For Read Your Language click Translate

Follow by Email

06 May 2014

மறைக்கப்படும் உண்மைகள்..! பாகம் 07.


மறைக்கப்படும் உண்மைகள்..! பாகம் 07.

Arecibo வானிலை ஆராய்ச்சி நிலையத்திலிருந்து கார்ல் சேகன், 1974ம் ஆண்டு நவம்பர் 16ம் திகதி ஒரு செய்தியை அனுப்பினார். அந்த செய்தியில் அவர் பூமி, சூரியக் குடும்பம் மற்றும் மனிதர்கள் சம்பந்தமான பல விவரங்களை இணைத்திருந்தார். நாம் பயன்படுத்தும் தசம இலக்கங்கள், மனிதர்களிலுள்ள அடிப்படை இரசாயன மூலகங்கள் (கார்பன், ஒட்சிசன், நைதரசன், ஐதரசன், பொஸ்பரஸ்) பற்றிய குறிப்புகள், D...
NA பற்றிய குறிப்புகள், DNA யின் வடிவம், மனிதனின் வடிவம், மனிதனின் சராசரி உயரம், பூமியின் சனத்தொகை, சூரியக் குடும்பமும் அதில் பூமியின் அமைவு, இந்தச் செய்திகள் அனுப்ப உதவிய ஆரசிபோ டெலஸ்கோப்பின் வடிவம் மற்றும் அதன் பருமன் ஆகிய அனைத்து விபரங்களுடன், அந்தச் செய்தி அனுப்பப்பட்டிருந்தது. அனுப்பப்பட்ட இடம் நமக்கு மிக அண்மையிலுள்ள M13 நட்சத்திரக் கூட்டங்களை நோக்கி. M13, நமக்கு மிக அண்மையில் உள்ளது என்று நான் சொன்னாலும், உண்மையில் அது இருபத்திதைந்து ஒளி வருடங்களுக்கு அப்பால் இருக்கிறது. நாம் ஒளியின் வேகத்தில் (300000 கிமீ/செக்கன்)சென்றால், அந்த நட்சத்திரக் கூட்டத்தை அடைய 25 வருடங்கள் நமக்குத் தேவை. அவ்வ்வ்வ்வ்வ்வளவு தொலைவு. அதாவது நாம் அனுப்பிய செய்தி அங்கு சென்றடையக் குறைந்தபட்சம் 25 வருடங்கள் தேவை.
http://3.bp.blogspot.com/-b2fbrLdHWvI/UiZU76WjhPI/AAAAAAAAAw0/EAUCdRZ9Evk/s1600/Crop+Circle.JPG

இந்தச் செய்தி அனுப்பும் போதே, இதற்குப் பதில் கிடைக்க வேண்டுமென்றால் 25 வருடங்களுக்கு அதிகமான காலம் தேவை என்று கார்ல் சேகன் கணித்தே வைத்திருந்தார். அவர் கணித்தது போலவே 27வருடங்களுக்குப் பின்னர் ஷில்போல்டனில் அந்தப் பயிர் வட்டங்கள் உருவாயின. பயிர் வட்டங்களில் இருந்த செய்தியை ஆராய்ந்தபோது கிடைத்த தகவல்கள் அதிர்ச்சிகரமானவையாக இருந்தது. எப்படிக் கார்ல் சேகன் தன் செய்திகளை வரைபடமாக்கி அனுப்பியிருந்தாரோ, அதே வடிவத்தில் பதிலும் இருந்தது. ஆனால் வந்த பதிலில், அவர்களின் உயிர், கார்பன், ஒட்சிசன் போன்றவற்றுடன் மட்டுமல்லாமல், மேலதிகமாகசிலிக்கோனினாலும் ஆக்கப்பட்டிருப்பதாகவும், DNA இன் அமைப்பிலும் உருவத்திலும் பெரும்பாலான மாற்றங்களுடனும், அவர்களின் சராசரி உயரம் 3 அடி 4 அங்குலம் எனவும், சனத்தொகை நம்மை விட மிக அதிகமெனவும் (12742213502 ஏலியன்கள்), அவர்களின் கோள் அமைந்துள்ள இடம், தாங்கள் தகவல் அனுப்பப் பயன்படுத்தும் டெலஸ்கோப்பின் உருவம், டெலஸ்கோப்பின் பருமன் ஆகியவை இருந்தன.
http://2.bp.blogspot.com/-5mwU4kEq-Fc/UiZVDFX9-ZI/AAAAAAAAAw8/CjQftWj9jXs/s1600/Crop+Circle.JPG

