For Read Your Language click Translate

10 May 2014

கண் பாதுகாப்பு





கண் பாதுகாப்பு



நம் முன்னோர்கள் கண்ணுக்கு அதிக முக்கியத்துவத்தை எப்போதும் கொடுத்து வந்ததுள்ளார்கள் . கண்ணோ பொன்னோ என்பார்கள் .ஐம்பொறிகளில் கண்ணுக்குள்ள முக்கியத்துவம் அதிகம்.காது குத்துவதும் கண்ணுக்கு சக்தியளிக்கவேயாகும்.காதில் தோடணிய குத்தும் இடம் கண்ணுக்கு சிகிச்சை அளிக்க என்றுள்ள  புள்ளியாகும்.


auriculo theraphy 1auriculo theraphy  2auriculo theraphy  3கரிசலாங்கண்ணிக்கும் , பொன்னாங்கண்ணிக்கும்  ,வாங்கி உபயோகிக்க சோழர்கள்  ஆட்சிக்காலத்தில் கண்ணிக்காணம் என்று  வரி விதித்து உள்ளார்கள் . அதையும் நம் தென்னாட்டார் வரியாக செலுத்திய பின்னர் உபயோகித்து உள்ளார்கள்.நமக்கு தற்போது அவை வரியில்லாமல் இலவசமாக நமக்குக் கிடைத்தாலும் நாம் உபயோகிக்க தயாராக இல்லை.


இது குறித்து ஏற்கெனவே நாம் எழுதியுள்ள பதிவுகளையும் பாருங்கள் .


http://machamuni.blogspot.in/2010/09/blog-post_06.html


http://machamuni.blogspot.in/2010/10/blog-post_17.html


கண்ணுக்கு கரிசலாங்கண்ணி , பொன்னாங்கண்ணி ,இவைகளின் சாறுகள் சேர்ந்த எண்ணெய்களை தலையில் தேய்த்து வருவதால் தலை சூடு குறைவதால், விளைவாக  கண்ணில் சூடு குறைவதால்   கண் புகைச்சலில்லாமல்  , கண்ணெரிச்சலில்லாமல் ,  கண்ணில் சூடு குறைவதால்  கண்களின் செயல்பாடு நன்றாக இருக்கும்.கண்ணிளுள்ள குறைபாடுகள் களையப்படுகின்றன . கிட்டப் பார்வை , தூரப்பார்வை போன்ற குறைபாடுகள் களையப்படுகின்றன. கண்களுக்கு தேவையான அத்தியாவசிய உயிச் சத்துக்கள் நிறைந்துள்ளன.இதன் குளிர்ச்சி வெட்டைச்  சூட்டையும் தணிக்கும். இதனால் கைகால் வலிகளும்  தணிக்கப்படுகிறது.


கரிசலாங்கண்ணி(கரசனாங்கண்ணி )


குரற்கம்மல் காமாலை குட்டமோடு சோபை


யுரற்பாண்டு பன்னோ பொழியு – நிரற்சொன்ன


மெய்யாந் தகரையொத்த மீளி யண்ணு நற்புலத்துக்


கையாந் தகரையொத்தக் கால்


( பதார்த்த குண விளக்கம் )


குணம்:-கையாந்தகரையால் தொண்டைக்கம்மல் , காமாலை , குட்டம் , வீக்கம், பாண்டு , தந்த ரோகம் இவை போம் . தேகத்திற்கு  பொற்சாயலும்  , யாளிககுச் சமமான பலம் உண்டாகும் என்க .


செய்கை:-கையாந்தகரை பித்தகாரி, மலகாரி


உபயோகிக்கும் முறை:- கையாந்தகரை என்ற கரிசனாங் கண்ணி இலையை சிறிது மிளகுடன் கூட்டியரைத்து தினம் இரு வேளை சுண்டைக்காய் பிரமாணம் சாப்பிட்டு வருக.


