For Read Your Language click Translate

09 November 2014

ஜோதிடம்2 -- ஜாதகம்

Vedic Astrology
Samstag, 29. Dezember 2012
Astrology in Tamil, ஜோதிடம்

ஜாதகம் : 
பூமியில் பிறக்கும் எந்த ஒரு ஜாதகருக்கும், அவரவர் பூர்வ ஜென்ம வினைகளே , 9 கிரகங்களாகவும், அவை அமரும் வீடுகளையும் தீர்மானிக்கிறது. 
மொத்தம் ஒன்பது நவக்கிரகங்கள் :  சூரியன், சந்திரன், செவ்வாய் , புதன், குரு, சுக்கிரன் , சனி, ராகு , கேது
எந்த ஒரு ஜாதக கட்டத்திலும் - 12 கட்டங்கள் இருக்கும். இவை 12 வீடுகள் என்பர். 12 ராசிகள்என்று எடுத்துக் கொள்ளுங்கள்.
மேலிருந்து இடதுகைப் பக்கத்திலிருந்து - இரண்டாம் கட்டத்தை பாருங்கள். அதை முதல் வீடு என்று கொள்ளுங்கள். இப்போது கடிகாரச் சுற்றுப்படி 1 , 2 , 3 என்று  குறியுங்கள். மொத்தம் 12 வீடுகள் வரும். ஒவ்வொரு வீட்டிற்கும் 30 டிகிரி . மொத்தம் 360 டிகிரி. இதனுடன் ஒரு சுற்று முடியும். 
மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளன. ஒவ்வொரு நட்சத்திரத்திற்க்கும் - 4 பாதங்கள் உள்ளன.  ஆக மொத்தம் 27 x 4 = 108 நட்சத்திர பாதங்கள் . ஒவ்வொரு வீட்டிற்க்கும் 9 பாதங்கள் என , 108 நட்சத்திரக் கால்கள் - 12 வீட்டில் அமர்ந்திருக்கும்.  
முதல் வீடான - மேஷத்தில் - அஸ்வினி ( 4 பாதங்கள் ) , பரணி ( 4 பாதங்கள் ), கார்த்திகை (1 பாதம் மட்டும் ) , ஆக மொத்தம் - 9 பாதங்கள் இருக்கும்.
கார்த்திகை நட்சத்திரத்தில் இருக்கும் ,  மீதி 3 பாதங்கள்  - ரிஷபத்தில் இருக்கும். ரோஹிணி ( 4 பாதங்கள் ) , மிருக சீரிஷத்தில் 2 பாதங்கள் மட்டும் வரும்.
மிருக சீரிஷத்தில் வரும் மீதி 2 பாதங்கள் - அடுத்த ராசியான மிதுனத்தில் வரும். இதைப் போல - மொத்தம் உள்ள 27 நட்சத்திரங்களையும் - வகைப் படுத்த வேண்டும்..
ராசிகள்       நட்சத்திரங்கள்
மேஷம்           - அசுவினி, பரணி, கார்த்தி கை 1-ஆம் பாதம் முடிய
ரிஷபம்           - கார்த்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசிரிஷம் 2-ஆம் 
                              பாதம் முடிய
மிதுனம்         - மிருகசிரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 
                             3-ஆம் பாதம் முடிய
கடகம்            - புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம் முடிய
சிம்மம்           - மகம், பூரம் உத்திரம் 1-ஆம் பாதம் முடிய
கன்னி             - உத்திரம் 2-ஆம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் 
                             முடிய
துலாம்            - சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் 
                              முடிய
விருச்சிகம்    - விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய
தனுசு             - மூலம், பூராடம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய
மகரம்            - உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் 
                            பாதம் முடிய
கும்பம்          - அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் 
                            முடிய
மீனம்            - பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி முடிய
நட்சத்திர அதிபதிகள் : 
மேலே கூறிய படி , 27 நட்சத்திரங்களையும் ஒன்றன் பின் ஒன்றாக எழுதுங்கள்.
ஒவ்வொரு வரிசைக்கும், ஒவ்வொரு நவகிரகம் அதிபதியாக இருப்பார்.
ராசி அதிபதிகள் : 
ஒவ்வொரு ராசியும், ஒரு நவகிரகத்தின் வீடு. ஒரு சிலருக்கு இரண்டு வீடு. நிழல் கிரகம் எனப்படும் ராகு, கேதுக்கு சொந்த வீடு இல்லை.
எல்லோருடைய ஜாதகத்திலேயும், லக்கினம்  , ( ல) , அப்படின்னு போட்டிருப்பாங்க. அதுதான்  அந்த ஜாதகருக்கு - முதல் வீடு. எந்த வீட்டில் சந்திரன் இருக்கிறதோ, அது அவரது ராசி. 
இன்னைக்கு நடைமுறைலே யாருக்கும்  அவங்க லக்கினம் என்ன னு தெரியாது. ராசி ஓரளவுக்கு எல்லாருக்கும் தெரிஞ்சு இருக்கும். லக்கினம் அப்படின்னு பேச்சு எடுத்தாலே, அவருக்கு ஓரளவு ஜாதகம் பத்தி தெரிஞ்சு இருக்கும் னு நம்பலாம்.
எந்த ஒரு ஜாதகருக்கும், அவரது லக்கினம் தான் , முதல் முக்கியமான புள்ளி. லக்கினம் தெரியலை , இல்லை தப்பு னா, மொத்த பலன்களுமே தப்பா தான் போகும். அதைப் பற்றி , நாம் அப்புறமா பார்க்கலாம். 
ராசி அதிபதிகள் :
கீழே கொடுக்கப் பட்டுள்ள வீடுகளைப் பாருங்கள். 
மேஷம், விருச்சிகம் - செவ்வாய்க்கு சொந்த வீடுகள்.
ரிஷபம் , துலாம் - அதிபதி - சுக்கிரன்.
மிதுனம், கன்னி - அதிபதி - புதன்
கடகம் - அதிபதி  - சந்திரன்
சிம்மம் - அதிபதி - சூரியன்
தனுசு , மீனம் - அதிபதி - குரு
மகரம் , கும்பம் - அதிபதி - சனி
ராகு, கேதுக்கு சொந்த வீடுகள் இல்லை. எந்த கட்டத்தில் இருக்கிறார்களோ , அதுவே அவர்களுக்கு வீடுகள் .
சரி, எதற்கு இந்த சொந்த வீடுகள். நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தால் என்ன செய்வீர்கள்? நீங்க தானே ராஜா.. முழு பலத்துடன் இந்த கிரகங்கள் - சொந்த வீட்டில் இருக்கும்போது இயங்கும்.  இந்த வீடுகளுக்கு ஆட்சி வீடுகள் என்று பெயர். 
சாதரணமா  ஒரு கிரகத்துக்கு - சக்தி ஒரு மடங்கு னா,  ஆட்சி ஸ்தானங்களில் மூன்று மடங்கு சக்தியுடன் இருக்கும். 
அதைப் போல ,  சில வீடுகள்  - அந்த கிரகங்களுக்கு - உச்ச பலம் , நீச பலம் என்றும் இருக்கிறது. உச்ச வீடுகளில் அந்த கிரகங்கள் - ஐந்து மடங்கு பலத்துடன் இருக்கும். நீச வீடுகளில் , பலம் இழந்து  பரிதாபமாக இருக்கும். 
இதைப் போல, ஒவ்வொரு இடமும் , ஒவ்வொரு கிரகத்திற்கு , நட்பு, பகை, சமம்  என்று மூன்று பண்புகளுடன் இருக்கும். நம்ம வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்காரங்க கிட்டே , நாம இருப்போம் இல்லே.. ஒருத்தரைப் பிடிக்கும். ஒருத்தரை பிடிக்காது.. அந்த மாதிரி..
அவை எப்படி னு பார்க்க கீழே உள்ள அட்டவணையைப் பாருங்க.
இதை நீங்கள் கண்டிப்பாக , உங்கள் மனதில் நன்றாக பதிய வைத்துக் கொள்ளுங்கள். 
சூரியன் - மேஷத்தில் உச்சம் எனில், அதற்கு நேர் ஏழாம் வீட்டில் நீசம் ஆகும்.
இதைப் போல ஒவ்வொரு கிரகத்திற்கும் பொருந்தும். கீழே பாருங்க.
நல்லா புரியுதுங்களா? இதெல்லாம் அடிப்படை பாடங்கள். இது எல்லாம் உங்களுக்கு எப்பவும் finger tips லெ இருக்கணும். இது பின்னாலே உங்களுக்கு ரொம்ப உபயோகமா இருக்கும்.
மேலே உள்ள அட்டவணையைப்  பார்த்தாலே , உங்களுக்கு சில விஷயம் புரியணும். ஒரு கிரகத்துக்கு , இன்னொரு கிரகம் நட்பா இருக்கும். இல்லை பகையா இருக்கும்.
யாருக்கு , யாரைப் பிடிக்கும் , யாருக்கு யாரு - பகை னு பாருங்க. 
இது எல்லாத்துக்கும் , நம்ம இந்து தர்ம முறைப்படி , நிறைய சுவாரஸ்யமான , பின்னணி இருக்கு... அதை எல்லாம் , பின்னாலே பார்க்கலாம்.
 ராகு எங்க இருந்தாலும், அதுக்கு நேரா , ஏழாம் வீட்டிலே - கேது இருப்பார். ... ஒன்னு தலை, இன்னொன்னு வால் மாதிரி னு நெனைச்சுக்கோங்க. .... இது எல்லோருக்கும். ... இது ஒரு விதி. அப்படி இல்லாம, மாத்தி இருந்தா... ஜாதகம் தப்பா எழுதி இருக்கிறாங்க னு அர்த்தம்..
நம்மோட முதல் பாடத்திலே , 27 நட்சத்திரங்களை - பார்த்தோம். ஞாபகம் இருக்கிறதா?
அதை கீழே கொடுத்த படி, 9 வரிசைலே எழுதி இருந்தோம்..
இதிலே - முதல் வரிசையிலே - மூன்று நட்சத்திரங்கள் இருக்கு இல்லையா? - இந்த நட்சத்திரங்களுக்கு - அதிபதி - கேது. இதைபோலே எல்லா நட்சத்திரங்களுக்கும் யார் யார் நட்சத்திர நாயகர்கள் னு பார்ப்போம்.
கேது              - அஸ்வினி, மகம், மூலம்
சுக்கிரன்       - பரணி, பூரம், பூராடம்,
சூரியன்         - கார்த்திகை , உத்திரம், உத்திராடம்.
சந்திரன்        - ரோகிணி, ஹஸ்தம், திருவோணம்,
செவ்வாய்    - மிருக சீரிஷம் , சித்திரை, அவிட்டம்
ராகு                - திருவாதிரை, சுவாதி , சதயம்
குரு                 - புனர்பூசம், விசாகம் , பூரட்டாதி
சனி                 - பூசம் , அனுஷம் , உத்திரட்டாதி
புதன்               - ஆயில்யம் , கேட்டை, ரேவதி
இது எதுக்காக இந்த வரிசைனு  கேளுங்க ..? 
நீங்க எந்த நட்சத்திரத்திலே பிறந்தாலும் - அந்த நட்சத்திர அதிபரோட தசை தான் - உங்களுக்கு முதல்லெ வரும்... அதன்பிறகு, அடுத்த அதிபர், .. இப்படி  வரிசையா வந்து , திரும்ப முதல் தசை கேது, அப்புறம் சுக்கிரன், .. இப்படியே போகும்.. 
நீங்க பிறந்த நட்சத்திரம் - சித்திரைனு வச்சுக்கோங்களேன் -  நீங்க , பிறந்ததும் - முதல் ல வரும் தசை - செவ்வாய் தசை. அதன் பிறகு , ராகு தசை , அப்புறம் - குரு , சனி , புதன் தசை வரும். அதுக்கு அப்புறம் - மேலே போகணும் - கேது தசை , சுக்கிரன், சூரியன்... இப்படியே வரணும்.
ஒவ்வொரு தசையும் எத்தனை வருஷம்னு பார்ப்போம்.
கேது          - 7 வருடங்கள்
சுக்கிரன்   - 20 வருடங்கள் 
சூரியன்     - 6 வருடங்கள்
சந்திரன்    - 10 வருடங்கள்
செவ்வாய் - 7 வருடங்கள்
ராகு            - 18 வருடங்கள்
குரு             - 16 வருடங்கள்
சனி             - 19 வருடங்கள்
புதன்           - 17 வருடங்கள்
ஒரு சுற்று முடிய  - 120 வருஷங்கள் ஆகும். So , எல்லாருக்கும் , எல்லா திசையும் வருவது இல்லை. ... உதாரணத்துக்கு , ஒருத்தருக்கு ஜாதகத்திலே  சுக்கிரன் - நல்ல நிலை லெ இருக்கும் னு வைச்சுக்குவோம். ஆனா , அவர் பிறந்தது கார்த்திகை நட்சத்திரம் னு வைச்சுக்கோங்களேன். அவரு, கிட்டத்தட்ட் - நூறு வருஷம் முடிச்ச பிறகு தான், சுக்கிர தசையை பார்க்க முடியும். நல்லா இருந்தும், பிரயோஜனம் இல்லை.
மனுஷன் செஞ்ச பாவ, புண்ணியத்துக்கு ஏற்ப , சரியாய் இந்த தசை நடக்கும். ..எப்படி எல்லாம் "செக்" வைக்கிறாங்க பாருங்க... 
ஒவ்வொரு நட்சத்திரத்திற்க்கும் , நான்கு பாதங்கள் இருக்கும். இல்லையா?
உதாரணத்திற்கு பிறந்த நட்சத்திரம் = = =  திருவோணம் 3 ஆம் பாதம் னு வைச்சுக்கோங்களேன்.
அதனாலே, முதல்ல சந்திர தசை வரும் இல்லையா. மொத்த வருஷம் - 10 . கரெக்டா?
 So ,  ஒவ்வொரு பாதத்திற்கும் - 2 1 /2 வருடங்கள் வரும். so , மீதி இருப்பது, ( 3 ஆம் பாதம், 4 ஆம் பாதம் மட்டுமே ) 5 வருஷங்கள் இருக்கும். இதிலே , கர்ப்ப செல் போக கழிவு இருப்பு பார்க்கணும். அதை எப்படி பார்க்கிறது னு, நாம மெதுவா பார்க்கலாம். இப்போவே சொன்னா, ரொம்ப கஷ்டமா பீல் பண்ணுவீங்க..  ஒரு உதாரணத்திற்கு - கர்ப்ப செல் இருப்பு. 6 மாதங்கள் னு எடுத்துக்கலாம். 
அதனாலே , அவர் ஜாதகத்திலே - சந்திர தசை இருப்பு - 4 வரு , 6 மாதங்கள், 0 நாட்கள் அப்படின்னு எழுதி இருப்பாங்க.
இப்போ இன்னொரு விஷயம் ஞாபகம் வைச்சுக்கோங்க. மொத்தம் - 10 வருடம் , சந்திரா தசை வருது இல்லையா. ஒவ்வொரு கிரகத்திற்கும் - புத்தி இருப்பு மாறுபடும்.
மொத்தம் 9 கிரகம் இருக்கு. இல்லையா..
சந்திர தசை , வந்ததுனா - முதல்லே - சந்திர புத்தி வரும் (10 மாதங்கள் ) . அப்புறம் செவ்வாய் புத்தி( 7 மாதங்கள் ) , அப்புறம் ராகு புத்தி (18 மாதங்கள்) . ... மொத்தமா எல்லாம் கூட்டினா 10 வருடங்கள் வரும். 
புத்தி இருப்பு எப்படி பார்க்கணும் னு ஒரு பார்முலா இருக்கு.
 புக்தி
( B x C / A ) =  வருடங்கள்
மொத்த தசை இருப்பு : (A )  - 120 வருடங்கள்
தசா கிரகத்தோட  மொத்த வருடங்கள் : (B)
புத்தி பார்க்க வேண்டிய கிரகத்தோட இயல்பான தசை வருடங்கள் : (C )
சனி தசை லெ - கேது புத்தி எவ்வளவு னு பார்க்கலாம்.?  ( சிறிய டெஸ்ட் ..) 
சனி தசை மொத்தம் எவ்வளவு - 19 வருஷம்.  B = 19 ;
கேது வோட இயல்பான தசை = 7 வருஷம் ;  C = 7 
( 19 * 7 / 120 ) = 1 .108333 வருதா...? அதை அப்படியே , மாதம் நாளா மாத்திக்கோங்க.
 நீங்க இதை 360 ஆலே பெருக்கிக்கோங்க.  =  399 வருதா. 13 மாதம் ,  9 நாள் வரும்.
(ஜோதிடப்படி, கணக்கு பண்ண ஈஸியா ,  1 வரு = 360 நாட்கள் ; 1 மாதம் - 30 நாட்கள்  னு எடுத்துக்கோங்க.. ) 
பிறக்கும் போது , எந்த தசை , எந்த புக்தி இருப்பு னு தெளிவா எழுதி இருப்பாங்க..
அந்த டீடைல் தெளிவா இருந்தாத் தான், உங்களுக்கு இப்போ நடப்பு தசை , புக்தி என்னனு  தெளிவா கண்டு பிடிக்க இயலும். .... அது கண்டு பிடிச்சாத்தான் , உங்களுக்கு என்ன பலன்கள் இப்போ ஏற்படும் னு கண்டு பிடிக்க இயலும்.....