இங்குதான் மேலும் ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. ஏலியன்கள் வரைந்ததாக கருதப்பட்ட அந்தப் பயிர்வட்டச் சித்திரத்தின் கீழ்ப் பகுதியில் வரையப்பட்டிருந்த ஏலியன்களின் டெலஸ்கோப்பினது வடிவமும், ஒரு வருடத்துக்கு முன்னர் உருவாக்கப்பட்ட 'ஃப்ராக்டல்' வடிவப் பயிர்வட்டச் சித்திரமும் ஒரே வடிவத்தில் இருந்தன. அப்படி ஒரு சித்திரம் ஒரு வருடத்துக்கு முன்னர் ஷில்போல்டனில் ஏன் உருவாக்கப்பட்டது என்பது அப்போதுதான் அனைவருக்கும் புரிந்தது.
http://1.bp.blogspot.com/-BHoYKTjQ-pQ/UiZVLPfCpWI/AAAAAAAAAxE/8vkkGlAgYsY/s1600/Crop+Circle.JPG

ஒரு பயிர்ச் சித்திரத்தை ஏற்கனவே உருவாக்கி, பின்னர் அதே பயிர்ச் சித்திரத்தை உள்ளடக்கி வேறு ஒரு குறியீட்டு வகைப் பயிர்ச் சித்திரத்தை உருவாக்குவதென்பது மிகவும் சிக்கலான ஒன்றாகவேபார்க்கப்படுகின்றது. அத்துடன் இவையெல்லாம் மனிதர்களால் உருவாக்கப்பட வேண்டுமென்றால், அதற்குத் தேவையான உழைப்பு என்பது மிக மிக அதிகமானது. அதற்குக் காலமும் அதிகம் தேவைப்படும்.ஆனால் ஒரே இரவில், நான்கு மணி நேரங்களில் உருவாக்கப்பட முடியாது. இவற்றை ஏலியன்கள்தான் உருவாக்கின என்பதற்கு இது ஒன்றே சாட்சியமாகவும் இருக்க முடியுமா என்று பார்த்தால், முடியாது என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் அந்தக் குறையையும் தீர்ப்பதற்கென்றே உருவானது இன்னுமொரு பயிர் வட்டம்.

இதைப் பார்த்ததும் இதுவரை அலட்சியமாக இருந்தவர்கள் கூட அதிர்ந்துதான் போனார்கள். ஒன்று இவையெல்லாம் ஏலியன்கள் மக்களுடன் தொடர்புகொள்ளும் மாபெரும் முயற்சி. இல்லையெனில் உலக மக்களையே மடையர்களாக்கும் முட்டாள்தனமான மனிதர்களின் மோசமான வேலையாக இருக்க வேண்டும். அந்தச் சித்திரமும் ஷில்போல்டனில் அமைந்தது போலவே இருந்தாலும், பயங்கரமானதும் சிக்கல் நிறைந்ததாகவும் இருந்தது. அதன் படத்தைப் பார்த்ததும் நான் என்ன சொல்ல வருகிறேன் என்று உங்களுக்கே புரிந்து போகும்.
http://3.bp.blogspot.com/-pshMbdNZ0gg/UiZVSrEDhqI/AAAAAAAAAxM/vGBV0k0eGSc/s1600/Crop+Circle.JPG

2001ம் ஆண்டு ஷில்போல்டனில் உருவான முக அமைப்புடைய பயிர் வட்டம் தோன்றியதற்கு சரியாக ஒரு வருடத்தின் பின்னர், 2002ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் திகதி, இங்கிலாந்து க்ராப்வூட் (Grabwood) நகரத்தில் இந்தப் பயிர் வட்டம் உருவாக்கப்பட்டிருந்தது. இதுவரை ஏலியன்களின் முகங்கள் எப்படி இருக்கலாம் என்ற நம்பிக்கையில் நாம் இருந்தோமோ, அதே முகச் சாயலுடன் கூடிய பயிர் வட்டச் சித்திரமாக அது உருவாக்கப்பட்டு இருந்தது. அத்துடன் வட்டவடிவமான ஒருவித வினோத வடிவமும் அந்த உருவத்துடன் இணைந்து காணப்பட்டது.

வட்டத்திற்குள் பல வட்டங்களாக அது அமைந்திருந்தது. அந்த வட்டங்கள் எதைக் குறிக்கிறது என்று ஆராய்ந்தபோது, அது நாம் தற்சமயம் பாவிக்கும் சிடி(Compact Disc) போல இருக்கலாமோ எனச் சிந்திக்கத் தோன்றியது. சிடியில் எப்படி தகவல்கள் பதியப்பட்டிருக்கலாமோ, அது போல அந்த வட்டத்திலும் தகவலாக செய்திகள் இருக்கலாம் என்ற சந்தேகத்துடன், அதை ஆராய்ந்தபோது உண்மையிலேயே அதில் அப்படியே செய்திகள் அமைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த வட்டவடிவமாக இருந்த பயிர் வட்டத்தில் இருந்த செய்தி என்ன தெரியுமா?

அதனை அடுத்த பகுதியில் நாம் பார்க்கலாம்...