிமதுரம், கூகைநீறு, கொத்த மல்லி, சீரகம், ஓமம் வகைக்கு 10 கிராம் பொடித்துப் போட்டுக் கிளறி அரைலிட்டர் நெய் சேர்த்துக் காலை, மாலை கழற்சிக்காய் அளவு சுவைத்து பால் அருந்த மேகசூடு, எலும்பைப் பற்றிய காய்ச்சல்என்புருக்கி, இருமல், ஈழை, காசம், கபம்,வாயு, பீ னிசம், பொருமல் அனைத்தும் தீரும்.

நெல்லி இலையை நீரில் இட்டுக் காய்ச்சி வாய் கொப்பளிக்க வாய்ப் புண் தீரும். வேர்ப் பட்டையைத் தேனில் உரைத்துத் தடவ நாக்குப் புண் குணமாகும். நெல்லி வற்றலும் பச்சைப்பயறும் வகைக்கு 20 கிராம் 1 லிட்டர் நீரிலிட்டு 200 மி.லி.யாகக்காய்ச்சி வடித்து 100 மி.லி. யாக காலை,மாலை சாப்பிட்டு வர தலைசுற்றல், கிறுகிறுப்புடன் கூடிய இரத்தக் கோதிப்பு தீரும். 15 கிராம் நெல்லிக் காயை இடித்து அரை லிட்டர் நீரில் இட்டு 100 மி.லி.யாகக் காய்ச்சி 20 மி.லி.தேன் கலந்து 40 மி.லி.யாக 3 வேளை4 நாள் சாப்பிட மிகு பித்தம் தணியும்.

''சுத்தசுரம் தோலாப் பெரும் வாந்திபித்தசந்தி பாதமிசை பேருங்காண்-மெத்தமணம்நாறு மயர்க்கூந்துன்பின்னே காவும் இனிமை யெனக்கூறுமரு நெல்லியின் வேர்க்கு'' அரு நெல்லிச் சாற்றால் வெள்ளை படுதல் குணமாகும்.

வாந்தி நிற்கக் கொடுக்கலாம்.இதன் வடகத்தை துவையலாக வழங்க உடல் குளிர்ச்சி உண்டாகும். கண் ஒளிபெறும், காமாலை நீங்கும், பித்தம் போகும். மலமிழகும். நெல்லி மிகவும் குறைந்த விலையில் எளிதாக கிடைக்கக்கூடியது என்ற போதிலும் தற்கால நாகரிகத்தில் யாரும் அதை மதிப்பதில்லை. ‘சுகுருத்’ என்னும் அறிஞர; ஆயுர;வேத சாத்திரத்தில் புளிப்புத்தன்மை கொண்ட பழங்களில் (ஆசிட் புரூட்ஸ்) நெல்லிக்கனியே மிகச்சிறந்தது என்றும் ‘நல்வாழ்;;;வுக்கனி’ என்றும் கூறியுள்ளார;. நெல்லியை வடமொழியில் ‘ஆம்லா’ என்பர;. நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்றும் ஆகிய மூன்றும் திரிபலா என்பர;. ஆயுர;வேதத்தில் திரிபலாவை இராஜமருந்து என்பர;. திரிபலாவில் நெல்லி தான் முதன்மையாக விளங்குகிறது.

அருநெல்லிக்காய். அருநெல்லிக்காய். ஆஸ்துமா குறைய........ அருநெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா குறையும்.

நெல்லி மரம்: நெல்லிமரத்தில் பெருநெல்லி மற்றும் சிறுநெல்லி என இருவகையுண்டு. சிறுநெல்லியை விட பெருநெல்லி அதிக மருத்துவ குணம் கொண்டது. நெல்லிக்கு ஆங்கிலத்தில் கூஸ்பெரி (புழழளநடிநசசல) என்ற பெயரும் விஞ்ஞான பெயர; எம்பிளிக் மைரோபிலென் (நுஅடிடைiஉ ஆலசழடிநடநn) என்ற பெயரும் உள்ளது.

நெல்லி இந்தியா, இலங்கை, மியான்மர;, மலேயா, மலேசியத் தீவுகள், சீனா, ஜப்பான் ஆகிய தென்கிழக்கு நாடுகளிலும் இஸ்ரேல் முதல் கொரியா வரை மத்திய கிழக்கு நாடுகளிலும் அதிகமாய் காணப்படுகிறது. நெல்லி குன்றுகளிலும் காடுகளிலும் வளரும் தன்மை உள்ளது. இதேபோல் கிராமங்களில் மக்கள் மரத்தை வளர;க்கும் போது காடுகளில் வளரும் நெல்லியைவிட மக்கள் வளர;க்கும் நெல்லி பெரியதாக இருக்கும். காரணம் காட்டு நெல்லி மழையையே நம்பி இருப்பதால் நெல்லிக்கனி சற்று சிறியதாகவும் கருப்பாகவும் இருக்கும். கிராமங்களில் வளர;க்கும் நெல்லி நன்றாக தண்ணீர; ஊற்றி வளர;ப்பதால் மரங்களில் காய் சற்று பெரியதாக இருக்கும். நெல்லி இளம் மஞ்சள், இளம் சிவப்பு, இளம் கருப்பு என மூன்று நிறங்களில் கிடைக்கும். நெல்லிமரக்காற்று ஆரோக்கியமானது. இன்றைக்கும் நெல்லி மரப்பட்டைகளை உப்பு, துவர;ப்பு உள்ள கிணறுகளில் போட்டு வைப்பார;கள். உப்பு மற்றும் துவர;ப்பு உள்ள நீரை சுவையாக மாற்றும் தன்மை நெல்லிப்பட்டைக்கும் நெல்லிக்காய்க்கும் உண்டு. தண்ணீர; பானைகளில் கூட நெல்லிக்காய் அல்லது நெல்லிப்பட்டைகளை போட்டு வைத்தால் நீர; சுவையுடன் இருக்கும். நெல்லிக்காய்க்கு ஜீரண உறுப்புகளை நன்றாக செயல்படவைக்கும் ஆற்றல் உள்ளது.

 மற்ற பழங்களில் உள்ள வைட்டமின் ‘சி’ சத்து எளிதில் அழியக்கூடியது. காற்றாலும் வெப்பத்தாலும் கரையக்கூடியது. இவை உலர;ந்து போகும் போது வைட்டமின் ‘சி’ அழிந்துவிடும். ஆனால் நெல்லியில் உள்ள டானின் என்ற பொருளால் நெல்லியின் மருந்துத்தன்மை நீண்ட நாள் சிதையாமல் இருக்கும்.

தினமும் குழந்தைகளுக்கு 30 மி.கி முதல் 50 மி.கி வரை வைட்டமின் ‘சி’ தேவை. பெரியவர;களுக்கு 75 மி.கி தேவை. பாலூட்டும் தாய்க்கு 150 மி.கி தேவை. தினம் இரண்டு நெல்லிக்கனிகளையோ அல்லது நெல்லி வற்றலையோ 5 கிராம் அளவிற்குச் சாப்பிட்டால் நம் உடலிற்கு தேவையான அளவு வைட்டமின் ‘சி’ கிடைக்கும்

நெல்லிக்கனியால் தீரும் மற்ற நோய்கள்: சிறுநீர; எரிச்சல், ஆகார வாய் எரிச்சல், சிறுநீர; அழற்சி, சர;ககரை நோய், வயிறு எரிச்சல் போன்றவற்றை அவரவர; உடல்நிலைக்கேற்ப குணமாக்கும், தாகத்தை தணிக்கும். நெல்லிக்கனியை உலர;த்தி உலர;ந்த

. நெல்லியுடன் சுத்தமான தேன், ரோஜா இதழ்கள் போட்டு தயாரிக்கப்படும் கலவை ‘குல்கந்து’ எனப்படும். இதை கர;ப்பிணிப்பெண்கள் சாப்பிட்டு வர குழந்தை நல்ல நிறத்தல் பிறக்கும்.

வாய்ப்புண், தொண்டைப்புண்களுக்கு நெல்லிக்கனி அருமருந்தாக வேலை செய்கிறது. தொடர;ந்து வரும் சளி தும்மலுக்கு நெல்லிக்கனி சாறு தொடர;ந்து அருந்திவர படிப்படியாக சளித்தொல்லை குறையும். இதய பலவீனம், உயர; இரத்த அழுத்தத்திற்கும், மாரடைப்பு வந்தவர;கள் நெல்லியை தைரியமாக தினமும் ஒன்று வீதம் சாப்பிடலாம். பசியின்மை, வயிறு, குடல் புண்கள், தோல் நோய்கள், சொரி, புண்கள், மேகவெட்டை, நீரிழிவு, நீர;ச்சுருக்கு (சிறுநீர; சரிவர வராமல் இருப்பது) போன்றவற்றிற்கு நெல்லிக்காய் மிகவும் நல்லது.