சரி, இன்னும் கொஞ்ச நாளைக்கு - நோ பார்முலா... ஒன்லி தியரி , ப்ராக்டிக்கல் மட்டும்  தான்.  OK வா...?
நவகிரகங்களில் - சுப கிரகங்கள் , பாவ கிரகங்கள் என்று இரண்டு வகை உள்ளனர்.
குரு, சுக்கிரன், புதன் , சந்திரன் -  சுப கிரகங்கள்
சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது - அசுப கிரகங்கள்.
சந்திரனைப் பொறுத்தவரை  - வளர் பிறை சந்திரன் மட்டுமே , முழு சுபர் ஆவார். தேய் பிறையில் இருந்தால் , அவர் அவ்வளவு நல்ல பலன்களை தருவது இல்லை.
சரி, இப்போது இன்னொரு விஷயமும் தெரிந்து கொள்ளுங்கள். மேல சொன்னது பொதுவான விதி. செவ்வாய் , சனி எல்லாம் பாவ கிரகங்கள் தான். அதுவே உங்களுக்கு அவர்கள் இலக்கின அதிபதிகளாய் இருந்தால் , என்ன செய்வது..? உயிர்  கொடுப்பவர்கள் ஆயிற்றே. அவர்களுக்கு நல்லது தான். ஆனால் இந்த தீய கிரகங்களின் பார்வை படும் இடங்கள், நல்ல பலன்களை தராது..
==========================================
வளர் பிறை சந்திரன் , தேய் பிறை சந்திரன் என்று - ஒருவர் ஜாதகத்தைப் பார்த்தாலே தெரிந்து கொள்ள முடியும்.. எப்படி?
மொத்தம் இருப்பது - 12 ராசிகள். நம் தமிழ் மாதங்களும் - 12 . எதாவது லிங்க் இருப்பது போல தெரிகிறதா?  எஸ்.. யு ஆர் ரைட் .
சித்திரை மாதம் பொறந்தாலே - சூரியன் , மேஷம் ராசிக்குள்ளே வர்றார் னு அர்த்தம். வைகாசி லெ - ரிஷபம். ஆனி யில்  - மிதுனம் ... இப்படியே ... பங்குனி - மாதத்தில் , மீனம் ராசியில் சூரியன் இருப்பார்.
ஜாதகத்தில், சூரியன் இருக்கிற ராசி இலிருந்து 1 முதல் ஏழு இடங்களில் இருந்தால் வளர்பிறை. ... எட்டில் இருந்து - 12 வரை - தேய் பிறை.. இப்போ இன்னொரு விஷயம் பிடிபடணுமே...!!  அதே தான்...  சூரியனுக்கு 1 ஆம் இடத்தில் - அதாவது சூரியனும், சந்திரனும் - சேர்ந்து ஒரே வீட்டில் இருந்தால் , அவர் அமாவாசையிலோ  , அமாவாசையை ஒட்டியோ பிறந்து இருப்பார்.  அதே போல - சூரியனுக்கு நேர் எதிரில் - ஏழாம் வீட்டில்  இருந்தால் - பௌர்ணமியை ஒட்டி பிறந்து இருப்பார்.
சித்திரை மாசம் - சூரியன் மேஷத்திலே ; அதுக்கு ஏழாம் வீடு என்ன..? துலாம் - அங்கே சந்திரன் சித்திரை நட்சத்திரத் தில் இருக்கும்போது , பௌர்ணமி யா இருக்கும்.
நம்ம மனசிலே பதிஞ்ச சில நாட்களைப் பாருங்க :
வைகாசி - விசாகம் ;  ஆவணி - அவிட்டம் ; திருக் கார்த்திகை ; மார்கழி - திருவாதிரை ; தைப் பூசம்   ; மாசி -மகம் ..... இது எல்லாமே பௌர்ணமி தினங்கள். இந்த தினங்களில் சந்திரனும், சூரியனும் - ஒன்றை யொன்று நேர் எதிர் நோக்கி தழுவிக் கொண்டு இருப்பார்கள். 
ஒவ்வொரு கிரகமும் - ஒவ்வொரு வீட்டில் எத்தனை நாட்கள் இருக்கும் - ? எப்படி கணக்கு பார்க்கிறது..?  கீழே உள்ள அட்டவணையைப் பாருங்க..
சூரியன் - ஒரு மாதம்  - ஒரு ராசி னு பார்த்தோம்.. மொத்தம் 12 வீட்டுக்கும் , ஒரு வருடம் ஆகுது. கீழே பூமி னு போட்டு இருக்கோம் பாருங்க...
அதை பன்னி ரெண்டாலே    வகுத்தால் - ஒரு வீட்டுக்கு வரும்..
சந்திரன் - ஒரு நாளைக்கு ஒரு நட்சத்திரம் - so , இரெண்டே கால் நாளிலிருந்து - மூன்று நாள்கள் - ஒரு ராசிக்கு.
புதன் -( 88 / 12 )  - சுமார் 7 நாள்கள் / ஒரு ராசிக்கு
செவ்வாய் - (687 /12 ) - சுமார் 57 நாட்கள்
குரு - ஒரு ராசிக்கு  சுமார் - ஒரு வருடம்
சுக்கிரன் - சுமார் - 20 நாட்கள்
சனி - ராசிக்கு - சுமார் இரண்டரை வருடங்கள்
ராகு - கேது - சுமார் - ஒன்றரை வருடங்கள்.. 
இப்போ , பஞ்சாங்கப்படி - குரு - மீன ராசி இலே இருக்கிறார். இல்லையா? பன்னிரண்டு வருஷம் முன்னாலே - இதே மாதிரி - மீனம் ராசிலே இருந்து இருப்பார். (1999 , 1987 , 1975 இப்படி ) .. நீங்க பிறந்த வருஷம் உதாரணத்துக்கு - 1976 னு வைச்சுக்கோங்க.. அனேகமா அவர், மேஷம் ராசிலே இருக்கணும். இல்லை , மீனம் இலே இருந்து கெளம்ப ரெடி யா இருக்கணும். அதை விட்டுட்டு, கடகம், சிம்மம், துலாம் னு அவங்க சவுகர்யத்துக்கு போட்டு இருந்தா ... ஜாதகம் தப்பா எழுதி இருக்கிறாங்க னு அர்த்தம்..
இதே மாதிரி - சனி - ஒரு சுற்று முடிக்க 30 வருஷம் ஆகும். ராகு, கேது - 18 வருஷம் ஆகும். இப்போ அவங்க இருக்கிற ராசி பார்த்துக் கிட்டு , அதை யொட்டி அவங்க ஜாதகத்திலே இருக்கானு ஒரு தடவை , சரி பார்த்துக்கிட்டு -  பலன் சொல்லணும்.
இன்னொரு விஷயம் - ஜாதகம் பார்க்கிறப்போ , சில கிரகங்களுக்கு (வ)  அப்படின்னு போட்டு இருப்பாங்க.   அப்படினா வக்கிரம் னு அர்த்தம். அதாவது முன்னாலேயே போக வேண்டிய கிரகம் , கொஞ்சம் பின்னாலே சுத்த ஆரம்பிக்குதுன்னு பொருள். அந்த நேரத்திலே , அந்த கிரகங்களுக்கு - பலம் கம்மியா இருக்கும்.  பலன் அளிக்கும்
 சூரியனுக்கு 6 , 7 , 8 ஆம் இடங்களில் வரும்போது - கிரகங்கள் (பொதுவா) வக்கிரம் அடையும்.  ராகு, கேது, சந்திரன் தவிர எல்லா கிரகங்களும் - வக்கிரம் அடையும்.
அதி சாரம் னு ஒன்னு இருக்கு. வக்கிரத்துக்கு நேர் எதிர். அதாவது ஒரு இடத்திலே நிக்க வேண்டிய கிரகம் , இன்னும் ஸ்டெப்  தாண்டி முன்னாலே  போகிறது. போன தடவை , கும்பத்திலே நிற்க வேண்டிய குரு - மீனத்துக்கு அதி சாரம் ஆனார். திரும்ப கும்பத்துக்கு  - சிறிது நாட்கள் வக்கிரமானார். ... அப்போ சூரியனுக்கு 6 ,7 ,8 இடங்களில் இருந்திருப்பார்.
சரி, மேலே சொன்ன பாடங்கள் புரியுதா உங்களுக்கு .....? 
இன்னைக்கு - மேலும் ரெண்டு பாடங்கள் எழுத முடியும் னு நெனைக்கிறேன்... பார்க்கலாம்...
இதுக்கு மேல நாம் பார்க்க விருப்பது -  கிரகங்களின் காரகத்துவம், கிரகங்களின் பார்வைகள் , .... அப்புறம்.... 12 வீடுகளின் அமைப்புகள்..
இந்த ரெண்டும் தெரிஞ்சுகிட்டா, உங்களுக்கு எந்த கேள்விக்கு என்ன என்ன பார்க்கணும் ? அப்படி னு தெரிய வரும்...
தினசரி யிலோ, இல்லை நாட்காட்டிகளிலோ, கிரகம் எங்கே எங்கே இருக்கு னு பார்த்து தெரிஞ்சுக்கலாம். ஒரு பாவ கிரகம்,  வில்லங்கமா உட்கார்ந்து இருக்குதுனா, அப்போ நீங்க ஜாக்கிரதையா, அடக்கி வாசிக்கணும்னு அர்த்தம்..
பஞ்சாங்கம் னா என்ன? பஞ்சாங்கம்னா ஐந்து  அங்கங்கள்னு அர்த்தம்.
அந்த ஐந்து அங்கங்கள்:
1.வாரம் / நாள்  2   திதி     3. நட்சத்திரம்        4. யோகம்            5. கரணம்
ஞாயிற்றுக்கிழமை முதல் சனிக்கிழமை வரை உள்ள ஏழு நாட்கள்தான் வாரம்.
--------------------------------------------------------------
திதி என்பது வளர்பிறைப் பிரதமை முதல் பெள்ர்ணமி
வரை உள்ள பதினைந்து நாட்களும், தேய்பிறைப்
பிரதமை முதல் அமாவாசை வரை உள்ள பதினைந்து
நாட்களும், அதாவது அந்த முப்பது நாட்களும் திதியாகும்
திதியில் இருந்து பிறந்ததுதான் தேதி
வானவெளியில் சூரியனுக்கும், சந்திரனுக்கும் உள்ள தூரத்தைச் சொல்வதுதான் திதி
விரதங்கள் இருப்பவர்கள், இறைவனுக்கு அபிஷேகம் செய்பவர்கள் இந்தத் திதி பார்த்துத்தான் செய்வார்கள்
அதேபோல் புதுக் கணக்குப் போடுபவர்கள் அதிகம்  விரும்புவது தசமித் திதி
3. திருமணம்,  இடம் வாங்குவது போனற சுப காரியங்களைச் செய்பவர்கள் அஷ்டமி, நவமி திதியில் செய்வதில்லை.
4. ஒரு மனிதனின் மரணத்தை திதியை வைத்துதான் குறிப்பிடுவார்கள். ஒருவன் ஐப்பசி  மாதம் வளர்பிறை நவமி திதியில் காலமானால், ஒரு ஆண்டு கழித்து அல்லது வருடா வருடம் அவனது சந்ததியினர்அதே ஐப்பசி மாதம் வளர்பிறை நவமி திதியில் தான் அவனுக்கு நினைவுச் சடங்குகளைச்  செய்வார்கள்.கிராமங்களில் தங்கள் வீட்டில் படையல் போடுவார்கள். இதுபோன்று இன்னும் பல பழக்கங்கள் இந்தத் திதியை வைத்துப் பல சமூகங்களில் பலவிதமாக உள்ளது.
---------------------------------------------------------------
நட்சத்திரம் என்பது அஸ்வினி முதல் ரேவதி வரையுள்ள 27 நட்சத்திரங்கள். பூமியை சுற்றி சந்திரன் செல்லும் பாதையில் எந்த நட்சத்திரம் உள்ளதோ  அதுதான் அன்றைய ந்ட்சத்திரம். 27 நாட்களில் சந்திரன் வானவெளியில் ஒரு சுற்றை முடித்துவிட்டு அடுத்த சுற்றை அரம்பித்துவிடும்
தினசரி ஒரு நட்சத்திரம் என்பதால் ஒவ்வொரு நாளும் சந்திரனை வைத்துப் பிறந்த நட்சத்திரம் மாறும், அதேபோல 2.25 நாட்களுக்கு ஒருமுறை பிறந்த ராசியும் மாறும்.
மொத்தம் இருக்கிற 27 நட்சத்திரங்களைப் பற்றி நாம் ஏற்கனவே பார்த்து இருக்கிறோம்.. இல்லையா?
 ==========================================================
கரணம் - என்பது திதியில் பாதி தூரத்தைக் குறிக்கும்.
கரணங்கள் மொத்தம் 11-ஆகும். அவையாவன:1. பவ,  2. பாலவ,  3. கெலவ,  4. தைதூலை,  5. கரசை,  6. வணிசை,  7. பத்தரை,  8. சகுனி,  9. சதுஷ்பாதம்,   10.  நாகவம்,  11. கிம்ஸ்துக்னம்.
===========================================================
வானவெளியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து சூரியனும், சந்திரனும் செல்கிற மொத்த தூரத்தைக் குறிப்பது யோகம். 
நல்ல நாளா , இல்லையா? னு ஜோசியரைப் பார்த்து நாள் குறிக்கிறப்போ, இதை எல்லாம் பார்த்துத் தாங்க சொல்லணும்.
யார் வர்றாங்களோ, அவருக்கு லக்கினத்தில் இருந்து 9 ஆம் வீட்டுக்கு அதிபதி யாரோ, அவருக்கு உரிய கிழமை தேர்ந்து எடுத்து , நல்ல நேரம் பார்த்து சொன்னா, சிறப்பா இருக்கும்.
சில நாட்களை காலண்டரில் பார்த்தாலே போட்டு இருப்பார்கள்  - சித்த யோகம், மரண யோகம், அமிர்த யோகம் என்று...
===========================================
சில கிழமைகளுடன் சில நட்சத்திரங்கள் சேரும்போது, அது ஒவ்வாத நாளாகிவிடும்.
ஞாயிறு:  அவிட்டம், கார்த்திகை
திங்கள்  :  அஸ்விணி, உத்திராடம்
செவ்வாய்: பூரட்டாதி, ரோகிணி, விசாகம், திருவாதிரை
புதன் கிழமை: ஹஸ்தம்
வியாழக்கிழமை: கார்த்திகை, திருவாதிரை, உத்திரம், சதயம், அனுஷம்
வெள்ளிக்கிழமை: ரோகிணி , ஆயில்யம், மகம்,திருவோணம்,
சனிக்கிழமை: ஆயில்யம், பூரட்டாதி, சித்திரை, உத்திரம்
மேற்கண்ட கிழமைகளில், குறிப்பிட்டுள்ள இந்த நட்சத்திரங்கள் சேர்ந்துவந்தால் அன்று மரணயோகம். மரணயோகத்தன்று சுப காரியங்களைச் செய்ய மாட்டார்கள்.
அன்று செய்யும் முக்கியமான செயல்கள் விருத்தி அடையாது.
உதாரணத்திற்கு, மரணயோகத்தன்று நீங்கள் ஒரு இடத்தை வாங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். நிலம் உங்களிடம் தங்காது. கையை விட்டுப் போய்விடும். அல்லது சிக்கல் மிகுந்த இடமாகி உங்கள் பணம்  மாட்டிக் கொண்டுவிடும். மரண யோகத்தன்று  ஒருவர் புதிதாக ஒரு வியாபாரத்தைத் தொடங்கினால், அது அபிவிருத்தியாகாது. வியாபாரம் செழிப்படையாது. அன்றையத் தேதியில், திருமணம் செய்து கொண்டால், மண வாழ்க்கை கசப்பில் முடிந்துவிடும். பிரிவில் முடிந்துவிடலாம்.
பணி மாற்றத்தில் வேறு ஒரு ஊருக்குச் செல்கிறீர்கள். சென்று அங்கு பணியில் சேரும் நாள், மரண யோக நாளாக இருந்தால், அங்கே நீங்கள் பல பிரச்சினை களைச் சந்திக்க நேரிடும்.
மரணயோகத்தன்று யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். கொடுத்தால் அது வராக் கடனாகிவிடும். ( நம்ம ஏங்க சார் கடன் கொடுக்கிற நிலைமை லெ இருக்கோம் னு கேக்கிறீங்களா ? ஒன்னு பண்ணலாம்.. ... நீங்க வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுப்பதற்கு அந்த நாளைப் பயன்படுத்தலாம். கடன் தீர்ந்துவிடும். அந்த நபரிடமோ, அல்லது அந்த வங்கியிலோ மீண்டும் கடன் ஏற்படாது.. ட்ரை பண்ணித்தான் பாருங்களேன்.. .)
இதுபோல முடிவிற்குக் கொண்டுவர , கழட்டி விட வேண்டும்  என்று நினைக்கும் செயல்களை, அன்று செய்யலாம்.
இதற்கு எதிரிடையாக , சில கிழமைகளுடன் சில நட்சத்திரங்கள் சேரும்போது, அது அமிர்தயோக நாளாகிவிடும்.
ஞாயிறு: உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி, திருவோணம், பூசம், மூலம்
திங்கள் : சுவாதி, புனர்பூசம்,ரோகிணி, மிருகசீரிடம்
செவ்வாய்: உத்திரம், மூலம்
புதன் : உத்திராடம், பூரம், பூராடம், பூரட்டாதி, உத்திரம்
வியாழன்  : சுவாதி, மூலம்
வெள்ளி : அஸ்விணி, பூசம், ஹஸ்தம், மூலம்
சனி: மகம், சதயம், கார்த்திகை, சுவாதி
அமிர்தயோகத்தன்று சுப காரியங்களைச் செய்யலாம். நமக்குச் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய பணிகளைச் செய்யலாம். சுருக்கமாகச் சொன்னால், மரண யோக தினங்களில் எது எதைச் செய்யக்கூடாது என்று சொன்னேனோ, அதையெல்லாம் இந்த நாட்களில் செய்யலாம்......
  
