For Read Your Language click Translate

14 June 2014

நமது பாரதத்தின் இன்னும் இரு பெருமைகள்



 



டாக்கா நகர் மஸ்லீம் துணிகள் உலகப்புகழ் பெற்றவை என நாம் பள்ளிப்பாடத்தில் படித்திருப்போம்.
அவ்வளவுதான்.அதென்ன உலகப்புகழ்? எனப்பார்த்தால் அந்த மஸ்லீம் துணி பெரும்பாலும் பெண்கள் அணியும் சேலைதான்.அந்த சேலையை ஒரு தீப்பெட்டிக்குள் அடக்கிவிடலாம்.

தீப்பெட்டி அக்காலத்தில் எவ்வளவு சிறியதாக அல்லது பெரியதாக இருந்தது எனத் தெரியாது நமக்கு.ஆனால் அந்த சேலைகளானது அவ்வளவு மெல்லிசானது என நம்மில் சிலர் கேள்விப்பட்டிருப்போம்.
வியாபாரம் செய்ய வந்த கிறிஸ்தவ ஆங்கிலேயனுக்கு இந்த சேலையின் தரம் எரிச்சலைத் தந்தது. பார்த்தான். இந்த சேலை நெய்பவர்களின் விரல்களை வெட்டிவிட்டான்.
மஸ்லீம் துணிகளுக்கான உலகச்சந்தையை இங்கிலாந்து கைப்பற்றி விட்டது.

இதே போல களரி என்ற வீரக்கலை சேரநாடு எனப் போற்றப்படும் கேரளத்தில் இருந்தது.மிகவும் உன்னதமான கலையாகும்.
எப்படி நம் தமிழ்நாட்டில் சிலம்பம் ஒரு வீரக்கலையோ அந்தளவுக்கு களரி இருந்தது.
களரி பயில 7 வயதில் குரு குலத்தில் சேரவேண்டும். 22 வயதில் தலைசிறந்த களரி ஆசானாக முடியும்.
சுதந்திரத்துக்கு முன்பு, ஒரு ஆங்கிலேயத் தளபதி இதைப் பற்றி அறிய விரும்பினான். அவன் ஒரு களரி குருகுலத்துக்கு வந்தான்.
ஒரு பெரிய மைதானத்தில் வட்டமாக 300 இளைஞர்கள் குனிந்தவாறு நிறுத்தப்பட்டனர். களரி ஆசான் தனது குறுவாளின் முனையில் சுண்ணாம்பைத் தடவி, எம்பிக் குதித்தார். சில விநாடிகளில் 300 பேர்களின் முதுகையும் தனது குறுவாளால் லேசாக தொட்டுவிட்டு தனது இடத்தில் இறங்கினார்.
ஆங்கிலேயத் தளபதி அந்த 300 இளைஞர்களின் முதுகையும் பார்த்தான்.எல்லோரது முதுகிலும் சுண்ணாம்பு முதுகின் மையத்தில் சிறிது பதிந்திருந்தது.
அந்த கிறிஸ்தவ ஆங்கிலேயத் தளபதி களரி ஆசான்கள் அனைவரையும் சுட்டுக் கொன்றான்.நாம் மானங்கெட்டுப்போய் காமன்வெல்த் அமைப்பில் உறுப்பினராக இருக்கிறோம்.

எவையெல்லாம் நமது பெருமைகளோ அவைகளை கிறிஸ்தவ ஆங்கிலேயன் அழித்தான்.எவற்றையெல்லாம் அழிக்க முடியாதோ அவற்றை நாமும் நமது சந்ததியினரும் படிக்க முடியாமல் தடுத்தான். பெருமையும் சிறப்பான வாழ்வும் தரும் நமது பாரம்பரிய வேர்களை இழந்தோம். எதற்கெடுத்தாலும் பயப்படுகிறோம்.
இதை எப்போது நாம் மாற்றப்போகிறோம்?

No comments:

Post a Comment