நெல்லி - ஒரு அழகு சாதனப்பொருள்: நெல்லிக்கனியை உலர;த்தி பொடி செய்து அந்த பொடியுடன் கஸ்தூரி மஞ்சள் சேர;த்து குளித்துவர சருமம் மினுமினுக்கும், சரும நோய்கள் அண்டாது. வறட்சியான சருமம் உள்ளவர;கள் நெல்லிப்பொடியுடன் பயித்தம் மாவை கலந்து பூசிவர சருமம் பொலிவுடன் திகழும். நோய்களை நீக்கி நலத்தைப் பெருக்கி நம்மை வாழ்விக்கவந்த அருள்பொருளான நெல்லியைப் போற்றுவோம், உண்போம், நெடுநாள் வாழ்வோம்.


நெல்லிமரத்தின் இலைகளிலிருந்து எண்ணெய் தயாரிப்பர;. இந்த எண்ணெய் கூந்தல் வளர; தைலங்களில்; சேர;க்கப்படுகிறது.
இலைக்கொழுந்தை அரைத்து மோருடன் கொடுக்க சீதபேதி குணமாகும். நெல்லிமரத்தின் பட்டையை தேனில் குழைத்துக் கொடுத்தால் வாய்ப்புண் குணமாகும்.
நெல்லிமரத்தின் வேரை பயன்படுத்தினால் வாந்தி மலச்சிக்கல் குணமாகும். பச்சை வேர;ப்பட்டைச் சாற்றினொடு சிறிது தேன் கலந்து சாப்பிட்டால் பிறமேகம் போகும். குன்மம் இருமல் முதலியவற்றைப் போக்க வேர;க்கஷாயம் சிறந்தது.
வேரை உலர;த்தி இடித்து சூரணித்து அத்துடன் மேல் தோல் போக்கிய எள்ளையும் சேர;த்து சாப்பிட மூளையின் நரம்புகளுக்குப் பலம் உண்டாக்கி ஞாபக சக்தி அதிகரிக்கும்.
இம்மரத்தினின்று பிசினும் எடுக்கலாம்.


  கருநெல்லி (Phலடடயவெரள சுநனiஉரடயவரள) கருநெல்லியை காயசித்தி மூலிகை என்பர;. ஆபூர;வமாக இயற்கையின் ரசாயன மாற்றங்களால் ஏற்படும் நிகழ்வுகளால் கறுப்பு நிறத்துடன் கூடிய காய்களைத் தோற்றுவிக்கிறது. இதை சித்தர;கள் ஆய்ந்தெடுத்து அதன் மருத்துவப் பயனைப் பலவாறாகப் பயன்படுத்திக்கொண்டதுடன் அதே இயற்கை இராசயன மாற்றங்களை மண் கலவையில் ஏற்படுத்தி கரிய நிறம் கொண்ட இலை காய் பு+ செடி கொடி போன்றவற்றை உண்டாக்கினர;.


எவ்வாறெனில் சேரான் கொட்டையைக் கைப்படாமல் இடித்து அதன் எடைக்குச் சமமாக வண்டல் மண்ணைக் கலந்து ஒரு மண் பாத்திரத்தில் இட்டு சீல் செய்து புதைத்து விடுவார;கள். ஆறு மாதம் கழித்து அதை உடுத்து தமக்கு வேண்டிய சிறிய அல்லது பெரிய மூலிகைச்செடிகளை அம்மண் தொட்;டியில் நட்டுப் பயிராக்குவா; இயற்கையாய் இருக்கும் நிலத்தை விட இப்படி வளர;க்கப்பட்டால் அச்செடி கருகிய தண்டுகளுடன் கரிய இலைக்காம்புகளை காணப்படுவதுடன் அதன் விதைகளும் கனியும் காயும் கூட கருப்பாகவே காட்டும். இம்முறையில் வந்தது தான் கருநெல்லி;.

இது பித்தாதிக்க நோய்களில் சிறப்பாகச் செயல்படுவது தவிர பொதுவாக நெல்லியின் குணங்களே இதற்கும் உண்டு. ஆனால் வீரியம் அதிகம்.

நெல்லிக்கனியின் சிறப்பு 1. ஆரஞ்சு பழத்தை விட நெல்லிக்கனியில் 20 மடங்கு வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது.
2. ஆப்பிளைவிட 3 மடங்கு புரதச் சத்து நெல்லியில் உள்ளது.
3. அஸ்கார்பிக் அமிலம் என்னும் உயிர்ச்சத்து 160 மடங்கு நெல்லிக்கனியில் உள்ளது.நெல்லிக்கனியில் உள்ள வைட்டமின் சி சத்து உடலில் உள்ள இரும்புச் சத்து உட்கிரகிக்கப்படுவதை ஊக்கப்படுத்துகிறது. *

4. எச்.ஐ.வி, இன்புளுன்சா வைரஸ்கள் தாக்காமல் தடுக்கிறது.இதய வால்வுகளில், இரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி சீராக செயல்பட வைக்கிறது.
5. இருதய அடைப்பை தடுக்கிறது.
6. மேலும் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, இரும்புச்சத்து, கரோட்டின், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் நிறைந்துள்ளது.

7.நெல்லியை இடித்துச் சாறு பிழிந்து தேன் சேர்த்து சிறிதளவு திப்பிலிப் பொடி கலந்து சாப்பிட்டு வர சுவாச காசம் குணமாகும்.
8. உலர் பழத்தைச் சாப்பிட்டு வர கண்பார்வை கூடும். வயிற்றுப்போக்கு நிற்கும்.
9. நெல்லிச்சாற்றை அருந்தி வர நுரையீரல் பெருக்கம் தீரும். புழுக்களை அழிக்கும்.
10. நெல்லியை அரைத்து சிறிதளவு குங்குமப்பூ கலந்து ரோஜா நீருடன் கலந்து குடிக்க தலைவலி, மூலநோய் நீங்கும். 11. நெல்லிச்சாறு உடலிலுள்ள அதிக சர்க்கரையைக் குறைக்கும்.

12. நாள்தோறும் ஒரு நெல்லிக்கனி தின்றால் இதயக் கோளாறுகள் நீங்கும். நரம்புத் தளர்ச்சி, இளநரை, தோல் சுருக்கம் போன்றவை குணமாகும். 13. பாலில் சிறிதளவு நெல்லிச்சாறு கலந்து சாப்பிட்டுவர கீல்வாதம், நரம்புத் தளர்ச்சி, மூளைச்சூடு ஆகியவை குணமாகும்.

14. நெல்லியை உலர்த்திப் பொடியாக்கி தேய்த்துக் குளிக்க உடலில் சொறி, தோல் சுருக்கம் நீங்கும்.
15. உலர் நெல்லியை நீரில் போட்டு ஊறவைத்து இந்நீரில் கண்களைக் கழுவி வர கண்நோய்கள் குணமாகும்.
16. நெல்லிப் பொடியுடன் தேன் அல்லது நெய் கலந்து இரவில் சிறிதளவு உண்டுவர கண்பார்வை மங்குதல் மாறும்.