மேல சொன்ன ரெண்டும் முக்கியமான யோகங்கள்.முக்கியமா மனசிலே ஞாபகம் இருக்கட்டும். மற்றது  , இல்லேன்னா கூட பரவா இல்லை.
சுபா சுப யோகம்; சித்த யோகமும் அமிர்த யோகமும் சுபகருமங்களுக்கு உரிய சுப யோகங்களாகும்.
மரண யோகம், நாச யோகம், உற்பாத யோகம், பிரபலா நிஷ்ட யோகம், திரிபுஷ்கர யோகம் எனபன சுப கருமங்களுக்கு விலக்கப்படும் அசுப யோகங்களாகும்.
ஒரு கிரகம் பின் நோக்கிச் செல்வது வக்கிரம் எனப்படும்.“அவன் வக்கிரம் பிடிச்ச ஆளு,  அவனிடம் எதுவும் வைத்துக்கொள்ளாதே” என்று சொல்வதைக் கேட்டிருக்கிறீகள் அல்லவா? அதுபோல ஜாதகத்தில் கிரகம் வக்கிரகதியில் இருப்பது நன்மையானதல்ல. வக்கிரமான கிரகம் ஜாதகனுக்கு முழுப்பயனையும் தராது. பலனே தராது  என்று அர்த்தம் அல்ல.
ஒருவருக்கு சுக்கிரன் ஆட்சி ஸ்தானத்தில் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். வக்கிரம் ஆகி இருந்தால்...அவருக்கு கிடைக்க வேண்டிய முழு பலனும் தராது  ... நீசம் ஆகி , வக்கிரமும் இருந்தால் சற்று கடுமையாகவே இருக்கும்.
இப்போது உங்களது பிறந்த நட்சத்திரத்துக்குரிய விருட்சம் எனப்படும் மரம் எதுவெனப் பார்ப்போம்:
அஸ்வினி
1 ம் பாதம் - காஞ்சிதை (எட்டி)
2 ம் பாதம் - மகிழம்
3 ம் பாதம் - பாதாம்
4 ம் பாதம் - நண்டாஞ்சு
பரணி
1 ம் பாதம் - அத்தி
2 ம் பாதம் - மஞ்சக்கடம்பு
3 ம் பாதம் - விளா
4 ம் பாதம் - நந்தியாவட்டை
கார்த்திகை
1 ம் பாதம் - நெல்லி
2 ம் பாதம் - மணிபுங்கம்
3 ம் பாதம் - வெண் தேக்கு
4 ம் பாதம் - நிரிவேங்கை 
ரோஹிணி
1 ம் பாதம் - நாவல்
2 ம் பாதம் - சிவப்பு மந்தாரை
3 ம் பாதம் - மந்தாரை
4 ம் பாதம் - நாகலிங்கம்
மிருகஷீரிஷம்
1 ம் பாதம் - கருங்காலி
2 ம் பாதம் - ஆச்சா
3 ம் பாதம் - வேம்பு
4 ம் பாதம் - நீர்க்கடம்பு
திருவாதிரை
1 ம் பாதம் - செங்கருங்காலி
2 ம் பாதம் - வெள்ளை
3 ம் பாதம் - வெள்ளெருக்கு
4 ம் பாதம் - வெள்ளெருக்கு
புனர்பூசம்
1 ம் பாதம் - மூங்கில்
2 ம் பாதம் - மலைவேம்பு
3 ம் பாதம் - அடப்பமரம்
4 ம் பாதம் - நெல்லி
பூசம்
1 ம் பாதம் - அரசு
2 ம் பாதம் - ஆச்சா
3 ம் பாதம் - இருள்
4 ம் பாதம் - நொச்சி
ஆயில்யம்
1 ம் பாதம் - புன்னை
2 ம் பாதம் - முசுக்கட்டை
3 ம் பாதம் - இலந்தை
4 ம் பாதம் - பலா
மகம்
1 ம் பாதம் - ஆலமரம்
2 ம் பாதம் - முத்திலா மரம்
3 ம் பாதம் - இலுப்பை
4 ம் பாதம் - பவளமல்லி
பூரம்
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - வாகை
3 ம் பாதம் - ருத்திராட்சம்
4 ம் பாதம் - பலா
உத்திரம்
1 ம் பாதம் - ஆலசி
2 ம் பாதம் - வாதநாராயணன்
3 ம் பாதம் - எட்டி
4 ம் பாதம் - புங்கமரம்
ஹஸ்தம்
1 ம் பாதம் - ஆத்தி
2 ம் பாதம் - தென்னை
3 ம் பாதம் - ஓதியன்
4 ம் பாதம் - புத்திரசீவி
சித்திரை
1 ம் பாதம் - வில்வம்
2 ம் பாதம் - புரசு
3 ம் பாதம் - கொடுக்காபுளி
4 ம் பாதம் - தங்க அரளி
சுவாதி
1 ம் பாதம் - மருது
2 ம் பாதம் - புளி
3 ம் பாதம் - மஞ்சள் கொன்றை
4 ம் பாதம் - கொழுக்கட்டை மந்தாரை
விசாகம்
1 ம் பாதம் - விளா
2 ம் பாதம் - சிம்சுபா
3 ம் பாதம் - பூவன்
4 ம் பாதம் - தூங்குமூஞ்சி
அனுஷம்
1 ம் பாதம் - மகிழம்
2 ம் பாதம் - பூமருது
3 ம் பாதம் - கொங்கு
4 ம் பாதம் - தேக்கு
கேட்டை
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - பூவரசு
3 ம் பாதம் - அரசு
4 ம் பாதம் - வேம்பு
மூலம்
1 ம் பாதம் - மராமரம்
2 ம் பாதம் - பெரு
3 ம் பாதம் - செண்பக மரம்
4 ம் பாதம் - ஆச்சா
பூராடம்
1 ம் பாதம் - வஞ்சி
2 ம் பாதம் - கடற்கொஞ்சி
3 ம் பாதம் - சந்தானம்
4 ம் பாதம் - எலுமிச்சை 
உத்திராடம்
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - கடுக்காய்
3 ம் பாதம் - சாரப்பருப்பு
4 ம் பாதம் - தாளை
திருவோணம்
1 ம் பாதம் - வெள்ளெருக்கு
2 ம் பாதம் - கருங்காலி
3 ம் பாதம் - சிறுநாகப்பூ
4 ம் பாதம் - பாக்கு
அவிட்டம்
1 ம் பாதம் - வன்னி
2 ம் பாதம் - கருவேல்
3 ம் பாதம் - சீத்தா
4 ம் பாதம் - ஜாதிக்காய்
சதயம்
1 ம் பாதம் - கடம்பு
2 ம் பாதம் - பரம்பை
3 ம் பாதம் - ராம்சீதா
4 ம் பாதம் - திலகமரம்
பூரட்டாதி
1 ம் பாதம் - தேமா
2 ம் பாதம் - குங்கிலியம்
3 ம் பாதம் - சுந்தரவேம்பு
4 ம் பாதம் - கன்னிமந்தாரை
உத்திரட்டாதி
1 ம் பாதம் - வேம்பு
2 ம் பாதம் - குல்மோகர்
3 ம் பாதம் - சேராங்கொட்டை
4 ம் பாதம் - செம்மரம்
ரேவதி
1 ம் பாதம் - பனை
2 ம் பாதம் - தங்க அரளி
3 ம் பாதம் - செஞ்சந்தனம்
4 ம் பாதம் - மஞ்சபலா 
தங்களுக்குரிய  நட்சத்திரங்கள் , பாதங்கள் அறிந்து விருட்சங்கள் வளர்த்து , வளம் பெறுங்கள்..
 சில மரங்கள் - நீங்கள் கேள்விப்படாததாக இருக்கலாம். அருகில் இருக்கும் சித்த மருத்துவரையோ, அல்லது , கூகுள் லெ யோ தேடிப் பாருங்கள்.. இல்லையா , அந்த நட்சத்திரத்துக்கு மற்ற  பாதங்களுக்குரிய - பரிச்சயமான மரங்களை வளர்க்கலாம். 
மரங்களை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். ஒவ்வொரு ஆலயத்திற்கும் ஸ்தல விருட்சங்கள் உண்டு. அந்த ஸ்தல விருட்சத்தின் அடியில், அருகில் நீங்கள் அமர்வது , நீங்கள் அந்த ஆலயத்தின் கருவறைக்குள் அமர்வதுக்கு ஒப்பானது. ஆலயத்தை சுற்றி இருக்கும் அருள் அலைகளை ஸ்தல விருட்சம் கிரகித்து வெளியிடுகிறது..  திருவண்ணாமலை சென்றால், அந்த மகிழ மரத்தடியில் சில நிமிடங்கள் அமர்ந்து, உணர்ந்து பாருங்கள்..  உங்கள் ஊரில் அருகில் இருக்கும் ஸ்தலங்களில் விருட்சங்களின் அடியில் அமர்ந்து உணர்ந்து பார்த்துவிட்டு ... உங்கள் அனுபவங்களை எழுதுங்கள் .. 
எந்த ஒரு ஜாதகருக்கும், சில சமயங்களில், கிரக நிலைக்கு ஏற்ப எத்தனையோ பரிகாரங்களை செய்த போதிலும், பலன்கள் உடனடியாக கிடைக்காமல் போனால், நீங்கள் தாராளமாக இந்த விருட்சங்களை பரிந்துரைக்கலாம். 
ஒருவர் ஜாதகத்தை ஆராயும்போது , எந்த பலன்களுக்கு எந்த கிரகங்களை பார்க்க வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம்.  இந்த காராகத்துவங்களை , நீங்கள் கண்டிப்பாக மனதில் ஏற்றிக் கொள்ள வேண்டும்.
1 . சூரியன் :
உலகில் அசையும் பொருட்கள், அசையாப் பொருட்கள் ஆகிய எல்லாவற்றுக்குமே ஆத்மாவாக விளங்குவது சூரியனே . சூரியனே நவக்கிரகங்களுள் முதன்மையாகும்.
ஒருவனாக எப்போதும் சஞ்சரிப்பவன் யார் என்று மகாபாரதத்தில் யட்ச பிரச்னத்தில் கேள்வி எழுகிறது. அவன் சூரியனே என்றும் விடை கிடைக்கிறது. 
ஒற்றைச் சக்கரம் கொண்ட தேரில் வேதத்தின் ஏழு சந்தங்களை ஏழு குதிரைகளாகக் கொண்டு பூட்டி பவனி வருகிறான் சூரியன்.
ஜோதிடப்படி சூரியனே பிதுர் காரகன். சுய நிலை, சுய உணர்வு, செல்வாக்கு, கெளரவம், அந்தஸ்து, வீரம், பராக்ரமம், சரீர சுகம், நன்னடத்தை ஆகியவற்றிற்குக் காரகத்துவம் சூரியனுக்கே உண்டு. கண், ஒளி, உஷ்ணம், அரசு, ஆதரவு இவற்றின் அதிபதியும் சூரியனே!
கிழக்குத் திசை சூரியனுக்கு உரியது. சூரியனின் அருளால் வடமொழி அறிவு ஏற்படும். உஷா தேவி, சாயா தேவி ஆகிய இரு தேவிகளுடன் சூரியனார் கோவிலில் சூரியன் விளங்குகிறார். அக்னி இவருக்கு அதி தேவதை. ருத்ரன் இவருக்கு பிரத்யதி தேவதை. மாணிக்கம் உகந்த ரத்தினம். ஏழு குதிரைகள் பூட்டிய ரதமே சூரியனின் வாகனம்!
2. சந்திரன்
'சந்த்ரமா மனஸோ ஜா' என்று புருஷ சூக்தம் போற்றும் சந்திரனே மனதிற்கு அதிபதி. இவனே உடலுக்கு காரகன். சரீர பலம், மனோ பலம் இரண்டுமே உலக வாழ்க்கையின் வெற்றிக்கு மூல பலம் ஆகும்.
ஜனன லக்னத்தின்படி நல்ல பலன்களை ஒரு ஜாதகத்தில் காண முடியவில்லை எனில், சந்திரனை லக்னமாகக் கொண்டு பலன்களைச் சொல்ல வேண்டும் என்று விதி இருக்கிறது. இதையே 'விதி கெட்டால் மதியைப் பாரு' ; விதியை மதியால் வெல்லலாம் என்ற பழமொழி உணர்த்துகிறுது! 
ஜோதிடப்படி மாத்ரு காரகன் சந்திரன். கடற்பயணம், ரசனை, அறிவு, ஆனந்தம், புகழ், அழகு, நடு நிலைமை, சுக போகம் இவற்றிற்கு காரகன் சந்திரனே! முகூர்த்தங்களை நிச்சயம் செய்வது, ஜாதக தசா இருப்பு, திருமணப் பொருத்தம் ஆகிய முக்கியமானவை அனைத்துமே சந்திரனை அடிப்படையாகக் கொண்டே நிர்ணயிக்கப்படுகின்றன. 
தென் கிழக்குத் திசை சந்திரனுக்குரியது. உகந்த நிறம் வெள்ளை. சந்திரனுக்கு உரிய தலம் திங்களூர். 
விஷ்ணுவின் அம்சமான சந்திரனின் நற்பலன்களைப் பெற பெளர்ணமியன்று திருப்பதி சென்று தரிசனம் செய்து தங்கி வழிபடுவது நலம் பயக்கும். 
மூலிகைக்கு அதிபதி சந்திரன். செல்வத்தை தருபவன் என யஜுர் வேதம் சந்திரனைப் புகழ்கிறது. சந்திரன் நிற்கும் வீட்டை ராசி வீடாகக் கொண்டு இதன் முன் பின் வீடுகளை சனி கடக்கும் போது ஏற்படும் ஏழரை ஆண்டுகள் ‘ஏழரை நாட்டுச் சனி' என்று கூறப்படுகிறது. 
முத்து சந்திரனுக்கு உகந்த ரத்தினம். வெள்ளைக்குதிரை சந்திரனின் வாகனம்!
3. செவ்வாய்
அங்காரகன், குஜன், மங்களன், பெளமன், உக்கிரன் என்று பல பெயர்களால் அழைக்கப்படும் செவ்வாய் நவக்கிரகங்களுள் மூன்றாவது இடத்தைப் பெறுபவன்.
சகோதர காரகன் இவனே. ரத்தத்திற்கு காரகன் செவ்வாய். உடல் உறுதி, மன உறுதி தருபவன் செவ்வாய். உஷ்ணம், கோபம், எரிபொருள் ஆகியவற்றிற்கு உரியவன் செவ்வாய். 
கண்டிப்பதும் இவனே, தண்டிப்பதும் இவனே. மாபெரும் போர் வீரர்களை வழி நடுத்துபவன். பெரும் விளையாட்டு வீரர்களுக்கு அருள்பாலிப்பவன். செந்நிறத்தோல் அழகன், கடும் பார்வை உடையவன், பொறுமை அற்றவன். தெற்கு திசை செவ்வாய்க்கு உரியது. 
வழிபடுவோரின் விருப்பத்தை பூர்த்தி செய்பவன் இவன். தேசத்தை வழி நடத்தும் தலைவர்கள், படை தளகர்த்தர்கள், தீ போல சுட்டெரித்து தூய்மையை விரும்புவோர் ஆகியோரின் நாயகன் செவ்வாய். பவளமே செவ்வாய்க்கு உகந்த ரத்தினம். ஆட்டுக்கிடா செவ்வாயின் வாகனம். 
4. புதன்
வித்யா காரகன் புதன். கணிதம், லாஜிக், வைத்தியம், ஜோதிடம் ஆகிய அனைத்திற்கும் நாயகன் புதனே. நாடகம், நடனம், புத்தக பிரசுரம் ஆகியவற்றிற்கு புதனின் பலமே வேண்டும். உடலில் நரம்பு இவன். நரம்பு மண்டலத்தின் ஆதாரமும் இவனே.
வடகிழக்கு புதனுக்கு உரிய திசை. புதன் ஜாதகத்தில் வலுப்பெற்றிருந்தால் ஜோதிடக்கலை சித்திக்கும். புதனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கம் காசியில் உள்ளது. திருவெண்காடு புதனுக்குரிய தலம்.
விஷ்ணு இவருக்கு அதி தேவதை. நாராயணன் பிரத்யதி தேவதை. மரகதம் புதனுக்கு உகந்த ரத்தினம்.
5. குரு
பிரஹஸ்பதி, வியாழன், பீதாம்பர், பொன்னன் ஆகிய பெயர்களால் அழைக்கப்படும் வியாழன் தெய்வீக அறிவுக்கும், ஞானத்திற்கும் அதிபதி ஆவார். 
குரு பார்த்தால் கோடி நன்மை என்ற பழமொழி ஒன்றே குருவின் பெருமையை  விளக்கப் போதுமானது. தலைமை தாங்குவது குரு பலத்தால் ஏற்படும். அந்தணர், பசுக்களுக்கு அதிபதி. குரு மஞ்சள் நிறத்தோன். சாத்வீகன். உடலில் சதை இவர். புத்திர காரகன், தன காரகன் இவரே. திருமணம் ஒருவருக்கு செய்ய குரு பலம் , குரு பார்வை அவசியம்.
ஒருவர் நல்லவரா ? கெட்டவரா? என்று குருவின் நிலையை வைத்து கூறிட முடியும்.  
வடக்குத் திசை குருவிற்கு உரியது. குருவிற்கு உரிய தலம் ஆலங்குடி. பிரம்மன் இவருக்கு அதி தேவதை. இந்திரன் பிரத்யதி தேவதை. புஷ்பராகம் குருவிற்கு உகந்த ரத்தினம்.
6. சுக்கிரன்
அறுபத்தி நான்கு கலைகளுக்கும் அதிபதி சுக்ரன். காதல், சுக போகம் இவற்றிற்கு அதிபதி சுக்ரனே. ஜோதிடப்படி களத்திரகாரகள் சுக்கிரன். இவனே வாகனங்களுக்கும் அதிபதி. ஜனன உறுப்புகளைக் காப்பவன் இவனே. சிற்றின்பத்தை நுகர வைப்பவனும் இவனே. உடலில் வீர்யம் இவன். அணிமணி, ஆபரணம் சுக்கிரன் அருள் இருந்தாலே சேரும்.
கிழக்குத் திசை சுக்ரனுக்கு உரிய திசை. இந்திராணி இவருக்கு அதி தேவதை. இந்திர மருத்துவன் பிரத்யதி தேவதை. வைரம் சுக்ரனுக்கு உகந்த ரத்தினம். கருடனே சுக்கிரனின் வாகனம்.
7. சனி
சூரியனுக்கும் சாயாதேவிக்கும் பிறந்த சூரிய குமரனே சனி. யமனின் தமயன் இவன். நீண்ட ஆயுளுக்கும், மரணத்திற்கும் அதிபதி சனியே. சனி ஜாதகத்தில் அசுபனாக இருந்தால் ஒருவன் எல்லாவித துன்பங்களையும் அனுபவிக்க நேரிடும். 
சனி நல்ல பலம் பெற்றிருந்தால் சர்வ நலன்களையும் அடைய வாய்ப்பு உண்டு. ஏழரை நாட்டு சனி என்றழைக்கப்படும் எழரை ஆண்டுகளில் இவனைத் துதித்து வழிபட்டால் நலம் பெறலாம். 
எண்ணெய், கறுப்பு தானியங்களுக்கு சனியே அதிபதி. கருமை இவனுக்கு உகந்த நிறம்.
இயந்திரம் சம்பந்தபட்ட அனைத்திற்கும் ஆதிபத்யம் சனிக்கே உண்டு. உடலில் நரம்பு இவன். தாமச குணத்தோன். ஒற்றைக் கால் சற்று குட்டையாக இருப்பதால் மந்த நடையை உடையவன். ஆகவே மந்தன் என்றும் அழைக்கப்படுவான். 
மேற்குத்திசை சனிக்கு உரியது. திருநள்ளாறு சனிக்கு உரிய தலம். சனிக்கு அதி தேவதை யமன். பிரத்யதி தேவதை பிரஜாபதி. நீலம் இவருக்கு உகந்த ரத்தினம். காகமே சனியின் வாகனம்.
8. ராகு
சாயா கிரகம் என்று அழைக்கப்படும் ராகு, பாற்கடல் கடையப்பட்டு அமுதம் எடுத்து அமரர்களுக்கு படைக்கப்பட்டபோது தேவனாக உருமாறி சூரியனுக்கும் மதியவனுக்கும் இடையே அமர்ந்து அமுதம் உண்ண ஆரம்பித்தான். மோகினி உருவில் அமுதம் பரிமாறி வந்த திருமாலிடம் சூரியனும் மதியவனும் ராகுவைக் காட்டிக் கொடுக்கவே தன் சக்கரம் கொண்டு ராகுவின் தலையை சீவினார் திருமால். அமுதம் உண்டதால் சாகாத் தன்மையைப் பெற்ற ராகு உடல் வேறு தலை வேறாகி விழுந்தான். பாம்பின் உடலைப் பெற்று விஷ்ணுவின் அருள் வேண்டி தவம் இயற்றி கிரக நிலையை அடைந்தான். 
அரசாங்கத்தில் பதவி, புகழ் இவற்றைப் பெற ராகுவின் அருள் வேண்டும். ஜாதகத்தில் ராகு பலம் பொருந்தி இருந்தால் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஸ்பெகுலேஷன், சூதாட்டம் என்ற இவற்றிற்கெல்லாம் அதிபதி ராகுவே. மிலேச்சருக்கு அதிபதி. கலப்பு இனத்திற்கு வழி வகுப்பவன். வெளிநாட்டுக் கலப்புக்கு அதிபதி.
