For Read Your Language click Translate

12 May 2014

ஒரு தமிழ் வருடத்தின் மழை நிலவரங்களை கணிதம் செய்வது எப்படி ?

மழைப்பலன்

ஒரு தமிழ் வருடத்தின் மழை விபரமறிய,அந்த வருடத்தின் சாலிவாகன வருடத்தை 8 ஆல் பெருக்கி 9 ஆல் வகுத்த மிச்சம்
0 எனில் முமுமாரி பொழிந்து நற்காலமாகும்.
1 எனில் மத்திமமானமழை
2 எனில் காற்றடித்து மழைக்கு இடையூறு ஏற்படும்
3 எனில் மழையினால் மக்களுக்கு அழிவு
4 எனில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்
5 எனில் காற்று அதிகமாகி தூறல் பெய்யும்...
6 எனில் மழை ஒரே இடத்தில் பெய்யும்
7 எனில் அடை மழை பெய்யும்
8 எனில் மழை இல்லாமல் பஞ்சம் ஏற்படும்.

பொதுவாக சூரியன். சனி இவர்கள் ராஜாவானால் மழை குறுணி அங்காரகன் ராஜாவானால் மத்திய மழை, புதன் சுக்கிரன் ராஜாவானால் முக்குறுணி மழை, வியாழன் , சுக்கிரன் ராஜாவானால் தேவைக்கேற்ப மழை பெய்யும்.

ஆவணி மாதப் பிறப்பு நாளில் தூறல் போட்டால் அவ்வருஷத்தில் மழை இல்லை. ஆடி மாதப்பிறப்பு நாளில் மழைத்தூரல் விழுந்தால் மழை உண்டு. புரட்டாசி மாதப்பிறப்பு நாளில் மழைத்தூரல் விழுந்தால் நல்ல மழை உண்டு.

வைகாசி மாதம் மிருகசீருஷம் நட்ச்த்திரத்தில் சூரியன் பிரவேசிக்கும் நாளில் மழைத்தூரல் விழுந்தால் சூரியன் அந்த நட்சத்திரத்தில் இருக்கும் வரை மழை உண்டு. அன்று தொடங்கி தொடர்ந்து 5 நாட்கள் மழை இருப்பின். சூரியன் ஆயில்யம் நட்சத்திரம் செல்லும் வரை நல்ல மழை பெய்யும். சிம்ம ராசியில் மக நட்சத்திரத்தில் சூரியன் பிரவேசித்த நாளில் வானில் இடி முழக்கம் இருந்து அன்றிலிருந்து ஐந்து நாட்கள் மழை இருந்தால் ,சூரியன் சுவாதி செல்லும் வரை மழை உண்டு. சுவாதி நட்ச்த்திரத்தில் சூரியன் பிரவேசிக்கும் நாளில் தூறல் விழுந்து ஐந்து நாட்களுக்கு மழை பெய்தால், சூரியன் மூல நட்சத்திரம் செல்லும் வரை நல்ல மழை பெய்யும்.

மேற்கூறிய முறைகளில் மழை நிலவரங்களை கணிதம் செய்யலாம். கோச்சாரத்தில் புதனுக்கும், சுக்கிரனுக்கும் ஏற்படும் நெருக்கத்தை பொருத்தே மழை நிலவரம் அறியப்படுகிறது. இவர்கள் இருவருக்கும் ஏற்படுகின்ற நெருக்கத்தை பஞ்சாங்கத்தில் பஹி வர்சம் என்று குறிப்பிட்டிருப்பார்கள். இவற்றை பற்றி விரிவாக காண்போம்.

அஸ்வினி முதல் கார்த்திகை வரை புதன் சுக்கிரன் நெருக்கம் ஏற்படின் கடும் மழை உண்டு. ரோகிணி முதல் திருவாதிரை வரை நெருக்கம் ஏற்படின் மழை பெய்யாது. புனர்பூசம் முதல் ஆயில்யம் வரை நெருக்கம் ஏற்படின் போதுமான அளவு நல்ல மழை பெய்யும் , மகம் முதல் விசாகம் வரை நெருக்கம் ஏற்படின் போதுமான கடும் மழை பெய்யும்,அனுஷம் முதல் பூரட்டாதி வரை நெருக்கம் ஏற்படின் மழை சுத்தமாக இருக்காது. உத்திரட்டாதி , ரேவதியில் நெருக்கம் ஏற்படின் சுபிக்ஷம் உண்டு.
http://sabtharisi.com/Registration.aspx
See More
Like · ·

No comments:

Post a Comment