அல்லது அவ்வுருண்டைகளை ஒரு கோப்பையில் போட்டு மூழ்க தென் விட்டு தினம் ரவியில் (சூரிய ஒளியில் ) வைத்துக் கொண்டு வேண்டும் போது வேளைக்கு ஒரு உருண்டை வீதம் சாப்பிட்டு வருக!இவற்றால் மஞ்சள் காமாலை , பாண்டு ( இரத்தக் குறைவால் உடல் வெளுத்து ஈரல் வீக்கமடைந்து காணும் நிலை ) , சோபை  (உடலில் தேவையில்லாது ஏற்படும் வீக்கத்தால் ஏற்படும் தோல் பளபளப்பு ) தீரும் .


கரிசனாங் கண்ணி இலையை சிறிது மிளகுடன் கூட்டியரைத்து ஒரு சுண்டைக்காய்  பிரமாணம் உள்ள கற்கத்தை மோரில் கலக்கிச் சாப்பிடலாம் .


அல்லது கரிசனாங் கண்ணி இலையை அரைத்து பிழிந்தெடுத்த சாற்றில்  ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி விதம் மோரில்லாகிலும் பாலிலாகிலும் கலக்கிச் சாப்பிடலாம் . இதனால் முற்கூறப்பட்ட ரோகங்கள் தீரும் இதனை  தைலத்தில் கூட்டிச் செய்வதுமுண்டு .


கரிசனாங் கண்ணித் தைலம்


கரிசனாங் கண்ணிச்சாறு ,  நல்லெண்ணெய் வகைக்குபடிஒன்று ,குமரிச்சாறு  ( சோற்றுக் கற்றாளைச்சாறு ) நெல்லிக்காய்ச் சாறு வகைக்குப்படி காலாக இத்திரவங்களை தைல பாத்திரத்தில் விட்டு அதில் கஸ்தூரி மஞ்சள் ,  ஜாதிக்காய் வகைக்கு பலம் ( 35  கிராம் ) ஒன்றாக தட்டைஅம்மியில் இட்டுபசுவின் பால் விட்டு வெண்ணெய் போல்அரைத்துப் போட்டு கலக்கி பதமுற காய்ச்சி வடித்து சீசாவில் அடைத்து பத்து – பதினைந்து தினத்துக்கு கேழ்வரகு அல்லது நெல் முதலிய தானியத்துள் வைத்தெடுத்து ( இதை தானிய புடம் என்பார்கள் ,இதைப் போலவே கோயில் விக்கிரகங்களையும் சக்தி ஏற்ற தானியத்துள் வைத்தெடுப்பார்கள் ) வாரத்திற்கு ஒரு முறை ஸ்நானம் செய்து வர கண்நோய்  , தலைவலி ,  செவி நோய் (காது நோய்கள் )  பித்த கிறு கிறுப்பு , தேக வெப்பு , பீனிசம் ,  முதலிய  ரோகங்கள் போகும் .


மேற்படி கரிசனாங் கண்ணித் தைலத்தைவிடசிறப்பானது மச்சமுனி மூலிகை கூந்தல் தைலம் .


மச்சமுனி மூலிகை கூந்தல் தைலத்தை தலைக்கு தேய்ப்பதன் விளைவாக தலை முடியின் கீழாக உள்ள  மயிர்க்கால்களில் உள்ள மயிர்ப் பிடிமானமான பொருட்கள் ( மெழுகு போன்ற பொருள் , மற்றும் எண்ணெய்ப் பொருட்கள் ) காயாமல் வைத்திருப்பதால் , முடிகள் நல்ல பிடிமானமாக இருப்பதால்  முடி உதிர்தல் குறைந்து முடி செழிப்பாக வளர்கிறது.