தென்மேற்கு திசைக்கு அதிபதி ராகு. திருநாகேஸ்வரம் ராகுவிற்கு உரிய தலம். பசு ராகுவின் அதி தேவதை, பாம்பு பிரத்யதி தேவதை. கோமேதகம் ராகுவிற்கு உரிய ரத்தினம். 
9. கேது
ஞான காரகன் என்ற புகழைப் பெறுபவன் கேது. மோட்ச காரகனும் இவனே. மோகினியால் துண்டிக்கப்பட்ட ராகுவின் உடம்பே கேது. விஷ்ணுவை நோக்கித் தவம் இருந்ததால் பாம்பு உடலைப் பெற்றான்.
விஞ்ஞானம், மெய்ஞானம் ஆகிய அனைத்துத் துறைகளையும் தன் வசத்தில் வைத்திருப்பவன். நீச பாஷைகளில் தேர்ச்சியைத் தருவான். தாய் வழிப் பாட்டனுக்கு காரகன். கீழ்ப்பெரும்பள்ளம் கேதுவிற்கு உரிய தலம்.
சித்திரகுப்தன் இவருக்கு அதி தேவதை, பிரம்மன் பிரத்யதி தேவதை. வடமேற்கு கேதுவிற்கு உரிய திசை. வைடூர்யம் கேதுவிற்கு உகந்த ரத்தினம். 
இந்து லக்கினம் பற்றிய தகவல்களுக்கு வருவோம்..
உங்கள் ஜாதகத்தில் - எதுவும் உச்ச கிரகம், ஆட்சி கிரகம் இல்லை என்ற போது , இந்து லக்கினத்தில் நின்ற கிரகத்தின் தசை வருகிறதா என்று பாருங்கள்... நீங்கள் கோடீஸ்வரராவது 100 % உறுதி.
உங்களுக்கு கிடைக்கும் , பண வரவு பற்றி தெரிந்து கொள்ள - இரண்டாம் இடம், குரு பகவான் நிலைமை  தவிர இந்து லக்கினமும் தெரிந்தால் நல்லது.
இதை எப்படி பார்ப்பது என்று பார்ப்போம்..
உங்கள் ஜாதக கட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள் :
லக்கினம், ராசி --- என்ன என்று பாருங்கள் :
ஒவ்வொரு கிரகத்திற்கும் - இந்து இலக்கின விதிப்படி - கலை எண்கள்  என்று உண்டு. "ஒளி எண்கள் " என்றும் வைத்துக் கொள்ளலாம்.
சூரியனுக்கு       - 30
சந்திரனுக்கு      - 16
செவ்வாய்க்கு   - 6
புதனுக்கு             - 8
சுக்கிரனுக்கு     - 10
 குருவுக்கு          - 12
சனிக்கு                - 1 
ராகு, கேதுக்கு - கலைகள் கிடையாது. 
உங்கள் லக்கினத்தில் இருந்து - ஒன்பதாம் வீடு என்ன என்று பாருங்கள் . அந்த வீட்டின் அதிபதி யார் ? அவருக்கு எத்தனை கலை என்று பாருங்கள்.
அதேபோலே - உங்கள் ராசிக்கு - ஒன்பதாம் வீட்டின் அதிபர் , அவருக்கு எத்தனை கலை எண் என்று பாருங்கள் .
இரண்டு கலை எண்களையும் கூட்டி , வரும் கூட்டுத்தொகையை - 12 ஆல் வகுக்க வேண்டும்.   வகுத்த பிறகு வரும் எண்ணை, சந்திரன் நின்ற வீட்டில் இருந்து 1 ...2 ...3 ... என்று எண்ணி வாருங்கள். எந்த வீட்டில் மீதி தொகை முடிகிறதோ .. அந்த வீடு .. இந்து லக்கினம் என்று பெயர்...
இந்த இந்து லக்கினத்தில் இருந்து வரும் ஒரு கிரகத்தின் தசை நடக்கிறது என்றால்... உங்களுக்கு , பொன்னும்  பொருளும், புகழும் குவியும்... 
ஒரு உதாரணத்திற்கு  - விருச்சிக லக்கினம் , சிம்ம ராசி என்று வைத்துக் கொள்வோம்.
விருச்சிகத்திற்கு  - ஒன்பதாம் வீடு - கடகம் . அதிபதி - சந்திரன் . அவரது கலை எண் : 16 .
சிம்ம ராசிக்கு - ஒன்பதாம் வீடு - மேஷம் . அதிபதி - செவ்வாய். கலை எண் : 6.
இரண்டையும்  கூட்டினால் - வருவது : 16 + 6 = 22 .
12 ஆல் வகுக்க மீதி வருவது  ::: 10 . இதை சந்திரன் நின்ற சிம்ம ராசியில் இருந்து என்ன , 10 ஆம் வீடாக வருவது ரிஷபம். இந்த ஜாதகருக்கு - ரிஷபமே இந்து லக்கினம் ஆகும். 
ரிஷபத்தில் இவருக்கு நிற்கும் கிரகத்தின் தசை நடந்தால் - அவருக்கு , அந்த தசை காலம் - அற்புதமான ஒரு காலமாக இருக்கும். அது அசுப / தீய கிரகமாகவே இருந்தாலும் , இது பொருந்தும்.
அவரது பலன் அளவு வேறுபட வாய்ப்பு இருக்கிறது.  உதாரணத்திற்கு நடை முறையில் - ஆளும் கட்சி கவுன்சிலரும்  அதிகாரம் படைத்தவர்தான், MLA , MP , மினிஸ்டர் இப்படி ஆளுக்கு தகுந்த மாதிரி வேறுபடும்  இல்லையா? அதே மாதிரி ...
இயல்பில் இந்து லக்கினம் - ஜென்ம லக்கினத்திற்கு பகை வீடு , இல்லை பகை கிரகம், நீச கிரகம் அங்கே இருந்தால் - பலன் கொஞ்சம் குறையும். ஆனால் , அபரிமித பலன்கள் கண்டிப்பாக ஏற்படும். 
அதே வேளையில் , இந்த இந்து லக்கினம் - ஜென்ம லக்கினத்திற்கு , மறைவு ஸ்தானமாக இல்லாமல் ( 3 ,6 ,8 ,12 ) - இந்து லக்கினத்தில் - ஒரு சுப கிரகம் இருந்து , அல்லது சுப கிரகங்களின் பார்வை பெற்று தசை நடந்தால் - அவர் உலக புகழ் பெரும் கோடீஸ்வரராவார்.  
காரகோ பாவ நாஸ்தி
நாம் ஏற்கனவே - பன்னிரண்டு வீடுகளைப் பற்றி , பாடம் பார்த்தோமே, ...அந்த ,   அந்த வீடுகளுக்கு காரகத்துவம் பெரும் கிரகங்களைப் பற்றி கூறி இருந்தேன்... ஞாபகம் இருக்கிறதா?
உதாரணத்திற்கு - ஏழாம் வீடு - களத்திர ஸ்தானம் - காரகம் பெறுவது - சுக்கிரன். ஐந்தாம் வீடு - குழந்தைகள் ஸ்தானம் - காரகம் பெறுவது  - குரு .
கரெக்டா ?  இந்த ஏழு கிரகங்களுமே, தனது  காரகம்   பெறும் இடங்களில் நின்றால் - சொதப்பி விடுகிறார்கள். அவர்கள் வேலை பார்ப்பதே இல்லை. 
தனியாக நின்றால் , வெகு நிச்சயமாக சொதப்பல். மற்ற கிரகங்களுடன் இணைந்து இருப்பது - பரவா இல்லை.
அதாவது - எந்த லக்கினமாக இருந்தாலும், ஏழில் - சுக்கிரன் தனித்து இருந்தால் , அவர்களுக்கு திருமண விஷயம் , அவ்வளவு எளிதாக இருப்பது இல்லை. நிறைய பேருக்கு திருமணமே நடப்பது இல்லை. அல்லது வெகு தாமத திருமணம்... முறைப்படி திருமணம் செய்து குடித்தனம் நடத்த முடியாத நிலை இப்படி..தவறி, விதி விலக்காய்  நடந்தாலும் - கல்யாணம் பண்ணியும் பிரயோஜனம் இல்லாத நிலைமை.  இப்படி....
அதைப் போலவே ,  ஐந்தாம் வீட்டில் - குரு தனித்து நின்றால் - அவர்களுக்கு - குழந்தை பாக்கியம் இருப்பது இல்லை. ஆகா , பிரமாதம், ஐந்தில் குரு - நல்லா பக்காவா - திரிகோண ஸ்தானத்தில் இருக்கிறார் என அவசரப் பட்டு விடாதீர்கள்.. 
இதற்க்கு பெயர் தான் காரகோ பாவ நாஸ்தி .... 
இதைக் கூட நிறைய ஜோதிடர்கள் தெரிந்து வைத்து இருக்கிறார்கள்.. ஆனால் , நாம் அடுத்து பார்க்க விருக்கும் விஷயம் - நிறைய பேருக்கு தெரிஞ்சு இருக்க வாய்ப்பு இல்லை என்பது என் அனுபவம்...
எந்த ஒரு விஷயமும் தெரிஞ்சுக்கிட ரெண்டு வகை இருக்கு. -- ஒன்னு உங்களுக்கு சொல்லிக் கொடுக்கிற குரு - பக்காவா , வெளிப்படையா சொல்லிக் கொடுக்கிறவரா இருக்கணும். ... இல்லையா , உங்களுக்கு இயல்பா இருக்கிற ஆர்வம் , உங்க தேடுதல் ... உங்களுக்கு நிறைய விஷய ஞானத்தைக்  கொடுக்கும்.
சரி, இப்போ நாம பார்க்க விருப்பது  - கேந்திராதிபத்திய தோஷம்  பற்றி :
சுப கிரகங்கள் - கேந்திர அதிபதிகளாக இருந்து  , கேந்திரங்களிலேயே நிற்க - அவராலும் ஒன்றும் பிரயோஜனம் இல்லை என்கிறது விதி.. இது எல்லா கிரகங்களுக்கும் இல்லை. முழுக்க , முழுக்க சுப கிரகங்களுக்கு மட்டுமே.
இயல்பிலேயே - அசுப கிரகங்களான - செவ்வாய் , சனி, சூரியன் , தேய்பிறை சந்திரன், தீய கிரகங்களுடன் சேர்ந்தால் அசுப கிரகமான புதன் , ராகு , கேது  - ஆகியோர் கேந்திரங்களில் நின்றால் - தோஷமில்லை.
எனவே , கேந்திராதிபத்திய தோஷம் பெறும் கிரகங்கள் - குரு, சுக்கிரன் , வளர்பிறை சந்திரன், தனியாக நிற்கும் புதன்.
இவர்கள் , வேறு கிரகங்களுடன் இணைந்து - கேந்திரத்தில் இருந்தால் , பரவா இல்லை. தனியே நிற்க கூடாது. 
-------- வெறுமனே ஜாதகம் பார்த்து விட்டு - ஆஹா , நல்ல சுப கிரகம்  - முழு  பலத்துடன் கேந்திர ஸ்தானத்தில் நிற்கிறது.. அமோகமாக இருக்கும் என்று எண்ணி விடாதீர்கள்.. சரியா ?
தெளிவாக புரிய வில்லை என்றால்  ஒரு உதாரணத்துடன் பார்ப்போம்.. 
கடக லக்கினம் என்று வைத்துக் கொள்ளுங்கள் :
கேந்திர வீடுகள் :  1 ,4 ,7 ,10  ===  கடகத்திற்கு என்னென்ன வீடுகள்  கேந்திரமாகிறது  ?
கடகம், துலாம், மகரம் , மேஷம் .... கரெக்டா ...?
சந்திரன், சுக்கிரன், சனி , செவ்வாய் - இந்த வீடுகளுக்கு அதிபதிகள். சனியும் , செவ்வாயும் -  கேந்திரத்தில் நிற்பது நல்லது.
ஆனால், வளர்பிறை , சந்திரனோ, இல்லை 4 ஆம் வீட்டுக்கு அதிபதியாக வரும் சுக்கிரனோ  - தனியாக கேந்திரத்தில் நிற்க அவரால்  , முழுவதும்  பலன்கள்  இல்லை. இதைத்தான், கேந்திராதிபத்திய தோஷம் என்று சாஸ்திரம் கூறுகிறது..
இந்த நுணுக்கமான விதிகளை ஏன் கூறுகிறேன் என்றால், முதலில் உங்கள் ஜாதகத்தை முழுக்க ஆராய்ந்து பாருங்கள்..  உங்கள் ஜாதகம் ஆராய்ந்து எப்படி, எவ்வளவு தூரம் - உங்களுக்கு,  நீங்கள் பலன் சொல்ல முடிகிறது என்று பாருங்கள்.., அது மற்றவர்களுக்கு பலன் சொல்வதற்கு உங்களால் முடியும் என்ற நம்பிக்கை தரும். 
புனர்பூ தோஷம்:
சந்திரன் , சனி - இரண்டுக்கும் சம்பந்தம் இருக்கிறதா ? என்று பாருங்கள். இரண்டும் ஒரே வீட்டில் சேர்ந்து இருந்தால் , அல்லது ஒருவருக்கொருவர் சம சப்தம பார்வை கொண்டு இருந்தால் ... ( அதாங்க -  சந்திரனில் இருந்து ஏழாம் வீட்டில் சனி இருந்தால் ) , அல்லது இரண்டும் பரிவர்த்தனை ஆகி இருந்தால்... அல்லது இரண்டு  கிரகமும் இருக்கும் நட்சத்திரங்கள் பரிவர்த்தனை ஆகி இருந்தால்...  ( அதாவது - பூசம் நட்சத்திரத்தில் சந்திரன் இருந்து , அனுஷம் நட்சத்திரத்தில் சந்திரன் இருப்பது போலே... )
இந்த மாதிரி அமைப்பு இருப்பவர்கள் புனர்பூ தோஷத்தால் பாதிக்கப் பட்டு இருக்கிறார்கள் என்பது பொருள். 
புனர்பூ தோஷம் இருப்பவர்களுக்கு திருமண விஷயத்தில் என்ன நடக்கும் ? 
(1 ) திருமணம் காலதாமதமாவது
(2 ) திருமண சம்பந்தமான பேச்சுவார்த்தைகளில் தொடங்கி, நிச்சயத்திலும், திருமணத்திலுமே தடைகள் ஏற்படுவது,
(3 ) திருமண நிச்சயம் முறிந்து போவது,
(4 ) நிச்சயிக்கப்பட்ட திருமணத் தேதி தள்ளி வைக்கப்படுவது,
(5 ) மணப்பெண்ணோ மாப்பிள்ளையோ மாறிப் போவது,
(6 ) திருமணத்துக்கு போகும் வழியில் காலதாமதமாகிப் போவது
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். 
பரிகாரம்  :
இந்த அமைப்பு இருப்பவர்கள் - திருமணஞ்சேரி  சென்று முறைப்படி பரிகார பூஜை செய்து கொள்வது நல்லது . வசதி இருப்பவர்கள் , யாராவது ஏழை , எளியவர்களுக்கு திருமணம் நடைபெற உதவி செய்யலாம்.
குலதெய்வத்திற்கு - முடிகாணிக்கை, படையல் செலுத்தி வழிபாடு செய்யலாம். 
தொடர்ச்சியாக மூன்று பௌர்ணமி தினங்களில் விரதம் இருந்து - திருவண்ணாமலை கிரிவலம் சென்று , மும்மூன்று முறையாக ஒன்பது துறவிகளுக்கு வஸ்திர தானம் செய்து வந்தால் , உடனடியாக பொருத்தமான வரன் அமையும். 
களத்திர ஸ்தானம் எனப்படும் ஏழாம் வீடும் , குடும்ப ஸ்தானம் எனப்படும் இரண்டாம் வீடும் பாதிக்கப் பட்டிருந்தாலும், திருமணம் தள்ளிப் போகும். அவர்களுக்கும், மேற்கூறிய பரிகார முறை பொருந்தும்.
அனுபவத்தில், தெரிந்தோ தெரியாமலோ - யாருக்கேனும் திருமணம் நடைபெறும்போது குளறுபடி செய்தால் , விவாகரத்து செய்ய துணை நின்றால் - அவர்கள் சந்ததிக்கு , இந்த அமைப்பு ஏற்படுகிறது. ஒருவேளை, பூர்வ ஜென்ம தொடர்பாகவும் இருக்கலாம்.  
 உங்களுக்கு தெரிந்தவர்கள் யாரேனும் இந்த அமைப்பு கொண்டு , அவர்களுக்கு திருமண தடை தொடர்ந்தால் , நீங்களும் உதவி செய்யலாம். 
செவ்வாய் தோஷம்
லக்கனம், சந்திரன், சுக்கிரன் முதலியவைகளுக்கு 2,4,7,8,12, ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷ ஜாதகமாக கருத வேண்டும்.
2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் உள்ள எல்லோருக்கும் செவ்வாய் தோஷம் என்று கூறிவிட முடியாது.
நடைமுறையில் லக்கினத்தை மட்டுமே கணக்கில் எடுத்து பெரும்பாலான ஜோதிடர்கள் கூறுவர்.  சிலர் முதல் வீட்டையும் கணக்கில் எடுப்பது உண்டு. 
சில விதிவிலக்குகள் உள்ளன : 
மேஷம், விருச்சிகம், மகரம், கடகம் ஆகிய வீடுகளில் செவ்வாய் இருந்தால் தோஷம் வலிமை குன்றி தோஷமில்லை என்ற நிலை ஏற்படும்.
காரணம் என்னவென்றால் சம்பந்தப்பட்ட வீடுகளில் செவ்வாய் ஆட்சி, உச்சம், நீசம், பெற்று இருப்பதால் தோஷம் குன்றும். மேஷம், விருச்சிகம், மகரம், கடகம் ஆகிய லக்னங்களிலோ இராசியிலோ பிறந்தவர் என்றால் உங்களுக்கு தோஷம் கிடையாது.
குரு, சூரியன், சனி சந்திரனுடன் சேர்ந்திருந்தால் அல்லது பார்க்கப் பட்டால்  தோஷமில்லை என்ற நிலை ஏற்படும்.
சிம்மம் , ரிஷபம் அல்லது கும்பத்தில் செவ்வாய் இருந்தால் தோஷமில்லை என்ற நிலை ஏற்படும்.
4 - ம் இடம் மேஷம், விருச்சிகம் ஆகி செவ்வாய் இருந்தாலும் தோஷமில்லை என்ற நிலை ஏற்படும்.
7 - ம் இடம் கடகம், மகரம் ஆகி செவ்வாய் இருந்தாலும் தோஷமில்லை என்ற நிலை ஏற்படும்.
8 - ம் இடம் தனுசு, மீனம் ஆகி செவ்வாய் இருந்தாலும் தோஷமில்லை என்ற நிலை ஏற்படும்.
 மிருகசீர்ஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நக்ஷத்திரங்களில் பிறந்தவர் என்றால் உங்களுக்கு தோஷம் கிடையாது.
ஜாதகத்தில் லக்னத்தையோ, 7ம் இடத்தையோ,பெண்களுக்கு 8ம் இடத்தையோ குரு பார்த்தால் உங்களுக்கு தோஷம் கிடையாது.
 7ம் இடம்,, 8ம் இடம்[பெண்களுக்கு மட்டும்] மேஷம், விருச்சிகம், மகரம், கடகம் ஆகிய லக்னங்களாக வந்தால் உங்களுக்கு தோஷம் கிடையாது.
செவ்வாய் அமர்ந்த நக்ஷத்திரக்கால் : மிருகசீர்ஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நக்ஷத்திரங்களில் என்றால் உங்களுக்கு தோஷம் கிடையாது.
இதே போல் நிறைய விதி விலக்குகள் உண்டு. 
தினமும் கந்த ஷஷ்டி கவசம் பாராயணம் செய்தல் செவ்வாய் தோசத்திற்க்கு ஒரு மிகச் சிறந்த பரிகாரம் ஆகும்.
எனவே செவ்வாய் தோஷம் என்றாலே வாசகர்கள் - ஜாதகம் பார்க்க வரும் அன்பர்களை பயமுறுத்தி விட வேண்டாம். இன்றைய நடைமுறையில் , பாதிக்கும் மேல் , செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் தான் அதிகம். திருமண தாமதத்திற்கு , செவ்வாய் தோஷம் மட்டுமே காரணம் ஆகாது. 
சரி, இன்னும் சில தெரிந்து கொள்ள வேண்டிய ஜோதிட விதிகளை காண்போம்.
அன்பர்களே , இது அனைத்தும் பொதுவான விதி முறைகள் தான். ஆனால், ஒருவருக்கு பூர்வ புண்ணிய ஸ்தானம் பலமாகவும், குல தெய்வம் அருளும் , உங்களை பெற்றவர்களை, அல்லது புகுந்த வீட்டில் மாமனார் / மாமியாரை  பொறுப்பாக  கவனித்து நீங்கள் சேர்த்து வைக்கும் புண்ணியமும் இருந்தால், எந்த நாளும் உங்களுக்கு , ஒரு தீங்கும் ஏற்படாது.   
இரண்டும், இரண்டிற்கு மேற்பட்ட தாரம் ஏற்படக்காரணம் :

