For Read Your Language click Translate

09 May 2014

ஆண்,பெண்க்கான மச்ச சாஸ்திரம்

மச்ச சாஸ்திரம் உடலில் மச்சங்கள் தோன்றும் இடங்களின் அடிப்படையில் பலன்களை சொல்லி இருக்கிறார்கள். இது காலம்காலமாக நடைமுறையில் இருக்கும் சாஸ்திரம். பெரும்பாலான பலன்கள் ஒத்துப்போவதை நடைமுறையில் காண்கிறோம்.. பிறக்கும்போதே மச்சம் இருக்கும். நடுவே... தோன்றுவதும் உண்டு. ஆனால் இது அபூர்வமான அமைப்பாகும். இந்த மச்சங்கள் சிலருக்கு ஆரம்ப காலத்தில் இருந்தே நற்பலன்களை கொடுக்கும். இந்த பலன்கள் ஆண், பெண் என்று தனித்தனியாக வெவ்வேறு யோகங்கள் தரவல்லது. ஆண்களுக்கான மச்ச பலன் புருவங்களுக்கு மத்தியில் இருந்தால் நீண்ட ஆயுள்நெற்றியின் வலது புறம் இருந்தால் தனயோகம் வலது புருவம் இருந்தால் மனைவியால் யோகம் வலது பொட்டு (நெற்றி) இருந்தால் திடீர் அதிர்ஷ்டம் வலது கண் இருந்தால் நண்பர்களால் உயர்வு வலது கண் வெண்படலம் இருந்தால் புகழ், ஆன்மீக நாட்டம் இடது புருவம் இருந்தால் ஏற்ற, இறக்கம், செலவாளி மூக்கின் மேல் இருந்தால் சுகபோக வாழ்க்கை மூக்கின் வலதுபுறம் இருந்தால் நினைத்ததை அடையும் அம்சம் மூக்கின் இடதுபுறம் இருந்தால் கூடா நட்பு, பெண்களால் அவமானம் மூக்கின் நுனி இருந்தால் ஆவணம், கர்வம், பொறாமை மேல், கீழ் உதடுகள் இருந்தால் அலட்சியம், காதல் வயப்படுதல் மேவாய் (உதடுகளுக்கு மேல்) இருந்தால் செல்வாக்கு, இசை, கலைத்துறையில் நாட்டம் வலது கன்னம் இருந்தால் வசீகரம், தயாள குணம் இடது கன்னம் இருந்தால் ஏற்றத்தாழ்வு வலது காது நுனி இருந்தால் சில கண்டங்கள் வரலாம் இடது காது நுனி இருந்தால் தகாத சேர்க்கை, அவமானம் காதுகளின் உள்ளே இருந்தால் பேச்சாற்றல், திடீர் யோகம் தொண்டை இருந்தால் திருமணத்துக்கு பிறகு யோகம் கழுத்தின் வலதுபுறம் இருந்தால் சொத்து சேர்க்கை, ஆடம்பர வாழ்க்கை இடது மார்பு இருந்தால் ஆண் குழந்தைகள் அதிகம், பெண்களால் விரும்பப்படுவார் வலது மார்பு இருந்தால் பெண் குழந்தை அதிகம், அன்பு மிகுந்தவர் வயிறு இருந்தால் பொறாமை குணம், தகுதிக்கு மீறிய ஆசை அடிவயிறு இருந்தால் திடீர் அதிர்ஷ்டம், பெண்களால் யோகம், அதிகார, ஆடம்பர வாழ்க்கை புட்டம் இருந்தால் அந்தஸ்து உயரும், செல்வச் செழிப்பு பெண்களுக்கான மச்ச பலன் நெற்றி நடுவே இருந்தால் புகழ், பதவி, அந்தஸ்து நெற்றி வலதுபுறம் இருந்தால் தைரியம், பணிவு இல்லாத போக்கு நெற்றி இடதுபுறம் இருந்தால் அற்ப குணம், டென்ஷன், முன்கோபி மூக்கின் மேல் இருந்தால் செயல்திறன், பொறுமைசாலி மூக்கின் இடதுபுறம் & கூடா நட்பு, பெண்களால் அவமானம் மூக்கின் நுனி இருந்தால் வசதியான வாழக்கை, திடீர் ஏற்றங்கள் மேல், கீழ் உதடுகள் இருந்தால் ஒழுக்கம், உயர்ந்த குணம் மேல் வாய் பகுதி இருந்தால் அமைதி, அன்பான கணவர் இடது கன்னம் இருந்தால் வசீகரம், விரும்பியதை அடையும் போக்கு வலது கன்னம் இருந்தால் படபடப்பு, ஏற்ற, இறக்கமான நிலை வலது கழுத்து இருந்தால் பிள்ளைகளால் யோகம் நாக்கு இருந்தால் வாக்கு பலிதம், கலைஞானம் கண்கள் இருந்தால் கஷ்ட நஷ்டம், ஏற்றம், இறக்கம் இடது தோள் இருந்தால் சொத்து சேர்க்கை, தயாள குணம் தலை இருந்தால் பேராசை, பொறாமை குணம் தொப்புளுக்கு மேல் இருந்தால் யோகமான வாழ்க்கை தொப்புளுக்கு கீழ் இருந்தால் மன அமைதியின்மை, பொருள் நஷ்டம் தொப்புள் இருந்தால் ஆடம்பரம், படாடோபம் வயிறு இருந்தால் நல்ல குணம், நிறைவான வாழ்க்கை அடிவயிறு இருந்தால் ராஜயோக அம்சம், உயர்பதவிகள் இடது தொடை இருந்தால் தடுமாற்றம், ஏற்ற இறக்கங்கள் வலது தொடை இருந்தால் ஆணவம், எடுத்தெறிந்து பேசுதல், தற்பெருமை புட்டங்கள் இருந்தால் சுகபோக வாழ்க்கை, எதையும் சாதிக்கும் வல்லமை

No comments:

Post a Comment