For Read Your Language click Translate

06 May 2014

பறக்கும் கார் கண்டு பிடிப்பு


   போக்குவரத்து துறையில் மற்றுமொரு பரிணாமம் பறக்கும் கார் கண்டு பிடிப்பு. அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக பறக்கும் கார் சோதனை செய்து பார்க்கப்பட்டது. அதில் முதல் கட்ட வெற்றி கிடைத்துள்ளது. அமெரிக்காவின் பொஸ்டன் நகரில் செயல்படும் ‘டெர்ராபியூசியா டிரான்சிசன்’ எனும் நிறுவனம் பறக்கும் கார் கண்டு பிடித்து போக்குவரத்துத்துறையில் புதிய புரட்சியைப் படைக்க வித்திட்டுள்ளது.


ஏரோ நாட்டிக்கல் என்ஜினீயர்கள், மசாசூட்ஸ் தொழில் நுட்பக் கழக அறிஞர்கள் ஒன்ற...ு சேர்ந்து இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள். அவர்கள் பல ஆண்டுகள் ஆய்வு செய்து பறக்கும் காரை உருவாக்கி உள்ளனர்.அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக பறக்கும் கார் சோதனை செய்து பார்க்கப்பட்டது. அதில் முதல் கட்ட வெற்றி கிடைத்துள்ளது. இதுவரை 28 தடவை பறக்கும் கார் விண்ணில் பறந்துள்ளது. 28 தடவையும் அது வெற்றிகரமாக பறந்துள்ளது.

இந்த பறக்கும் கார், வடிவில் மிகவும் சிறியதாக உள்ளது. 2 பேர் மட்டுமே இதில் பயணம் செய்ய முடியும். பறக்க வேண்டாம் என்று நினைத்தால், சாதாரண கார் போல சாலையில் ஓட்டிச் செல்லலாம். சாலையில் சென்று கொண்டிருக்கும்போது ஏதாவது பிரச்சினை என்றாலோ, போக்குவரத்து நெருக்கடி என்றாலோ, வீதியில் சென்றபடியே விண்ணில் தாவி ஏறி பறந்து விட முடியும். எனவே இந்தக் குட்டி காரை, கார் போலவும், விமானம் போலவும் விருப்பத்துக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இந்தக் குட்டி காரில் 4 சக்கரம் உண்டு. விண்ணில் இருந்து வீதியில் இறங்கும் போது விமானம் போலவே முன் பக்க டயர் உரசியபடி தரை இறங்கும். அந்தச் சமயத்தில் அதில் இணைக்கப்பட்டுள்ள இறக்கைகள் தானாக மடங்கி கொள்ளும். மீண்டும் விண்ணில் பறக்க நினைத்து இயக்கினால், இறக்கைகள் விரிந்து உதவும். இந்த மாற்றத்துக்கு வெறும் 30 வினாடிகளே தேவைப்படும் என்று பறக்கும் காரை உருவாக்கிய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

விண்ணில் பறக்கும்போது இந்தக் கார் மணிக்கு 115 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். அதிக பட்சமாக ஒரே மூச்சில் 725 கிலோ மீட்டர் தூரம் வரை இந்த பறக்கும் காரில் பயணம் செய்ய முடியும். இன்னும் சில சோதனைகள் செய்து இதை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளனர். 2011ஆம் ஆண்டு முதல் பறக்கும் கார்கள் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பறக்கும் காரின் விலை ஒரு கோடி ரூபா என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு நாட்டைச் சேர்ந்த 60 செல்வந்தர்கள் பறக்கும் காரை வாங்க முன்பதிவு செய்துள்ளனர்.

Thanks to

http://www.veeramunai.com/ by Sathiyaraj Kathiramalai
http://www.veeramunai.com/katampam/parakkumkar
See More

No comments:

Post a Comment