7ம் அதிபதி கெட்டு கெட்டவர்கள் வீட்டில் அமையப்பெற்றால் இருதார யோகம் உண்டு.  ( யோகமா  ??  ஆம். ஒரு சிலருக்கு வாழ்க்கை துணை தவறி விட்டால், திரும்பவும் திருமணம் நடைபெற வேண்டிய சூழல் ஏற்படுகிறதே ! )
7ம் அதிபதி ராகுவுடன் சேர்க்கை பெற்றாலோ அல்லது 7ம் இடத்தில் அசுபர் இருந்தாலோ , இரண்டு அசுபர்கள் 2ம் இடத்தில் அமைந்தாலோ
7ம் அதிபதி 10ல் அமையப் பெற்று ஆட்சி, உச்சம், நட்பு பெற்று 10ம் அதிபதியால் பாக்கப்பட்டாலோ
11ம் வீட்டில் இரண்டு வலிமையான கிரகங்கள் அமையப் பெற்று இருந்தாலோ
7ம் அதிபதியும் சுக்கிரனும் இணைந்து இருந்தாலோ அம்சத்தில் சேர்ந்து காணப்பட்டாலோ
7ம் அதிபதி கெட்டு 11ல் இரு கிரகங்கள் அமையப் பெற்றிருந்தாலோ
7ம் இடத்தில் சுக்கிரன், சனி இணைந்து காணப்பட்டாலோ
இரண்டாம் தாரம் உண்டா என்பதைப் பார்க்க நீங்கள் பார்க்க வேண்டிய முக்கியமான ஸ்தானம் - பதினொன்றாம் வீடு தான். அந்த வீட்டின் நிலைமை, வீட்டு அதிபதியின் நிலைமை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். 
விதவைப் பெண் :

