how it works to vastu. A scientific explanation
நமக்கு, இரவும் பகலும் சூரியன் மறைவதாலோ அல்லது உதிப்பதலோ நிகழ்வதில்லை என்பதும், பூமி மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி சுற்றுவதால் நாம் இருக்கும் இடத்திற்கு ஏற்படும் விளைவுகளே நமக்கு பகல் இரவு என்பதனை அறிந்து இருப்போம்.
பூமி, தன்னத்தானே சுற்றிக்கொண்டும், கூடவே சூரியனையும் 23டிகிரி சாய்ந்த அச்சில், சுற்றி கொண்டிருக்கும் போது வட கிழக்கிலிருந்து, தென் மேற்கு திசையை நோக்கி காந்த விசைகளும், காற்றின் விசையும் செயல்படும். ஒன்று மைய நோக்கு விசை மற்றொன்று மைய விலக்கு விசை. இந்த இரண்டு விசைகளுக்கும் நடுவில் ஏதேனும் தடுப்பு ஏற்பட்டால் அதுவே வாஸ்து குறை என்பதாகும். இது நம் உடலுக்கும் உணர்விற்கும் நிச்சயம் பாதிப்பை விளைவிக்கும். இவைகள் நாளடைவில், நமது நல்ல எண்ணங்களை மாற்றி அதன் விளைவாக மிகவும் துன்பமான நிலைக்கு படிப்படியாக தள்ளப்படுகிறோம்.
வஸ்து சாஸ்த்திரம் என்பதே உண்மையான வார்த்தை. இதிலிருந்தே வாஸ்த்து என்பது மருவிய வார்த்தை தோன்றியிருக்கலாம். ஒரு பொருளினை (வஸ்துவினை) இயற்கையின் சக்த்திக்கு ஏற்ப எப்படி பயன் படுத்தலாம், என்பதனை தெளிவாக்கும் கலையே வாஸ்த்து சாஸ்த்திரம் ஆகும்.
இதனால்,வாஸ்த்து என்பதுவும் விஞ்ஞான ரீதியான ஆராய்ச்சியின் படி சரியானதாகவே இருக்கிறது. சரியான வாஸ்த்து பலம் கொண்ட கட்டிட அமைப்புகள் கொண்ட இடத்தில் நல்ல காந்த சக்தியும், நேர்மறை ஆற்றலும் மிகவும் அதிகமாக இருப்பதனையும், தீய அதிர்வலைகளும் உண்டாகிறது, என்பதனை தற்போதைய அறிவியல் கண்டு பிடிப்பான கிர்லியான் புகைப்படம், மூலம் நிரூபித்து உள்ளார்கள்.
No comments:
Post a Comment