17. நெல்லிக்கனியை, எலுமிச்சை இலைகளோடு சேர்த்து அரைத்து பாலில் கலந்து, நரை (ஆரம்பக்கட்ட நரை) முடிகள் மேல் தேய்த்து, ஒரு மணி நேரம் ஊறிய பின் இளஞ்சூடான நீரில் குளித்து வர நரை மேலும் தோன்றாது. 18. நெல்லியை அரைத்து நெற்றியில் பற்றுப் போட சளியுடன் கூடிய தலைபாரம், தலைவலி நீங்கும். 19. நெல்லிச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட சளி, தும்மல் நீங்கும். 20. பாலில் நெல்லிப்பொடியைக் கலந்து கொதிக்க வைத்து, சிறிதளவு நெய்விட்டு கலக்கி அருந்திவர கக்குவான் இருமல் குணமாகும். 21. நெல்லிக்காயைத் தின்று வந்தால் பயோரியா நோய், ஸ்கர்வி நோய் நீங்கும். பல் கிருமிகள் அழியும். 22. நெல்லிச்சாறில் சந்தனம் கரைத்து சிறிதளவு உட்கொள்ள குமட்டல், வாந்தி நிற்கும். 23. நெல்லி விதையை ஊறவைத்து அரைத்து, பாலில் கலந்து சாப்பிட மூலநோய் குணமாகும். 24. நெல்லி லேகியம் உண்டு வந்தால் இதயம் வலிமை பெறும். இரத்தக்குழாய் அடைப்பு நீங்கும். 25. நெல்லிச் சாறுடன், வாழைப்பட்டை சாறு கலந்து அருந்த பாம்பு, தேள், வண்டு நஞ்சுகள் இறங்கும். 26. நெல்லிப்பொடி, நெல்லி லேகியம் இவைகள் மதுவால் புண்ணாகிப்போன உள்ளுறுப்புகளைச் சீராக்கும். வேறு எந்த காயகனியிலும் இதிலுள்ள வைட்டமின் 'சி ' அளவைப் போல் பெற இயலாது. ஒரு நெல்லிக் காயில் இருபத்து --முப்பது ஆரஞ்சுப் பழங்களில் உள்ள வைட்டமின் சி சத்து உள்ளது. நெல்லிக்காய் சாறு 15 மி.லி. தேன் 15 மி.லி.எலுமிச்சைச்சாறு 15 மி.லி.கலந்து காலை மட்டும் சாப்பிட்டு வர மதுமேகம் முற்றிலும் தீரும். மஞ்சளையும், நெல்லிக்காயையும் சேர்த்து அரைத்து சிறுநீர்ப்பைத் தொற்று வியாதிகளுக்கு மருந்தாகக் கொடுப்பார்கள். சிறுநீர் கழியாமல் தடைபடும் நிலையில் ஏலக்காயையும், நெல்லிக்காயையும் சேர்த்து அரைத்து மருந்தாகக் கொடுப்பார்கள். இரத்தம் கலந்து சிறுநீர், சிறுநீர் கழியும் போது வரும் எரிச்சல் போன்றவற்றிற்கு நெல்லிக்காயை தேனில் கலந்து அரைத்துக் கொடுப்பார்கள். நெல்லிக்கனி விதையைப் பவுடராக்கி, அதனுடன் அரிசி கஞ்சியை கலந்து கொடுத்து வந்தால் பெண்களின் மாதவிடாய்க் கோளாறுகள் கட்டுப்படும். தினம் ஒரு நெல்லிக்காயை உண்டால் அது தேகத்திற்கு புத்து ணர்ச்சியைக் கொடுத்து நாம் இளமையாக இருக்க உதவும் டானிக் காக இருக்கும். தொற்று நோய்கள் எதவும் தொற்றாது. இருதயம், சிறுநீரகம் பலப்படும். ஒரு டேபிள் ஸ்பூன் நெல்லி சாறையும், அரை ஸ்பூன் தேனையும் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் கண் நோய் வராது. நெல்லிச்சாறுடன் பாகற்காய் சாறைச் சேர்த்துச் சாப்பிட்டால் கணையத்தைத் தூண்டி இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தி சர்க்கரை வியாதியைத் தடுக்கும். ஒரு ஸ்பூன் நெல்லிக்காய்பொடி, ஒரு ஸ்பூன் நாவல்பழப் பொடி, ஒரு ஸ்பூன் பாவற்காய் தூள் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் வராது. உலர்ந்த நெல்லிக்காயையும், சிறிது வெல்லத்தையும் சேர்த்து சாப்பிட்டால் முடக்குவியாதி குணமாகிவிடும். அழகு சாதனப் பொருள்கள் தயாரிப்பதிலும் நெல்லிக்காய்க்கு ஒரு பிரதான இடம் உண்டு. நெல்லியின் உள்ளிருக்கும் கொட்டைகளை நன்கு பொடி செய்து அதை தேங்காய் எண்ணெயில் கலந்து, நன்றாக கொதிக்க வைத்து, பின் குளிர வைத்து தலைக்குத் தடவி வந்தாலும், தலை பளபளப்பாகவும் கருமையாகவும், அடர்த்தியாகவும் இருக்க உதவும். அமலா கூந்தல்தைலம் கேடத்திற்கு நல்லது .உடலுக்கு குளிர்ச்சி தரும் . ஆயுளை நீட்டிக்கும் அற்புதமான மூலிகை நெல்லியாகும். உடம்பில் உண்டாகும் வெட்டைச் சூட்டினால் கன்னம் குழி விழுந்து ஒட்டிப்போய், தேகம் வறண்டு, நடை தளர்ந்து நாணலாகிப் போன இளைஞர்கள் இன்று நிறைய பேர் இருக் கிறார்கள். இவர்கள் இருபது வயதில் அறுபதை எட்டியவர்கள். இவர்கள் மன்மத அழகுடன் வலம் வர நெல்லிக்கனியைச் சரணடைவதே மிகவும் நல்லது. நெல்லிக்காயை அரைத்துத் தூள் செய்து வைத்துக் கொண்டு தினசரி சாப்பிட்டு வரவும். அல்லது நெல்லிக்காயைத் தேனில் ஊற வைத்து சாப்பிட்டு வரலாம். நெல்லிக்காயை துவையல், சட்னி, சூப் போன்ற ஏதேனும் ஒரு முறையில் தினசரி சாப்பிட்டு வரலாம். ஆயுர்வேத மருந்து விற்பனைக் கூடத்திற்குச் சென்று, உலகப் பிரசித்தி பெற்ற "சயவனபிராச லேகியம்' அல்லது "நெல்லிக்காய் லேகியம்' எனக் கேட்டு வாங்குங்கள். இதனை தினசரி காலை- மாலை தொடர்ந்து சாப்பிட்டு வாருங்கள். எண்ணற்ற பலன்களை இந்த ஒரே மருந்தினால் நீங்கள் பெறலாம். நெல்லிமுள்ளி, மருதம்பட்டை, கடல் அழிஞ்சில், மஞ்சள் ஆகியவற்றை வகைக்கு 100 கிராம் வாங்கி ஒன்றாகத் தூள் செய்து கொள்ளவும். இதில் 40 கிராம் படிகார பற்பம் கலந்து வைத்துக் கொள்ளவும். இதில் இரண்டு கிராம் அளவு (அரை ஸ்பூன்) காலை- இரவு இருவேளையும் உணவுக்குப்பின் சாப்பிட்டு வர எப்பேர்ப்பட்ட சர்க்கரை நோயும் கட்டுப்படும். கடைகளில் "நிஷா ஆமலகி சூரணம்' என்ற பெயரில் விற்பனைக்குக் கிடைக்கிறது. உபயோகித்து சர்க்கரை நோயிலிருந்து விடுபடலாம். சிறுநீரகக் கோளாறு, இரத்தச் சோகை, மஞ்சள் காமாலை மற்றும் அஜீரண நோய்களுக்கு நன்மருந்தாகிறது. சர்க்கரை நோயாளியின் கணையத்தை வலுவேற்ற உதவும். மூப்பினை ஏற்படுத்தும் தொல்லைகளைப் போக்கி, உடல் உறுப்புகளை நல்ல நிலையில் வைக்கும் திறன் படைத்தது. நெல்லிக்காயை எலுமிச்சை இலைகளுடன் சேர்த்து விழுது போல் அரைத்தெடுத்து, பாலுடன் கலந்து தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் நரை இருந்தாலும் கருக்கத் தொடங்கி விடும். நெல்லி வற்றல், பச்சை பயறு வகைக்கு 20 கிராம் எடுத்து 1 லிட்டர் நீர்விட்டு 200 மி.லி.யாக காய்ச்சி வடித்து, 100 மி.லி என காலையும் மாலையும் அருந்தி வந்தால் தலைச்சுற்றல் கிறுகிறுப்புடன் கூடிய இரத்தக் கொதிப்பு நீங்கும்நெல்லிக்காய் ஈரலை தூண்டி, நன்கு செயல்பட வைத்து கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. ஜீரண சக்தியை அதிகரித்து, தாதுக்களை நம் உடல் ஏற்றுக் கொள்ள துணை புரிகிறது. கண்களுக்கு தெளிவை கொடுக்கிறது. தலைமுடி உதிராமல், வளர்ந்து, நரைமுடி தோன்றுவதை தவிர்க்கிறது. நரம்பு மண்டலத்தை தூண்டி வேலை செய்கிறது. மூளை செல்களுக்கு புத்துணர்ச்சியளிப்பதால், மனத்தெளிவு, புத்திக்கூர்மை மற்றும் ஞாபசக்தி உண்டாகிறது. நுரையீரலை பலப்படுத்தி சுவாச நோய்களை கட்டுப்படுத்த உதவுகிறது. உடல் எடையை கூட்டாமல் தசைகளுக்கு பலம் அளிக்கக் கூடிய தன்மை நெல்லிக்காய்க்கு உண்டு.