_mini


மச்சமுனி மூலிகை கூந்தல் தைலத்தில் வெள்ளைக் கரிசலாங்கண்ணிச் சாறு , பொற்றலைக்கையான் என்ற மஞ்சள் கரிசலாங்கண்ணிச் சாறு, சிவப்பு பொன்னாங்கண்ணிச் சாறு , பச்சைப் பொன்னாங்கண்ணிச் சாறு , ஆவாரம்பூச் சாறு , செம்பருத்திச் சாறு , சோற்றுக்கற்றாழை,அவுரி, நெல்லி, வெந்தயம், பசும்பால்,கடுக்காய், தான்றிக்காய், கறிவேப்பிலை, கீழ்க்காய்நெல்லிச் சாறு (கீழாநெல்லி என்றும் கீவாநெல்லி என்றும் அழைக்கப்படுகிறது ) போன்றவைகளும் இன்னும் பல மூலிகைச் சாறுகளும் கலந்து மணல் பருவத்தில் காய்ச்சி எடுக்கப்படுகிறது .கீழாநெல்லி குறித்து ஏற்கெனவே நாம் எழுதியுள்ள பதிவையும் பாருங்கள் .


http://www.machamuni.com/?p=904


சோற்றுக்கற்றாழை குறித்து ஏற்கெனவே நாம் எழுதியுள்ள பதிவையும் பாருங்கள் .


http://www.machamuni.com/?p=2314


http://www.machamuni.com/?p=2359


இதனால் அதீத உஷ்ணத்தினால் உண்டாகும் மஞ்சள் காமாலையை வரவிடாமல் காக்கப்படுவதோடு , சீரண சக்தியும் நல்ல நிலையில் காக்கப்படுவதோடு மேக நோய்களும் ( மது மேகம் , கரு மேகம் , வெண் மேகம் , செம்மேகம் போன்ற வியாதிகளும் , தோல் வியாதிகளும் வராமல்  காக்கிறது ) உஷ்ணரீதியான நோய்களும் வராமல் காக்கப்படுகிற து .


இந்த மச்சமுனி மூலிகை கூந்தல் தைலத்துக்கு  நீங்கள் நாட வேண்டிய மின்னஞ்சல் முகவரி


திரு அமீர் சுல்தான்.