7ம் இடத்தில் உள்ள செவ்வாய் சூரியன் சேர்க்கை  பெற்றால் , சூரிய தசை அல்லது செவ்வாய் தசையில்  அவள் விதவையாவாள்.
மூன்று அசுபர்கள் 7ம் இடத்தில் அமையப்பெற்றால் அந்தப் பெண் மாங்கல்ய பலம் இழந்து விடுவாள்.
8ம் இடமான மங்கல்ய ஸ்தானத்தில் செவ்வாய், சனி, ராகு, கேது, போன்ற அசுபர்கள் அமையப்பெற்றாலும் விதவையாகி விடுவாள்.
7ம் இடத்தில் சனி, செவ்வாய் போன்ற அசுபர்கள் இணைந்து இருந்தால்  இளவயதில் மாங்கல்ய பலம் இழ்க்க நேரிடும்.
விவாகரத்து :

மங்கையர்களின் ஜாதகத்தில் 7ம், 8ம் இடங்கள் கெட்டிருந்தாலும்
லக்கினாதிபதி,  7ம் இடத்திற்கு அதிபதி 6, 8 போன்ற மறைவிடத்தில் இருந்தாலும் , 
12ம் இடத்தில் ராகு, 6ம் இடத்தில் கேது அமையப் பெற்ற பெண்களும், 
7ம் இடத்தில் நீச கிரகம் இருந்து சுபரால் பார்க்கப்பட்டாலும் விவாகரத்து அமையப் பெறும்.
6-ம் வீடும், 7-ம் வீடும் தரும் களத்திர தோஷம்:
இது கொஞ்சம் சுவாரஸ்யமான விஷயம். ஆறாம் ஸ்தானம் கடன் , நோய் எதிரி. ஏழாம் வீடு களத்திரம் . இல்லையா?
அப்படிப்பட்ட ஏழாம் வீட்டிற்கு - ஆறாம் வீடு , பன்னிரெண்டாம் வீடாக , அதாவது விரய  ஸ்தானமாக வருகிறது. ஆறுக்கும், ஏழுக்கும் - ஜாதகத்தில் சம்பந்தம் இருக்கிறதா என்று பாருங்கள்.... உங்களுக்கே வியப்பாக இருக்கும்.  இப்படி இணைந்து இருந்தால் வரும் வாழ்க்கைத் துணை சண்டைக் கோழியாகத் தான் பெரும்பாலும் அமைகிறது. மோசமான தசா / புக்தி காலங்களில் அவர்கள் கோர்ட் படியேறும் சூழ்நிலையும் ஏற்பட்டு விடுகிறது.
Eingestellt von Pooranananthan Paramajeyakumar um 11:26
Diesen Post per E-Mail versendenBlogThis!In Twitter freigebenIn Facebook freigebenAuf Pinterest teilen
Pooranananthan Paramajeyakumar29. Dezember 2012 11:29
Dieser Kommentar wurde vom Autor entfernt.
Antworten
Neuerer PostÄlterer PostStartseite
Abonnieren Kommentare zum Post (Atom)
Visitors
http://www.travelair.de
Thank you-Introduction to Vedic Astrology