கடுக்காய் மரம் -உடலை அழியாத் தன்மைக்குக் கொண்டு செல்ல




கடுக்காய்


 
 கடுக்காய் உடலை அழியாத் தன்மைக்குக் கொண்டு செல்ல, திருமூலர் அறுபதுக்கும் மேற்பட்ட காயகற்ப முறைகளைக் குறிப்பிட்டுள்ளார். உடல் நலம் பெற எவர் முனைந்தாலும், முதலில் உடலில் உள்ள அழுக்குகளை அகற்றிக் கொள்ள வேண்டும். ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று திருமூலர் குறிப்பிடுகிறார்.

கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும். "பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலாய் கருது' என்று சித்தர்கள் கூறுகிறார்கள்.

பெற்ற தாயானவள் தன் பிள்ளைமேல் உள்ள பாச மிகுதியால், கண்ட உணவுகளையும் வகை வகையாய் செய்து கொடுத்து அவன் வயிற்றைக் கெடுத்துவிடுவாள். ஆனால் கடுக்காயோ வயிற்றில் உள்ள கழிவுகளை யெல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது. கடுக்காய் மரம் ஓங்கி உயரமாக வளரும் தன்மை கொண்டது. சுமார் 20 முதல் 25 மீட்டர் உயரத்தில், அரை மீட்டர் விட்டமுடைய அடிமரத்துடன் காணப்படுகிறது. இது குளிர் காலத்தில் இலையுதிர்த்து, மார்ச் மாத வாக்கில் துளிர்க்கிறது. இலைகள் சிறுகாம்புடன் முட்டை வடிவத்துடன் இருக்கும். பூக்கள் பச்சை நிறம் கலந்த வெண்மை நிறமாக, சிறிது மணத்துடன் காணப்படும். காய்கள் பச்சை நிறமுடையதாகவும், முதிரும்போது கரும்பழுப்பு நிறமாக நீண்ட பள்ளங்களுடைய தடித்த ஓட்டோடு காணப்படும்.
ஓட்டினுள் கொட்டை காணப்படும்.

கடுக்காயானது முட்டை வடிவிலோ அல்லது நீண்ட முட்டை வடிவத்துடனோ காணப்படும். கடுக்காயில் ஏழு வகைகள் உள்ளதென நமது சித்த மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன.

அவை முறையே அபயன், விசயன், பிரிதிவி, சிவந்தி, அமுர்தம், ரோகினி, திருவிருதுதம் என்பதாகும்.

மேலும் மரங்கள், இடம், காயின் வடிவம், தன்மை இவற்றைப் பொறுத்து கருங்கடுக்காய், செங்கடுக்காய், வரிக்கடுக்காய், பால் கடுக்காய் எனப் பல வகைகள் உள்ளன. அழுத்தமான உள் கொட்டை பயனற்றது.

 இஞ்சியில் மேல் தோலும் கடுக்காயின் உள் கொட்டையும் எப்போதும் பயன் படுத்தக்கூடாதவை.

கடுக்காய் என்ற பெயரில் நாட்டு மருந்துக் கடைகளிலும், காதி கிராப்ட் கடைகளிலும் கிடைக்கும். பொடியாகவும் கிடைக்கிறது. கடுக்காயின் சதைப்பற்றான மேல் தோலை இடித்துத் தூள்செய்து வைத்துக் கொண்டு, மாலை அல்லது இரவு வேளைகளில் அரை ஸ்பூன் எடுத்து குளிர்ந்த நீரிலோ, வெந்நீரிலோ, பாலிலோ கலந்து அருந்தலாம்.

வாயிலும் ,தொண்டையிலும், இரைப்பையிலும் ,குடலிலும் உள்ள ரணங்களை ஆற்றிவிடும் வல்லமை பெற்றது.அது மட்டுமின்றி பலசிக்கல்களை ஏற்படுத்தும் மலச்சிக்கலைப் போக்கி குடல் சக்தியை ஊக்கப்படுத்தும்.பசியைத்தூண்டி,ரத்தத்தை சுத்தப்படுத்தி, வாதம் பித்தம்,கபம் ஆகிவற்றால் வரும் ஏராளமான நோய்களைப் போக்கும்.

ஊட்டத்தை ஊட்டி இளமையை நீடிக்க வைத்து மிடுக்கோடு வாழவழி செய்யும். கடுக்காயும் தாயும் கருத்தில் ஒன்று என்றாலும் கடுக்காய் தாய்க்கு அதிகம் காண் நீ-கடுக்காய் நோய் ஓட்டி உடல் தேற்றும் உற்ற அன்னையே சுவைகள் ஊட்டி உடல் தேற்றும் உவந்து.

-என்ற மருத்துவப்பாடல் கடுக்காய் பெற்ற தாயைவிடப் பெரியது எனப் புகழ்கிறது.

ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று திருமூலர் குறிப்பிடுகிறார். கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும். "பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலாய் கருது' என்று சித்தர்கள் கூறுகிறார்கள்.

. கடுக்காயை லேகியம் செய்து உண்ண, நரை, திரை மாறி காய சித்தியாகும். இதற்கு ‘அகஸ்த்தியர் ரசாயனம்” என்று பெயர். முற்காலத்தில் கட்டடம், கோவில் கட்ட கடுக்காய்ச்சாறு சேர்க்கப்பட்டது. உபயோகிக்கும் போது நிபுணரை ,மருத்துவரை கலந்து உபயோகிக்கவும் .

மூலிகைகள் தீங்கிலாதவை என நினைக்கவேண்டாம் .அதிலும் மூலிகை பறிப்பது சுத்தி செய்வது ,பத்தியம் ,அதை தரம் பிரிப்பது ,நேரம் போன்ற பல காரணிகள் உண்டு .

சிறு குழந்தைகளுக்கு சந்தனக்கல்லில் சிறிது உரசி இழைத்து பாலில் கலந்து புகட்டலாம். காது நோய்களுக்கும் கண்கண்ட மருந்தாகத் திகழ்கிறது கடுக்காய் கொடுத்து விட்டான் என்று ஏமாற்றி மோசம் செய்பவர்களைக் குறிப்பிடுவார்கள்....

புராணங்களில் இம்மரத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. தேவலோகத்தில் இந்திரன் அமிர்தத்தை அருந்தும்பொழுது ஒரு துளி அமிர்தம் சிந்தியதாம். அத்துளி பூமியில் விழுந்து கடுக்காய் மரமாக உருவெடுத்தது என புராணம் உரைக்கிறது. சுமார் 4000 ஆண்டுகட்கு முற்பட்ட சித்த மருத்துவ நூல்களில் கடுக்காய் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.





கடுக்காயைஉபயோகிக்கும் போது அதை உடைத்து அதில் உள்ளே உட்கொட்டையில் இருக்கும் ஒரு நரம்பை நீக்கவேண்டும் .அது விஷத்தன்மை உடையது .இதுவே சுத்தி செய்தல் .இது தெரியாமல் கடையில் விற்கும் கடுக்காய் பொடியை வாங்கி உபயோகித்து பின் வருந்துவதில் பலனில்லை .

அறு சுவையில் ஒரு சுவையான உப்பு தவிர்த்து துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கசப்பு, எரிப்பு ஆகிய ஐந்து சுவை நிறைந்த கடுக்காயில் வாத-பித்த-கப தன்மையை சீர்படுத்தும் சக்தி இருக்கிறது.

கடுக்காயின் விதைப் பகுதி நஞ்சு போல் பாவிக்கப்படுவதால் அதை நீக்கிவிட்டு பயன்படுத்த வேண்டும். ஜீரண சக்தி அதிகரிப்பு, இளமை பாதுகாப்பு, புத்தி சக்தி மேம்பாடு, ஐம்புலன்களுக்கும் சக்தி தருதல் ஆகியவை உள்ளன. கனமான தொடைப்பகுதியை சுருக்குதல், தோல்வியாதியை குணப்படுத்துதல், மண்ணீரல் சக்தியை மேம்படுத்துதல், உடல் வீக்கங்களை போக்குதல், சுவாசநோய்களை கட்டுப்படுத்துதல், ரத்த நாள அடைப்பை நீக்கி இதயத்தை வலுப்படுத்துதல் போன்ற பல பலன்களை கடுக்காய் தருகிறது.

