For Read Your Language click Translate

01 January 2015

கல்வியும், செல்வமும், வீரமும் தரும் மந்திரங்கள்


 

மந்திரங்கள் சூட்சும உருவாக்கம், அதற்கு பொருள் கிடையாது, ஒலிக்குறிப்புகள் உருவாக்கும் அதிர்வுகளை ஒட்டிய அறிவியல். புராணங்களுக்கும், மிகைப் படுத்திய கதைகளுக்கும் இங்கே இடமில்லை. மிக நேர்த்தியாக உருவாக்கப் பட்ட எழுத்துக்களின் தொகுப்பு.அவை ஓரெழுத்தாகவும் இருக்கலாம், பல எழுத்துக்களின் தொகுப்பாயும் இருக்கலாம். அவற்றின் முறையான பிரயோகம் தரும் அல்லது உருவாக்கும் பலன் மட்டுமே சாதகனின் நோக்கமாய் இருத்தல் வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் கல்வி, செல்வம் மற்றும் வீரத்தை அருளக் கூடிய மந்திரங்களையும், அவற்றை செயலாக்கும் நுட்பத்தினையும் பார்ப்போம். அகத்தியரின், அகத்தியர்12000 என்ற் நூலில் இருந்து எடுக்கப் பட்டவை இந்த மந்திரங்கள்.

முதலில் கல்வியில் சிறக்க, கல்வியின் அதிதேவதையான சரஸ்வதியின் மந்திரத்தையும், அதனை செயல்படுத்தி பயனடையும் உத்தியை அகத்தியர் பின் வருமாறு கூறுகிறார்.

"பாரப்பா சரஸ்வதியின் மந்திர பீஜம்
நல்வாக்கு வாணி ஸ்ரீம் காயத்திரி என்று
லட்சமுரு செபித்தாயானால் காணப்பா
புத்திகூர்மையா ம்வாக்குவ ன்மைசித்தே"


- அகத்தியர் 12000 -
சரஸ்வதியின் பீஜ மந்திரமான " நல்வாக்கு வாணி ஸ்ரீம் காயத்திரி" என்று அந்தி சந்தி வேளைகளில் 108 தடவைகள் வீதம் லட்சம் உரு ஜெபித்தால் இந்த மந்திரம் சித்தியாவதுடன் புத்தி சாதுர்யமும் வாக்கு வன்மையும் உண்டாகும் எகிறார் அகத்தியர்.

இதில் மந்திரம் என்பது - " நல்வாக்கு வாணி ஸ்ரீம் காயத்திரி".
மந்திர பிரயோகம் என்பது - அந்தி சந்தி வேளைகளில் ஜெபிப்பது.மந்திரசித்தி என்பது - புத்தி சாதுர்யமும் வாக்கு வன்மையும் உண்டாவது.

செல்வத்தின் அதி தேவதையான இலக்குமியின் மந்திரத்தையும், அதனை செயல்படுத்தி பயனடையும் உத்தியை அகத்தியர் பின் வருமாறு கூறுகிறார்.

"சித்தியாம் இலக்குமியின் மந்திர பீஜமப்பா
சிறப்பாக இடாயி இடாயி டாகினி டிடிடி றீங்
கென்று பத்தியாய் லட்சமுரு ஓது ஓது
சகலசெல்வமும் கூடிவரும் தரணியிலேபகராதே"


- அகத்தியர் 12000 -


இலக்குமியின் பீஜ மந்திரமான "இடாயி இடாயி டாகினி டிடிடி றீங்" என்று அந்தி சந்தி வேளைகளில் 108 தடவைகள் வீதம் லட்சம் உரு ஜெபித்தால் இந்த மந்திரம் சித்தியாவதுடன் சகல செல்வங்களும் சேரும் எகிறார் அகத்தியர்.

இதில் மந்திரம் என்பது - "இடாயி இடாயி டாகினி டிடிடி றீங்".
மந்திர பிரயோகம் என்பது - அந்தி சந்தி வேளைகளில் ஜெபிப்பது.
மந்திரசித்தி என்பது - சகல செல்வங்களும் சேருவது.

வீரத்தின் அதி தேவதையான வீரபத்திரரின் மந்திரத்தையும், அதனை செயல்படுத்தி பயனடையும் உத்தியை அகத்தியர் பின் வருமாறு கூறுகிறார்.

"ஆச்சப்பா வீரபத்திர மந்திர பீஜம் கேளு
அகோராயா வீரவீரபுரபுர அரிஅரிஎன்றுலட்சம்
மாச்சலிலா செபித்துவந்தால் மைந்தா
வீரபத்திரர் வீரமய் வருவார் சார்ந்தே"


- அகத்தியர் 12000 -
வீரபத்திரரின் பீஜ மந்திரமான "அகோராயா வீரவீரபுரபுர அரிஅரி" என்று அந்தி சந்தி வேளைகளில் 108 தடவைகள் வீதம் லட்சம் உரு ஜெபித்தால் இந்த மந்திரம் சித்தியாவதுடன் வீரபத்திரர் வீரமாய் துணை வருவார் எகிறார் அகத்தியர்.

இதில் மந்திரம் என்பது - "அகோராயா வீரவீரபுரபுர அரிஅரி".
மந்திர பிரயோகம் என்பது - அந்தி சந்தி வேளைகளில் ஜெபிப்பது.
மந்திரசித்தி என்பது - வீரபத்திரர் வீரமாய் துணை வருவது.

இந்த மந்திரங்களை குருமுகமாய் உபதேசம் பெற்று, விநாயக மந்திரஞ் சொல்லி மனதை ஒருமுகப் படுத்தி செயல்படுத்தும் எவரும் முறையான பலன்களை பெறலாம் என்கிறார் அகத்தியர். நம்பிக்கை இருக்கிற எவரும் இதை பயன்படுத்தி பலனடையலாம்.

THANK YOU SIDDHARKAL RAJYAM THOZHI


 

No comments:

Post a Comment