மின்னஞ்சல்  :-



machamunimooligaiyagam@gmail.com


அலைபேசி எண் :- 9597239953








கண் பாதுகாப்பு இரவில் படுக்கைக்குப் போவதற்கு முன்பு கண்களையும், முகத்தையும் சுத்தமான தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும். எக்காரணத்திற்காகவும் அழுக்குத்துணி அல்லது பிறருடைய கண்களைத் துடைக்கப் பயன்படுத்திய துணிகளை கொண்டு நம்முடைய கண்களைத் கண்டிப்பாக துடைக்கவே கூடாது. கண்நோய் அல்லது கண் வலி, தூசு, பிசிறு போன்றவை இருந்தால் பச்சிலைச்சாறு, தாய்ப்பால் அல்லது மற்றவர் சொல்லும் கண்ட கண்ட மருந்துகள் போன்றவற்றைக் கண்களில் போடவே கூடாது. இவை அனைத்தும் கண்களைக் நாள் போகப்போக பிரச்சனையை உண்டாக்கும்.எனவே காலதாமதம் செய்யாமல் கண் மருத்துவரிடம் செல்வது மிகவும் நல்லது. கண்களுக்கு வைட்டமின் 'ஏபி' சிறந்தது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். கீழே கூறிய உணவுகளில் வைட்டமின் `ஏபி' அதிகமாக உள்ளது. முருங்கைக்கீரை, முளைக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை, அரைக்கீரை, முருங்கைக்காய் போன்ற பச்சைக் காய்கறிகள், எளிதாகக் கிடைக்கக் கூடிய பப்பாளிப் பழம் போன்றவற்றில் வைட்டமின் `ஏபி' அதிக அளவு உள்ளது. மேலும் மாம்பழம் கேரட், பால், வெண்ணெய், முட்டை, மீன், மீன் எண்ணெய் ஆகியவற்றிலும் இச்சத்து அதிகமாக உள்ளது. தெரிந்து கொள்ள வேண்டியது: 1. கண்ணிற்கும் தொண்டைக்கும் தொடர்பு உண்டு. 2. கரு விழி மற்றும் வெள்ளை முழி வெளித்தோற்றத்தில் உள்ளது. 3. கண்களில் நீர் தேக்கம் பாரமாக இருக்கும் அவை நரம்புவை பாதிக்கும். 4. கண்புரை வைட்டமின் A குறைப்பாட்டால் வரும். Posted by hayura hayu at 08:17 No comments: கண்பார்வை தெளிவடைய வேண்டுமா? பப்பாளிப் பழம் 2 துண்டு, பேரிச்சம் பழம் 4, செர்ரிபழம் 10, அன்னாசி பழம் 2 துண்டு, ஆப்பிள், திராட்சை 50 கிராம், மலை அல்லது ரஸ்தாளி வாழைப்பழம் 2, மாம்பழம் 2 பத்தை, பலாச்சுளை 2 (மாம்பழம் அல்லது பலா_ சீசனில் மட்டும் போட்டால் போதுமானது) இவற்றை சிறுதுண்டுகளாக நறுக்கி ஒரு டம்ளர் தேங்காய்ப் பால் அல்லது பசும் பாலுடன் சேர்த்துக் கலக்கி தேவையான அளவு தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வைக்கு மிகவும் நல்லது. அறுகம்புல் சாறு 50 மில்லி எடுத்து அத்துடன் ஒரு இளநீர் கலந்து தேவையான அளவு தேன் சேர்த்து தினமும் காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து சாப்பிட்டுவர கண் குறைபாடுகள் சரியாகும். பொதுவாக கல்லீரலுக்கும், கண்ணுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆதலால் கல்லீரல் நோய் வராமல் பாதுகாக்க வேண்டும். அதற்குக் கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி கீரையைத் தினமும் சாப்பிட வேண்டும். தினமும் 200 கிராம் திராட்சை சாப்பிட்டு வரலாம். கொழுப்பு உணவுகள், மசாலா உணவுகள், மாமிச உணவுகள், இவற்றைக் கூடிய வரை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு வெயிலில் சென்றாலே கண்களில் அரிப்பு, எரிச்சல் மற்றும் வறட்சி என பாடாய்படுத்தும். கோடை காலத்தில் இந்த பாதிப்புகள் மேலும் அதிகமாகும். இதற்கு முக்கிய காரணம் தலை சுத்தமாக... சுகாதாரமாக இல்லாமையே! தலையை சுத்தமாக வைத்துக் கொண்டால் கண்களை எப்போதும் தொற்றுகளில் இருந்து பாதுகாக்கலாம். அதேபோல், வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகளும் கூட கண் பாதிப்பை ஏற்படுத்தும். கோடை காலத்தில் இந்த தொற்றுகளின் வீரியம் அதிகமாகவே இருக்கும். தலையில் பொடுகு மற்றும் அழுக்கு சேராமல் பார்த்துக் கொள்ளவும். அப்படி தலை சுத்தமில்லாமல் இருக்கும் பட்சத்தில் கண் இமை, புருவம் ஆகியவற்றில் படிந்து, இமையின் அருகில் இருக்கும் சுரப்பிகளில் சீழ் பிடித்து, வெயிலில் அரிக்க ஆரம்பிக்கின்றன. ஆகையால் தலையை, முகத்தை சுத்தமாக, சுகாதாரமாக வைத்துக் கொள்ளவும். கண்வலி வந்தால் சூரிய ஒளிக்கதிர்கள் கண்ணில் படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். அதிகபட்ச ஒளியையும் பார்க்க வேண்டாம். கண்களுக்கு பொருத்தமான கண்ணாடியை போட்டுக் கொள்ளுங்கள். சிலருக்கு கண் அழுத்தத்தினால் தலைவலி உண்டாகும். இதனால் இந்த மாதிரியான நேரங்களில் கண் சிவப்பாகும். தலைவலி, பார்வைக்குறைவு ஏற்பட்டால் உடனே கண் மருத்துவரிடம் காண்பிக்கவும். ஒருவித வைரஸ் கிருமியால் ஏற்படும் இந்த கண்நோய் ஏற்பட்டவர்கள், அடிக்கடி சுத்தமான நீரில் கண்களைக் கழுவி விடவும். கண்களுக்கு மருந்திட்டு சுகாதாரமாக வைத்துக் கொள்ளவும். தினமும் காலை, மாலை குளிப்பது மிகவும் நல்லது. Posted by hayura hayu at 07:34 No comments:

No comments:

Post a Comment