இரவு படுக்கச் செல்வதற்கு முன்பு 5 கிராம் கடுக்காய் தூள் எடுத்து சூடான நீரில் கலந்து பருகவேண்டும். இஞ்சி, சுக்கு, கடுக்காயை ஒரு மண்டலம் எனப்படும் 48 நாட்கள் காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் மேலே குறிப்பிட்டதுபோல் உட்கொண்டால் நன்றாக ஜீரணமாகும். ஜீரணம் ஆன பின்பு மலமும் நன்றாக வெளியேறும். இதனால் உடலின் முழு இயக்கமும் சீரடையும். நோய் அண்டாது. இளமையோடு நீண்ட நாள் வாழலாம்.

அதனால்தான் "காலையில் இஞ்சி... நண்பகல் சுக்கு... மாலையில் கடுக்காய் மண்டலம் உண்ண கோலை ஊன்றி குழைந்து நடந்தவர் கோலை வீசி குலாவி நடப்பரே..''- என்று சித்த மருத்துவ பாடல் குறிப்பிடுகிறது.

 சிறிதளவு சோம்பு, கடுக்காய் தூள் சேர்த்து மண் சட்டியில் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக காய்ச்சி வடிகட்டி அதனுடன் சுத்தமான சிறிதளவு தேன் கலந்து தினமும் 2 வேளை குடித்து வந்தால் உடல் எடைக் குறையும்

காலையில் படுக்கையிலிருந்து எழுந்தவுடன் ஒரு மனிதனுக்கு அவன் இயக்கம் சரிவர தொடங்குவதற்கு தேவையானது உஷ்ணம். அதுவரை நிலவி வந்தது வாதம். இந்த உஷ்ணத்தை உடனடியாக வழங்கி வாதமென்ற உடல் விரைப்பை மாற்றி செயலாற்றத் தூண்டுகிறது இஞ்சி. எனவேதான் காலையில் இஞ்சி.

பின் ஏன் கடும்பகல் சுக்கு? கதிரவன் உச்சி மீது வெயிலாக பொழிந்து உடலை உஷ்ணப்படுத்தி வியர்வையை ஏற்படுத்துகிறான். உடலிலிருந்து வியர்வை வெளியேறும்போது உடலின் உட்பகுதியில் ஏற்படும் மாற்றம் , ஒன்றிலிருந்து ஒன்று வெளிவரும்போது மற்றொன்று குளிர நேரிடுகிறது. இதுதான் இயற்கையின் விதி. புற உடலில் ஆவி, உடலின் உட்புறத்திலிருந்து குளிர். எனவே, சரீர சமநிலை மாறிவிடும். இப்படி உடலின் சமநிலை மாறிவிடும்போது இந்த நிலையை சரிகட்ட ஏற்படும் தானான முயற்சியின் விளைவே கபம். இந்த கபம் ஏற்படாமல் தடுக்கவும், ஏற்பட்ட கபத்தை அகற்றவும் கடும்பகல் சுக்கு.

பகல் முழுவதும் உடல் உழைப்பால் களைத்துவிடும் மனிதனின் வயிற்றுக்குள் இருக்கும் அனைத்து மலபந்தங்களோடு, உறவாடி விளையாடி, காலையில் அவன் எழுந்தவுடன் மலத்தை வெளியேற்றி அவன் வயிற்றை சுத்தமுறச் செய்வதுதான் கடுக்காயின் சேவை. ஆக காலவரையான மண்டலம் என்ற மூன்று பட்சங்கள் தொடர்ந்து சேர்த்து வந்தால் முதியவனும் கோலை வீசிவிட்டு இளங்காளையாக மாறி குலவ ஆரம்பித்து விடுகிறான்.



மண்டலக் கணக்கு 1 மண்டலம் என்பது 48 நாட்கள். மூன்று பட்சங்கள் அதாவது ஒரு பட்சம் என்பது 14 நாட்கள், பட்சங்கள் இரண்டு வகையாக உள்ளன. சுக்லபட்சம், கிருஷ்ணபட்சம். இவை இரண்டும் சூரிய சந்திரனின் நிலைப்பாட்டினைக் கொண்ட காலக் கணக்கு. அமாவாசையிலிருந்து பௌர்ணமி வரை சுக்ல பட்சம். பௌர்ணமியிலிருந்து அமாவாசை வரை கிருஷ்ண பட்சம். இந்த பூமியின் நிலைப்பாட்டிற்கு சந்திரனின் சுழற்சி ஒரு பட்சத்தில் 1800, அதுபோல் அடுத்த பட்சத்திற்கு 1800 அப்படி 3600 ஒரு சுழற்சியை முழுமை பெறச் செய்யும் சந்திரனின் கால ஓட்டம். இந்த பட்சங்களே மருந்து உட்கொள்ளுவதற்கு ஏற்ற காலமாக பரிந்துரைக்கப் படுகிறது.

இன்றும் நம் கிராமங்களில் அமாவாசை, பௌர்ணமி, அல்லது அஷ்டமி என்று எதாவது ஒன்று சொல்லி அந்த நாட்களில் குழந்தைக்கு தலையில் தண்ணீர் ஊற்றக்கூடாது என்பார்கள்.

ஏனெனில் இந்த நாட்களில் சந்திரனின் ஈர்ப்பு சக்தி பூமியிலும், பூமியில் உள்ள அனைத்து வஸ்துக்களிலும் அதிகமாக செலுத்தப்படுகிறது. அதன் விளைவாகவே கடலின் அலைகள் பேரலையாகவும், மிருகங்களின் கருவுறும் காலமாகவும்இருக்கிறது. ஏன்.. மனிதர்களின் உணர்வுகள் தூண்டப்படுவதுமாக உள்ள நிலை ஏற்படுகிறது. தூண்டப்பட்ட உணர்வுகளுக்கு அடிமைப்பட்டு அவன் சீரழிந்துவிடாமல் தடுப்பதற்காக வேண்டியே விரதம் என்ற போர்வையில் (பௌர்ணமி, அமாவாசை) கடிவாளம் பூட்டப்பட்டது.

இப்படிப்பட்ட உன்னதமான சந்திர கால நிர்ணயத்தை வைத்து மண்டலக் கணக்கில் மேற்சொன்ன இஞ்சி, சுக்கு, கடுக்காய் இம்மூன்றையும் மருந்தாக கொண்டு வாழ்நாளை விருத்தியாக்கச் செய்து சுகமுடன் வாழச் சொன்னால் இதுவே சூத்திரமும் ஆகும்.

கடுக்காய் ஓட்டைத் தூளாக்கி இரவு உணவு உண்டதும் அரை தேக்கரண்டி பொடியைத் தின்று, ஒரு டம்ளர் நீரைக் குடித்துவர உடல் வலுவாகும். வாதம் குணமாகும். மூன்று கடுக்காய்த் தோல்களை எடுத்து, தேவையான இஞ்சி, மிளகாய், புளி, உளுத்தம்பருப்பு சேர்த்து எல்லாவற்றையும் நெய்யில் வதக்கி எடுத்து உப்பு சேர்த்து துவையலாக அரைத்து சாதத்துடன் பிசைந்து உண்டு வர, ஜீரண சக்தி கூடும். மலச்சிக்கல் மாறும், உடல் பலம் பெறும்.

கடுக்காய்த்தூளை 10 கிராம் எடுத்து, அதே அளவு சுக்குத்தூள், திப்பிலித்தூள் எடுத்து கலந்துகொண்டு காலை, மாலை அரை ஸ்பூன் வீதம், 21 நாட்கள் சாப்பிட்டு வர, வாதவலி, பித்த நோய்கள் குணமாகும்.

15 கிராம் கடுக்காய்த் தோலை எடுத்து நசுக்கி, 15 கிராம் கிராம்பு சேர்த்து ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைத்து, ஆறியபின் அதிகாலையில் குடிக்க நாலைந்து முறை பேதியாகும். அதன்பின் மலச்சிக்கல், வயிற்றுப் பிணிகள் மாறிவிடும்.

200 கிராம் கற்கண்டை தூளாக்கி, நீர் விட்டுப் பாகு போலக் கிளறி, அதோடு 20 கிராம் கடுக்காய்த் தூளைக் கலந்து வைத்துக்கொண்டு, காலை, மாலை அரை தேக்கரண்டி தின்று, வெந்நீர் குடிக்க குடல்புண், சுவாச காசம், மூலம், வாதநோய்கள் குணமாகும்.