08 November 2014

ராசி vs சாதகமான நிறங்கள்

ராசி vs சாதகமான நிறங்கள்

 மேஷம்:    சிவப்பு, மஞ்சள், Safron

Vrishabha: வெள்ளை, பச்சை, கருப்பு

Mithuna:     ரெட் கிராஸ் பச்சை, சாம்பல்

Kataka        வெள்ளை, சிவப்பு, மஞ்சள்

Simha:        சிவப்பு, மஞ்சள், Safron, வெள்ளை

 கன்னி:       ரெட் கிராஸ் பச்சை, சாம்பல்

 துலாம்:      வெள்ளை, பச்சை, கருப்பு

Vrischika :   சிவப்பு, மஞ்சள், Safron

தனுசு          சிவப்பு, மஞ்சள், Safron, வெண்கல

மகர:            ப்ளூ, பச்சை, மஞ்சள்

 கும்பம்:       ப்ளூ, பச்சை, மஞ்சள்

மீனம் :        சிவப்பு, மஞ்சள், Safron, வெண்கல

03 November 2014

Shukla paksha and krishna paksha

The Paksha is based on the cycle of the moon: 
The first 15 days when the moon is waxing which is the bright fortnight is called the Shukla paksha. The 15 days when the moon is waning, the dark fortnight is called the Krishna paksha. 

Generally the Shukla paksha is more auspicious for certain things. In the Chandi, the Goddess specifies that the 8th, 9th, and 14th days are the most auspicious for listening to or reciting her glories. This could be either paksha. The 4th day is auspicious for Ganesha. The 11th day is auspicious for Vishnu, called ekadashi. The 14th is auspicious for Shiva and the night of no moon called Amavasya is auspicious for Kali. And of course there is the full moon or Purnima. 

The Ayana is based on the cycle of Sun: 
Uttarayana is the period covering the north-ward journey of the sun i.e. north ward passage and it consists of winter, spring, and summer. It is the period from winter solistice to summer solstice. The period starts from Sun's entry in to Capricornus ( Sayana Makara) on December 21. 
Six months of Uttarayana of ours is the day time for Devas. 
So Uttarayana is more auspicious than Dakshanayana, 

Dakshanayana :- It is the period from Summer solstice to winter solstice i.e. south ward passage of the sun and it consists of Rains, Autumn , and Hemanta . the period starts from Sun's entry in to cancer ( Sayana Karkata) on June 21. At summer solstice day , the day is longest and at winter solostice , the day is shortest for observers in the northern hemisphere. 
Six months of Uttarayana of ours is the Night time for Devas. 
( Our one year is one day for Devas) 

The Hindu calendar is a combined lunar and solar calendar. It is based on the position of both sun and moon. When referring to the lunar cycle we refer to tithi and paksha, but when referring to the solar cycle we talk in terms of sankranti and gate. Festivals and other religious occasions are based both on the solar and the lunar cycles.

Source(s):

http://www.indiadivine.org/audarya/devi-... 
http://www.srimadbhagwatgeeta.com/chapte...

ஜீவநாடி

ஓலைச் சுவடி

ஜீவ நாடி என்றால் என்ன?

ஜீவன் என்றால் உயிர். ஜீவிதம் என்றால் வாழ்க்கை. எனவே ஒரு மனிதனின் வாழ்க்கைச் சிக்கல்களுக்கு உடனடித் தீர்வை வழங்குவதுதான் ஜீவநாடியின் சிறப்பு. மற்ற நாடிகளில், ஓலைச்சுவடியில் எழுத்துக்கள் முன்னரே எழுதப்பட்டிருக்கும். ஆனால் ஜீவநாடியில், ஒரு மனிதனின் சிக்கல்களுக்குத் தகுந்தவாறு எழுத்துக்கள் தோன்றித் தோன்றி மறையும். அதுவும் ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு வகையான அமைப்பில் காணப்படும். இதுவே ஜீவநாடியின் சிறப்பு மற்றும் தனித்தன்மையாகும். மேலும் இதனைக் காண மற்ற நாடிகளைப் போன்று விரல் ரேகையையோ, பிற விவரங்களையோ அளிக்கத் தேவையில்லை. நாம் ஜோதிடரிடம் போய் அமர்ந்து கொண்டால் போதும். கேள்விகள் கூட கேட்காமல், தாமே நமக்குத் தேவையான விவரங்களைத் தரும் நாடிகளும் இருந்திருக்கின்றன.

“இந்த ஜீவ நாடியைக் கைவசம் வைத்திர்ப்பவர்கள் மிகவும் ஒழுக்கசீலர்களாகவும், தினமும் இறைவழிபாடு செய்கிறவர்களாகவும், பக்தி மிகுந்தவர்களாகவும், மிகுந்த சுத்தத்துடன் நடந்து கொள்பவர்களாகவும் இருக்க வேண்டும். பொன், பொருள், புகழ், பணம் போன்றவற்றிற்கு ஆசைப்படாதவர்களாகவும் இருக்க வேண்டும். சேவை மனப்பான்மையுடன் தொழிலைச் செய்து வர வேண்டுமே தவிர மற்ற ஆசைகளுக்கு இடம் தரக் கூடாது. அவ்வாறு அவர்கள் முறை தவறி நடந்து கொண்டால் நாடி பலிக்காது, நாளடைவில் பலன்கள் தவறாகிச் செயலிழந்து விடும்” என்பது நாடி ஜோதிடர்களின் கூற்று.

தனக்குக் கிடைத்த அகத்தியர் ஜீவ நாடியின் மூலம் லட்சக் கணக்கானோருக்கு ஏடு படித்து, அவர்கள் வாழ்க்கை முன்னேற்றக் காரணமாக இருந்தவர் ஹநுமத்தாஸன். சாதாரண மனிதர் முதல், அன்றைய, இன்றைய பிரபல அரசியல்வாதிகள், நடிகர்கள், தொழிலதிபர்கள் என பலரும் ஹநுமத்தாஸனின் ஜீவநாடி மூலம் பலன் பெற்றனர். தமிழ்நாடு முழுவதிலிருந்தும் ஏன், உலகின் பல பகுதிகளிலிருந்தும் வந்து அவரிடம் ஜீவ நாடி படித்துப் பலன் பெற்றனர் பலர். 

 

 ஹனுமத்தாஸனைப் போலவே தன்னை அதிகம் வெளிக்காட்டிக் கொள்ளாது, ஜோதிடத்தை ஒரு சேவையாக எண்ணிச் செய்து வருபவர் திரு கணேசன். இவரிடம் இருப்பதும் அகத்தியர் ஜீவநாடிதான். பல ஆண்டுகளாக இவர் தன்னிடம் இருக்கும் ஜீவநாடி மூலம் பலன் சொல்லி வருகிறார். உலகெங்கிலுமிருந்தும் பலர் இவரிடம் நாடி பார்க்க வருகின்றனர். பிரபல நடிகர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் என பலர் இவரிடம் வந்து ஆலோசனை பெற்றுச் சென்றுள்ளனர்.

இதற்காக இவர் ”கட்டணம் இவ்வளவு கொடு” என்று கேட்டு வாங்குவதில்லை. கொடுப்பதைப் பெற்றுக் கொள்கிறார். அவ்வாறு வரும் பணத்தையும் நாடியில் வரும் கட்டளைப்படி அன்னதானத்திற்கும், தீப வழிபாட்டிற்கும், யாகங்கள் போன்றவற்றிற்கும் பயன்படுத்தி வருகிறார். ஒரு ஆன்மீக சேவையாகவே எண்ணி இதைச் செய்து வருகிறார்.

 

இவருடைய முகவரி

Mr. J.Ganesan

Siddhar Arut Kudil

No. 33/56,2nd street

co-operative colony

opp. co-operative bus stop

Thanjavur-7

 தொடர்பு எண் : 9443421627

பெரும்பாலான நேரங்கள் அவர் நாடி படித்துக் கொண்டிருப்பதாலும், பூஜை செய்து கொண்டிருப்பதாலும் செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்ட நிலையிலேயே இருக்கும். அவருக்கு உங்கள் பெயர் விவரங்களை அளித்து எஸ்.எம்.எஸ் அனுப்பினால் பின்னர் அவரே உங்களைத் தொடர்பு கொள்வார்.

 

இதில் முக்கியமான விஷயம். இது சாதாரண நாடிகளைப் போன்றதல்ல. ஜீவநாடி. ஆகவே ஆன்மீகம், ஞானம், சித்த யோகம் சம்பந்தமான சந்தேகங்களுக்கு, கேள்விகளுக்கு மிகத் தெளிவான பதில்கள் கிடைக்கும். வாழ்க்கைப் பிரச்சனைகளுக்கும் தகுந்த ஆலோசனைகள் கூறப்படுகின்றன.

சித்தர் அருட் குடிலுக்குச் செல்லும் வழி :  தஞ்சை புதிய பேருந்து நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலையத்திற்குச் செல்ல வேண்டும். வழியில் பழைய ஹவுஸிங் யூனிட் பஸ் ஸ்டாப்பில் இறங்கி அங்கிருந்து ஒரு ஆட்டோ பிடித்து அருட் குடிலுக்குச் செல்லலாம்.

 மற்றொரு வழி :  பழைய பேருந்து நிலையத்தில் இருந்து K74 அல்லது B6A ஆகிய பேருந்துகளில் ஏறி கோ-ஆபரேடிவ் காலனி பஸ் ஸ்டாப்பில் இறங்கினால் அருகிலேயே குடில் பார்வைக்குக் கிடைக்கும்.

முக்கியமான விஷயங்கள்:

 அது ’அகத்தியர் அருட் குடில்’ என்பதால் அதற்கேற்றவாறு மனம், உடல் சுத்தத்துடனும் பக்தியுடனும் செல்வது நல்லது.