மூக்கிலிருந்து இரத்தம் வந்தால், சிறிதளவு கடுக்காய்த்தூளை எடுத்து மூக்கால் உறிய, ரத்தம் வருவது நின்றுவிடும். 10 கிராம் வீதம் கடுக்காய்த்தூள், காசுக்கட்டித் தூள் எடுத்து பொடியாக்கி சிறிதளவு பொடியை, வெண்ணெயில் குழைத்து, நாக்குப்புண், உதட்டுப் புண்ணில் பூசிவர புண்கள் ஆறும்

. கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் மூன்றும் கலந்த திரிபலா சூரணத்தை அடிக்கடி நீரில் கலந்து குடிக்க உடல்பலம் ஏற்படும். வயிற்றுக் கோளாறு மாறும்.

நாவறட்சி, தலை நோய், ஈரல் நோய், வயிற்றுவலி, குஷ்டம், இரைப்பு, தொண்டை நோய், புண், கண்நோய், வாதம், வயிற்றுப்புண், காமாலை போன்ற நோய்களைக் குணப்படுத்தும் தன்மையும் கடுக்காய்க்கு உண்டு.
நன்றி
Posted by hayura hayu at 05:40 thank you thagaval kalanchiyam..

10 May 2014

வியப்பூட்டும் அதிசய மரங்கள்



வியப்பூட்டும் அதிசய மரங்கள்


Picture shows Udumpara (Aththi in Tamil, Ficus glomerata, Ficus Racemosa)
உலகில் மரத்தின் பெயரை நாட்டின் பெயராகவுடைய நாடுகள் மிகச் சிலதான். பாரதம் அந்தப் பெருமையை உடைய நாடு. இதன் பழைய பெயர் ‘நாவலந்தீவு’. சம்ஸ்கிருதத்தில் ‘ஜம்புத்வீபம்’. இது சிலம்பு, மணிமேகலை காப்பியங்களிலும், வடமொழி நூல்களிலும் காணப்படுகிறது. பிராமணர்கள் கோவில்களிலும் வீட்டுப் பூஜைகளிலும் இந்தப் பெயரைத் தான் இந்தியாவுக்குப் பயன் படுத்துகின்றனர். அதாவது பாரதம், இந்தியா, இந்துஸ்தானம் ஆகிய பெயர்களுக்கு எல்லாம் முந்தியது ‘ஜம்புத்வீபம்’!
பகவத் கீதையில் ‘மரங்களில் நான் அஸ்வத்தம் என்னும் அரச மரம்’ என்கிறான் கண்ணன். விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் ஆலமரம் (ந்யக்ரோத), அரச மரம் (அஸ்வத்தம்), அத்திமரம் ஆகிய மூன்றும் விஷ்ணுவின் பெயர்களாக வருகின்றன. அதாவது மரமே கடவுள். மௌனத்தின் மூலம் மாபெரும் தத்துவத்தை உபதேசம் செய்யும் தட்சிணாமுர்த்தியொவெனில் ஆலமரத்தின் கீழே அமர்ந்திருக்கிறார். (இது குறித்து ‘இந்திய அதிசயம்:ஆலமரம்’ Indian Wonder: The Banyan Tree என்ற நீண்ட கட்டுரையில் ஏற்கனவே எழுதிவிட்டேன்).
தாவரவியல் என்பதும் மரங்களை இனம் வாரியாக, குடும்பம் வாரியாகப் பிரிப்பதும் 1735ஆம் ஆண்டு முதல்தான் லின்னேயஸ் என்பவரால் உண்டாக்கப்பட்டது. ஆனால் விஷ்ணு சஹஸ்ரநாமம் (மஹாபரதத்தின் ஒருபகுதி) 3000 ஆண்டுகளுக்கு முன்னரே இதைப் பின்பற்றிவிட்டது. விஷ்ணுவின் பெயராக வரும் ஆல், அரசு, அத்தி மூன்றும் மோரேசி என்னும் குடும்பத்தையும் பைகஸ் என்ற ஜீனஸ்—ஐயும் சேர்ந்தவை!! (Family Moraceae, Genus: Ficus)
புத்த கயாவில் புத்தர் நின்று போதித்த அரச மரம் உள்ளது. இதை போதி மரம் என்று அழைப்பர். கயாவில் அக்ஷய வடம் எனப்படும் அழியாத ஆலமரம் ஒன்றும் இருக்கிறது. இவ்விரு மரங்களையும் பக்தர்கள் பயபக்தியுடன் வணங்கிச் செல்வது வழக்கம்.
உலகிலேயே மரங்களை இன்றும் வழிபடும் ஒரே மதம் இந்து மதம்தான். ஆலமரம் அரசமரம், உடும்பரா எனப்படும் அத்திமரம் ஆகியனவற்றை புராணங்கள் முழுதும் போற்றுகின்றன. அரச மரத்தில் மும்மூர்த்திகளும் இருப்பதாக தர்ம சாத்திரங்கள் பகர்கின்றன.
வேதத்திலும் உபநிஷத்துக்களிலும் மரங்கள் பற்றிய குறிப்புகள் உண்டு. உபநிஷதத்தில் ஒரு ரிஷியின் பெயரே பிப்பலாடன் (அதாவது திருவாளர் அரசமரம்).
ஒவ்வொரு யாகத்துக்கும் அரச மரம், ஆலமரக் குச்சிகளுடன் வேறு பல மரக்குச்சிகளும் தீயில் ஆஹுதி செய்யப் படுகின்றன. சந்தன மரத்தின் பெருமையை தமிழ், வடமொழி இலக்கியங்கள் பக்கம் பக்கமாகப் புகழ்கின்றன.
மரத்தின் பெயரால் பிரதேசங்களை அழைக்கும் வழக்கம் தமிழிலும் புராணங்களிலும் உண்டு.(இதுபற்றி தமிழர்களின் பூக்கள் மோகம் Flowers in Tamil Culture என்ற கட்டுரையில் ஏற்கனவே எழுதிவிட்டேன்)
புனித ஆலமரம்
கண்ணன் பகவத் கீதையை உபதேசித்த குருக்ஷேத்திரத்தில் ஒரு பெரிய ஆலமரம் இருக்கிறது. இது 5000 ஆண்டு பழமையானது என்றும் கிருஷ்ணன் இங்கேதான் கீதோபதேசம் செய்தான் என்றும் மக்கள் நம்புகின்றனர். இதே போல புத்தர் தங்கி தியானம் புரிந்த போதி (அரச) மரத்தின் கிளைகள் இலங்கை முதலான நடுகளுக்கு அனுப்பப்பட்டது. ஒரிஜினல் ஆலமரமோ அரச மரமோ இன்று இல்லாவிட்டாலும் அவற்றின் கிளைகள், விதைகளில் இருந்து தழைத்த மரங்கள் இருக்க வாய்ப்பு உண்டு.
அத்திமர அதிசயம்

அத்திமரத்துக்கு அற்புத சக்தி இருப்பதாக அதர்வண வேதம் (AV.xix-31) கூறுகிறது. இதில் தாயத்து செய்து போட்டுக் கொண்டதாகவும், அரிச்சந்திர மகாராஜா இதிதான் கிரீடமும் சிம்மாசனமும் செய்துகொண்டார் என்றும் புராணங்கள் பேசுகின்றன.
தமிழ்நாட்டுக் கோவில்தோறும் ஸ்தல மரமும், மன்னர்களுக்கு காவல் மரமும் இருந்தன. இது பற்றியும் இலக்கியத்தில் நிறைய விஷ்யங்கள் உண்டு. திருஞான சம்பந்தப் எருமான் ஆன் பனையைப் பெண்பனையாக மாற்றி அற்புதம் செய்ததைத் தேவாரத்தில் காணலாம்.
அற்புத வில்வ மரம்
கடலாடி பர்வத மலையில் மல்லிகார்ஜுனர் கோவிலில் ஒன்பதும் பதினொன்றும் தளங்கள் (இலைகள்) உடைய மஹா வில்வ மரங்கள் இருக்கின்றன. இது அபூர்வமாகவே காணப்படும். சிவ பெருமானுக்கு மிகவும் விஷேசமானவை.மலை மீது வளரும் கல் மூங்கில்கள் காஞ்சி சங்கராசார்ய சுவாமிகளின் தண்டத்துக்காக (கையில் வைத்திருக்கும் கம்பு) வரவழைக்கப்படுகின்றன. மதுரையின் தல விருட்சம் கடம்ப மரம், காஞ்சியின் தல விருட்சம் மாமரம் (ஆம்ர) போன்று ஒவ்வொரு கோவிலும் ஒரு மரத்துக்கு ஆதாரமாக விளங்குகின்றன.

திருத்தணி கன்னிக் கோயிலில் 7 மரம்
(தினமணிக் கதிர், 7-8-1983)
திருத்தணியில் கன்னிக் கோயில் உள்ளது. இது சப்த கன்னிகையால் ஆதியில் பிரதிஸ்டை செய்யப்பட்ட ஆத்மசுத்தி பெற்ற மகா சித்தர்கள் வசித்த இடம் சித்தர்களின் ஞான கடாக்ஷத்தால ஞான சுத்தி பெறக்கூடிய மரங்களை பிரதிஷ்டை செய்து வளர்த்துள்ளனர். அவை இன்றும் உள்ளன. ஒரு பெரிய மரத்தையொட்டி வளர்ந்துள்ள ஏழு மூலிகை மரங்கள் பின்னிப் பிணைந்து ஒன்றாக இருக்கின்றன.
அவை 1.அரசு. 2.கல்லரசு 3.கரும்பிலி 4.தேவ ஆதண்டம் 5. இருளி 6.வேம்பு 7. கார்த்திகம்
இது எங்கும் காண இயலாத ஒரு அற்புதச் சேர்க்கை. இது தவிர ஏழு கன்னிகைகள் வழிபாடு நடக்கிறது. கடுங்கோடையிலும் வற்றாத ஏழு தீர்த்தங்கள் 1. தாமரை 2.தாழை 3.திருமஞ்சனம் 4. அல்லி 5. பஞ்சேந்திரம் 6. பொய்கை 7. கர்ப்பவர்த்தி இருக்கின்றன. (தினமணிக் கதிர் சுருக்கம்)
வற்கலையில் அதிசயம்
கேரளத்தில் உள்ள வற்கலை ஜனார்த்தனம் கோவிலில் ஐந்து ஸ்தல விருட்சங்கள் ஒன்றாகப் பின்னிப் பிணைந்துள்ளன. இவை வெவ்வேறு வகை மரங்களாகும் (ஞானபூமி ,ஏப்ரல் 1985)
யானைப் புளியன்கொட்டை மரம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள உரிகம் என்னும் ஊரில் அதிசய புளியமரம் ஒன்றுள்ளது. அதன் காய்கள் மிகமிகப் பெரிதாக உள்ளது. அந்த வியப்பிற்குரிய மரத்தின் காய்களை பலர் எடுத்துச் சென்று அம்மாதிரி ரக புளியை வளர்க்க முயன்றுவந்தனர். ஓசூரில் நடந்த ஒரு பொருட் காட்சியில் இதன் காய்களை வேளண்மைத் துறையினர் காட்சிக்கு வைத்திருந்தனர். (மின் தமிழ் உறுப்பினர் நூ.த.லோ.சு.மயிலை தந்த தகவல்)
(இந்த மரத்தை ஆனைப் புளியங்கொட்டை மரம் என்று சொல்லுவார்கள். தாவரவியல் படிப்பவர்களுக்கு இதுபற்றித் தெரியும் ஏர்க்காடு பகுதியில் தாவரவியல் சுற்றுலாச் சென்றபோது பேராசிரியர்கள் இதைப் பறித்து எங்களுக்கு பாடம்சொல்லிக் கொடுத்தனர். மதுரைக் கல்லூரி தாவரவியல் சோதனைக் கூடத்தில் இது காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இன்றும் இருக்கக் கூடும்: லண்டன் சுவாமிநாதன்).
வெள்ளை வேப்ப மரம்
நாகை மாவட்டம் திருவாவடுதுறையில் உள்ள வேப்ப மரம் ஒன்றின் இலைகள் முழுதும் வெள்ளையாகவே இருக்கின்றன. அதன் கீழே அமர்ந்துள்ள அம்மனும் வெள்ளை மாரியம்மன் என்றே அழைக்கப்படுகின்றார். திருவாவடுதுறையில் இருந்து வழிவிடும் விநாயகர் கோவிலை அடுத்து ஒரு பாதை செல்கின்றது. சிறிது தூரம் சென்றால் ஒரு ஆறு வரும். அந்த ஆற்றங்கரையில் அம்மன் வேப்பமரத்தின் அடியில் அமர்ந்திருப்பதைக் காணலாம். (இது மின் தமிழிலிருந்து எடுக்கப்பட்டது).
தினமலரில் வந்த செய்தி:
சேர்ந்தமரம்: சேர்ந்தமரம் அருகே வேப்பமரத்தில் பால் வடியும் அதிசயத்தால் பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.நெல்லை மாவட்டம் சேர்ந்தமரம் அருகே உள்ள வெள்ளாளன்குளத்தில் உள்ள நாகமலை பாலமுருகுன் கோவில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோயில் அருகே மாரியம்மன் சிலை ஒன்றும் உள்ளது. இந்த சிலை அருகே சிறிய வேப்பமரம் உள்ளது. மரத்தின் அடிப்பாகத்தில் நேற்று முன்தினம் மாலை முதல் பால் வடிய துவங்கியது.  இதனையறிந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், பக்தர்கள் பால்வடியும் வேப்பமரத்திற்கு பூஜை செய்து, கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.Dinamalar 8th February 2012
மரங்களைப் பற்றிய நூற்றுக்கணக்கான அதிசயங்களில் சிலவற்றை மட்டுமே கண்டோம். தருணம் வரும்போது மேலும் பல அதிசயங்களைக் காண்போம்.
நன்றி   https://tamilandvedas.wordpress.com

சதுரகிரி - சஞ்சீவி மூலிகை, கற்பகதரு! விருட்சம்

சதுரகிரி - ஆச்சிரமங்கள், சஞ்சீவி மூலிகை, கற்பகதரு!


கோரக்கர் அருளிய 'கோரக்கர் பிரம்மஞான தரிசனம்', மற்றும் 'கோரக்கர் மலை வாகடம்' என்கிற நூல்களில் இருந்து திரட்டப்பட்ட சதுரகிரி மலைப் பயண வழிக் குறிப்புகள் இன்றும் தொடர்கிறது. சற்றேறக் குறைய ஆயிரம் பாடல்களின் ஊடாக பொதிந்திருக்கும் தகவல்களை தனியே பிரித்தெடுத்து உரைநடையாக பதிந்து வருகிறேன். எனவே பாடல்களுடன் தகவல்களை பகிர்வதில் உள்ள சிரமத்தினை(தட்டச்சு செய்வது) புரிந்து கொள்ள வேண்டுகிறேன். எதிர்காலத்தில் சதுரகிரி பற்றிய ஆய்வு நூலொன்று எழுதிடும் திட்டமிருக்கிறது, அப்போது விரிவாக பாடல்களுடன் எழுதிட முயற்சிக்கிறேன்.

வாருங்கள், கோரக்கரின் வழிகாட்டுதலுடன் அகத்தியரின் கும்ப மலை குகையில் இருந்து பயணத்தை தொட்ர்வோம்...

குகையை கடந்து மேற்கே போனால் முனீசுவரன் எல்லை வந்துவிடும், இங்கிருந்து படிவெட்டி பாறை வழியே இரண்டு நாளிகை நடக்க “காற்றாடி மேடை”வருமாம். இதனைத் தாண்டி கூப்பிடு தூரத்தில் கொடைக் காரன் கல்லும், முடங்கி வழியும், கங்கண ஆறும் இருக்கிறது. ஆற்றில் இருந்து அம்பு விடும் தூரத்தில் குளிராட்டி பொய்கை இருக்கிறது. இதன் தென்மேற்கு மூலையில் போகரின் ஆச்சிரமம் இருக்கிறது. அங்கிருந்து தெற்கு பகுதியில் செல்லும் பாதையில் அழகிய பூஞ்சோலை தென்படும், அதன் மத்தியில் புசுண்டரின் ஆச்சிரமம் இருக்கிறது என்கிறார்.