 பாத்திரத்துக்கேற்றவாறு நீர் நிரம்பும் என்பது போல பார்ப்பவர்களின் ஆன்ம பலத்துக்கேற்ப நல்ல, விரிவான பலன்கள், வழிகள் கிடைக்கும்.

 சித்தர்கள் கூறும் ஆலோசனைப் படி நடந்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

சித்தர்கள் திருவடிக்கே சரணம்

சுகர் ஜீவநாடி

மார்ச்27, 201223 பின்னூட்டங்கள்

சுகர் ஜீவநாடி

suka brhamam

சுகப் ப்ரம்ம மஹரிஷியைப் பற்றி பலரும் அறிந்திருக்கக் கூடும். கிளி போன்ற முகம் உடைய இம்மகரிஷி சதா ப்ரம்மத்தோடு ஒன்றிய நிலையில் இருந்ததால் சுக ப்ரம்ம மஹரிஷி என்று அழைக்கப்பட்டார். இவர் மஹாபாரதத்தை உலகுக்குத் தந்த வேத வியாசரின் புதல்வர். ”சுக முனிவர்” என்ற பெயரும் இவருக்கு உண்டு. இவர் அருளியதுதான் ”ஸ்ரீமத் பாகவதம்.” என்றும் பதினாறு வரம் பெற்ற மார்க்கண்டேயன் இவரது சீடன். இவரது மற்றொரு சீடர் கௌடபாதர். அவரது சீடர் கோவிந்த பகவத் பாதர். அவரது நேர் சீடர்தான் ஆதி சங்கரர். இதிலிருந்து சுக முனிவரின் பெருமையை உணர்ந்து கொள்ளலாம்.

இவரது காயத்ரி மந்திரம்

ஓம் வேதாத்மஹாய வித்மஹே

வியாச புத்ராய தீமஹி;

தந்நோ சுகர் ப்ரசோதயாத்!

 

மானுட குலம் உய்ய அவதரித்த இந்த மகான் இன்றும் மானுட சேவை செய்து வருகிறார் தமது ஜீவ நாடி மூலம். இந்நாடி மூலம் பலன்கள் கூறி வருகிறார் ஸ்ரீ குமார் குருஜி. இவரிடம் உள்ள நாடியின் பெயர் ”சுகர் மார்க்கண்டேய நாடி”  திரைப்பட மற்றும் நாடக நடிகர் எஸ்.வி. சேகர் உட்படப் பல புகழ் பெற்ற மனிதர்களுக்கு ஸ்ரீ சுக ப்ரம்ம மகரிஷிதான் குரு. ஆன்மீக வழிகாட்டி.

சுக முனிவர்

இந்த ஆசிரமம் மக்களுக்கு சோதிடப் பலன்களை மட்டுமல்லாது, தேவையான மருத்துவ ஆலோசனைகளையும் வழங்கி, ஏழை எளியோர்களுக்கு உதவி வருகிறது. மற்றும் பல்வேறு அறப்பணிகளையும், ஆன்மீக, ஆலயப் பணிகளையும் ‘சுகர் மார்க்கண்டேயன் அறக்கட்டளை’ என்ற பெயரில் செய்து வருகின்றது.

இங்கு மற்ற நாடிகளைப் போல விரல் ரேகை, பெயர் போன்ற விபரங்களைக் கொடுக்கத் தேவையில்லை. மாறாக இந்த இந்த இராசிக்குரியவர்கள், இன்னின்ன கிழமைகளில் வந்து சுவடி பார்க்கவேண்டும் என்று வரைமுறை உள்ளது. அம்முறைபடிச் சென்று நாடி பார்த்தால் அவரவர்களுக்குரிய பலா பலன்கள் தெரியவரும். பலன்களும் மிகத் துல்லியமாக இருப்பதாக நாடி பார்த்தவர்கள் கூறுகின்றனர்.

நாடி பார்க்கும் முறை

குறிப்பிட்ட கிழமையில் நாடி பார்க்க வருபவர்களிடம் முதலில் அமைதியாக இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்படுகிறது. பின்னர் இறைவழிபாடு நடக்கிறது. அதன் பின்னர் ஸ்ரீ குமார் குருஜியால் நாடி வாசிக்கப்படுகின்றது. அது பாடல் வடிவில் அமைகின்றது. பின்னர் பலன்கள் கூறப்படுகின்றன. நாடி வருவோரிடம் எந்தக் கேள்வியும் கேட்கப்படுவதில்லை. என்ன தேவையோ, என்ன சிக்கலோ அது பற்றி நாடியில் விரிவாகவும் விளக்கமாகவும் வருகின்றது. அதற்கான பரிகார முறைகளும் கூறப்படுகின்றன. அனைத்தும் சரியாகவே இருக்கின்றன.

ஸ்ரீ குமார் குருஜி இதனை ஒரு இறைப்பணியாகத் தான் செய்து வருகின்றார். இவருக்கு இந்த ஓலைச்சுவடிகள் இவருடைய குருவான ஸ்ரீ ஜெயகாந்தி நாயுடு மூலம் கிடைத்துள்ளன. ஜெயகாந்தி நாயுடு கடலூருக்கு அருகே உள்ள திருப்பாதிரிப்புலியூரைச் சேர்ந்ததான ‘தொட்டிப்பதி” என்னும் ஊரைச் சேர்ந்தவர். விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். இயற்பெயர் ராமசாமி. இவருக்குப் பரம்பரைச் சொத்தாக உமாமகேசனார் ஏடுகளும், சுகர் மகரிஷி ஏடுகளும் கிடைத்தன. இறை அருளால் அவரும் மக்களுக்கு அதனை வாசித்து நல்வழி காட்டி வந்தார். பின்னர் ஸ்ரீ குமாரைத் தமது சீடராக ஏற்றுக் கொண்ட ஜெயகாந்தி நாயுடு, அவருக்கு ”ஸ்ரீ விஜயப் பிரம்ம ஸ்ரீகாந்தி” என்ற பட்டத்தைச் சூட்டினார். நாயுடுவின் மறைவுக்குப் பின் ஸ்ரீ குமார் குருஜி தமது குரு வழியில் இப்பணியைச் செவ்வனே செய்து வருகின்றார். தற்பொழுது தொட்டிப்பதி என்னும் சிற்றூரில் சுகர் மகரிஷி மற்றும் முருகனுக்குக் கோயில் எழுப்பி கும்பாபிஷேகமும் செய்துள்ளனர். ஆஸ்திரேலியாவிலும் இவர்கள் ஆசிரமத்திற்குக் கிளை உள்ளது.

ஸ்ரீ தன்வந்த்ரி விழா, சுகப்பிரம்ம மகரிஷி மகா ஜெயந்தி விழா போன்றவை ஆண்டு தோறும் இங்கு மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இவர்களது ஆஸ்ரமம் தி.நகரில் அமைந்துள்ளது.

*****

Share this:

StumbleUponRedditFacebook27TwitterEmailPrint

காகபுஜண்டர் ஜீவநாடி

பிப்ரவரி20, 201214 பின்னூட்டங்கள்

காகபுஜண்டர் ஜீவநாடி

ஸ்ரீ காகபுஜண்டர் - ஸ்ரீ பஹூளா தேவி

ஜீவநாடியில் குறிப்பிடத்தகுந்ததாக விளங்குவது காகபுஜண்டர் ஜீவநாடி. இந்த நாடி மூலம் நாடி பார்த்துப் பலன்கள் கூறி வருபவர் ரமணி குருஜி. ‘சக்தி அருட்கூடம்’ என்ற பெயரில் இயங்கி வரும் இவரது ஆசிரமம் சென்னை தாம்பரம் அருகில் உள்ள சேலையூரில், மிகவும் அமைதியான சூழலில் அமைந்துள்ளது.

நாடி பார்க்கும் முறை

இங்கு மற்ற நாடிகளைப் போல் கட்டணம் எதுவும் வசூலிப்பதில்லை. விரல் ரேகை எடுக்கப்படுவதில்லை. பெயர் போன்ற விவரங்கள் கேட்கப்படுவதில்லை. அனைவரையும் உட்கார வைத்துப் பொதுவில் நாடி படிக்கப்படுகின்றது. பலன்கள் அனைத்தும் ஓலைச்சுவடியிலிருந்து பாடலாகவே படிக்கப்படுகின்றது. தினமும், மாலை நேரத்தில், ஏழு மணிக்கு மேல், இறை வழிபாட்டை முடித்து விட்டுப் பலன் கூறத் தொடங்குகிறார் ரமணி குருஜி.

ஸ்ரீ ரமணி குருஜி

குறிப்பாக ஒவ்வொரு நாளிலும் ரமணி குருஜி இரவு ஏழு மணி அளவில் தமது இடத்தில் அமர்கின்றார். பின்னர் சோழிகளை எடுத்துக் குலுக்கிப் போடுகின்றார். அதில் விழுந்திருக்கும் சோழிகளின் தன்மைக்கேற்ப ஓலைக்கட்டிலிருந்து குறிப்பிட்ட ஓலையைத் தேர்ந்தெடுக்கின்றார். பின்னர் சுவடியைப் படிக்க ஆரம்பிக்கின்றார். அங்குள்ள ஒலிபெருக்கியில் அவர் அவற்றைப் பாடல்களாகப் பாடுகின்றார். அவை ஒலிப்பதிவுக் கருவியில் பதிவு செய்யப்படுகின்றன. ஒலிபெருக்கியில் அவர் பாடல்களைப் பாடப் பாடத் தேவையானவர்கள் ஒலிப்பதிவுக் கருவி மூலம் அவற்றைப் பதிவு செய்து கொள்கின்றனர். ஏனெனில் அவர் பாடலுக்கு விளக்கம் எதுவும் கூறுவதில்லை. பதிவு செய்து வைத்து கொண்டு பின்னர் சந்தேகம் கேட்டால் ஆலோசனை வழங்குகிறார். பாடல்கள் அனைத்தும் பழங்கால வடிவில் விருத்தம் போன்று உள்ளது. நாடி பார்க்க வந்திருக்கும் நபர்களின் பெயர் போன்ற விவரங்கள் மற்ற நாடிகளைப் போல வெளிப்படையாக வருவதில்லை. ஆனால் தனிநபரின் பெயர்களும், வாழ்க்கைச் நிகழ்வுகளும், பாடல் வடிவில், யாருமே எளிதில் கேட்டு உடனே புரிந்து கொள்ளாத வண்ணம் பாடல்களாக வருகின்றன. குறிப்பாக உணர்த்தப்பெறும் இவற்றை நன்கு கவனித்துப் பொருள் கொள்ள வேண்டியது தேவையாகின்றது.

நாடி பார்க்க வந்து தம்மிடம் குறைகளைக் கூறுபவர்களுக்கு ரமணி குருஜி சோழிகளைக் குலுக்கிப் போட்டு பலன்கள் மற்றும் பரிகாரங்களைக் கூறிவருகிறார். அவருக்கு உதவியாக அவரது மகன் இருக்கிறார்.

சித்தர்களில் சிறந்த ஒருவராகக் கருதப்படுபவர் காகபுஜண்டர். இவரது பெருமையினை ‘ஞான வாசிட்டம்’ என்னும் நூல் மூலம் அறியலாம். பெரிய காகத்தினைப் போன்ற உருவம் கொண்டவராதலால் அவர் இப்பெயரில் அழைக்கப்படுகிறார் எனக்கூறுகின்றனர்.

ஸ்ரீ புஜண்ட மஹர்ஷி

ஒருமுறை, ரமணி குருஜி, 1962-ம் ஆண்டில் கங்கைக்கு நீராடச் சென்றிருக்கிறார். அங்கு ஒரு மகானால் ஆசிர்வதிக்கப்பெற்ற அவர், அம்மகானிடம் குரு உபதேசம் பெற்றிருக்கிறார். மேலும் அவரிடம் சோதிடக் கலையையும் பயின்றிருக்கிறார். கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பின்னர் அம்மகான் தம்மிடம் உள்ள ஓலைச்சுவடிகளை ரமணியிடம் தந்து ஆசிர்வதித்து, மக்கள் சேவை செய்ய உத்தரவிட்டுள்ளார். அதன்படியே மக்களுக்குப் பல வழிகளிலும் இதுகாறும் உதவி வருகிறார் ரமணி. ஜெர்மனி, ஜப்பான் போன்ற பல வெளிநாட்டைச் சேர்ந்த அன்பர்களும் இவரது ஆன்மீகப் பணிக்கு உறுதுணையாக உள்ளனர்.

காகபுஜண்டருக்கென்று தனியாகக் கோயில் எழுப்பியுள்ள அவர் ஆண்டு தோறும், பங்குனி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் அதன் அருள் விழாவினைச் மிகச் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றார்.

ரமணி இதனை ஒரு சேவையாகத் தான் செய்து வருகின்றார். யாரிடமும் பணம் எதுவும் அவர் வாங்குவதில்லை. மேலும் அவர் சுவடியைப் படித்துப் பலன் கூறும் இடம் ஓர் ஆலயம் போல் விளங்குவதால், அங்கு செல்பவர்கள் மிகவும் சுத்தமாகச் செல்ல வேண்டியது அவசியம்.

ஆலய முகவரி:

Om Sakthi Arutkudam

18 Alamelupuram,

Selaiyur,

E. Tambaram,

Chennai 600 072

மேலும் விவரங்களுக்கு…