ஆச்சிரமத்தை கடந்து மேற்கே அரை நாளிகை நடக்க எல்லைக் குட்டமும், மண்மலை காடும் இருக்கிறது. அதன் வழியே சென்றால் உரோமரிஷி வனமும் அதற்குள் உரோமரிஷியின் ஆச்சிரமும் இருக்கிறது என்கிறார். ஆசிரமத்தில் தெற்கே கூப்பிடு தூரத்தில் அடந்த யூகிமுனி வனமும் அதனுள் யூகிமுனிவரின் ஆச்சிரமும் இருக்கிறது. இந்த ஆசிரமத்தில் வடக்கே அரிய வகையான சாயா விருட்சம் இருக்கிறது என்கிறார். சாயா விருட்சத்தின் நிழல் பூமியில் விழாதாம். யூகி முனிவர் ஆச்சிரமத்திலிருந்து நேர் மேற்காக சென்றால் தெற்கே போகும் பாதையொன்று வரும், அதில் அரை நாளிகை நடக்க ஆறு ஒன்று வருமாம்.

அந்த ஆற்றில் இறங்கி மேடேறினால் பளிஞர் குடில்களும், அதன் அருகில் சுந்தர லிங்கர் குடிசையும், அருகில் சுந்தரலிங்கர் சந்நிதியும் இருக்கிறது. இதன் தெற்காய் வரும் ஆற்றுக்கு மேல் சுந்தரானந்தரின் குகை இருக்கிறதாம். இந்த மேட்டில் இருந்து தெற்கே செல்லும் பாதையில் கூப்பிடு தூரம் நடக்க மகாலிங்கர் சந்நிதி இருக்கிறது என்கிறார். இந்த சந்நிதியின் பின்னால்தான் அற்புதமென சொல்லப் படும் 'கற்பக தரு' இருக்கிறது.இதனை மறைபொருளாய் 'பஞ்சு தரு' என்று குறிப்பிடுவர்.

இந்த மரத்தில் மேல் பக்கம் கூப்பிடு தூரத்தில் வட்டச் சுனை இருக்கிறது. அந்தச் சுனைக்கு மேல்ப் பக்கம் போகும் பாதையில் அரை நாளிகை தூரம் நடக்க ஒரு ஓடை வருகிறது அந்த ஓடைக்கு மேல் பக்கம் கானல் இருக்கிறது அந்த கானலின் கீழ்ப்பாகத்தில் கரும் பாறை இருக்கிறதாம் அந்தக் கரும் பறையின் வடக்கே கூப்பிடு தூரத்தில் செம்மண் தரை இருக்கிறதாம். அந்த மண்தரையில் சஞ்சீவி மூலிகை இருக்கிறதாம் இந்த மூலிகைக்கு எமனை வென்றான் என்ற மற்றொரு பெயரும் உண்டென்கிறார். கற்பகதரு, சஞ்சீவி மூலிகை என எத்தனை ஆச்சர்யமான குறிப்புகள்!. குருவருள் இருந்தால் இன்றைக்கும் கூட இவற்றை தேடிக் கண்டு பிடிக்க முடியுமென்றே தோன்றுகிறது.

நன்றி  
தோழி

சதுரகிரி மலையில் உள்ள தனித்துவமான விருட்சத்தின் மகத்துவங்கள் பற்றிய தகவல்கள் -1

சதுரகிரி மலையில் உள்ள தனித்துவமான மூலிகை விருட்சத்தின் மகத்துவங்கள் பற்றிய தகவல்கள் இன்றும் தொடர்கிறது.

வெண்ணாவல்

சதுரகிரியின் மேற்குப் பகுதிகளில் அதிகளவில் காணப்படும் விருட்சங்களில் முக்கியமானது இந்த வெண்ணாவல் விருட்சம். இதன் பூ, காய், கனி எல்லாம் வெண்மையாக இருக்குமாம். இந்த விருட்சத்தின் மேற் பட்டையை போக்கி அடிப் பட்டையை வெட்டிக் கொண்டுவந்து குழித்தைலம் இறக்கி, அந்த தைலத்தை லேசாக சூடாக்கிய தாமிர தகட்டில் நாற்பது தடவைகள் தேய்க்க அது வெள்ளியாகுமாம். அந்த வெள்ளியைச் செந்தூரமாக்கி இதே வெண்ணாவல் மரப்பட்டையைத் தூளாக்கி அத்துடன் கலந்து மூன்று நாட்கள், ஆறு பொழுது பண எடை அளவு புசிக்க காயசித்தி உண்டாகுமாம்.

கணைஎருமை விருட்சம்

சதுரகிரியில் நந்தீஸ்வரர் ஆச்சிரமத்துக்கு மேற்கு திசையில் ஒரு நாளிகை தூரம் நடந்தால் கணைஎருமை விருட்ச மரங்கள் இருக்குமாம். தோற்றத்தில் அது இலுப்பை மரம் போல் இருக்குமாம், அதன் காய் உருண்டையாக இருப்பதுடன், அந்த மரத்தினடியில் ஆட்கள் போய் நின்றால் அம்மரம் எருமையைப் போல் கனைக்குமாம், அந்த மரத்தைக் குத்தினால் பால்வரும், அந்தப் பாலைக் கொண்டு வந்து தினமும் பண எடை அளவு, நாலு நாள் சாப்பிட மூர்ச்சை ஆகுமாம். அப்போது ஒருவர் அருகில் இருந்து நாளிகைக்கு ஒரு கரண்டி வீதம் பசும்பால் கொடுக்க மூர்ச்சை தெளியும். அப்படி மூர்ச்சை தெளிந்தவுடன் காயசித்தி உண்டாகுமாம்.

பவளத்துத்தி

மேலே சொன்ன கருனை விருட்ச மரங்களுக்கு வடக்குப் பக்கமாக அம்பு விடும் தூரத்தில் பவளத்துத்தி என்னும் ஒரு செடி உண்டு, அது துத்திச் செடி போலவும் அதன் இலை நுனியில் சுற்றிலும் சிவப்பு நிறம் படர்ந்தும், இலைக்காம்பு, தண்டு சிவப்பாகவும் படர்ந்தும், இலைக்காம்பு, தண்டு சிவப்பாகவும் இருக்கும். இதன் பூ பவள நிறத்தில் இருக்குமாம். இந்த செடியின் இலையை சூரணித்து ஆவின் நெய்யுடன் கலந்து வெருகடிப் பிரமாணம் அளவு எடுத்து ஒருவாரம் சாப்பிடக் காயசித்தி உண்டாகுமாம்.

உரோமவிருட்சம்

இராமதேவர் ஆச்சிரமத்திற்க்கு கீழ்திசையில் இரண்டு நாளிகை தூரம் நடந்தால் அங்கே உரோமவிருட்சம் என்று அழைக்கப்படும் மரங்கள் நிறைந்து காணப்படுமாம். அம்மரம் சாம்பல் நிறமாக இருக்குமாம், அதன் கிளைகள் உரோமத்தைப் போலவும், தொட்டால் பஞ்சுபோல மிருதுவாகவும் இருக்குமாம். அதன் பட்டையை இரும்பு படாமல் தட்டி எடுத்து சூரணித்து, அந்த சூரணத்தில் திருகடிப் பிரமாணம் எடுத்து தேனில் கலந்து ஒரு மண்டலம் உண்ண காயசித்தி உண்டாகுமாம். அப்படி உண்டு காயசித்தி பெற்றவர்களுடைய சிறுநீரானது பஞ்சலோகாத்தையும் பேதிக்கச் செய்யும் தன்மையுள்ளதாகிவிடுமாம்.

(சிவவாக்கியாரின் சிறுநீர் பட்டு இரும்பு பேதித்து தங்கமாக மாறியதாக ஒரு செவிவழிக் கதை உண்டு.ஒரு வேளை அவர் இது போன்ற காயகற்பம் உட்கொண்டதனால் கூட இருக்கலாம்)

இந்த உரோமவிருட்சத்தில் துளை போட்டு சுத்தி செய்யப்பட்ட பாதரசத்தை அந்த துளையில் ஊற்றி, அந்த விருட்சத்தின் பட்டையால் மூடி நாற்பத்தைந்து நாள் கழித்து பார்த்தால் அந்த பாதரசம் கட்டியிருக்குமாம். அதை எடுத்து இந்த மரத்தின் பட்டையை அரைத்து கவசம் செய்து முழப் புடமிட உருகி மணியாகுமாம், அந்த மணியை வாயில் போட்டுக் கொண்டவர்களின் உடலுக்கு , கத்தி வெட்டு, அம்பு போன்றவையால் எந்த பாதிப்பும் ஏற்படாதாம், அத்துடன் நரை, திரை, மூப்பு, பிணி மாறி காயசித்தியும் உண்டாகுமாம்.